உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எம்.ஜி.ஆர்.மகன்.

சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, மிருணாளினி மற்றும் பலர் நடிப்பில் தயாராகியுள்ள இப்படத்தின் மூலம் பிரபல பின்னணிப் பாடகர் அந்தோணிதாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இப்படத்தை கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட திட்டமிட்டு இருந்தனர். அந்த சமயத்தில் கொரோனா இரண்டாவது வேகமாக பரவியதால், ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாகி வருவதால், எம்.ஜி.ஆர்.மகன் படக்குழு ரிலீஸ் பிளானை மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இப்படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சூர்யாவின் ‘ஜெய் பீம்’, ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’, அருண்விஜய்யின் ‘வா டீல்’, விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனிமி’ ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சசிகுமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து