உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்றின் பிறப்பிடம் என கூறப்படும் சீன தேசத்தில் கொரோனா தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டு வரும் மக்களை உயிரோடு இரும்பு பெட்டிக்குள் வைத்து முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
எல்லைகளை மூடுவது, பரவலாக கொரோனா பரிசோதனை மேற்கொள்வது, ஊரடங்கு மாதிரியான நடைமுறைகள் ஆரம்ப நாட்களில் சீன அரசுக்கு பலன் கொடுத்திருந்தாலும் தற்போது அங்கு நிலைமை கைமீறி சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.
அதிகளவிலான மக்கள் தொற்று பாதிப்பு ஆளாகி வருகின்றனர் என சொல்லப்பட்டுள்ளது. அதுவும் குளிர்கால ஒலிம்பிக் தொடர் அங்கு தொடங்க சில வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அரசுக்கு பெரிய தலைவலியாக இது அமைந்துள்ளது.