உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ரஜினிக்கு கோரிக்கை வைக்கும் தனுஷின் சர்ச்சை பெற்றோர்

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ஆகியோர் இருவரும் பிரிவதாக முடிவெடுத்த பிறகு பல்வேறு தரப்பிலிருந்தும் அவர்களை சமாதானம் செய்து வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

கஸ்தூரி ராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் போன்றோர் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில் தனுஷ் தங்கள் மகன்தான் என்று சில வருடங்களுக்கு முன்பு புகார் கொடுத்த மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த தம்பதியினர் கதிரேசன் மற்றும் மீனாட்சி ஆகியோர் தனுஷ்-ஐஸ்வர்யா இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று ரஜினிக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

தற்போது சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வாழ்ந்து வரும் அவர்கள் தனுஷ் காணாமல்போன தங்கள் மகன் கலையரசன்தான் என்று தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மருத

சரவணனும் ராதிகாவும் அண்ணன் தங்கைகள். ராதிகா மகனின் காது குத்து விழாவிற்கு சரவணன் வீம்பிற்காக அதிகமாக செய்முறை செய்கிறார். பின்னர் சரவணன் வீட்டில் நடக்கும் விழாவிற்கு ராதிகா குடும்பத்தார் செய்முறை செய்யாமல் விடுகின்றனர். இதனால் கோபமடையும் சரவணனின் மனைவி விஜி சந்திரசேகர், ராதிகாவின் கணவர் மாரி முத்துவை அசிங்கப்படுத்த, அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

கோபம் தீராத விஜி சந்திரசேகர் செய்முறை பணத்தை ராதிகாவிடம் இருந்து எப்படியாவது பெற்றுவிட வேண்டுமென்று இருக்கிறார். இந்நிலையில் விஜி சந்திரசேகர் மகளும் ராதிகாவின் மகனும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இறுதியில் விஜி சந்திரசேகர் ராதிகாவிடம் இருந்து செய்முறை பணத்தைப் பெற்றாரா? இல்லையா? ராதிகாவின் மகன், விஜியின் மகள் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. இயக்கம் ஜி.ஆர்.எஸ். இசை-இளையராஜா
ஓளிப்பதிவு-பட்டுக்கோட்டை ரமேஷ்

 

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து