உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Vinothiny.P

53 Responses to “பணமா ? பாசமா ?”

 • Krishnapillai Ampikkumar:

  பாசம்

 • வசி:

  கஸ்ரப்படுவனுக்கு தான் தெரியும் பணத்தின் அருமை, அன்பை தொலைத்தவனுக்தான் தெரியும் பாசத்தோட அருமை.””Eg-பாலுக்காக அழும் குழந்தைக்கு பால் வாங்க பாசம் இருந்து பிரையோசனமில்லை பணம் வேண்டும்.””
  பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. ஆனால் பணம் இல்லையாயின் யாருக்கும் உன்னைத் தெரியாது ஏன் உங்கள் உறவுகளுக்குக்கூட தெரியவே தெரியாது.

 • Nivarsan:

  இந்தக் காலத்தில் பாசத்திற்கு இடமில்லை பணம் தான்
  அதனால் தான் வன்முறைகள் உருவாகுகின்றது.
  இது தான் எனது கருத்து.

 • சாந்தையூர் தனஸ்ரீ:

  பணத்தை கையாள்வதைப் பொறுத்து இரண்டாக வகைப்படுத்திக் கொள்ளலாம்.
  பணத்துக்கு இன்னொரு அர்த்தம் நாணயம் (நாணயமாகப் பயன்படுத்துதல் )
  பணத்துக்கு மற்றொரு அர்த்தம் காசு .காசுக்கு ஓர்த்த கருத்து குற்றம் (அளவுக்கு மீறி பயன்படுத்துதல் )
  எனவே பாசம் என்பதும் இதேபோல்தான்.ஆகவே பணம் =பாசம்

 • pan bala:

  பாசம் என்ற வேசம் காட்டி பணம் பெறப்படுகிறது. பெற்ற பணம் அவன் வாழ்வை செழிமையாக்க,பணம் கொடுத்தவனிடம் நீயார் என்றமாதிரி நடப்பார்கள்.இது என் அனுபவம்.இன்று வேசமான பாசங்கள் தூக்கி எறிந்தபடியால் பலர் சிறப்பாக வாழ்கிறார்கள்.அதில் நானும் ஒருவன். பண் த. பாலா

  • pan பாலா பத்து லட்ச்சத்து பதிநைஆயிரம்தரம் உண்மையடா தம்பி நீ சொன்ன கருத்து .எத்தினையோ பேரை கண்டிருக்கிறன்.சொந்த அனுபவமும்
   கூட உண்டு .

 • . தொல்காப்பியன்:

  நன்றி .சிவாஸ் .அண்ணா.நானும் .எத்தனயோ .போரரட்டம் .செய்தேன்
  பசாம் .தான் .முதல்லிடம்.என்று ..ஆனால் .யாருமே .நல்ல .விளக்கம்
  தரவில்லை .நீங்கள் .தெளிவான . விளக்கம் தந்தீர்கள் .நன்றி . .நன்றி
  வெளிநாடுகளில்..உள்ளவர்கள் கூடுதலான.பெயர் .பாசங்களிடம் .தான்
  பணம் .பெற்று.எங்கே .வந்து .வாலை.கட்டுகிறார்கள் .அப்படியான
  எம்மவருக்கு .பணம் .தான் .பெரிது

 • பணமா? பாசமா?
  இரண்டு சொற்களும் மூன்று எழுத்துக்களில் இருப்பதினால் இரண்டும் ஒன்றுக்கொன்று இணையாகுமா??????
  பணம் நாம் அணிந்திருக்கும் ஆடை என்றால்.
  பாசம் நமக்குள் இருக்கும் ஆத்மா போன்றது.

  பணம் இல்லாதவின் பிணத்துக்கு சமம்.
  பணம் பந்தியிலே குணம் குப்பையிலே.
  பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்.
  பணம் பத்தும் செய்யும்.
  இது போன்ற வார்த்தைகள் நிறையச் சொல்லலாம் ஆனால்
  உண்மையான பாசத்தின் முன் இந்தப் பணம் பிணத்துக்குச்சமம் என்பது என்னுடைய இந்த (கிட்டத்தட்ட) அரை நூற்றாண்டுகால வாழ்க்கையில் நான் கண்ட உண்மை
  இப்போ வெளிநாடுகளில் வாழும் உங்களில் எத்தனைபேர் சொந்தப் பணத்தில் வெளி நாடு வந்தீர்கள் ????
  தாய் தந்தை அண்ணன் தம்பி மாமன் மச்சான் நண்பன் உறவினன் போன்றோரின் பாசத்தால் வந்தவர்கள்தான் நிச்சயமாக இங்கு கூடுதலாக இருப்பீர்கள் என்பது நிச்சயமான உணமை
  நிச்சயமாக என்னை இங்கு கொண்டுவந்து சேர்த்ததும்
  பாசம் தான் பாசம் தான் பாசம் தான்
  இன்னும் நிறைய எழுதலாம் விடிய இரும்போடையும் அடிபடவேணும் பணத்துக்காக பணத்துக்காக பணத்துக்காக

 • தொல்காப்பியன்:

  பணம் .உள்ளவர்களிடம் .பாசம் .இல்லை
  பாசம் .உள்ளவர்களிடம் .பணம் .இல்லை
  என்னை.பொறுத்தவர.பாசத்தை .விட
  எதுவுமே .உலகில் .இல்லை

 • pan bala:

  பாசத்துக்கு உண்மை பொய் என இருக்குமானால்.பாசம் என்பது வேசமே. பணம் இருந்தால் எதையும் வாங்கலாம் என்றால் அதுவும் பொய்யே.இரண்டையும் விட சரியான நண்பர்கள் என்றும் நட்புடன் தான் அணுகுவார்கள்.அந்த நண்பர்கள் தான் இன்றும் நிலைக்கிறது. பண் த.பாலா மனோகரன் அண்ணரிடம் கருத்துக்கள் நிறைந்துள்ளது.இவ் இணையம் நிறைய உள்ளவரிடம் வாங்கி மற்றவருக்கு பகிர்கின்றது.நன்றி

  • நேசம் என்பது நினைக்கும் வரை
   பாசம் என்பது பழகும் வரை
   நட்பு என்பது நாடித்துடிப்பு நிற்கும் வரை.
   மற்றவை அனைத்தும் கலப்படங்களே.
   நட்பு=நல்ல நண்பர்கள்.

 • Gopal V:

  இந்த கருத்துக் களத்தை நேர அடிபடையில் அதாவது கடைசியாக வந்த கருது ஆக முன்னுக்கும் மற்றவை பின்னுக்கும் ஆக நிரை படுத்தினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறன்.
  இனி எனது கருத்துக்கு வருகின்றேன் நானும் “manoharan kandiah வின் கருத்துகளை வசித்து வருகின்றேன் மிகவும் நன்றாக இருக்கிறது, எனக்கு உங்கள்ளை யார் எண்டு தெரிய வில்லை உங்கள் கருத்துகளில் இருந்து தெரிகிறது நீங்கள் ஒரு நல்ல உள்ளம்மும் கோட்பாடும் உள்ளவராக. உங்கள் கருதுகள்ளில் இருந்து நீங்கள் தான் பண் ஊருக்கு ஓர் காந்தி போல தெரிகிறிங்கள்.
  பணம் என்பது மனிதன் வாழுவதற்கு பயன் படுத்தும் ஒரு கருவி (கத்தி, கோடாலி அலவாங்கு போல ) , பாசம் என்பது ஒரு மஜா வலை. ஆனால் இது எல்லாத்திலும் விட மனிதர்கள் ஆக இவ்வுலகில் இருக்கும் நாங்கள் எங்கள் எல்லோரையும் இணைக்கும் மனிதவிமனதுடன் இருக்க வேண்டும்.
  அத்துடன் பிற உயிர்களில் கருணையக இருக்க வேண்டும்.

  • கோபாலா எனக்கும் கூட உம்மை யாரென்று தெரியாது .கருத்துக்களுக்கு நன்றிகள் பல .ஆனால் அந்த காந்தி கதை என்றால் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுப்போல் தெரிகிறது. சிலவேளை எங்கடை பொடிப்பிள்ளயல் சொல்லுவங்கள் உவற்றை சொந்தக்காரன் இல்லாட்டி வேண்டப்பட்டவர் போல கிடக்குதெண்டு.எனவே அதை வாபஸ் வாங்கிவிடு. எதோ வாழ்க்கை பயணத்தில் கண்டதை .கேட்டதை .வாசித்ததை அனுபவித்ததை அடுத்தவருடன் பகிர்ந்துகொள்ளுதலே.இல்லாவிட்டால் பெட்டகத்தில் பூட்டி வைத்த நோட்டுக் கத்தைகளுக்கு சமனாகிவிடும் .நாளடைவில் கரயானுகளுக்கும் பூச்சிகளுக்கும் இரையாகிவிடும் .

 • இந்த இணையத்தில் நான் அண்மையில் இணைந்து கொஞ்ச நாட்களில் எதோ இரு இறக்கைகள் முளைத்து வானத்தில் பறப்பது போல் உணர்ந்தேன் .விசா இல்லாமல் பொன்சர் இல்லாமல் டிக்கட்டு காசும் இல்லாமல் நீங்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளாம் ஐரோப்பிய மற்றும் கனடா ஆஸ்தேரிலியா எங்கும் அழைத்து செல்கிறீர்கள் .அதேபோல் உங்களையும் டிக்கட்டு காசு ஒண்டும் இல்லாமல் எம் ஓ டீ கிலியாரஞ்சு இல்லாமல் தேர்முட்டி படி ,வாசிகசாலை குந்து ,கிணத்தடி தண்ணித்தொட்டி
  குந்து ,சாந்தை பிள்ளையார் வேம்படி வெற்றி மடத்து புளியடி, கிணத்தடிக்கெல்லாம் கூட்டிக்கொண்டு போகிறார்கள் .உங்களுக்கெல்லாம் எப்பிடி நன்றி சொல்வதென்று அறியாமல் தவிக்கிறேன்.அதில்ல விஷயம் நான் சொல்ல வாறது என்னெண்டால் ஒரு பொறுத்த தலைப்பை வச்சுக்கொண்டு விளையாடுகிறீர்கள்.விடிய விடிய கதைக்கலாம் .பார்த்திபனும் வடிவேலும் சேர்ந்தால் அவர்கள் உதிர்க்கும் நகைச்சுவையில் வடிவேலு தலையை சொரிவது போல் என் நிலை .அத்தனை கருத்துக்கள் .நீங்கள் எல்லாம் புலம் பெயராது எம் ஊரில் வாழ்ந்திருந்தால் நாங்கள் எல்லோரும் எங்கோயோ போயிருப்போம் .என் செய்வது காலம் அதற்கு இடம் தரவில்லை .உங்களை எல்லாம் தூக்கி
  சென்றுவிட்டது.இருந்தும் தலைப்பிலிருந்து கொஞ்சம் விலகி என் கருத்துக்கள் இதோ .பாசமும் பணமும் இணைந்து எங்களை படுத்தும் பாட்டை கொஞ்சம் உணருங்கள் .அக்கா மேன் அண்ணன் lமேன் ,குஞ்சாச்சியின் மேன் குஞ்சியாப்புவின் மேன் எண்டு நீங்கள் பாசம்
  வழிய அனுப்பும் பணம் இஞ்சை என்ன பாடு புகுது என்பதையும் கொஞ்சம் யோசியுங்கோ .ஒழுங்கைகள் எல்லாம் மோட்டச்சயிக்கிளுகள் வண்ணத்திப்பூசிகள் போல் பறக்கிறது .பணத்தை தேடுவதின் தாத்பரியங்களை அவர் அறியார். ஒரு கணணி பொறியை வாங்கச்சொல்லுங்கள் .கைத்தொழில் ஒன்றை கற்றிட ஊக்கமளியுங்கள் .
  எங்களுக்கெல்லாம் கல்வி செல்வத்தை வாரி வழங்கிய ஆறுமுக கொலிச்சின் நூற்றாண்டு விழா மலரில் எம்மூர் கற்கண்டு வாத்தியாரின் மகன் மணி மாஸ்டர் வழங்கிய வழி காட்டும் கட்டுரையை ஒரு தரம்
  நோக்குங்கள் .அதில் எத்தனையோ வழிகாட்டல்கள். அண்மையில் எம்மூர்
  அரச ஊழியம் செய்யும் ஒரு அன்பர் என்னுடன் உரையாடிய போது
  அவரின் ஆதங்கத்தை பாருங்கள் .”அண்ணை முந்தியிலை எண்டால் எங்கடை ஊரிலை எத்தினை கவுன்மேந்து உத்தியோகத்தர் மார் .இப்ப கவுன்மேந்து காரியாலம் ஒண்டுக்கு போனால் அயலூரவன் ஆகக்குறஞ்சது
  இரண்டு மூண்டு பேராவது இருப்பங்கள் .எங்கட சனம் ஒண்டையும் காணேலாது ” இதை கொஞ்சம் யோசியுங்கள் .ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் இறங்குங்கள்

 • vinothiny pathmanathan:

  நன்றாக கருத்துக்களை எல்லோரும் முன்வைத்திருக்கின்றீர்கள்.
  நிறைய பணம் சேர்த்து வைத்திருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம் , எவ்வளவு பணத்தை நாம் கொட்டிக் கொடுத்தாலும் உண்மையான பாசம் நமக்குக் கிடைத்து விடுமா?????

 • vinothiny pathmanathan:

  பசி எடுத்தாலும்
  பணம் இல்லை ! பணம் இருந்தால்
  பசி இல்லை ! தனிமையில்
  மனிதனும் பணமும் —!

 • pan bala:

  பாசம் ஒரு புற்றுநோயாகும். இதை குணப்படுத்த முடியாது.இதனால் மனிதன் இறந்தே போகின்றான்.பணம் எச்.ஐ.வி மாதிரி. அவனை பார்ப்பவன் நோயாளிபோல் தெரியமாட்டான் ஆனால் அவனும் தன் சாவை நினைத்தே (பணத்தை நினைத்தே) வெகுவாக இறந்துவிடுவான்.ஆனால் நிலைப்பது நட்புக்கள் மட்டுமே.ஓரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை அவனது மரண ஊர்வலத்தை பார்த்தால் தெரியும் என ஒரு கருத்து அந்த நாட்க்களில் உண்டு. பண் த.பாலா

 • seetosee:

  பணம் என்பது பேப்பர்
  பாசம் என்பது மனிதர்கள்

 • தொல்காப்பியன்:

  பணம் .மனிதர்களை .கொஞ்சம்
  கொஞ்சமாக .கொல்லும்.ஓரு
  வியாதி ..ஆனால்.பாசம்
  அப்படி இல்லை .பாசம்
  மனிதர்களின் .மனதை
  குணப்படுத்தும் .ஓர்
  மருந்து

 • ஒரு முறை பிறந்து பல முறை இறக்கும் வாழ்க்கை பணத்திற்காக,எவன் சொன்னது கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று. நான் சொல்லுகின்றேன் பணம் இருந்தால் இருக்கும் இடம் கூட சிறப்புதான்.

 • pan bala:

  பணமா பாசமா என்ற கேள்வியிலேயே முதல் நிற்ப்பதே பணம் தானே.பணம் என்ற வெப்பநிலை கூடக்கூட பாசவலைகள் சுற்றிநிற்க்கும்.இதே வெப்பம் உறை நிலை அடையும்போது பாசவலைகள் தானாய் கலைந்துவிடும்.இறுதியில் உதவுபவன் சிறந்த நண்பர்கள் தான். நட்பு என்பது என்றும் சுடுகாடுவரை மட்டும் அல்ல அது அடுத்த ஜென்மம் வரை தொடரக்கூடிய மகிமை உண்டு. இது நான் பணமா? பாசமா? என்பதை அனுபவித்த உண்மைச்சம்பவங்கள் பல உண்டு.நட்பு தான் சிறந்தது. பண் த.பாலா

  • இது கொஞ்சம் தலைப்பிலிருந்து விகிப்போகுது .இருந்தாலும் ஆரோக்கியமானதே நட்பும் கூட பாசத்தின் ஓர் பக்கமே .நன்றி

 • ஒரு கேள்வி ?
  24 மனிதியலதில் உலகம் அளியப்போது எண்டால் நீங்கள் என்ன செயவிங்கள் ?

  இந்த நேரத்தில் எது முக்கியம் ? பாசம்மா பணமா ?

  இந்த கருத்து வேற திசைக்கு போகுதுபோல ?

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   உங்கள் கருத்தை சரியான திசைக்கு திருப்பி கொண்டுவாறன்.
   மூசி மூசி பணம்தேட உழைக்கும் நாங்கள் உலகம் என்ற ஒரு சாமான் இருப்பதையோ, அது உருண்டையோ/உருளுவதையோ, அதில் என்ன நடக் (கபோ)குது என்றெல்லாம் யோசிக்க நேரம் இல்லாமல் பணத்தையே தனிய யோசிச்சு யோசிச்சு அவாவில் உழைத்துக்கொண்டிருப்போம்.
   25 வது மணிநேரத்தில்தான் உலகம் அழிந்துவிட்டது என்று அறியவும் நேரிடலாம்.
   சரியான் நேரத்துக்கு அறிய நேரிட்டால் நான் இருக்கும் பணம் எல்லாத்தையும் கொடுத்து airport இல் உள்ள சகல planes களையும் வாங்கி என் பாசங்களுக்கு அவற்றை கொடுத்து உலகத்தை விட்டு பறந்து தப்பித்துவிட ஆயத்தங்கள் செய்வேன்.
   உலகம் அழியப்போவது என்றவுடன் planes களின்விலை சந்தையில் நாறின மீன்விலைக்கு சமமாகிவிடும்.
   இந்த ரகசியத்தை வெளியில விடவேண்டாம். Amsterdam Airport ஐ யோசித்து வச்சிருக்கிறன். வேணுமெண்டால் உங்களுக்கு ஒரு plane தாரன்.
   அது சரி உலகம் இப்ப கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டுதானே போகுது???

   • சுதர்சன் அம்ஸ்டர்டாம் ஐ விட அதி நவீன airport துபாய் யில் jebalali என்ற இடத்தில் under construction உலகிலேயே அதி நவீன நம்பர் வன் airport
    யோசனையை கொஞ்சம் alter பண்ண பார் நன்றி

 • தொல்காப்பியன்:

  கடவுளிடம் .ஓர் .கேள்வி
  பிறப்பென்றால் .என்ன.. ?
  பிறந்துபார்
  பாசம் .என்றால். என்ன.. ?
  பகிர்ந்து .பார்
  அன்பு. என்றால். என்ன.. ?
  கொடுத்துப் பார்
  மனயலின் சுகம். என்றால். என்ன.. ?
  மணந்து பார்
  இறப்பு என்றால். என்ன.. ?
  இறந்து பார்
  எல்லாம் .அனுபவம் .மூலம்
  அறிவதென்றால்.ஆண்டவனே
  நீ.எதற்கு ?
  அந்த .அனுபவமே .நான் .தான்

  • நல்லச்சொன்நீங்க போங்க தொல்காப்பியன்.
   பணம் என்றால் பகிந்துபார்.
   பார் புகழும் உன் நாமம்

   பணம் வந்தால் கண் தெரியாது ,
   கண் போனால் எதுவுமே …………………தெரியாது.

  • தொல்காப்பியா உந்தக் கடவுள் மாருக்கு நீங்கள் தெரிஞ்சு வச்சிருக்கிற அளவுக்கு பாசத்தை பற்றிய understanding எல்லாம் கிடையாதடா தம்பி
   இல்லாட்டி பார் அண்டைக்கு அந்த நாரதர் என்ற நரி பலத்தை கொண்டுவந்து சூழ்ச்சியை செய்யேக்க சிவபெருமான் இரண்டு பிள்ளையிலையும சம பாசம் எண்டால் இஞ்சை கொண்ட்டடா நாரதா பழத்தை எண்டு வாங்கி சின்ன ஒரு கத்தியை எடுத்து (சிவபெருமானுக்கு இதெல்லாம் பெரிய வேலை இல்லை ) சம பாதியாய் வெட்டி குடுத்து பிரச்சனையை சுமுகமாக தீர்த்திருக்கலாம்.இப்ப விளங்குதே தாய் தேப்பனும் ஓரவஞ்சனை பாசம் .சிம்பிள் ஆக பிரச்னையை தீரத்திருந்தால்
   பாவம் அந்த முருகன் உந்த உலகம் எல்லாம் அடி நுனி தேடி ஆலயத்தேவை இல்லையே .

 • பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. ஆனால் பணம் இல்லையாயின் யாருக்கும் உன்னைத் தெரியாது ஏன் உங்கள் உறவுகளுக்குக்கூட தெரியவே தெரியாது.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   சுள்ளான், பணத்தை பற்றி நல்லா சொன்னீங்கள்.
   பாசத்தை பற்றியும் சுளை சுளையா ஏதாவது சுவையா சொல்லுங்கோவன் கேட்போம்.

 • L. Seelan ( Digittal Photos Swiss ):

  பணம் பத்தும் செய்யும் ..
  சும்மாவா சொல்லி வைத்தார்கள் அது அவர்கள் நொந்து நூலாகிய பின்பு தான் எழுதி வைத்திருப்பார்கள் .
  எங்களிடம் பணம் இருந்தால் நமக்காக ( பணத்திற்க்கா ) இந்த உலகமே நம் காலடியில் .
  பாசத்தை வைத்து ???????????????
  நன்றியுடன் சீலன் swiss

 • jegatheeswaran:

  பணம்,பாசம் இதட்கு அர்த்தம் தருவிர்களா?

  ஜெகதீஸ்வரன் நோர்வே

 • இது ஒரு அருமையான தலைப்பு .ஆனாலும் கொஞ்சம் பழமையானது .பட்டிமன்றங்கள் மற்றும் பட்டி தொட்டிகளிலெல்லாம்
  சூடாக விவாதிக்க பட்ட விடயம் .இருந்த போதும் சுவாரசியமான விடயம்.அனுபவங்களின் மூலதனத்துடன் சமகால சந்ததியின் சம்பவங்குலடன் மீண்டும் விரைவில் வருவேன் .இப்ப கொஞ்சம் பிசி .
  மன்னிக்கவும்.

  • பலர்மோ \ த .சங்கர்:

   அன்பு உறவே கொஞ்சம் பிசி என்றிர்கள் கரணம் பணத்த தேடிய அல்லது பாசத்த தேடிய பிசி

   • சங்கருக்கான பதில் நான் பணத்தை தேடி பணத்தின் பின்னால் ஓடிய பணப்பிசாசு இல்லையடா தம்பி .பணம்தான் எல்லாம் என்றில்லை .சீவிக்கிரதுக்கு கொஞ்சம் பணம் தேவை அவ்வளவு தான் அதுக்காக எல்லாம் பணம் தான் என்று பணத்துக்கு பின்னால் அலைந்து ஓடும் பிசாசு இல்லையடா நான்.போதுமென்ற மனமே பொன் செய்யும்நிலம்
    என்ற நம்முன்னோர் எமக்களித்த முது மொழியை கடைப்பிடித்து வாழும் ஒரு
    யதார்த்தவாதியடா தம்பி நான்.எனது தொழிலை (profession) பிரயோகித்து நான் பணம் பண்ண நினைத்தால் இன்று நாலைஞ்சு பங்களா மூண்டு கார் இன்னும் எத்தனையோ . இன்றும் நான் வசுவிலை தான் பயணம் .மிகவும் எளிமையான வாழ்க்கை .பிசியாக இருப்பதன் காரணம் ஏதாவது ஓர் வழியில் நாங்கள் எங்களை ஈடுபடுத்த (engaged ) கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே .இல்லாவிடில் லூசு பிடிச்சுப் போகும் இந்த உலகம் போற போக்கில .அதுக்கு சொல்லுக்றது மன உளைச்சல் /மனஅழுத்தம் எனும் வியாதி .அதைப்பற்றி நான் விரிவாக ஒரு கட்டுரையை இணையத்துக்கு
    எதிர்காலத்தில் நேரம் கிடைக்கும் பொது வழங்கவுள்ளேன் .அதுவரை நன்றி வணக்கம் .

    • பலர்மோ \ த .சங்கர்::

     மனோகரன் அண்ணா எனது பதில் தாமதத்துக்கு மன்னிக்கவும் நானும் உங்களமாதிரித்தான் கொஞ்சம் நேரம் பற்றாக்குற மன்றும் உங்கள் கட்டுரையை இணையத்துக்கு அனுப்பவும் எதிர் பாக்கின்றேன் பணம் இருத்தல்தான் இத்த உலகில் மதிக்கின்றர்களே எம்மவர்கள் ??? காசேதான் கடவுளப்ப அத்த கடவுளுக்கும் அது தெரியும் அப்பா ,நிறைய எழுதலாம் நேயர்கள் வசிப்பதுக்கு கொச்சம் சலிப்பு வரும் காரணத்தால் ? மிண்டும் தொடரும் என் கிறுக்கல்

  • Naadodi:

   தலைப்பு பழைசாக இருந்தாலும்.. புலம் பெயர் வாழ்வில் இவை இரண்டும்தான் எம்மவரை இணைக்கும் அச்சாணி

 • பலர்மோ \ த .சங்கர்:

  ஏழையாக இருக்க கூடாது என உறுதி எடுத்துகொள்ளுங்கள் ஏழ்மை மனித இனத்திற்கு பெரிய எதிரி என்பதை உணர்த்து உழப்பை பெருக்குக்கள் பாசம் என்பது எனது உரில் இருக்கும் போதுதான் தெரிகின்றது புல பெர்த்த நாடுகளுக்கு வாத்த பின் பணம்தான் எம்மவர்களுக்கு தெரிகின்றது பாசம் என்பது வத்தாத உன்று மாதிரி பணம் என்பது இன்று என்னிடத்தில் நல உன்னிடத்தில்

 • சச்சி:

  சூலக்கருப்பன் சாந்தை தமிழ் கிறுக்கன்,ஆகியோர் இணையத்துக்கு மிக நெருங்கிய உறவினர்களோ?

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   என் தவறு. அண்ணன்-தங்கை பாசத்தை கொச்சைப்படுத்தினால் சூலக்கறுப்பன் சும்மா இருப்பாரா?
   என்னமோ ‘வாடா என் தக்காளி பொன்னாங்காணி’ என்றெல்லாம் அவர் தொடங்கவில்லை. அதுவரையும் OK

 • நல்ல தலைப்பு!!! மாயையின் தோற்றம் மலரட்டும்
  உண்மையின் உணர்வுகள் ஒழியட்டும்
  கலியுகம் செழிப்புடன் உருவாகட்டும்
  நானும் வரவா? உதவிக்கு எதுக்கும் கொஞ்சம் யோசிப்போம்

  ஒளவையார் வாக்கு
  பாடு பாட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிடு ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார் பாவிகாண் இந்தப் பணம்.
  கஸ்ரப்பட்டு பணத்தை சேமித்து புதைத்து வைக்கும் மனிதர்களுக்காக ஒளவை கூறியவை இவை.

  தொடரும்

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   ஆவி இருக்கையிலேயே பாடுபட்டுத்தேடிய பணத்தை தன்நிறைவோடு அனுபவித்து முடித்(திருந்)தால்?
   ஒளவையார் இவர்களைப்பற்றி ஒன்றும் பாடி வைக்கவில்லையா?
   இருக்காவிடின் தான் பாட்டுக்களைப்பாடியே மட்டும் தேடிவைத்தவர்களின் பணங்களை இனாமாக பெறுவதற்காக பாடப்பட்ட சூள்ச்சிப்பாடல்கள் ஆக தான் பார்க்கிறேன்…….

 • பாசத்தை பணத்தோடா– ஒப்பிடுவது. இரண்டும் வேறுபட்ட கோணத்தில் பார்க்க பட வேண்டியவைகள்.பணம் பந்தியிலே பாசம் குப்பையிலே,பணம் என்றால்பிணமும் வாய் திறக்கும்.பாசம் என்னடா பாசம் பணம் தானடா நிரந்தரம்.இன்றைய உலகில் பணத்தை கொண்டுதான் பாசத்தை விலைக்கு வாங்க வேண்டும்.ஏன் பணம் இருந்தால் பாசத்தை மட்டுமா உலகத்தையே விலைக்கு வாங்கலாம்.போற போக்கைப் பார்த்தால் ஏன் உங்கள் நெற் ஐ க்கூட பணத்தால் வாங்கும் சந்தர்ப்பம் அமையலாம்.

  • சூலக்கருப்பன்:

   நெற்றில் முதலில் பாசம் இருப்பதால் தான் நீங்கள் அதை பணம்கொடுத்து வாங்குவீர்கள். பாசம் இல்லையேல் நெற்றை வாங்கி என்ன செய்வது? மீன் பிடிக்கவா?

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  மேலே பிரசுரிக்கப்பட்ட படங்களை பாருங்கள் (பதில் கிடைக்கும்).
  அண்ணன் தன் தங்கையை தோளில் சுமந்துகொண்டிருப்பது பாரம் கூடவா?
  அதே அண்ணன் கட்டுக்கட்டாக பணத்தை pocket இல் சுமந்துகொண்டிருப்பது பாரம் கூடவா?
  நான் அந்த அண்ணணாக இருந்தால் சற்று தூரத்திலேயே தோள்வலியால் தோள்சுமையை இறக்கிவிட்டு நடையைக்கட்டுவேன்.
  pocket சுமை எனக்கா சட்டைக்கா/களுசானுக்கா?
  என் pocket கிழியாமல் கண்ணும் கருத்துமாக இருக்க நான் bank இல் சென்று Danish Kroners களை முதலில் Kuwait Dinars களாக மாற்றிப்போட்டுத்தான் நடையைத்த்தொடங்குவேன்.
  எவரும் சுமையோடு போய்ச்சேரும் இடத்தை அடைய விரும்பமாட்டார்கள். அதில் நான் என்ன விதிவிலக்கா?

  • சூலக்கருப்பன்:

   பாசம் கிரேடிட் கார்ட் சைசில் இருந்தால் சுமப்பானா இந்த அண்ணன்?

   • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    ஆகா நல்ல யோசனை இது.
    mobile phone களாக இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரர்கள்கூட சுமப்பார்கள் பாசத்தை.

 • சச்சி:

  பணக்கஸ்ர்டம் வந்த பொழுது பாசங்களிடம் உதவி கேட்டு போனேன்,அப்பொழுது தான் தெரிந்தது பாசங்களுக்கும் பணக்கஸ்ர்டம் என்று.இப்பொழுது தெரிந்திருக்குமே எது முக்கியம் என்று.

  • சூலக்கருப்பன்:

   பணக்கஷ்டங்கள் வரும்போது உங்கள் பாசங்களோடு இருந்து எனது படங்களை பாருங்கள்.

   • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    ஏன் (இனி) ஓடாத படங்களை வைத்து உங்கள் பணப்பெட்டியை நிரப்பவோ?

 • கலட்டிக்கறுப்பன்:

  பணமேதான்.பண்மில்லாவிட்டால்.யார்மீது பாசத்தைக்காட்டுவது.ஒருவர் மீது பாசம்வைக்கவேணுமானால் பணம்தான் வேணும்.வெறுமனெ பாசத்தைமட்டும் வைத்து என்ன பண்ணுவது.எதுவும் செய்யமுடியாது

  • சூலக்கருப்பன்:

   ஒரு மணிநேரம் வைக்கும் பாசத்திற்கு உங்கள் விலை என்ன?

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து