ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவர் டேவிட் சசோலி (வயது 65) உடல் நலக்குறைவால் காலமானார். டேவிட் சசோலி மறைந்த செய்தியை அவரது செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
டேவிட் சசோலி மறைவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டதாவது,
இத்தாலியின் Aviano-வில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவர் டேவிட் சலோலி, ஜனவரி 11ம் திகதி அதிகாலை 1.15 மணிக்கு காலமானார்.
இறுதி ஊர்வலம் நடைபெறும் திகதி மற்றும் இடம் இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 10 அன்று, நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயலிழப்புடன் தொடர்புடைய கடுமையான பிரச்சனைகள் காரணமாக சசோலி இத்தாலியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
ஐரோப்பிய நாடாளுமன்ற வரலாற்றில் தற்போதைய தலைவர் ஒருவர் மரணம் அடைந்தது இதுவே முதல் முறை.