உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இந்த வேலைத்திட்டம் பற்றிய சில தடங்கல்களை நேரடியாக கதைத்து முடிவெடுக்க எண்ணினேன். அதன் படி ஆலய ஆதினத்துடன் நேரடியாக தொலைபேசிமூலம் உரையாடினேன். அவர்களுக்கு வாசிகசாலையின் தேவை, அதன் புனர்நிர்மானத்தின் நோக்கம், அதன் எதிர்கால திட்டங்கள், இதர்க்கான ஆதினத்தின் கருத்தையும் அறியப்பட்டு தற்ப்போது நிறைவான ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் மூலம் எங்கள் முயற்ச்சிகளை முற்றாக தவிரத்து நேரடி தொடர்பே ஆரோக்கியம் என பழைய நிர்வாகிகளும்,புதிய நிர்வாகமும் முடிவின்படி எம்முயற்ச்சி பலன் அளித்ததாய் நினைக்கின்றோம்.நம்பிக்கை தான் வாழ்க்கை. இப்பொழுது சகல வரைபடங்களும் கிராமசபை,நகரசபைகளுக்கு வளங்கப்பட்டு அவர்களின் அனுமதிக்காய் காத்திருக்கின்றோம்.இது மட்டும் இல்லாமல் கட்டிடத்தின் வேலைகள் ஆலயத்தின் திருவிழா முடிவானபின் ஆரம்பிக்கலாம் என ஆதீனம் தன்கருத்தையும் முன்வைத்தனர் நாமும் அதற்க்கு சம்மதம் கூறியுள்ளோம்.கட்டிட ஒருங்கமைப்பாளர் தனது சம்மதமும் அதே வேளை அவர்களும் திருவிழா முடிய வேலைகள் ஆரம்பிப்பதாயும் கூறியுள்ளனர்.அனுமதியும் அதற்க்குள் கிடைக்கும் என நம்புகின்றோம்.ஹம் அம்மன் ஆலயத்தில் பல ஆர்வலர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றியுள்ளேன் என எண்ணுகின்றேன்.இதுவரை நிதி செலுத்தாதவர்கள் நிதிகளை வளங்கி ஒத்துளைக்கமாறு கேட்டுக்கொள்கின்றேன்.இதை விட புலத்தில் இருந்து பிறந்தமண் நோக்கிச்செல்வோர் ஊரின் காட்சிகளை உங்கள் ஒலி ஒளி கருவிக்குள் உட்க்கொண்டு எங்கள் இணையத்திற்க்கு அனுப்பினால் ஊர் செல்லாதவர் பார்க்க உதவிய பணியை செயதவர்கள் ஆவீர்கள்.முரண்பாடுகள் இல்லா முயற்ச்சிகள் எதுவும் இல்லை, இவற்றை பேசி தீர்ப்பதே முயற்ச்சியின் தடைகளை தகற்க்கலாம். ப.அ.ச.ச.நிலைய வெளிநாட்டு தொடர்பாளர் பண் த.பாலகுமார் டென்மார்க்.

14 Responses to “பணிப்புலம் அம்பாள் சன சமூக நிலைய புனர் நிர்மான வேலைத்திட்டத்தின் இன்றைய நிலைப்பாடு.”

 • புனை பெயருகளிலை வந்து எங்களை நக்கல் அடிக்க்கிக்கிளை நாங்கள்
  சோர்வடைகிறோம் தம்பிமார்களே .எங்களுக்கும் ஏதாவது செயமுடியும்
  செய்ய விடுங்கோ .நக்கல் நையாண்டிகளை விட்டு வெளிச்சத்துக்கு
  வாருங்கோ .உந்த பாழடஞ்ச கட்டிடத்தை பார்கையில் எங்கள் மனம்
  வெம்பி அழுகுதைய .நீங்கள் சுக போகத்தை அனுபவிச்சு கொண்டிருக்கிற
  உங்களுக்கு இதில எழுதுகிற தெல்லாம் பொழுது போக்கண்ணை .எனவே
  இனியாவது உளுத்து போன கட்டிடத்தை வலுவாக்க ஏதாவது செய்வோம் .
  இலச்சன்களை கோபுர நிதியத்துக்கு வழங்கும் போது ஒரு சில ஆயிரங்களை ஆவது இந்த உளுத்து போன எங்கடை வாசிக சாலைக்கு
  வழங்குங்கள் வணக்கம் .நன்றிகள் பல .

 • pan bala:

  குளப்பம் ஓண்டும் இல்லை.இது முடிவானமுடிவு இதை மாற்ற உங்களாலை இல்லை யாராலும் முடியாது.நாங்கள் எவ்வளவு தூரம் ஆண்மீகப்பணியில் முன்னேறியுள்ளோம் என்பதை எனி வரும்காலங்களில் இந்த இணையம் எடுத்துக்காட்டும் ஸ்மாயில் அவர்களே.நீங்கள் விரும்பினால் உங்களது மத போதனைகளையும் இதில் எழுதலாம்.உங்கள் இறைதூதர்கள் பற்றிய அல்லது ஆலய வழிபாடுகள் பற்றி எழுதலாம்,போடலாம்.இப்பணியின் மூலம் பல சமூகசீர்கேடுகள்,கலை,கலாச்சாரம்,பல ஊர்முன்னேற்றங்கள் செய்யலாம்,கட்டுமானங்கள் இறையருளால் தானாக கட்டலாம்,பல தொழிற்ச்சாலைகள் தானாக இயங்கலாம்.இவை எல்லாம் ஆண்மீகப்பணிமூலம் தானாய் முளைக்குமாம். பண் சமூகம் வாரிசு த.பாலா

 • pan bala:

  பறாளாய் ஈஸ்வர வினாயகருக்கு ஆரோகரா.இணையத்தினரின் இந்த சைவப்பணி மேலும் மேலும் வளர்ச்சிபெற என் ஆத்மீகவாழ்த்துக்கள்.உங்கள் தொண்டு மேலோங்கி கடவுளின் ஆசிர்வாதங்கள் பெற என் வாழ்த்துக்கள். பண் சமூகத்தின் வாரிசு த.பாலா டென்மார்க்

  • அஹமது இஸ்மாயில்:

   இப்ப கொஞ்ச நாளா கொம்முக்கு வந்தனானோ நெற்றில நிக்கிறனோ என்று தெரியாமல் குழம்பி ஒண்டும் பறையாமல் நெற்றை பாக்கிறதை விடுவோம் எண்டு நினைச்சுக்கொண்டு இருந்தோம். இந்த குழப்பம் எனக்கு மட்டுமப்ப இல்லை. நாங்கள் ஒண்டும் பறையாமல் இருந்தோம். பாலா சிங்கன் சிங்கிளா வந்து சொன்னான்.

   • எடே அஹமது இஸ்மாயில் நீ நினைக்கிறாய் உந்த பாண பேரில நீ வந்தால் நாங்கள் எல்லாம் அதை பார்த்து சிரிப்போம் எண்டு . உனக்கு
    தில் இருந்தால் கோச்சி கொப்பர் உனக்கு வைச்ச சொந்த பேரில வாடா

 • pan bala:

  திரு மனோகரன் கந்தையா அண்ணர் போல் பலரிடம் பல நல்ல முகங்களும் உண்டு.இருந்தும் வாசிகசாலைக்கு என பல சரித்திரம் கொண்ட கதைகள் உண்டு என நான் அறிந்திருக்கின்றேன்.எங்களுடன் சேர்ந்து பணியாற்ற பணிப்புலத்தில் பலரை நாடியும் எமக்கு கிடைத்த பலருடைய பதில்கள் பூச்சியமாகும்.இருந்தும் எனதும் என் நண்பர்களும் இணைந்து எடுத்த இந்த முயற்ச்சி வெற்றியளிக்கும் என்ற தன்நம்பிக்கையை நான் இளக்கவில்லை.இதை என்னும் துரிதப்படுத்துவதானால் உங்கள் கையும் எங்களோடு இறுகப்பற்றுமானால் வெகு துரிதமாக செயற்த்திட்டங்கள் முன் நகர்த்தமுடியும்.உங்களைப்போல்ஆர்வம் கொண்ட பலரை எங்களால் அடையாளம் காண்பது கஸ்டமான விடயமாகிவிட்டது.உங்களுக்கு நேரம்கிடைத்தால் என்னுடன் ஒருமுறை தொலைபேசிதொடர்பு கொள்ளவும்.இந்தமுயற்ச்சியில் எங்களை நோக்கி எறியப்பட்ட பலகற்கள் எங்களிடம் உண்டு அந்தக்கற்களும் பணிப்புலம் வாசிகசாலை கட்டிடத்துக்குள் சேர்க்கப்படும்.சதிகள் செய்த பலரும் இன்று நிதிகள் வளங்கியுள்ளார்கள்.ஆர்வத்துடன்குஞ்சுறு அண்ணர்,பாலசிங்கம் அண்ணர் இப்படி பலரது வேர்வைகள் அக்கட்டிடத்துள் இருக்கின்றது.எங்கள் முயற்ச்சி நிச்சயம் நிறைவேற்றப்படும். பண் த.பாலா டென்மார்க்

  • நான் ஒரு நேரம் இந்த இணையத்தில் நுழைந்த வேளை.உன் பெயரைகண்டு உன் அப்பன் வீடு போய் உன்னுடன் நான் SKYPE இல் கதைத்தை கொஞ்சம் ஞாபகப்படுத்து . நீ சொன்னது போல் நாங்கள்
   பிரைவேட் ஆக கதைக்க இன்னும் எவ்வளவோ விஷயங்கள் உள்ளது .உன்னுடன் மட்டுமல்ல .சுதர்சனுடனும் கூட.அதுக்கு உனது மொபைல் நம்பர் மற்றும் மெயில் விலாசத்தை தாருங்கள் இதுக்கு மேல எனக்கு கதைக்க வார்த்தைகள் வருகுதில்லயடா தம்பி .மீண்டும் சிந்திப்போம் ,சந்திப்போம் வணக்கம் பல நன்றிகள் .

  • பாலா பூஜ்ஜியத்தில் இருந்து தானடா positive + தொடங்கும் .விரக்தியை விட்டு negattive சிந்தனையை களைந்து posittive ஆக சிந்தித்து செயலில் இறங்குவோம் .வா நானும் கிழவனான போதும் உனஊடன் கை கோர்க்கிறேன் .

 • தம்பி பாலகுமாருக்கு நான் இவ்வளவு நாளும் உன்னை என் அண்ணன் தங்க ராசாவின் மகன் பாலகுமார் என்று மட்டுமே அறிந்திருந்தேன் .இந்த இணையத்துக்குள் நுழைந்து துருவிய போது தான் உன் சுய ரூபத்தை கண்டேன் .u r great my dear . உன் போன்றவர்களே இன்றைக்கு எமது தேவை
  எதோ நானுண்டு என்ர வேலை உண்டு என்ரை பெண்டில் பிள்ளை
  உண்டு என்று வாழாமல் நான் பிறந்த ஊருக்கும் நான் சார்ந்த மக்களுக்கும்
  என்னாலான எதாவதை செய்ய வேணுமென்ற அவா.இருந்தாலும் நான் இந்த இணையத்துக்குள் நுழைந்தபோது சில முரண்பாடுகளை சந்தித்தேன் .
  அப்போ ஒரு கட்டத்தில் பலா அண்ணை இணையத்தில் இருந்து ஒதுங்கிறார் என்ர ஒரு செய்தியை கண்டேன் மிகவும் மன வேதனை அடைந்தேன் .பின் மீண்டும் ஒரு செய்தியை கண்டேன் பலா அண்ணை மீண்டும் இணைந்து விட்டார் என்று .அதைக்கண்டு மகிழ்ந்தேன் .உது ஒண்டும் லேசான வாசிகசாலை இல்லையடா தம்பி .எங்கடை காலத்திலை nespray ,luxpray ,anchor பால்மா ஒண்டும் கிடையாது .வெறும் கோப்பித்தண்ணியம்,தேத்தண்ணியும் தான் .எங்களுக்கு குஞ்சுறு காலமையிலை காச்சி ஊத்தின அந்த நிறை உணவாம் பசுப்பாலிலை வளர்ந்த உடல்கள் .உன் அப்பன் என் அண்ணன் தொண்டர் புரூடி மற்றும் இன்னும் பலரின் கடின அர்பணிப்புடன் கூடிய உழைப்பின் பிரதிபலிப்பு .ஒரு கதையை சொல்லியே ஆக வேணும் .என் ஒன்றுவிட்ட சோதரன் ஒருத்தன்
  அன்று உந்த வாசிக சாலை கட்டப்படும் வேளை வடக்கம்பரை துரையப்பா
  கடையிலை இருந்து சீமந்து பையை தனியாக தலையில் வைத்து சுமந்து கொண்டு பனிப்புலம் வரை கொண்டுவந்து கட்டின கட்டிடமடா பாலகுமார் உந்த வாசிக சாலை.குள்ள நரிக்கூட்டங்கள் குறுக்கை வந்தாலும் முன் வைத்த காலை பின் வையாதயியாடா தம்பி .நான் கொஞ்சம் கிளண்டினாலும் உன்னுடன் கை கோர்க்க தயார் .இருந்தும் சில கடமைகளை நிறைவேற்ற வேணும் என்பதால் ஒரு கொஞ்சம் தாமதம்.
  மீண்டும் சிந்திப்போம் சந்திப்போம்,செயல்படுவோம் .உனக்கு நிரோகி வாழ்வும் நீடுடிய ஆயுளுக்கும் என் வாழ்த்துக்களுடன் விடை பெரும் உன் சித்தப்பன் .

 • அருமையான முயற்சிகள்.எல்லோரினாலும் வர வேற்கப்பட வேண்டிய விடயமே.அனைத்தும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
  ”சிறப்பான ஒவ்வொரு பணியும்,தொடக்கத்தில் செய்ய முடியாததாகவே தோன்றும்”

 • முரண்பாடுகள் இல்லா முயற்ச்சிகள் எதுவும் இல்லை
  ஆயிரத்தில் ஓர் வாரத்தை இவ்வற்றைக் கடந்து பெறுவதே வெற்றி

 • L. Seelan ( Digittal Photos Swiss ):

  உங்களின் இந்த முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
  இந்த திட்டம் விரைவாக முடிந்து எமது வாசக சாலை பிரமிப்பாக ஜொலிக்கட்டும்
  நன்றியுடன்
  சீலன் SWISS

 • தொல்காப்பியன்:

  மிகவும் நல்ல முயற்சி.இந்த.முயற்சி.வெற்றி .பெற .எனது .
  நல்.வாழ்த்துக்கள்

 • Uravan:

  மிகவும் நல்ல முயற்சி உங்கள் துடிப்பும், முயற்சியும் எங்கள் ஊர் முன்னேற உதவட்டும். நாம் எல்லோரும் இணக்கப்படுடன் நடந்து நடைமுறையில் வரும் சிக்கல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து, பல முனைகளில் ஆலோசித்து நல்ல தீர்வு கண்டு அடுத்த படியில் கால் வைக்கப்பார்ப்போம்.
  நன்றி 🙂

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து