உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்தனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, இன்று 2 மணியளவில் விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு கடற்கரையில் சுற்றிவளைத்து சோதனைநடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன் போது இரு படகுகளில் அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு தயாராகிய நிலையில் பெண்கள் உட்பட 21 பேரை கைது செய்ததுடன் இரு படகுகளையு மீட்டு ஒப்படைத்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு , போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் களுவாஞ்சிக்குடியை சேர்ந்த இதன் பிரதான சூத்திரதாரி தலைமறைவாகி உள்ளதாகவும் காவற்துறையினர்தெரிவித்தனர்.

இவர்களை, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து