உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இருவாரங்களுக்கு ஒர் முறை இங்கு தரப்படும் தலைப்பு பற்றி நீங்கள் படித்தவை, நீங்கள் கேட்டவை,நீங்கள் அறிந்தவைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவரும் அறிந்து கொள்வோம். இந்த வார உங்கள் கருத்துக்கள்

உயிர்களும் மறுபிறவியும்…

(முடிந்தவரை ஆதாரங்கள் வரவேற்கப்படுகின்றன.)
n.sivas

24 Responses to “கருத்துக்களம்…உயிர்களும் மறுபிறவியும்”

 • சாந்தை தமிழ் கிறுக்கன்:

  ஆன்மா என்பது உயிர் ,இந்த உயிரானது பக்குவப்படாதது .பக்குவம் அடையாத ஆன்மாக்கள் வினைகளை செய்கின்றன அது நல்வினை,தீவினை என பாகுபடுத்தி நல்வினை செய்யும் ஆன்மா நர்பிறப்பினை எடுக்கும்.தீவினை செய்யும் ஆன்மா தீய பிறப்பினை எடுக்கும் .கன்மம் என்பது வினை ஆகும். பொதுவாக ஆன்மாக்கள் செய்யும் வினைகளிற்கு ஏற்ப மறுபிறவி அமைகின்றது எனலாம். ஆசைகளை ஜெயிக்காது எந்த ஆன்மா முத்தி அடைகிறதோ அவ்வான்மா தன் ஆசைகள் நிறைவேறும் வரை இம்மண்ணுலகில் பிறந்து கொண்டே இருக்கும் . ஆன்மா அழிவடையாது சரீரம் அழிவடையும் .ஆன்மா மறு பிறவி எடுப்பதன் நோக்கம் தன் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றுவதற்கே.இவ் ஆன்மாவானது வினைகளிற்கு ஏற்பவே பிறவி எடுக்கின்றன .முன்பு குறிப்பிட்டது போல நல்வினை செய்யும் ஆன்மாக்கள் மனிதர்கள் ஆகவும்,தீவினை செய்யும் ஆன்மாக்கள் விலங்குகள், பறவைகள்,பூச்சி ,புழுக்கள் ஆகவும் இம்மண்ணுலகில் பிறவி எடுக்கின்றன. இவ்வாறு ஆன்மாக்கள் மறுபிறவிகள் எடுக்கின்றன .

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  சிவாஸ் முனைவரே,
  அடுத்த கருத்துக்களத்திற்க்கு களமிறங்கி விட்டோம்.
  இந்த களத்தின் (உங்கள்) வாத முடிவுரையை கூறவும்.
  குழப்பங்கள் தெளியட்டும்.

 • பதில்: வாழ்த்துக்கள் உங்கள் அனைத்து முயர்ச்சிக்கும் நன்றி
  செலவு: ௯௯௯ பவுண்டுகள் முடிஞ்சுது
  உடனடியாக தங்கள் நற்பணியில் இப்பணத்தை சேர்க்கவும்

 • இம்முக கொண்டி கிறுக்கல் நமக்கு(/நம்மட களுகன்மாருக்கு) நோடிக்கபூதி.
  ஒருக்கா இம்முகத்தை நமக்கு நோடிக்கிறமாதிரி சுருக்கி கீதமுடியுமோ?
  றின்ந
  இதுக்கு என்ன அர்த்தம்

  • நீங்கள் பணிபுலத்தில் பிறக்கவில்லை என்று சொல்லிகாடுவதாக தெரிகிறது

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   மேன்மைமிகு திருடன் அவர்களே,
   இந்த ‘பிம்பமொழி’ என்ற பெயர் கொண்ட பாசையை நான் ஒரு இணையத்திலிருந்து திருடி இங்கு பொருந்தகூடிய கட்டுரை ஒன்றை தேடி இங்கு கொண்டுவந்து ஒட்டியுள்ளேன்.
   இதை நீங்கள் வாசிப்பதற்கு உங்களுடைய computer screen ஐ ஒரு கண்ணாடியில் கொண்டுபோய் பிடித்து கண்ணாடியில் விழும் பிம்பத்தை வாசித்தால் தான் இது உங்களுக்கு விளங்கும்.
   அப்படி முடியவில்லை என்றால் உங்கள் கண்ணாடியை மருந்துபோட்டு துடைத்துவிட்டு முயற்சிக்கவும். இதன் பின்னும் வாசிக்க சிரமாமாக இருந்தால் உங்கள் கண்ணாடியை மாற்றவும். கண்ணாடியை மாற்றிய பின்னும் சரி வரவில்லை என்றால். உங்கள் computer இல் தான் உங்களுக்கு சந்தேகம் ஏற்படும். அதையும் கையோடு மாற்றிவிடவும்.
   இவற்றினை முயற்சி செய்து வெற்றிச்செய்தியை உங்களுடைய முழுச்செலவு விபரத்துடன் எமக்கு அறிவிக்கவும்.

   ள்கக்துதுத்த்ழ்வா ள்கங்உ துத்னைஅ ம்குக்ளுகசிச்ற்யமு!
   றின்ந

   🙂 🙂 🙂 🙂

 • செவ்வாய் கிரகம் அழிந்தது அணு ஆயுத யுத்தத்தினால் புதிய சர்ச்சையில் நம்பவே முடியவில்லை ஆனாலும் செய்தியை பாருங்கள்
  நம்புவதற்கே சற்று கடினமாக இருக்கும். ஆனால், உண்மையிலேயே வியக்க வைக்கும் தகவல்கள் கொண்டது இந்த கட்டுரை.

  இதிலே கூறப்பட்டு இருக்கும் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், வெகு வேகமாக நமது பூமியும், செவ்வாய்க் கிரகம் போலே ஆகிவிடும் போல் தெரிகிறது. படித்துப் பாருங்கள். ஒரு இரண்டு வருடம் முன்பே , இணையத்தில் வெளியாகி உள்ள கட்டுரை இது. சமீபத்தில் பார்க்க நேர்ந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  பிறந்து பதினைந்தே நாட்கள் ஆன குழந்தையின் தலை நிற்குமா? நான்கு மாதத்திலேயே தாயை ‘அம்மா’ என்றழைக்குமா? ஒன்றரை வயதிலேயே செய்தித்தாள் தலைப்புச் செய்திகளைப் படிக்குமா? இரண்டு மூன்று வயதிலேயே விண்வெளியைப் பற்றி விளக்கிக் கூறும் அறிவு கிட்டுமா?

  வழக்கமாக நம் மூளையில் பதியப்பட்ட தகவல்களின்படி, ‘இல்லை’ என்பதே நம் பதிலாக இருக்கும்.

  ஆனால் இதெல்லாம் நடந்தது …. என்று சொல்கிறார்கள் போரிஸ்காவின் பெற்றோர்.

  சிலருக்கு பூர்வ ஜென்ம ஞாபகம் வரும். அந்த மாதிரி , இந்த பையனுக்கு பூர்வ ஜென்ம வாசனை வந்து, நான் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த பையன் என்று கூறி, அதன் பிறகு விஞ்ஞான உலகையே அவனது தகவல்களால் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறான்.

  யார் இந்த போரிஸ்கா?

  ரஷ்யாவில், சைரினொவிஸ்க் என்னும் நகரத்தில் ஜனவரி 11, 1996ல் பிறந்தவன் போரிஸ் கிப்ரியானோவிச், சுருக்கமாக போரிஸ்கா. மேலே கேட்கப்பட்ட அத்தனை கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளாக மாற்றியவன். தற்போது 12 வயதாகிறது இந்தச் சிறுவனுக்கு.

  இவனது அசாத்தியமான ஆற்றல்களைக் கண்டு கவலைப்படுகின்றனர் பெற்றோர். புதிரான சில வழிகளின் மூலம் அவனுக்குள் தகவல்கள் ஊட்டப்படுவதாக எண்ணுகின்றனர்.

  இரண்டு வயதிலேயே கிண்டர் கார்டனில் சேர்க்கப்பட்ட போரிஸ்காவின் மொழியாற்றல், நினைவுத் திறன், சுட்டித்தனம் போன்றவை அசாதாரணமாய் இருந்ததாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். யாரும் அவனுக்கு சொல்லிக் கொடுக்காமலே ‘தானாக’ பல திறமைகள் அவனுக்கு வந்ததாகக் கூறுகின்றனர்.

  சில நேரங்களில், சம்மணமிட்டு அமர்ந்து செவ்வாய் கிரகம், அங்கு நிலவிய வாழ்க்கை முறை, இதர கிரக அமைப்புகள் போன்றவற்றைப் பற்றி விவரிக்கிறானாம் போரிஸ்.

  தான் செவ்வாய் கிரகத்திலிருந்து பிறப்பெடுத்து இங்கு வந்ததாகவும், இன்றும் செவ்வாய் கிரகத்தில் மக்கள் வசிப்பதாகவும், ஆனால் பயங்கரமான பேரழிவினால் தற்போது நிலத்தின் அடிப்பரப்பில் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறான். மேலும், செவ்வாய் கிரக வாசியாக இருந்தபோது, பூமிக்கு ஆராய்ச்சிக்காக வந்து சென்றதாகவும் கூறுகிறான்.

  லெமூரியக் கண்டத்தின் ஆய்வுப் புத்தகம் ஒன்றை அவனது தாய் அவனுக்குக் கொடுத்தபோது, ஆச்சரியத்துடன் பார்த்த போரிஸ், லெமூரியா கண்டத்தின் அழிவு பற்றி பரபரப்பாக விவரிக்க ஆரம்பித்தான். இதெல்லாம் எப்படித் தெரியும் என்று கேட்டால், எல்லாம் நினைவில் இருக்கிறது என்று பதிலளிக்கிறான்.

  பெரிய பிரமிடுகளைப் பற்றிப் பேசும் போரிஸ், மனிதத் தலை, சிங்க உடம்பாக காட்சியளிக்கும் Sphinx பிரமிடுக்குள் மனித வாழ்க்கையின் ரகசியங்கள் இருக்கின்றன என்றும், அதைத் திறப்பதற்கான வழி அதன் காதுப் பகுதியில் உள்ளதுபோலத் தெரிவதாகவும் விவரிக்கிறான்.

  போரிஸ்காவைப் போன்ற குழந்தைகள் பிறப்பது சமீப காலத்தில் சாத்தியமாகியுள்ளது என்றும் பொதுவாக 1980க்குப் பின்னர் பிறந்த குழந்தைகளில் சிலருக்கு இது போன்ற இயற்கையின் கொடை கிடைத்திருக்கிறது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். இத்தகைய தன்மையுடையோரை ‘இண்டிகா குழந்தைகள்’ என்றும் அழைக்கின்றனர்.

  மாறிவரும் பூமியின் காந்தப் புலனானது 2009 மற்றும் 2012 காலகட்டங்களில் மிகப் பெரும் இரண்டு அழிவுகளை ஏற்படுத்தும் என்று போரிஸ் கூறுகிறான்.

  செவ்வாயில் ஏற்பட்ட பேரழிவிற்கு அணு ஆயுதப் போரே காரணமென்றும், கதிரியக்கங்களின் வீரியம் காரணமாக, தப்பிப் பிழைத்தவர்கள் வெளியே வரமுடியவில்லை என்றும் பாதுகாப்பான கவச அறைகளில் அவர்கள் பாதாளத்தில் வாழ்வதாகவும் கூறும் போரிஸ், அவர்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை சுவாசித்து வாழ்பவர்கள் என்றும் கூறுகிறான்.

  பூமியைப் பொறுத்த வரை ஆக்ஸிஜனை மட்டுமே சுவாசிக்க முடியும் என்றும், ஆனால் இந்த பிராணவாயு மனிதர்களின் வாழ்நாளைக் குறைப்பதாகவும் சொல்கிறான்.

  விண்வெளியைப் பற்றி சகலமும் தெரிந்து வைத்திருக்கும் போரிஸ் UFOக்களைப் பற்றியும் நிறைய பேசுகிறான். செவ்வாயில் இருக்கும்போது ஸ்பேஸ்கிராஃப்டை இயக்கும் பயிற்சி பெற்றிருந்ததாகவும் கூறுகிறான்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   இம்முக கொண்டி கிறுக்கல் நமக்கு(/நம்மட களுகன்மாருக்கு) நோடிக்கபூதி.
   ஒருக்கா இம்முகத்தை நமக்கு நோடிக்கிறமாதிரி சுருக்கி கீதமுடியுமோ?
   றின்ந.

   • அப்பா இப்பவாவது ஒன்று விளங்காமல் போய்விட்டதே இனக்கு நல்ல சந்தோசம். நான் விளங்கப்படுதவோ?

 • விசு.க.விமலன்.:

  உயிர்களின் மறு பிறப்பு என்ற விடயம் ஒரு நீண்ட ஆய்வுக்கும், பகுப்பாய்வுகளுக்கும் உள்ளடக்கப்படவேண்டிய நுண் அணு சம்பந்தமான கருப்பொருள். ஓக்சிசன் என்ற ஒரு வாயு எவ்வாறு எமது கண்களுக்குப் புலப்படாது எமது உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றதோ அதேபோன்றதே எமது முளுமையான உயிரையும் கட்டுக்குள் வைத்திருப்பதே எமது உயிர் வாயு. ஒரு குழந்தையானது எப்பொழுது தாயின் வயிற்றில் நாடித்துடிப்பினைத் தொடங்குகின்றதோ அன்றே அந்தப் பிறப்பு இவ் உலகிற்கு நிட்சயிக்கப்படுகின்றது
  இவ்வாறு ஒரு கரு- உயிர் பெறுவதற்க்கு காரணமாக இருக்கும் உடம்பு என்பதன் கருப்பொருளானது ஆண், பெண் கருக்களின் சேர்க்கையினால் பெண்ணின் உடலில் வளர்க்கப்படுகின்றது. அந்த உடலை இயக்குவதற்குத் தேவையான காற்று உயிர்வாயு என்ற பார்வைக்குத் தெரியாத காற்றினால் மனிதனின் நாடித்துடிப்பை இயங்க வைக்கின்றது.

  இரும்புகளும் , கரிகளும், றப்பர்களும், மரக் கட்டைகளும், கண்ணாடிகளும், வர்ணப் பூச்சுக்களும் வெவ்வேறு வடிவங்களில் உருமாற்றப்பட்டு ரையர், இருக்கை, எஞ்சின், ரேடியோ, கண்ணாடிகள் போன்றவை ஒன்று கூட்டப்பட்டு ஒரு கார் உருவாக்கப்படுகின்றது. இந்தக் கார் என்ற ஒன்றை ஓடவைப்பதற்கு பெற்றோல் என்ற திரவத்தைப் பாவித்து அதற்கான சத்தியை ஊட்டி அதை எப்படி ஓடவைக்கின்றோமோ அது போன்றதே எமது உடலானது உயிர் வாயு என்ற ஒன்றின்மூலம் இயக்கப்படுகின்றது.

  இந்த உயிர் வாயு என்பது ஒருவரின் உடலைவிட்டு நீங்கிய மறு கணமே இன்னொரு உடலில் சேர்ந்துகொள்ளாது. தனது உயிர்ச் சக்தி தங்கி வாழக்கூடிய, கூட்டுச்சேரக்கூடிய பொருத்தமுள்ள இன்னொரு பெண்ணில் உருவாகும் கருவில் இவ் உயிர்வாயு சேர்ந்துகொள்ளும். இவ்வாறான உயிர் அணுவானது ஏறக்குறைய ஒரு குழந்தையானது பிறந்து 1 & 2 வருட காலப்பகுதிவரை தனது பழைய பிறப்பின் தன்மைகளை தன்னகத்தே வைத்துக்கொள்ளும். மிக அபூர்வமான சந்தர்ப்பங்களில் இப்பழைய உயிரின் இயக்கம் 3 முதல் 4 வயது காலம்வரையிலும் நீடித்திருக்கின்றது. இதற்கு உதாரணமாக 1972ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் இலங்கையில் நடைபெற்ற சேவுகரா கலவரத்தில் கொல்லப்பட்ட ஒரு இழைஞ்ஞனின் உயிர் அதே நாட்டில் பிறந்த ஒரு சிறுவனிடம் ஒட்டிக்கொண்டிருந்த்து. அச்சிறுவன் தனது மூன்றரை வயதுக் காலம்வரை தனது பழைய வாழக்கையைப்பற்றிக் கூறிக்கொண்டிருந்தார். பின்னர் அச்சிறுவன் அதைத் தானாகவே மறந்துவிட்டிருந்தார். பொதுவாகவே 1 வயது காலத்தின் பின்னர் அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்ப்ப ஒரு குழந்தையானது இசைவாக்கமடையும்போது அவ் உயிர் வாயுவானது தனது பழைய பிறப்பின் தன்மைகளை இழந்துவிடுகின்றது. உதாரணமாக ஒரு பிறந்த மனிதக் குழந்தையை பிறந்த உடனேயே ஒரு குரங்குக் கூட்டத்துடன் கொடுத்து அதை வளர்கும்படி அவைகளுடன் சேர்த்துவிட்டால் அக்குரங்குக்கூட்டத்தினால் வளர்க்கப்படும் மனிதன் தனது ஆறாவது அறிவையும் வளரவிடாது ஒரு குரங்கைப்போலவே வளரும். இங்கு அந்த மனிதக்குழந்தை குரங்குகளின் வாழ்க்கை முறைக்கு இசைவாக்கமடைகின்றது.

  மறு பிறவி என்பது உண்மையே ஆனால் அதன் கருப்பொருளை வைத்துக்கொண்டு காண்டங்கள் வாசித்துப் பணம் சம்பாதிப்பதும், மதங்களை உருவாக்கி மற்றவர்களைப் பயமுறுத்துவதுமே உலக வழக்காகமாறியுள்ளதென்பதே உண்மை.

 • சமய சடங்குகள் எல்லாம் மனிதனுக்காகவே மனிதனாலே ஒழுக்கமாக வாழ அமைக்கப்பட்டவை அதையே நாம் பிடித்துக்கொண்டு இருக்காமல், மனசாட்சியின் படி நடந்தால் எல்லோருக்கும் சந்தோசமாக வாழ வழி கிடைக்கும். நாம் ஒரு பிறவியில் செய்யும் பாவம் எழு தலை முறைக்கு செல்லும் என்பது, எமது மனசாட்சியை மீறி நடந்தவைகள்தான்,ஒருவர் ஊனமுற்று பிறந்தால் எம்மவர் சொல்லுவர் அவருடைய தாய் தந்தை செய்த பாவங்கள்தான் என்று. எழாவது தலைமுறையில் செய்யப்பட்டவை ஏன் இவரை தாக்கவேண்டும் என்று யோசித்தால், ஏழு தலைமுறை சொத்தை அனுபவிக்கும் போது, ஏன் பாவத்தை மட்டும் அனுபவிக்க கூடாது,ஒவ்வருவரும் நல்லதை செய்தால் தலைமுறையே சிறக்கும்.நன்றி

 • பலர்மோ த.சங்கர்:

  அடி அடக்குகும் வாழ்கை யடைய ஆறடி நிலமே சொந்தமட அது முதல் இப்ப எம்மவருக்கு அதுவும் சொத்தமில்லை .தலை குனிந்து வாழும் நிலையக்கு கரணம் நாங்கள் தன் போறமே பொண்டி நீ பெரிது நான்பெரிது இது தமிழனின் பழக்க தோஷம்

 • புதியவன்:

  உயிர்களும் மறுபிறவியும்… நான் அறிந்த ஆதாரங்கள்…

  மறுபிறவி (இந்து மெய்யியல்) கூறுவது…..

  மறுபிறப்பு என்பது ஒரு உயிரினம் இறக்கும் போது அதன் வெறும் உடல் மட்டுமே இறக்கிறது என்றும் உயிர் அல்லது ஆத்மா மீண்டும் ஒரு புது உடலில் பிறக்கும் என்ற நம்பிக்கை ஆகும்.
  இந்து சமயத்தின் படி அவரவரின் கர்மபலன்களுக்கு ஏற்ப பிறப்பின் தன்மை அமைகிறது.

  சிவபுராணப்பாடல் கூறுவது…..

  புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
  பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
  கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
  வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
  செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
  எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
  மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்….

  யஜுர் வேதம் கூறுவது…..

  இந்து சமயத்தின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று மறுபிறவி.
  ஒருவரின் இறப்பிற்குப்பின், அவரது ஆத்மா முன்பிறவிகளின் மொத்த கர்மாவின் பதிவுகளுடன் அடுத்த உலகுக்குச் செல்கிறது. அங்கு தன் கர்மாவுக்கான பயன்களை அறுவடை செய்தபின், இந்த உலகுக்கு திரும்புகிறது. எப்படி கர்ம வினைகள் ஒருவருடைய செயலின் தேர்வின் அடிப்படையில் அமைகிறதோ, அதுபோலவே, அதனாலேயே, மறுபிறவியும் அவரவர் தேர்ந்தெடுப்பதுதான்
  – என்கிறது யஜுர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.6

  மறுபிறவியானது ‘பிறப்பு – இறப்பு – மறுபிறப்பு’ எனும் இயற்கையான பிறவிச்சுழலின் ஒரு பகுதியாகும். இறப்பிற்குப்பின், ஒருவர் அவருடைய உடலை விட்டுவிட்டு, அவரது உள் உலகங்களில் அடுத்த நிலைகளை அடைகிறார். அதன்பின் மறுபிறவியில் ஓர் உடலை அடைகிறார்.
  ஒருவருடைய கர்மாவானது முழுதும் தீருமாயின், பிறவிச் சுழல் முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை மோட்சம் அல்லது முக்தி என வழங்கப்படுகிற

  அறிவியல் நோக்கு…
  மறுபிறப்புக்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை.

 • நடோடி:

  தமிழன் எத்தனை பிறப்பு எடுத்தாலும் ஆரியனுக்கு அடிமைதான். இது இப்படி இருக்க அவன் பல பிறவிகள் எடுத்து என்ன பிரியோசனம்

  • நாடோடியின் கருத்து முற்றிலும் உண்மையானதே அதுவே யதார்த்தமும் கூட .இதிலிருந்து விடுபட ஏதாவது வழி உண்டா?

   • vinothiny:

    வணக்கம் மீண்டும் .தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா
    என்று சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது .
    நாங்கள் தலை நிமிர்ந்து வாழ நாங்களே தான் முயற்சிக்க வேண்டும் .
    அதற்கான வழியை எல்லோரும் இணைந்து செயற்படுத்த வேண்டும் .
    நாடோடி நீங்கள் மிக அருமையாக சொன்னீர்கள் .எத்தனை பிறவி எடுத்தும் என்ன பிரயோசனம் .தலை குனிந்து வாழும் நிலையில் தான் நாம் வாழ்கிறோம்.

    • கடந்து சென்ற காலத்தை எண்ணி கலங்குவதை விடுத்து நிகழ்காலத்தில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.எதிர்காலம் நலமாக வேண்டுமானால் நிகழ்காலத்தில் உழைக்க வேண்டும்.உலகத்தின் கொடைகள் எல்லாம் உழைப்பவர்க்கே உரியவை என்றார் துளசிதாசர்.
     பாடுபடுபவர்க்கே இந்த பாரிடம் சொந்தமையா என்றார் பாரதிதாசன்.காலம் தானாக கனியும் என இலவுகாத்த கிளியாக காத்திருப்பதி முட்டாள்த்தனம்.
     காலம் கனிய வேண்டுமானால் நாம் பாடு பட வேண்டும்.மந்திரத்தால் எங்கும் மாங்காய் காய்க்காது.மண்ணுக்குள் வேர் நடத்தும் போராட்டத்தினதும்,உழைப்பினதும் விளைச்சலே மரத்தில் தொங்கும் கனிகள்.
     தலை குனிந்து படிப்பது தலை நிமிர்ந்து வாழ்வதற்கே இன்றைய உழைப்பே நாளைய வெற்றி.
     முடிந்த பொழுதுகள் மடிந்து போனவை.அவற்றை எண்ணி வருத்தம் வேண்டாம்.நாளைய நம் இனத்தின் வாழ்வைப் பற்றி சிந்திப்போம். புறப்படுங்கள் தோழர்களே தொலைந்தவற்றை தேடுவதற்கல்ல மலரப்போகும் புதுயுகத்திற்காக.

     • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

      சோம்பேறியாக விழுந்து கிடந்த என்னை இந்த வசனங்கள் பொங்கி எழ வைத்துவிட்டன, இருந்தும் எழும்பி இப்ப என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டு நிக்கிறேன்.
      பேஷ் பேஷ் அருமையான வார்த்தைகள்.

 • சச்சி:

  அதாவது,சொர்க்கம்,நரகம்,மறுபிறவி என்பதெல்லாம் வெறும் ஏமாற்று வித்தைகள் என்று கேலி பேசுவதை விட,வாழ்க்கை பாதையை ஒழுங்குபடித்திக்கொடுக்கும் அற்புதங்கள் என்று ஏற்றுக்கொள்வதுதான் நியாயம்.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  கருத்துக்களம் நல்ல யோசனை சிவாஸ் அவர்களே. பாராட்டுக்கள்.

  என்னிடம் ஆதாரங்கள் இல்லை, என் (மன)நிலைப்பாட்டை சுலபமாகவும் மலிந்த சொற்களிலும் எனது குன்றிய அறிவுத்தரத்திற்கு அமைய கூறமுனைகிறேன்.

  கிடைக்கப்பெற்ற இந்த பிறப்பையே திருப்திகரமாகவும் வெற்றிகரமாகவும் வாழ்வதையே எமது சவாலாக எடுத்துகொள்வோம். உணரமுடியாத அடுத்த பிறப்பை எண்ணி நற்பெயரை உழைத்துவைப்பதிலும், கண்ணுக்கு தெரியாத சந்ததியை எண்ணி தன்நிறைவு அடையாமல் சொத்துக்களை சேர்த்துவைப்பதில்மட்டும் கவனம் செலுத்தாது, இந்த பிறப்பில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை இழக்காது, சுயனலப்போக்கில்லாது எவருக்கும் தீங்கு விளைவிக்கா(த)வண்ணம் சந்தோசமாக வாழ்க்கை வண்டிலை இழுத்துச்செல்வதிலேயே முழுக்கவனத்தையும் முதலீடு செய்வோம்.
  இப்பிறப்பில் உருவாக்கிக்கொண்ட எமது தன்னம்பிக்கையான நிலையான சொத்தும் குறிப்பிட்ட முதலீடும் இணைந்து இப்பிறப்பிற்கு தேவையான தேறிய இலாபத்தை உண்டுபண்ணும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

  இதை குப்பத்து தமிழில செப்பினா
  இண்டைக்கு பிடிச்ச மீனை நாறப்போடாம இண்டைக்கு நாங்களே திங்குவோ, பேரன் பீட்டி மீனு திங்கணும்னா சோம்பேறியாக்காம அவங்களையே கடலுக்கு அனுப்புவோ.

 • வினோதினி என்பவரின் கருத்துக்கள் மிகவும் காத்திரமானவைகள்.சில விடயங்களில் உடன்பாடு இல்லாத பொளிதிலும் அபாரமான கருத்துக்கள் எனது பாராட்டுக்கள்.இவரின் வேறொரு இணையத்தில் வெளிவந்த பூப்புனித நீராட்டு வைபவம் பற்றிய அருமையான கட்டுரை கூட என்னை மிகவும் ஈர்த்ததொன்று .யாராக இருந்தாலும் எம்மோரை சேர்ந்த ஒரு மகளிரின் இந்த மாதிரியான ஆக்கபூர்வமான படைப்புக்களிட்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் நீவிர் மகத்தான பணி .நன்றியுடன் மனோகரன் கலட்டியிலிருந்து.

  • vinothiny:

   வணக்கம் திரு மனோகரன் அவர்களே .
   தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
   இதில் ஒரு விடயம் என்னவென்றால், பூப்புனித நீராட்டு பற்றிய அந்த ஆக்கம் நான் எழுதியது அல்ல. வேறு தலைப்புக்களில் எனது ஆக்கங்கள் பணிப்புலம்.கொம் இல் வெளிவந்துள்ளன . உங்களை போன்றவர்களின் ஊக்குவிப்புக்கள் நிச்சயம் எழுதுவோர்களை ஊக்குவிக்கும் .நன்றி .வினோதினி

   • வினோதினியின் காத்திரமான ஆக்கங்கள் பலதை கண்டுள்ளேன் .பூப்புநிதநீராட்டும் என்னை மிகவும் ஈர்த்த கட்டுரை என்பதால் அதையும் நீங்கள் எழுதியதாக தவறாக எண்ணிவிட்டேன் .தவறுக்கு மன்னிக்கவும்.எனது பாராட்டுக்களும் நல்லாசிகளும் என்றும் உங்கள் போன்றவர்க்கு கிடைத்தவண்ணமே இருக்கும் .

 • vinothiny:

  மரணத்திற்க்கு பிறகு,என்ன இருக்கிறது என தெரிந்துக்கொள்வதில் மனிதனுக்கு உள்ள ஆர்வம் என்றுமே குறையாதது தான் .ஏன் என்றால் மனித மனம்,மரணத்திற்க்கு பிறகு, தான் முழுமையாக இல்லாமல் போவதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நம்மில் பலபேர் மறுபிறவியை நம்பவே விரும்புகிறோம்.

  உலக வாழ்வு என்பது மீண்டும் மீண்டும் பிறப்பதற்குரிய மயக்கத்தைத் தரும் ஒன்றே. இவ்வாழ்க்கையில் ஆசைகளனைத்தையும் அனுபவித்து முடித்து வைராக்கியம் எய்துவது இயலாத காரியம் என்பது தெளிவாகிவிட்டது. பின் வைராக்கியம் எவ்வாறு வாய்க்கலாம்? தத்தம் பூர்வ நிலைகளைப்பற்றி அறிவுகூர்ந்து யோசிக்கும்போது நாளடைவில் எவருக்கும் வைராக்கியம் கிடைக்கலாம். அதுமட்டுமே முக்திக்கான வழி. எவ்வளவோ பிறவிகள் நமக்கு முன்னே முடிந்து போய்விட்டதெனினும், இப்போது வாய்த்துள்ள பிறவியில் அதிர்ஷ்டவசமாக நாம் எல்லாவிதத்திலும் வீடுபேறு அடைவதற்கான தகுதியுள்ளவர்களாகவே விளங்குகிறோம். அதனால் ஒவ்வொருவரும் அவரவருக்கு இயலும் வண்ணம் தீவிரமாக அலசி ஆராய்ந்து யோசிக்கும்போது இப்பிறவியிலேயே முக்தி பெறுவதற்கான வழி அவரவர் தகுதிக்கேற்பக் காணமுடியும் ஒவ்வொரு மனிதனுடைய அறிவும் ஒவ்வொருவிதமாக இருப்பதனால், மனிதருடைய நினைவுகளெல்லாம் ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருப்பது சகஜமே. அதனால் நினைவின் விளைவுகளுக்கும் ஒற்றுமையிருக்காது. சொந்தமான அறிவினால் அவனவனுடைய ஆற்றலுக்கேற்ப நிதானமாக யோசிக்கும்போது உலகின் நிலையற்ற தன்மையும், இறைவனின் நிலையான தன்மையும் தானாகவே உணரப்படும். அப்போதுதான் எவனுக்கும் முக்திக்காக பிரயத்தனம் செய்வதில் அக்கறை வரும்.

  பிறவிப்பிணிக்கு ஆதாரமாக இருப்பது கர்மமாகும். ஆதலினால் கர்மம் ஒழியாமல் பிறவி அழியாது. ஆனால் எல்லாக் கர்மங்களையும் ஒழிப்பது என்பது இயலாத செயல். அப்படியானால் செய்யவேண்டியது என்ன? கர்மத்தின் விதையான ஆசையை அழிப்பது என்பதே. கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவி எடுத்தபின் இறைவனின் திருநாமங்களின் மேன்மையை உணர்ந்து அதில் ஈடுபடுவதைத் தள்ளிப்போட்டு நாட்களை வீணாக்காமல் இருப்பதே ஒவ்வொரு மானுடனும் செய்யவேண்டிய செயலாகும்

  இதைப் பற்றி பல மதங்களிலும்,தவறு செய்பவர்களை குறைக்கவோ,நல்ல செயல்களை ஊக்குவிக்கவோ, குறைந்த பட்சம் சொர்க்கம்,நரகம் என மரணத்திற்க்கு பிறகும், ஏதோ இருப்பதாகவே சொல்ல விரும்புகின்றன. சரி… அது பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டும் ,நம் நிகழ்காலத்துக்கு தொந்தரவு கொடுக்காத வரை. இல்லையா?????????????

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து