உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

குழந்தைகள் முன் தன்னை செக்ஸுக்கு அழைத்து தொந்தரவு செய்த கணவனின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார். கும்மிடிப்பூண்டி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

கும்மிடிப்பூண்டி திருபுழல்கோட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் அசோக் மரம் அறுக்கும் பட்டறையில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், சொர்னா சோபனா சொப்னா சுவாதி ஆகிய 4 மகள்களும் உள்ளனர்.

அமுதா ரப்பர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தினமும் குடித்துவிட்டு வந்து அமுதாவிடம் தகராறு செய்வாராம் அசோக். குழந்தைகள் இருக்கும் போதே உடல் உறவுக்கு அழைப்பாராம். இது அமுதாவிற்கு பிடிக்க வில்லை.

மேலும் அடிக்கடி செக்ஸ் தொந்தரவு கொடுத்ததால் வெறுப்படைந்தார். ஆசைக்கு இணங்க மறுத்ததால் வேறு யாருடன் தொடர்பு வைத்து இருக்கிறாயா என்று கேட்டு அசோக் அடித்து உதைப்பாராம். இதனால் மனம் உடைந்த அமுதா கணவரை தீர்த்து கட்ட திட்டமிட்டார்.

ஒரு பெரிய கருங்கல்லை வேலைக்கு சென்ற இடத்திலிருந்து எடுத்து வந்து வீட்டில் மறைத்து வைத்திருந்தார்.

நேற்று இரவு வழக்கம் போல் தகராறு செய்து விட்டு அசோக் தூங்கிவிட்டார். அமுதாவும் தூங்குவது போல் நடித்தார். கணவர் நன்றாக தூங்கி கொண்டு இருப்பதை உணர்ந்த அவள் மறைத்து வைத்திருந்த கல்லை தூக்கி அசோக்கின் தலையில்போட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிவிட்டார்.

உடனே அமுதா தனது மகள்களை எழுப்பி அப்பா மீது யாரோ கல்லை போட்டு விட்டு ஓடி விட்டதாக நாடகமாடினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அசோக்கை சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தியதில், முன்னுக்கு பின் முரணான தகவல்களை சொல்லிய அமுதா பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டார். கணவரை தான் கொலை செய்ததை வாக்கு மூலமாக கொடுத்தார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அப்போது தந்தை, தாயைப் பிரிந்த குழந்தைகள் 4 பேரும் கதறி அழுததைக் கண்ட அனைவரும் கண்கலங்கினர்.

14 Responses to “கணவன் தலையில் கல்லைப்போட்டு கொன்ற பெண்!”

 • சச்சி:

  இந்த நோய்க்கு எமது மூதாதையர்கள் கண்டு பிடித்த ஒரு வயித்தியம் ஈரத்துணியை இடுப்பில் கட்டிக்கொண்டு இருட்டில் இருபத்திரண்டு தரம் வீட்டை சுத்தி வந்தால் இந்த நோய் விடுபட்டு விடும்.கருங்கல்லில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

  • சச்சி உந்த யுக்தியை பரீட்சிக்கபோனாய் என்றால் விபரீத விளைவுகள்.
   தட்டித்தவறி அயல்வீட்டுகாரனோ ,காறியோ கண்டால் அடுத்த நாள் லூசுப்பட்டம் உன் தலையில் .ரெடியா

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   🙂 🙂 🙂
   ஐயோ ஈரத்துண்டோட இருட்டில இரண்டுதரம் ஓடினேன், நாயளும் பூனையளும் பின்னால கலைச்சுக்கொண்டு வந்து ஈரத்துண்டை இழுத்த்க்கொண்டு போய்விட்டதே…

   • தம்பி சுதர்ஷா நல்ல காலம் உனக்கு வேலை செய்யுது.சச்சி சொன்னமாதிரி ஈரத்துணியோட ஓடாதை.எனக்கு ஒரு ஈமெயில் பண்ணு கனவிடயம் சொல்லித்தாறன்.முதல் கேட்கிற இரண்டு கேள்விகளுக்கு பணம் அறவிடப்படமாட்டாது. அதன் பிற்பாடு தான் பணம் அதுவும் கிறடிற்காட் நம்பர் தந்தால் போதும்.இப்ப நான் SALE போட்டிருக்கன்.இதை எங்கட சச்சிக்கும் சொல்லுங்கோவன்.உங்களுக்கு திருப்தி இல்லையெண்டால் முழுப் பணமும் திருப்பித் தரப்படும்.

   • சுதர்சனின் அனுபவம் சரியாக அந்த நாள் ஞாபகந்த்தை மீட்குது .சவுக்கார தடை அமுலில் இருந்த காலத்திலை எங்கட சனம் எல்லாம் பனம் பழ
    சாறிலை துணிமணியை தோய்ச்சு காயப்போட்டு கட்டிக்கொண்டு போனால்
    பின்னாலை மாடுகள் முகர்ந்து கொண்டு திரிஞ்சமாதிரி அல்லோ உந்தக் கதையும் இருக்கு .நல்ல சுத்தமான துணியாய் இருந்தால் உப்பிடி நடக்க வாய்ப்பே இல்லை .தவறுதலாக கருவாடு ,மீன் அன்றில் இறைச்சி வகை ஏதாவது துணியில் டச் ஆகியிருக்கும் .சுத்தமான துணியுடன் மீண்டும் ட்ரை பண்ணு .விஷ் u ஓல் த பெஸ்ட் .

 • pan bala:

  உலகத்திலேயே ஆண்களிடம் உள்ள ஒரு சிலரிடம் இந்த கொடியநோய் பல பெண்களை வேதனைக்குரியதே.அதற்க்காக இந்த நோய் பெண்களிடமும் உண்டு.ஆனால் அவன் அவள் மட்டுமே எந்தளவுக்கு இந்த நோய் உண்டு என தெரியவரும். பண் த.பாலா

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   இந்த நோய் எனக்கு இல்லையென்று எப்படி test பண்ணுவது?
   சும்மா இருக்கிற நேரமெல்லாம் அதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வரும் – இந்த நோயில் அடிமையில்லாமல் விடுபட அறிவுரைகள் கூறவும்.

   • மொக்கு பையா மூளை இருக்கா உனக்கு?
    நித்திரை குளிசையை போட்டுவிட்டு கண்ணை முடிக்கொண்டு படுத்து எழும்பு,இதை யாராவது நெற்றில் வந்து சொல்வார்களா?
    பையா உன்னை நான் எட்டாத இட்டத்தில் வைத்திருந்தேன் எல்லாம் தொம் என்று விழுந்துவிட்டது, இதுதான் சொல்லவார்கள் ஆனைக்கும் அடி சறுக்கும் என்று.

    • அறிவு— உங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கோ. என்ர குஞ்சு கேட்ட கேழ்விக்கு ஒருத்தராலையும் பதில் சொல்லத் தெரியாது.நான் பதில் எழுதினனான் உந்த நெற்காறர் வவுணாவத்தையில கிடா வெட்டுற மாதிரி முழுக்கலையும் வெட்டிப் போட்டார்கள்.ஒரு வாத்தியார் ஒரு மாணவனின் கேழ்விகளுக்கு பதில் கூறுவதில் தடையா?

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

     hahahah …உங்க உந்த பிரச்சனை உள்ள கனபேர் சத்தப்போடாமல் ஆவலோட வாசிச்சுக்கொண்டிருக்கினம் (நல்ல பிள்ளையள்மாதிரி)….. என்னுடைய பேர் (இணையத்தில்) தேஞ்சால் பிரச்சனை இல்லை – விடயங்கள் பலருக்கு பயன்பெற்றால் சரி.
     சும்மாவெல்லாம் உயரத்தில் வச்சிருந்தால் விழுவினம், ஒன்றையும் எதிர்பார்க்காமல் எல்லாத்தையும் கீழையே விடுங்கோ மேல வந்தால் மட்டும் நல்லதாக பார்க்கலாம்.
     நான் ஒரு பூனை. எனக்கும் விழுந்து விழுந்து எழும்புவதில்தான் நம்பிக்கை கூட – அனுபவங்களை அதிகரித்துக்கொள்வதற்காக.

 • pan bala:

  நம்பமுடியாமல் இல்லை.இது ஒரு வருந்தக்கூடிய நோயாகும்.இந்த நோயால் இன்று புலத்தில் பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பல உண்மைச்சம்பவங்கள் பிரிவுகளை உண்டாக்கியதும் உண்டு.இந்தப்பெண்ணின் சம்பவம் உண்மையானால் பெண்ணின் துணிவுக்கு ஒரு ஓ போடவேண்டும். பண் த.பாலா

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   கருங்கல்லால் மண்டையில் போடுவது வருந்தகூடிய நோய் என்று அறிவது வியப்பானதே..
   இதுவரையும் அரிசிக்குள் குருனிக்கல்லு கலப்படம் செய்த அரிசிவியாபாரிகள் இனி கருங்கல்லை சேர்க்கபோகிறார்கள்.
   கண்டநிண்டதற்க்கு எல்லாம் புருசர்மாருக்கு கருங்கல்லெறி விளப்போகுது.

 • சச்சி:

  இந்த பெண் தான் செய்த தவறுக்கு கூறும் காரணம் நம்பமுடியாமல் இருக்கிறதே,

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  hahahaha …. கும்மிடிப்பூண்டி நடந்த இடம்….
  நான் வேற ஒண்டும் சொல்லவில்லை சிரிப்பு மட்டும் – அதுக்குத்தானே செய்தியாளர் இந்த செய்தியை தேர்ந்தெடுத்தவர்…

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து