உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

போர்துக்கேய மொழியிலிருந்து தமிழுக்கு மட்டும் ஊடுருவப்பட்ட சொற்கள் ஆகக்குறைந்தது 30 இருப்பதாக கூறப்படுகிறது.இவற்றில் 20 னை கூறவும். இந்த 20 சொற்களையும் ஒரேதடவையில் கண்டுபிடிக்கும் முதல் வாசகர் CHF50 ஐ Regenold (Glarus|Swiss) குடும்பத்திடம் இருந்து வெல்லுவார்.

>>>விடைகள் இணைக்கப்பட்டுள்ளன<<

போட்டியின் விதிமுறைகள்:-

1/ உலகத்தில் எந்த மூலையிலிருந்தும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம் – Portugal /Brasil நாடுகளிலிருந்தும் உட்பட. வயது எல்லைகள் இல்லை.

2/ புனைப்பெயரிலும் பதில்களளிக்கலாம். சொந்தப்பெயர்கள் வரவேற்க்கப்படும்.

3/ பதில்கள் அளிக்க வேண்டிய காலக்கெடு எதிர்வரும் ஞாயிறு பணிப்புல நேரம் 23:59 வரை. இதன்பின் வரும் (சரியான) பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

4/ குறிப்பிட்ட தொகை (50 Swiss Francs) அந்த முதல் இருபதுபதில்களையும் ஒரேசமயத்தில் கொண்டு வெல்லும் வாசகரின் பெயரி(/ர்களி)ல் பணிப்புலம் அம்பாள் சனசமூகநிலையத்தின் வெளிச்சுவரில் அமைய இருக்கும் அறிவித்தல்பலகையின் (black board) கொள்முதற்செலவுகளுக்காக நெதர்லாந்து பண்-முக ஒன்றியம் ஊடாக இந்த கோடைகால விடுமுறைக்கு அனுப்பி வைக்கப்படும்.

5/ விதண்டாவாத கேள்விகளுக்கு பதிலளிக்கப்படமாட்டாது. மேல் தரப்பட்ட தகவலிற்கு புறம்பாக எதுவும் மீறி தரப்படமாட்டாது.
54 Responses to “பொது அறிவுப்போட்டி ஜூன் 2011”

 • sumathi t:

  எனக்கு பொது அறிவு கேள்வி பதில்கள் தேவைபடுகிறது.கடந்த 5 வருட நாட்டில் மற்றும் உலக அளவில் ஏற்பட்ட நிகழ்சிகள் தேவை.நான் அரசு வேலைவைபு பெற விரும்புகிறேன்

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   (நாளாந்தம்) உலகச்செய்திதாள்களை வாசியுங்கள்.
   மற்றவர்கள் தேடி அனுப்பினால் மனதில் பதியாது – தொழில் விடயங்களுக்கு பிரயோசனமாகவும் இருக்காது.
   பாராட்டுக்கள் உங்கள் தொழில் முயற்சி சரிவர.

 • பலர்மோ- த -சங்கர்:

  குப்புசாமிக்கு எனது வாழ்த்துக்கள் மன்றும் சாந்தை தமிழ் கிறுக்கன்: கருத்துக்களுடன் எனக்கும் ஒத்துபோகின்றது எமது ஊருக்கு நன்னீர் பிரச்சனே அவரின் சில கருத்துக்கள் மன்றவர்களின் மேல் இருக்கும் கோபத்தில் எழுதுகின்றமதிரி தொன்றுகுது அவரின் தாய் மொழிக்கு தமிழுக்கு குடுக்கும் பன்றுக்கு எனது வாழ்த்துக்கள் உங்கள் பலர்மோ தமிழ் கிறுக்கன்

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   சங்கர் அண்ணை,
   கிறுக்கனின் கோபம் ஞாயமாக இருக்கலாமோ/இல்லையோ. அவரின் நல்லதண்ணி பிரச்சனை யோசனையும் என்னால் வரவேற்க கூடியதாக உள்ளது. சரியான முறையில் வென்றேடுக்கவேண்டுமானால் அவற்றை கருத்தரங்கில் வெளிப்படுத்தினால் அதன் முக்கியத்தன்மையை இழந்துவிடும் – அதை ஒருவரின் கருத்தாகவே அனைவரும் நோக்குவார்கள்.. கட்டுரைகளாகவோ செய்திகளாகவோ (அல்லது வினா போட்டியாகவோ) இதை இணையத்தில் பிரசுரிப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும். இணையம் எங்கள் அனைவருக்கும் – கிறுக்கனும் உட்பட(இந்த பெயரை திருப்பி சொல்ல சொல்ல ஒரு தனி இன்பம் 🙂 🙂 ) .

   கிறுக்கனுக்கு இவற்றில் நம்பிக்கை இல்லாவிடின் அவரே அக்கறையில் முன்னுதாரணமாக எங்களுக்கு இருக்க ஒரு (குடிநீர்)கிணற்றை பணவளமும் நிலவளமும் உள்ள சாந்தையில் (2KM தூரத்தில்) வெட்டிக்காட்டுவதும் இன்னொரு யோசனை. அதன்பின் நாம் அக்கிணத்தை பராமரிக்கும், இயந்திரங்கள் பூட்டும் செலவை எங்கள் பொறுப்பில் எடுப்பதற்கும் முன்வரலாம். என்வெட்டிப்பேச்சை இதோடு இந்த போட்டியில் நிறுத்துகிறேன்.

 • கும்முடிப்பூண்டி குப்புசாமி:

  சகோதரி வினோதினி அவர்களே நான் சொந்தப்பெயரில் வர இயலாமையை இட்டு மிகவும் மனவருத்தப்படுகிறேன்,காரணம் இந்த போட்டியை நடத்தும் சுதர்சன் அவர்கள் வசிக்கும் நாடு நெதர்லாந்து அதுபோன்று நான் வசிக்கும் நாடும் நெதர்லாந்து தான் ஆகவே இருவரும் சேர்ந்து நடத்துகிறோம் என்ற பேச்சு நாளைக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக நான் புனைப்பெயரில் இந்தப்போட்டியில் பங்கு பற்றினேன்.இனிமேல் புதியவர்களையும் ஊக்கிவிக்க வேண்டும் என்பதற்காக இப்படியான போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்பதை மிகவும் சந்தோசத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

 • vinothiny pathmanathan:

  கும்முடுப்பூண்டி குப்புசாமி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் . இந்த போட்டி நிகழ்வு மூலம் போர்த்துக்கேய மொழியில் மட்டுமல்லாமல் வேறு சில மொழிகளில் உள்ள சொற்களைக் கூட நாம் அறிய செய்த சுதர்சன் மற்றும் இணைய வாசகர்களுக்கும் நன்றிகள் . கும்முடிபூண்டு குப்புசாமி இது உங்களின் சொந்தப் பெயரா? இல்லை,எனக்கு உங்களை நன்கு தெரியும் .ஏன் சொந்தப் பெயரில் வருவதற்கு என்ன தயக்கம் ?வெற்றிக் கனியை தட்டிச் சென்றிருக்கின்றீர்கள் ,இனியாவது மக்கள் முன் தயக்கமின்றி உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் .ஏனெனில் இது எம்மக்களை இணைக்கும் இணையத்தளம் .

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  போட்டியின் முடிவுகள்:
  Vinothini 11 சரியான சொற்கள்
  கங்கா 2 சரியான சொற்கள்
  புதியவன் 13 சரியான சொற்கள்
  jaaminy kijaaneka 12 சரியான சொற்கள்
  இந்த போட்டியில் கேட்டதைவிட அதிகூடிய 28 சொற்களை கூறி பரிசை தட்டிச்செல்பவர் ‘கும்முடிப்பூண்டி குப்புசாமி’ அவர்களே.
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  நிதியுதவி செய்பவர் பெயரையும் இணைய போட்டியில் வென்றவர்கள் பெயரையும் குறிப்பிட்ட கரும்பலைகையின் கீழே பொறிப்பதற்கான யோசனையை முன்வைத்து அம்பாள் சனசமூகத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் இருந்து இதுவரை ‘ஆம்’ என்ற பதில் கிடைத்திருக்கிறது.
  இந்த யோசனை ஏனைய நிர்வாகிகளாலும் வரவேற்க்கப்பட்டால் இதுபோன்ற முறைகளை எதிர்காலங்களில் கையாள்வதற்கும், நிதியுதவி செய்பவர்களுக்கும் உற்சாகம் கொடுக்கும் என்று நம்புகிறேன்.
  வேற வேற அமைப்புக்களும் இவற்றை பின்பற்றினால் ஊரின் வளர்ச்சியின் திட்டங்களின் கதி கூடுவதற்கான சந்தர்ப்பம் கூட இருப்பது என்பது என் தாழ்மையான கருத்து.

 • சாந்தை தமிழ் கிறுக்கன்:

  பெயரில் களவு என்பது எதை வைத்து சொல்லுறீங்கள் சொந்த இடம் சாந்தை என் மொழி தமிழ் அதுதான் அப்பிடி எழுதினேன் தவறு என்று எனக்கு தோன்றல நன்றி

 • சச்சி:

  பெயரில் களவு, வார்த்தைகளில் பெரும்தன்மை, அப்படியானால் உங்கள் ஊக்கத்தில் உண்மை இருக்குமா?

 • சாந்தை தமிழ் கிறுக்கன்:

  தமிழ வளர்க்க விரும்பினால் தண்ணீ இல்ல தமிழரின் உள்ளங்களே போதும் ஏன் ஐயா விதண்டாவாதம் இதலத்தான் இப்பிடி சொந்த நாடு இல்லாமல் இருக்கிறீங்கள்

 • சச்சி:

  தமிழை என்ன தண்ணி ஊத்தியே வளக்கிறது?

 • சாந்தை தமிழ் கிறுக்கன்:

  நில வளமும் பண வளமும் உள்ள பனிப்புலத்தில் நன்னீர் வளம் இல்லையே இதற்கு முயற்சி எடுங்கோ அதை விட்டுட்டு வெட்டி பேச்சு ஏன் குடிக்க தண்ணிக்கு 5 km போக வேண்டி இருக்குது சுமார் 5000 ற்கு மேற்பட்ட குடும்பம் வாழும் எமது கிராமத்திற்கு நன்னீர் பிரச்சனை காலம் காலமாக இருந்து வருகிறது .இதற்கு தீர்வு காணுங்கள் . எமது தேடல் தொடரும் அன்புடன் சாந்தை தமிழ் கிறுக்கன்

 • சாந்தை தமிழ் கிறுக்கன்:

  முதல்ல தமிழ வளர்த்து எடுங்கோ பிறகு ஆங்கிலத்த வளர்க்கலாமே தமிழா நீ பேசுவது தமிழா

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   நாங்கள் தமிழர் பேசுவது ஆங்கிலிஷ் – நடிகை நமிதா பேசுவதுதான் பச்சைத்தமிழ்.
   நமிதா, மும்தாஜ் & ரம்பா (செந்)தமிழை வளர்க்க பொறுப்பேற்று விட்டார்கள் எமக்கு கவலையில்லை இனி.

 • சாந்தை தமிழ் கிறுக்கன்:

  அன்பிற்கினிய தமிழ் மக்களே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய தமிழ் ஆனது இன்று சீரழிந்து கொண்டு வருகிறது .உங்களை போன்ற வேலை வெட்டி இல்லாமல் வீட்டுக்குள்ள இருந்து கணனிக்கு முன்னால இருந்து கொண்டு உதுதான் வேலையோ.நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கோ மெய் எழுத்தை அகர வரிசை படுத்துங்கோ பார்க்கலாம் .

  • அச்சுவலி நமிதா:

   இந்த போர்த்துக்கேய சொற்கள் போட்டியின்பின் எது தமிழ்சொல், எது ஆங்கிலச்சொல், எது போர்த்துக்கேய சொல் என்று குழம்பியிருக்கிறோம்.

   வரவேற்க கூடிய போட்டி/கேள்வி உங்களுடைய கேள்வி இது.
   தயவுசெய்து admin ஓடு தொடர்புகொண்டு தனிப்போட்டியாக இதை பிரசுரிக்கவும். அதன்பின் நாங்கள் வேலை ஒன்றை தேடி எடுத்துவிட்டு சாப்பிடாமல் computer இன் மேல் ஏறியிருந்து தமிழில் பதில்கள் எழுதுகிறோம். இதுவரையும் நாங்கள் ஆங்கிலத்தை வளர்த்து வளர்த்து அலுத்துப்போச்சு.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   இந்த போர்த்துக்கேய சொற்கள் போட்டியின்பின் எது தமிழ்சொல், எது ஆங்கிலச்சொல், எது போர்த்துக்கேய சொல் என்று குழம்பியிருக்கிறோம்.

   வரவேற்க கூடிய போட்டி/கேள்வி உங்களுடைய கேள்வி இது.
   தயவுசெய்து admin ஓடு தொடர்புகொண்டு தனிப்போட்டியாக இதை பிரசுரிக்கவும். அதன்பின் நாங்கள் வேலை ஒன்றை தேடி எடுத்துவிட்டு சாப்பிடாமல் computer இன் மேல் ஏறியிருந்து தமிழில் பதில்கள் எழுதுகிறோம். இதுவரையும் நாங்கள் ஆங்கிலத்தை வளர்த்து வளர்த்து அலுத்துப்போச்சு.

   • தம்பி சுதர்சன் சாந்தை தமிழ் கிறுக்கனை பேசாதையாட.எதோ அவனும் தனக்கு தெரிஞ்ச தமிழோடை விளையாட வாறான் அவனையும் இணைச்சுக்கொண்டு போங்கோ. அதுதானே இணையம்

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

     கிறுக்கனை இணைக்கவில்லை என்று சொல்லவில்லை. மீன்குழம்பையும் கோழிகுழம்பையும் ஒன்றாய் சாப்பிட்டால் வைத்தால அடிக்கும்.
     வேற வேற கோப்பையில் புறிம்பாக போட்டு மட்டும்தான் கிறுக்கனை சாப்பிட சொல்கிறேன். 🙂 🙂 🙂
     இனி நல்லதண்ணி பிரச்சனை, பிறகு அரசியல், அதுக்கு பிறகு ???
     இணையம் கிணறு இல்லை – சமுத்திரம். எங்கள் கருத்துக்களை பரந்து பொருந்தகூடிய இடங்களில் எழுதலாமே என்பது என் அபிப்ராயம்.

  • கணனிக்கு முன்னாலதான் வேலைஎண்டால் எங்கையுங்கோ வெட்டியத்தேடுறது? சரி , சரி உங்களுக்கு கனக்கவேலையிருக்கும் ,
   பிறகென்ன கேள்விபதில்? . போய் வேலை வெட்டியபாருங்கோ.
   சரியான வேலைக்காரன் போல ………….

 • புதியவன்:

  தமிழ் – போர்த்துகேய சொற்கள்

  அலுமாரி
  மேசை
  சாவி
  புனல்
  ஆயா
  அன்னாசி
  கோப்பை
  ஜன்னல்
  விசுகோத்து
  ஏலம்
  வாத்து
  பேனா
  பாண்
  கடதாசி
  சப்பாத்து
  வாங்கு
  இனாம்
  குசினி
  சாக்கு
  லாம்பு

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   புனல் – peneira ; ஆங்கிலம் ´funnel ´
   இனாம் – dom ; அராபிய சொல்.
   ஏலம் / ஏலக்காய் – leilão / cardamomo
   லாம்பு – lâmpada ; ஆங்கிலம் ´lamp ´

   ஆயா – aia & வாத்து – pato : . எனது தேடலில் இவை எம்பிடவில்லை. பின்னர் உறுதிப்படித்தினேன். இவை போர்த்துக்கேய சொற்களே. கெட்டிக்காரன். நன்றி.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   வாங்கு என்பது டச்சுச்சொல் (என்பதை மேலே குறிப்பிட தவறிவிட்டேன்).

 • போட்டியில் பண்குகொல்வதல்ல என்நோக்கம்.என் நிவில் வந்த சில சொற்களை இங்கு தருகின்றேன் .அன்னாசி ,பப்பாசி ,அலவாங்கு ,பிக்கான், ராக்கை ,பக்கீசு,(பக்கீசு பெட்டி ),பீலீசு (சுசெர்),பீங்கான்(pisunkaan ),கோப்பை ,ப்ரோப்பு,(wain

 • kanmani:

  மேற்கூரியவைகளுடன் ஏன் ஒருவரும் பிக்கான் என்னும் சொல்லை சொல்ல வில்லை அது இவற்றுள் அடங்காதோ சரியென்றால் சம்மதிக்கவும் பிளைஎன்றால் மன்னிக்கவும்

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   kanmani அவர்களே,
   இன்னும் குறைந்த்தது 19 சொற்களை இணைக்க முயற்சிக்கவும்.

 • பலர்மோ த.சங்கர்:

  இதற்கான விடைய நேயர்கள் தத்து வின்டர்கள் போல்தெரிகின்றது என்னால் பதில் குரமுடியவில்லை நான் நினைத்தத சொல்லிபோன்டர்கள் என்றாலும் வாழ்த்துக்கள் முயச்சி தொடர

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   முதல்கூறியவர்களின் பதில்கள் சரியோ என்று இன்னும் முற்றாகவில்லை. அதுவரை நீங்களும் கூறலாம். முயற்சிக்கவும்.
   நன்றி.

 • சச்சி:

  வீதுரு,கமிசே,பைலா போன்ற சொற்களை இப்பொழுதும் எமது மலையகத்தமிழர்கள் பிரயோகிக்கிறார்கள்.

 • சச்சி:

  kakhuis என்ற டச்சு மொழி சொல்தான் எம் மூததயர்களால் இலகுவாக உச்சரிப்பதற்காக கக்கூஸ் என்று மருவி வந்தது.
  எமது தமிழ் மொழியில் மட்டும் தான் போர்த்துக்கேய மொழிச்சொற்கள் ஊடுருவி இருக்கிறது என்றில்லை,சிங்கள மொழியிலும் ஊடுரிவியிருக்கின்றன அவற்றில்,வீதுரு+கமிசே+பைலா,என்பனவும் அடங்கும்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   Kakhuis என்பதை தமிழில் உச்சரித்தால் ‘கக்ஹவுஸ்’ என்று அமையும். இது போர்த்துக்கேய சொல் என்பதை நான் 6 வித்தியாசமான போர்த்துக்கேய மொழி பேசும் நாட்டு சகபணியாளர்களிடம்/நண்பர்களிடம் (Portugal , Brasil , Mozambique , Cape Verde , Angola & East Timor ) உறுதிப்படுத்தியுள்ளேன்.
   பீதுறு, கமிசை, பைலா & ரோதை என்ற போர்த்துக்கேய சொற்கள் சிங்களம் ஊடாக தமிழுக்கு தாவியன.

 • சச்சி:

  சபாஸ் சரியான போட்டி வாழ்த்துக்கள் சுதர்சன்.இப்படியொரு கேள்விக்கணையை தொடுத்ததற்கு.

 • jaaminy kijaaneka:

  மண்வெட்டி
  கோடரி
  அலவாங்கு
  வாங்கி
  கோப்பை
  பீங்கான்
  சப்பாத்து கக்கூசு சொம்பு சாவி கட்டில் அலவாங்கு குசினி இறாத்தல்
  ஊசி
  த்ச்சன்
  மேசன்
  கட்டில்
  அலுமாரி
  ஜன்னல்

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   தச்சன் – charpentier

 • சச்சி:

  கெங்கா அவர்கள் தெரிவித்த கக்கூஸ் என்ற சொல் டச்சு மொழியில் இருந்து வந்த சொல்.

  • லக்சன நோனா:

   நீங்க சொல்றை தப்பு சச்சி மாத்தைய. நீங்க எவட நாட்டில இருக்கிறை? போர்த்துகல்லே?
   கியண்ட மம லக்சன நோனா நத்தங்?

 • கும்முடிப்பூண்டி குப்புசாமி:

  அலுமாரி
  அன்னாசி
  அலவாங்கு
  அலுபுநெதி=(தமிழில்=அலுப்பூசி)
  அலுகோஸ்=( தமிழில்=தண்டனை நிறைவேற்றுபவர்)
  பைலா=( தமிழில்=நடனம்)
  சுப்பு =(தமிழில்=சூப்புதல்+உமிதல் )
  றோதை=(சில்லு+சக்கரம்)
  சாவி
  ஜன்னல்
  கதிரை
  கஜு=(மரமுந்திரிகை கொட்டை)
  கழுசான் =(காற்சட்டை)
  கமிசை=(சட்டை)
  கடதாசி
  கொய்யா
  கோப்பை
  குசினி
  மேசை
  பாண்
  பப்பாளி
  பேனா
  பீங்கான்
  பீப்பா (கொள்கலன்)
  சப்பாத்து =(கால்முழு அணி)
  தவறணை (குறிப்பிடவேண்டியஅவசியமே இல்லை)
  தாச்சி=(இரும்புச்சட்டி)
  தோம்பு=(தலையங்கம்)
  துவாய்=துடையங்கி)
  வங்கி =(வைப்பகம்)
  வீதுரு =(கண்ணாடி)
  வெராந்தா=(வரவேர்பறை)
  விசுக்கோத்து=(வருரோட்டி)

  இங்கே ஒரு சில எழுத்துப்பிழைகள் இருக்கலாம் அதை நீங்கள் கல்விகற்ற ஆசான்களிடம் கேட்டு அறிந்ந்து கொள்ளுங்கள் (உங்கள் பேத்தி பேரனிடமும் )கணனியில் என்னால் சரியாக எழுதமுடியவில்லை.

  • லக்சன நோனா:

   கும்முடிப்பூண்டி குப்புசாமி மாத்தையா, வீதுரு+கமிசே+பைலா அப்பே சிங்கள வாஹெனய. மேம தெமில வாஹெனய நாய்நே.

 • இனி என்னத்தை எழுதுகிறது வினோதினி எல்லாத்தையும் எழுதிட்டா.சில வருமாறு
  கக்கூசு
  கதவு
  தெறி
  ஊசி
  கால்மேசு
  கட்டில்
  சொம்பு

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   கங்கா அண்ணை,
   இன்னும் குறைந்த்தது 13 சொற்களை இணைக்க முயற்சிக்கவும்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   தமிழ் >< போர்த்துக்கேயம்
   கதவு – porte/huis
   தெறி – நீங்கள் குறிப்பிடுவது ´பொத்தான்´ என்று நினைக்கிறேன்.
   கால்மேசு – chaussettes
   கட்டில் – lit
   செம்பு – cuivre

 • vinothiny:

  மண்வெட்டி ,கோடரி ஆகியனவும் இதற்குள் வரும் .ஒரே சொல்லை இரு தடவைகள் எழுதிவிட்டேன் . ஆகவே இந்த இரண்டு சொற்களையும் புதிதாக இணைக்கவும் .நன்றி வினோதினி

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   தமிழ் – போர்த்துக்கேயம்
   இறாத்தல் – Libra; உரோமச்சொல்
   தோம்பு – tompu (Vermelhidão) 1)
   தோகை – Cauda
   சீமெந்து – Cimento (சிமெந்தோ) ; English ´cement´
   படகு – Barco 2)
   குசினி – Cozinha (கொசினா); French ´cuisine´
   மண்வெட்டி – Enxada
   கட்டுமரம் – Catamaran
   இஞ்சி – Gengibre
   கோடாரி/லி – Machado

   1) தோம்பு (= பதிவேடு/பேரேடு) என்ற நிலங்களை பதியும் முறை போர்த்துக்கேயரால் அமுல்படுத்தப்பட்டது.

   2) ஓடம், தோணி வகையல்ல இது. ´படகு´ என்ற ஒரு அங்கீகாரம் பெறாத திராவிடமொழி போர்த்துக்கேயர் ஆண்ட பிரதேசங்கள் ஒன்றில் படகர் என்ற இனத்தால் பேசப்பட்டது. போர்த்துக்கேய சொல்லல்ல இது.

   தமிழிலிருந்து
   http://www.penkatali.org/tamilwords.html

 • vinothiny:

  சப்பாத்து
  மேசை
  வாங்கு
  சாவி
  கரத்தை
  இறாத்தல்
  கோப்பை
  தோம்பு
  அலவாங்கு
  சீமெந்து
  இஞ்சி
  கட்டுமரம்
  தோகை
  படகு
  கதிரை
  பாண் –
  அலுமாரி
  சப்பாத்து
  ஜன்னல்–
  குசினி.

  • சாந்தையூர் தனஸ்ரீ:

   சகோதரி அவர்களே வணக்கம் !
   உங்கள் ஆர்வத்துக்கு நன்றி .இங்கு தரப்பட்டுள்ள கட்டுமரம் என்ற சொல் எங்கே இருந்து வந்தது ?
   என்னால் இது போத்துக்கல் மொழி இல்லை என்றும் இச் சொல்லானது தமிழ் மொழி (100 %)
   என்பதை நிரூபிக்கும் ஆவணம் உண்டு .அது யேர்மன் – யேர்மன் அகராதி

   • vinothiny:

    சாந்தையூர் தனஸ்ரீ:

    முதலில் உங்களுக்கு என் நன்றி .
    கட்டுமரம் என்பது போர்த்துக்கல் மொழியிலிருந்து வந்தது என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்த வளர்நிலை 5 தமிழ் வாசிப்புப் புத்தகத்தில் போர்த்துக்கேய மொழியிலிருந்து தமிழ் மொழியில் இன்று வழங்கிவரும் சொற்கள் என்ற பகுதியிலேயே இச்சொல்லும் காணப்படுகிறது. உங்களால் முடிந்தால் இந்த புத்தகத்தினை பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள் .நன்றி

    • Gopal V:

     நீங்கள் இங்கு ‘வளர்நிலை 5 தமிழ் வாசிப்புப் புத்தகத்தில் போர்த்துக்கேய மொழியிலிருந்து தமிழ் மொழியில் இன்று வழங்கிவரும் சொற்கள் என்ற பகுதியிலேயே…’ குறிப்பிடுவது தவறு அதில் சொல்லப்பட்டுள்ளது கட்டுமரம் என்னும் தமிழ்ச் சொல் உலகில் பல மொழிகளில் பவிக்கப்படுகின்றது.

  • விநோத்னியின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் .சாந்தைஊர் தனசிரி சொன்ன விடயம் முற்றிலும் சரியானதே.கட்டுமரம் என்பது நூறு வீதமான தமிழ் சொல்லே .இது சும்மா விடக்கூடிய விடயமல்ல .ஏனெனில் இது ஒரு பாரிய அர்த்தமுள்ள விடயம்.தமிழர்களின் பாரம்பரியங்களை நிரூபிக்ககக்கூடிய சான்றுகள்.கப்பல்களை துறைமுகத்தில் மேடைகளில் அணைத்து கட்டும்போது உராய்வுகளை தவிர்க்க எத்தனையோ முறைகளை பாவிப்பார்கள்.அதில் ஒன்று கட்டுமரம் போன்ற வடிவிலான மரங்களையும் பாவிப்பதுண்டு அதற்கான ஆங்கில சொல் kattamaran fender . இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்ளலாம் ஆதி காலத்தில் மரங்களை ஒன்றாக இணைத்து கட்டி ஆற்றில் ,கடலில் பயணித்த முதலானவர்கள் தமிழர்களே என்பது .அத்தோடு மட்டுமல்லாது இன்னும் ஏராளமான தமிழ் சொற்கள் அப்படியே ஆங்கிலத்தில் உபயோகி.க்கப்படுகின்றது.மனித நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் உபயோகிக்ககப்பட்ட சில சொற்களை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றேன் .விவசாயத்தின் மூலாதாரமான மண்வெட்டியின் ஆங்கில பதம் mamatty நீர்பாச்சனத்தில் வரும் அணைக்கட்டுக்கு ஆங்கிலம் பதம் anikat .இது போன்று ஏராளமான தமிழ் சொற்கள் அப்படியே ஆங்கிலத்தில் உள்ளன .நான் இந்த போட்டியில் பங்கு பட்டாவிட்டாலும் வினோதினிக்கு சப்போட்டாக இன்னும் சில போத்துக்கேய சொல்களை இங்கு தருகிறேன் . குசினி போல கக்கூசும் கதிரை மேசை புட்டுவம் கொக்கீசு (அது சிங்களவற்றை பலகாரம் இப்ப கொஞ்ச நாளாக நாங்கள் கொப்பி அடிச்சது) இன்னும் எக்கச்சக்கமாக இருக்குது .சொல்ல வந்தால் உங்கின முக மூடி அணிந்த இளம் பண்டிதர்மார் என்னை அட்டாக் பண்ண காத்திருக்கினம் .இப்ப இதோடை நிறுத்தி மீண்டும் காத்திரமான விடயங்களுடன் உங்களுடன் உறவாட விளையும் உங்கள் ஊரான் மனோகரன் கலட்டி.

   • லக்சன நோனா:

    பொறு கியண்டேப்பா. ஓயா தமாய் ஜாமினிய?
    ஓயா கியண்டே மம லக்சன தமாய்நே?

    • இது என்ன மொழி? தயவு செய்து தமிழில் எழுதவும்!

     • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

      Lux கொம்பனியில் வேலை செய்யிற இந்த சிங்கினி நோனா ஏதோ புதிசா லக்ஸ் சவுக்காரம் வந்திருக்காம் பொறுக்காமல் போய் கெதியில வாங்க சொல்லுறா போல கிடக்குது????

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   நன்றி Vinothiny , சாந்தையூர் தனஸ்ரீ & manoharan kandiah அவர்களே பல விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளீர்கள்.
   முக்கியமாக manoharan kandiah அவர்களே, தமிழரால் நம்பமுடியாத தமிழ் சொற்களை இங்கு அவற்றின் சரித்திர சாரலோடு அருமையாக விளக்கியுள்ளீர்கள். இந்த 3 தமிழ்சொற்கள் மாதிரி இன்னும் பல உள்ளன தமிழில் இருந்து மேற்க்கத்தேயே மொழிகளுக்கு ஊடுருவப்பட்டவை.
   உங்கள் அறிவுவேட்டை மேலும் தொடரட்டும்.

   ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
   Word Origin & History
   catamaran
   1673, from Tamil kattu-maram “tied wood,” from kattu “tie” + maram “wood, tree.”
   _
   Mammoty , a special type of garden hoe that is common in India and Sri Lanka, whose blade is about four times as large as that of the average garden hoe. It is the gardening implement of choice in these countries and the name comes from the word “Man Vetty” (“Man” rhymes with “one”) in Tamil which is a language spoken in Tamil Nadu in India and in the north of Sri Lanka.
   [[ta:மண்வெட்டி]
   _
   Anicut
   An”i*cut\, Annicut \An”ni*cut\, n. [Tamil anai kattu dam building.] A dam or mole made in the course of a stream for the purpose of regulating the flow of a system of irrigation. [India]

   • சுதர்ஷனுக்கு மிகவும் நன்றி .இதைத்தானடா தம்பி நானும் எதிர்பார்த்தது
    எனது விளக்கங்களுக்கு சப்போர்டிவ ஆக உசாத்துணை நூல் ஒன்றை முன்வைத்தது போல் உணர்கின்றேன்
    .மீண்டும் மனமார்ந்த நன்றி.நான் உங்களுடன் முட்டி மோத வந்த கிழடு இல்லை பதிலாக ஒட்டி உறவாட வந்த உங்களில் ஒருவனே .இதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன்.நான் விட்ட தவறு என்னவென்றால் உங்களை சரியாக இனம் காண தவறியதே
    .நான் வழமையாகதிரிகின்ற பக்கங்கள் அம்பாள் ச ச நி மறுமலர்ச்சி மன்றம்,கவிதை பூங்கா மற்றும் சமகால உலகியல் விவகாரங்கள் போன்றன .ஆனால் உங்களை சொல்லடிகள் மற்றும் எறிகணைகள் தாக்கங்களின் பின் ரஜனி அசின் மற்றும் அது போன்ற அனைத்து பக்கங்களையும் துலாவிய போதுதான் உங்களை இனகண்டு கொண்டேன் உங்களின் குறும்புத்தனங்கள் விசும்புகள் நகைச்சுவைகளை கண்டேன்.அதை நானும் ரசிக்கின்றேன் .இன்னும் கொஞ்ச நேரத்தில் தொலை தொடர்பிற்கான சமிக்ஞை இழந்துவிடுவேன் இத்துடன் நிறுத்தி மீண்டும் நாளை வருகிறேன் நன்றி வணக்கம்.

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

     மனோகரன் ஐயா அவர்களே,
     மரியாதை என்பது எவருக்கும் இருப்பதில்லை – கிடைப்பது (ஒருவர் நடந்துகொள்வதை பொறுத்து).
     ஒருவரின் கருத்தும், அக்கருத்தை வைக்கும் விதத்தையும் வைத்து அவரை ஒத்துமொத்தமாக தவறாக முத்திரையிடுவதில் எனக்கு உடன்பாடில்லை.
     என்னுடைய கருத்துக்களும் உங்களுடைய கருத்துக்களும் தான் இங்கு மோதுகின்றன – நானும் நீங்களும் இல்லை.
     இருவரின் கருத்துக்களும் ஒரு தலையங்கத்தில் ஒரு கோட்டில் சந்திக்கின்றன/சந்திக்கலாம், இன்னொரு தலையங்கத்தில் அவை தண்டவாளங்களோடு ஒப்பிடும் வகையிலும் அமையும்/அமையலாம். இது (மனித) இயல்பு. இல்லையேல் உங்களுக்கும் சுதர்சன் என்ற பெயர் எனக்கும் சுதர்சன் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கும்.
     விருப்பங்கள் வித்தியாசங்கள் ஒவ்வொருவராலும் வரவேற்க்கப்படவேண்டும்.

     இத்தலையங்கத்துக்கு அப்பால் என் கருத்துக்கள் தடம்புரண்டு போய்க்கொண்டிருக்கின்றன. விடைபெறுகிறேன்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து