ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றார். இந்த நிலையில், இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தூதரகத்தின் ருவிட்டர் பதிவில், “இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் நம்பிக்கைகொள்கின்றது“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைப்போல இலங்கை மக்களுக்கான உதவிகள் தொடரும் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.