உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பருத்தித்துறை, புனிதநகர் பகுதியில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன்  வன்முறை குழுவொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அப்பகுதியில் உள்ளவர்களுடன் முரண்பட்ட நிலையில், வெளியிடங்களில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள்,  வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்கள் ஆகியவற்றுடன் அப்பகுதிக்குள் இறக்கி அட்டகாசம் புரிந்துள்ளனர்.

அத்துடன் சிலரின் வீடுகளுக்குள் கல் வீசி தாக்குதல் நடத்தியதுடன், வேலிகள் சிலவற்றுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.

இதன்போது, சம்பவம் அறிந்து  அவ்விடத்திற்கு நெல்லியடி பொலிஸார் வருகை தந்தப்போது, வன்முறை கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.

இந்நிலையில் அப்பகுதி மக்களுடன் ஏற்கனவே முரண்பட்டு இருந்த அப்பகுதியை சேர்ந்த நபரை, பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து