உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் பக்கோடா

வெண்டைக்காய் – ¼ கிலோ

பச்சை மிளகாய் – 5
பூண்டு – 5 பல்
உப்பு – தேவைக்கு
மிளகாய் துாள் – 1 டீஸ்பூன்
மல்லி துாள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் துாள் – ½ டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
சீரக துாள் – ½ டீஸ்பூன்
கடலை மா- 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மா – 2 டேபிள் ஸ்பூன்
மைதா மா – 1 டேபிள் ஸ்பூன்
சோள மா – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – 10
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

வெண்டைக்காயை சுத்தமாக கழுவி, நீர் துடைத்து விட்டு, சற்று பெரிய துண்டுகளாக வெட்டி தனியே வைக்கவும்.முந்திரி பருப்பு அரை மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.

அகலமான பாத்திரத்தில், உப்பு, மிளகாய் துாள், மஞ்சள் துாள், கரம் மசாலா, மல்லி துாள், சீரக துாள் சேர்த்து, சில துளிகள் நீர் தெளித்து கலந்து கொள்ளவும்.

இதில், இரண்டாக கீறிய பச்சை மிளகாய், நீரை வடித்து விட்டு முந்திரி, ஒன்றிரண்டாகத் தட்டிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து கலந்த பின், கடலை மா, அரிசி மா, சோள மா, மைதா மா சேர்த்து, பக்கோடாவிற்கு பிசைவது போல பிசையவும்.

எதையும் நொறுக்கி விடாமல், மசாலா சீராக கலக்கும் விதமாக மென்மையாக பிசையவும்.

அதன்பின், நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து பிரட்டி, சில நிமிடங்கள் வைத்து, எண்ணெய் காய்ந்ததும், பிரட்டி வைத்த வெண்டைக்காயை போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

நன்கு ஆறிய பின் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால், மொறுமொறுவென்று இருக்கும்.இப்போது சூப்பரான வெண்டைக்காய் பக்கோடா ரெடி.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து