உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நெடுங்கேணியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, ஓமந்தை பகுதியில் வைத்து வீதியின் மறுபக்கமாக திருப்பியுள்ளது.

இதன்போது வவுனியாவில் இருந்து ஓமந்தை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியான ஓமந்தை மருதோடையை சேர்ந்த 30 வயதுடைய கமல்ராஜ் என்ற இளைஞன், படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து