உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஏமன் எல்லைக்கு அருகில் உள்ள சவுதி அரேபியாவின் ஜசான் நகரில் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடந்த தாக்குதல்கள் கிங் அப்துல்லா விமான நிலையத்தை குறிவைத்ததாக சவுதி ஊகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது ஐந்து பேருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன, மற்ற ஐந்து பேரின் நிலை உடனடியாக தெரியவில்லை.

முதல் ஏவுகணை ஆளில்லா விமானத்திலிருந்து வீசப்பட்டது. இது விமான நிலையத்தின் முகப்பு ஜன்னல்களை உடைத்தது.

இதில் காயமடைந்தவர்களில் ஆறு சவுதிகள், மூன்று பங்களாதேஷ் பிரஜைகள் மற்றும் ஒரு சூடானியர்கள் அடங்குவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமான தாக்குதல் சனிக்கிழமை அதிகாலையில் இடைமறிக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு உடனடி பொறுப்பை யாரும் ஏற்கவில்லை, ஆனால் சமீபத்தில் சவுதி இலக்குகளுக்கு எதிரான பல தாக்குதல்கள் ஏமனின் ஹெளதி படைகள் மீது குற்றம் சாட்டப்பட்டன.

சவுதி தலைமையிலான கூட்டணிக்கு எதிராக ஹவுத்திகள் போராடி வருகின்றனர், அங்கு அகற்றப்பட்ட அரசாங்கத்தை மீண்டும் நிறுவ ஹெளதி படைகள் முயற்சிக்கிறது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து