உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்


13 Responses to “கேள்விகளும் பதில்களும்”

 • உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி.
  உங்கள் கருத்துப்படி பெளத்த சமயத்து கொள்கைப்படி ஒரே மனிதன் பலமுறை பிறந்தும் ,பலமுறை இறந்தும்கொண்டுஇருக்கிறதாக இறுதியில்
  மோட்சம் அடைவதாக என்று எண்ணுகிறேன்.

 • உண்மையைத்தேடி சிந்திப்பவன்:
  தங்கள் கரத்துக்கு நன்றி
  இப்போ எனக்கும் நிறைய கேள்விகள் எழுகின்றன எழுதிப் பிரியோசனமில்லை அவை தங்களை வந்துசேருமா? நீங்களிதைப் பார்பீர்களா?

 • அன்பின் மனோகரன் அண்ணா நான் அறிந்துகொள்வதற்க்காகத்தான்
  புத்தசமயத்தில் எத்தனை மறுபிறப்பு எடுத்தபின்பு மனிதன் பிறப்பதாக
  கூறப்பட்டுள்ளது. இந்துசமயத்திலை புல்லாகிப் , பூடாய்ப் ,புழுவாய் ,மரமாகிப்
  பல்மிருகமாய் ,பறவையாய்ப் ,பாம்பாகிக் ,கல்லாய், மனிதராய்ப் அதாவது கல்லுக்கு
  பிறகு மனிதன் பிறப்பதாக, எந்த பிறப்புக்கு பிறகு மனிதன் பிறப்பதாக புத்தசமயத்தில்சொல்லப்ப்ட்டு இருக்கிறது. கல்லில் இருந்து மனிதன் பிறக்காமல் ஒரு உயிரினத்தில்இருந்தாவது மறுபிறப்பு எடுத்து மனிதன் பிறக்கிறானோ என்று அறிவதற்க்கான அங்கலாய்ப்பு மட்டுமே!!1

  • கல்லு மண் புழு கதைகள் பௌத்த சித்தாந்தத்தில் கிடையாது. சன்சாரே எனும் இவ்வுலக வாழ்வில் நாம் செய்யும் கர்மங்களின் (karmaa -நல்வினை ,
   தீவினையின் ) அடப்படையில் மீண்டும் மீண்டும் மனிதபிறப்பை எய்து முதுர்ச்சியின் பின் (at maturity ) நிர்வானமேய்துகிறான் .இது எனது கருத்துக்கள் அல்ல .எதோ கண்டதும் கேண்டதும் படித்ததுமே .

 • மதிப்புக்குரிய திரு மனோகரன் அவர்களே உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி! நன்றி!!
  புத்தசமயத்தில் நீங்கள் குறிப்பிட்டதுபோல் கர்மா, ஊழ்வினைப்பயன் என்று சொல்வது உண்மைஎன்று தற்போது நான் அறிகிறேன்.முன்பும் நான் மறுக்கவில்லை எனக்கு தெரியாது என்றுதான் குறிப்பிட்டுஇருந்தேன்.
  வேறு நீங்கள் சொந்த பெயரில் வந்து கருத்துக்கள் தெரிவித்தால் நல்லது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.என்னைபொறுத்தமட்டில் எனது பெயருக்காக நான் தனிப்பட்டமுறையில் கருத்துக்கள் சொல்லவில்லை.
  எமது சமூகத்தின் விழிப்புணர்வுக்காக நான் அல்ல நாங்களாக நல்ல உண்மையான தரமான கருத்துகளை எமது சமுதாயத்துக்கு எவரும் முன்வந்து சொல்லலாம். யார் சொல்கிறார் என்பதினை விட என்ன கருத்துசொல்கிறார் என்பதுதான் முக்கியம். இதை விட நான் யார் என்று அறிந்தால் தனிப்பட்டமுறையில் எனதுகருத்தினை ஏற்காதவர்கள் கருத்துக்கள் மூலம் கருத்துகளை எதிர்க்கமுடியாமல் தனிப்பட்ட முறையில் இடைஞ்சல்கள் தருவார்கள்.
  .

  • உமது கருத்தை பரிபூரணமாக ஏற்றுக்கொள்கிறேன் .நன்றி

  • உண்மையை தேடி அலைபவனே .நானும் உன்போலத்தான்.சமூக விழிப்புணர்ச்சிக்காக சமூக பிரக்ஞையுடன் அலைபவன் .உந்த புனை பெயர்
   technology யை நான் ஆரம்பத்தில் பெரிதாக நினைக்கவில்லை .இப்பதான் விளங்குகின்றது.நான் விட்ட மகா தவறுஎன்று .பல பேர் பல் பெயர் மன்னன்களாக வலம் வரும் சூட்சுமத்தை இப்பத்தான் அறிந்தேன்.எதோ
   செல்(சொல்) அடிகள் ,எறிகணைகள் ,ஏன் சியமா செட்டி ,புக்காரா விலிருந்து
   குண்டுமழை பொழிந்தாலும் பரவாயில்லை என் கருத்துக்களால் நாலு பேருக்கு நல்லது நடத்தால் அதுவே நான் பெற்ற ஆத்ம திருப்தி என்று கருதுகிறேன் .எனவே நான் என்றால் ஒரு போதும் முக மூடி அணிந்து புனை பெயரில் வர உத்தேசம் இல்லை.

 • ஆரம்பத்தில் உண்மையை தேடி அலைபவனின் கருத்தை கண்டு கொஞ்சம்
  அவசரப்பட்டுப்போனேன்.என் கருத்துக்கு அவர் மறு கருத்து கூறியதால் அதற்கு விளக்கமளிப்பதன் பொருட்டு அவசரப்பட்டுவிட்டேன் .மீண்டும் ஒரு முறை அவரின் கருத்துக்களை துருவிய போதுதான் அதற்குள் அமுங்கி கிடக்கும் ஆழ்ந்த கருத்துக்களை .புரிகிறேன் அறிவியல் ரீதியாக சிந்திக்கிறாய் .உன்போன்றவர்கள் தான் இன்றைய பாழ் பட்ட உக்கி போன
  அழுகிய உழுத்துப்போன எம் சமூகத்தின் அவசிய அவசர தேவை .வெறும்
  போலி பொய் சம்பிரதாயங்களிலும் சடங்குகளிலும் மூட நம்பிக்கைகளிலும்
  மூழ்கி அமிழ்ந்துகொண்டிருக்கும் மீட்டு கரை சேர்க்க உம போன்றவரின் முயற்சிகள் அவசரம் அவசியம் தேவை. எங்களுக்கு வயது போய்விட்டது .இளம் சிங்கங்களே எழுந்து வாருங்கள் புதிய சிந்தனைகளுடன் மோ௦ல்கிகொந்டிருக்கும் எம் உடன் பிறப்புக்களை மீட்டெடுக்க .மீண்டும் வருவேன் நன்றி வணக்கம் .

 • உ ண்மையை தேடி சிந்திப்பவனுக்கு அருமையான கருத்துக்கள் .எனக்கு உரு மன நெருடல் ஒன்று உந்த உண்மையை தேடி அலைபவன் .அது இது என்றில்லாமல் நான் என் சொந்த பெயரில் கந்தையா (அப்புவின்றை பெயர் ) மனோகரன் என்று வருவது போல நீங்களும் வாருங்கோ .ஏனெனெற்றால் இது இன்னார் என்று அறியும் போது உங்கள் கருத்துக்களின் காத்திரம் மற்றும் கருபொருல்களின் வீரியம் இரட்டிப்பாகும்
  அது சரி நான் விஷயத்துக்கு வாறன் .நான் கூறி இருந்தேன் இந்து சமயத்தில் மட்டுமன்றி புத்தசமயத்திலும் மறு பிறவியை பற்றி கூறபட்டுள்லத்தை. அது முற்றிலும் உண்மையானதே .அது மட்டுமல்ல பூர்வ ஜென்மத்தில் நாம் செய்த கருமங்களின் (அவர்கள் பாளி மொழியில் கர்மா என்று கூறுவார் ) பிரதி பலனையே இப்பிறப்பில் அனுபவிக்கிறோமென்று. உனது வண்ணாத்திபூச்சி கதை போன்று புல்லாகி பூண்டாகி பல்மிருகமாய் பறவையாய் பாம்பாகி என்ற எங்கள் திருவாசகம் போல் . .எனக்கென்றால் உதுகளிலை எதுவித உடன்பாடோன்றும் இல்லை
  இருந்தாலும் உனது அற்புதமான ஆரோக்கியமான கருத்துகூறலுக்கு எனது கருத்தை கூறினேன் .மீண்டும் குலாவுவோம் .வணக்கம் .

 • உண்மையைத்தேடி சிந்திப்பவன்
  மறுபிறவி உண்மையெனில் உயிரினங்களில் இனப்பெருக்கம் நடந்திருக்க சாத்தியம் இல்லை .உலகத்தில் ஆரம்பத்தில் உள்ள உயிரினங்கள் மட்டுமே மாறி மாறி பிறந்து இருக்கவேண்டும். ஆனால் எல்லா நாடுகளிலும் உயிரினங்களின் எண்ணிக்கையும் ,மக்கள் சனத்தொகையும் பன்மடங்கு கூடி உள்ளது
  கோயிலில் ஒரு சிறுவன் தும்பியை பிடித்து அதன் இறகுகளை பிடுங்கிகொண்டு தும்பியை வேதனை செய்து இருந்தானாம் .இதைப்பார்த்த ஜயர் தம்மி பாவம் தும்பியை விடு என்றாராம். அதற்க்கு சிறுவன் சொன்னானாம்
  முற்பிறப்பிலை நான் தும்பியாக இருந்துஇருப்பன் .இந்த தும்பி மனிதனாக இருந்து என்னை இப்படியாக வேதனைசெய்துஇருக்கும். எனவேஎன்னை விடுங்கள். மறுபிறப்பு க் கொள்கை சொன்ன நீங்கள் மறுப்பு தெரிவிக்ககூடாது.ஜயருக்கு என்ன சொல்வது என்னசொல்வது புரியாமல் விழி பிதுங்க முளித்துக் கொண்டு நின்றாராம்

  பொய் நம்பிக்கைகள்,மூடத்தனம்,சடங்கு சம்பிரதாயம், கோயில், உண்டியல், , சாமி, என்று எத்தனையோ விடயங்களுக்கு மறுபிறப்பு தேவைப்படுகிறதா?.
  ஐதீகங்கள், ஊகங்கள், பரம்பரை பழக்கங்கள்,நம்பிக்கைகள்,கலாச்சார நிகழ்வுகள் என்று திருத்தப்பட வேண்டிய சட்டங் களா?
  மறுபிறப்பு, பரலோகம் சாதிப்பாகுபாடு என்ற சொற்கள் மதங்களால் திணிக்கப்பட்டவை. அறிவியல் உலகம் விஞ்ஞானம் இக்கொள்கையை ஏற்றுக்கொள்வதா?
  .உயிரற்ற கல் உயிராகும் என்று அறிவியல் ஒருபோதும் உலகம் ஏற்றுக்கொள்ளாது. முன்பு எங்கோ இறந்தவர்களைப்பற்றி இப்ப பிறந்த
  குழந்தை கதைப்பது மறுபிறப்பல்ல . அந்தக்குழந்தைக்கு உள்ள அமான்யசக்தி அல்லது அந்தகுழந்தை எதாவது வகையில் அறிந்த விடயம்.
  மறுபிறப்பு என்று இந்துசமயம் குறிப்பிடுவது மனிதன் வேறு உயிரினமாக மாறி பிறப்பது. இந்துசமயத்தில் மட்டுமே சாதிப்பாகுபாடு,எல்லாருக்கும் புரியாத மொழியில் குறிப்பிட்ட ஒருவர் மட்டுமே பூசை பண்ணுவது , மறுபிறப்புஎன்று ஒன்றை சொல்லி ஒவ்வொரு மனிதனும் எந்த நிலையில் இருக்கிறார்களோ அந்த நிலையிலேயே அவர்களை சம்மதிக்கவைக்கிறது .கிறிஸ்துவ சமயத்திலோ. அல்லது இஸ்லாமிய சமயத்திலோ மறுபிறப்புகளை ப் பற்றி குறிப்பிடுவது இல்லை.சாதிப்பாகுபாடுஇல்லை ,எல்லாருக்கும் புரிகின்ற மொழியில் எல்லாரும் பூசை பண்ணுவது .
  புத்தசமயத்தில் மறுபிறப்புக்கொள்கை உண்டென்று திரு மனோகரன் குறிப்பிட்டு இருந்தார் .எனக்கு தெரியாது.அப்படியானால் அங்கும் சிவபுராணம்தானோ? புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாய் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுராகி முனிவராய் தேவராய் எல்லாப் பிறப்பும்
  அதாவது இந்த பிறப்பில் நல்லது செய்தால் மறுபிறப்பில் நல்லவ பிறப்பார்கள், வாழ்வார்கள் என்றும்.அதேவேளை இன்று ஏழைகளாக இருப்பவர்கள் முற்பிறப்பில் பிழைகள், பாவங்கள் செய்தபடியால் தான் இந்தப் பிறப்பில் ஏழையாக இருக்கிறார்கள் என்று, அவர்கள் ஏழையாக இருக்கும் தன்மையை சம்மதிக்க வைக்கிறது. இந்த கருத்தை நம்பினால் பணக்காரர் எல்லோரும் தாம் பரம்பரை பரம்பரையாக சந்தோஷமாகவும் பணக்காரராகவும் வாழ்ந்து கொண்டே போவார்களா?
  ஏழைகள் மறுபிறப்பு என்று ஒன்று உள்ள பயத்தில் வறுமைக்கோட்டிற்கு மேல் வருவதற்கு எவ்வித சந்தர்ப்பமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டே போவார்களா?
  என்னை பொறுத்தவரை சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை, மறுபிறப்பும் இல்லை. அப்படி ஒன்று உண்டெனில் அதிகம் தொல்லை பட போவது சாதாரணமானவர்கள் அல்ல. இந்த விடயங்களை கற்பித்து பல பொருட்களை யாகங்களில்கொள்ளை அடிப்பவர்களோ பொருளாதார குற்றம் செய்பவர்கள் தான்..

 • பாலா அண்ணா
  பசுவின் கேள்விக்கு முதலில் விடை தேடுங்கள் எல்லாவற்றுக்கும் விடை கிடைத்துவிடும்
  அண்ணா தப்பிருந்தால் மன்னிக்கவும்
  தயவு செய்து தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்றுமட்டும் சொல்லிப்போடாதையுங்கோ

  • இந்தக் கருத்துகூறளில் ஒரு இடத்தில் பாரிய தவறு ஒன்று நிகழ்ந்துவ்ட்டது .
   அது எவர் கூறிய கருத்து என்பதை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமாய் உள்ளது.. விடயம் என்னவென்றால் மறு பிறப்பை பற்றி இந்து சமயம் மட்டுமே கூறியுள்ளதென்பது தவறானது .இது புத்த சமயத்திலும் கூறப்பட்டுள்ளது .

 • pan bala:

  உயிர்கள் என்று இருந்தால் இறப்பு என்பது உறுதி.அன்றைய அறியாக்காலம் மறுபிறவிகள் பற்றிய விமர்சனம்.அந்தணர்களால் உருவாக்கிய பிராமணியர்கள் பிளைப்புக்களை நோக்கிய பல இந்தமத அனுஸ்டாணங்களில் ஒன்றே மறுபிறவியாகும். ஒரு வீட்டில் ஒரு பிள்ளை பிறந்தவுடன் யாரை மாதிரி என வினவும் போது பல விமர்சனங்கள் வரும்.தாத்தாமாதிரி,பாட்டிமாதிரிஎன விமர்சிப்பார்கள் அதே போல் தான் ஒரு பேச்சு வளக்குமட்டுமே. பண் த.பாலா

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து