உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பண்கலை பண்பாட்டுக்கழகம் -கனடா
பண்கலை பண்பாட்டுக் கழகத்தின் நிர்வாகசபை கூட்டம் 21 -06-11 அன்று கூடியபோது பின்வரும் முடிவுகள் ஏகமனதாக எட்டப்பட்டன.
• கழகத்தினால் ஏற்கனவே முடிவு செய்யப் பட்ட ஜூலை 01 திகதியில் மேற்கொள்ளவிருக்கும் கோடை காலச் சுற்று லாவுக்கான செயல்பாடுகளை துரிதப் படுத்துதல்.இறுதி நேரம்வரை காத்திருக்க வேண்டாம்.பிரயாண ஆசனங்கள் மட்டுப்படுத்ப்பட்டுள்ளன.ஆகையால் பதிவுகளுக்கு கழக நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்ளவும்.
• வழமை போல் செப்டெம்பரில் நடைபெறும் பேச்சுப் போட்டிக்கான கட்டுரைகளை கோடைகால விடுமுறையினுள் வழங்குதல். அத்துடன் எமது ஊர் பற்றி ஒரு கட்டுரையை தாங்களாக மாணவர்கள் தயார் செய்து சிறப்பாகப் பேசுபவர்களில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு சிறப்புப் பரிசு வழங்குதல்.
•கோடைகால ஒன்றுகூடல் August 6ஆம் திகதி சனிக்கிழமை Milliken Park ல் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது..

கோடைகால ஒன்று கூடல் (06-08-2011) விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான ஒழுங்குபடுத்தல்கள் கழகத்தின் விளையாட்டுத் தலைவரினதும்,கழகத்தின் மாணவர் அமைப்பினதும் நெறிப்படுத்தலில் நடைபெறல்.
• கழக அங்கத்தவருக்கான உதை பந்தாட்ட பயிற்சி வகுப்புகளை ஆரம்பிப்பதன்மூலம்,இப் போட்டியில் திறமை சாலிகளாக தெரிவு செய்யப்படு பவர்கள், ஒன்ராறியோ மாகாண விளையாட்டுப் பயிற்சிக்கு தெரிவு செய்வதற்கு வழி வகுத்தல். முழு விபரங்களை அறிந்து கொள்ள கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்துடனும் கழகத்தின் விளையாட்டுக்குப் பொறுப்பாகவுள்ள சிவாணி சன்முகம் அவர்களுடனும் தொடர்பு கொள்ள்ளலாம்.
• மேலும்,வாணிவிழா,குளிர் கால ஒன்றுகூடல் என்பவற்றுக்கான காலங்கள்.
மேலதிக விபரங்களை அறிய விரும்பும் அங்கத்தவர்கள் தொடர்புகொள்ள-
கெங்கா:6472821274 ,விமலன்:4165247778,நடேசன்:4162089204,

One Response to “பண்கலை பண்பாட்டுக் கழகத்தின் நிர்வாகசபை கூட்டம்”

  • உதை பந்தாட்ட பயிற்சி வகுப்பில் பங்குபற்ற யாருடன் தொடர்புகொள்ள வேண்டும்?
    கோடைகால விடுமுறையில் ஆரம்பமாகுமா?
    அறிய ஆவலுடன் உள்ளேன்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து