உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பொன்னாலை ஊடாக காரைநகருக்கு கஞ்சா கொண்டு சென்றவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போது, குறித்த நபர் கஞ்சாவையும் கைத்தொலைபேசியையும் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

நேற்று( புதன்கிழமை) மாலை இடம்பெற்றது.

குறித்த நபர் கஞ்சா கொண்டு செல்கின்றார் என பொன்னாலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவரை வழிமறித்த இளைஞர்கள் விசாரணை நடத்தினார். இதன்போது அவரிடம் கஞ்சா இருந்தமை கண்டறியப்பட்டது.

அவரை வட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைப்பதற்காக கொண்டு சென்றபோது திடீரென்று அவர் காரைநகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.

இது தொடர்பாக வட்டார உறுப்பினர் ந.பொன்ராசாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு அறிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் கஞ்சாவும் கைத்தொலைபேசியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைத்தொலைபேசியை வைத்து குறித்த நபரைக் கைது செய்வதற்காக நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து