உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

உங்களுக்குள்ளேயே பதுங்கி இருக்கும் பயனுள்ள, ஆக்கப்பூர்வமான நல்லொழுக்க சக்தியை கண்டறிதல், அனுபவித்தல், பயனடைதலே. ‘ தியானம் ‘ உன்னைப் பற்றியே, நீயே ஆழமாக அறிந்து கொள்ளும் உள்ளுணர்வை தூண்டுவதே தியானம்.

அமைதி, அன்பு, மகிழ்ச்சி ஆகிய இயற்கை வளத்தை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம்.

எதிர்மறையான எண்ணங்களில் இருந்து நம்மை விடுத்து – நம்மிலிருந்தே நம்மை விடுவித்து சுகந்திரமான ஆனந்தத்தை அனுபவிப்பதே தியானம்.

ஒவ்வொருவரும் ஓர் ஆன்மா என்பதை உணர வேண்டும். அந்த ஆன்மாவில் தெய்வீக ஒளிப் புள்ளியாய் புறப்படவேண்டும். அந்த ஆன்மீக ஒளியே, மனித சமுதாயத்தின் பொற்காலமாகும்.

மனம் எதை ஆழ்ந்து நினைக்கிறதோ அதன்படியே குணச்சித்திரம் பதிவு ஆகிவிடும். ” எவ்வுருயிரும் எவ்வுயிரை எச்செயலை நினைத்தால்,அதன் தன்மையாகி விடும்” என்பதே உண்மை. மனிதன் அறிந்த ஏழு சம்பத்துக்கள், உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல், வலிவு, சுகம், செல்வம் ஆகியவை. இதில் ஒன்று குறைந்தாலும் அதை மனிதன் நாடிப் பெற வேண்டும்.

தியானம் என்பது நம் முன் நிலைத்துள்ள மூச்சைக் கொண்டு நமது அறிவு, சிந்தனை வேறு எங்கும் செல்லாது தூய அன்புடன் நம்முள் இறைவனை நேசிப்பதாகும். தியானம் செய்யும் போது நம்மை அறியாமல் ஒரு காந்த உஷ்ணம் ஏற்படும். அந்த உஷ்ணம் தியானத்தின் மூலம் மேலும் மேலும் பெருகும். காந்த உஷ்ணம் தசாய காந்த உஷ்ணமாக மாறி நமது சிரசில் போய் சேரும். நமது சிரசில் பல சுரப்பிகள் சுரந்து அற்புதங்கள் பல உண்டாகும். இவ்வாறு நிகழ்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை சற்று பார்ப்போம்.

உடல் உள்ளம் தூய்மை அடைகிறது.

உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

உடம்பில் இருக்கும் நோய்கள் குறைகிறது.

அன்பு, சாந்தம், ஆனந்தம், இன்பம் சுரக்கிறது.

சக்தி விரயமாவது தடுக்கப்படுவதுடன் உடலுக்கு புதிய சக்தியும் உற்பத்தியாகிறது.

மனம் இறுக்கத்திலிருந்து தளர்கிறது.

உடல் முழுதும் பூரண ஓய்வு கிடைக்கிறது.

குறைவான பிராண வாயுவே செலவாகிறது.

உள் உறுப்புகளில் உயிரணுகளுக்கு குறைவான வேலை கிடைக்கிறது.

குறைவான சுவாச இயக்கம் கிடைக்கிறது.

இதய துடிப்புக்கு குறைவான இயக்கம் கிடைக்கிறது.

மனிதனின் சிந்தனை சக்தியை தூண்டிவிடுகிறது.

தூக்கத்தினால் கிடைப்பதை விட உடலுக்கு அதிகமான ஓய்வு கிடைக்கிறது.

ஞாபக சக்தி, புத்தி கூர்மை அதிகரிக்கிறது.

மன உலைச்சல் மன அழித்தம் நீங்குகிறது.

அலைபாயும் மனம் அடங்கி அமைதியடைகிறது.

சிந்தனை ஆற்றலும், ஞாபக சக்தியும் கூடுகிறது.

நோய் இன்றி பெரு வாழ்வில் பல்வேறு பலன் கிடைக்கிறது.

மூச்சு விடும் விகிதம் குறைகிறது. ஆதலால் ஆயுள் நீடிக்கிறது.

இரத்த அழுத்தம், இதய நோய்கள், காசநோய்கள், தூக்கமில்லாத வியாதி, தோல் நோய்கள், நீரிவு நோய்களும் குணமடைகிறது.

மனம் சரியானால் மற்ற எல்லா விஷயங்களும் சரிவரும் என்பதில் ஐயமில்லை. மனம் பண்பட வேண்டுமானால் அதற்கான பயிற்சியில் ஒவ்வொருவரும் முறையாக ஈடுபட்டு வரவேண்டும். மனம் சீர்பட்டால் புலன்கள் அடக்கம் பெறுகின்றன. புலன்கள் அடங்கியதால் மனம் நம் கைவசம் இருந்துவிடும் .

Palan Kandasamy

3 Responses to “தியானம் என்றால் என்ன”

  • baba:

    “எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்.”

  • வியற்க்க வைக்கும்ஆன்மீக இதயம்ஒவ்வொரு மனிதருக்குள் இருக்கும் சக்தி மையம். தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் இருக்கும் இடம் தான் இதயக் குகை. மார்பின் மத்தியில் இருக்கும் சக்தி மையம். இது சுடர் விடும் தன்மை கொண்டது. இது பிரகாசமானது. பெரும்பாலானவர்கள் இந்த மையத்தை உணரும் வகையில் மனதை ஒருநிலைப்படுத்தி தியானிப்பது இல்லை. புறப்பொருள்களில் இருந்து விலகி மனத்தை அமைதியாக்கி இதை உணர வேண்டும். புறப்பொருட்களால் சலனமடையாமல், உணர்ச்சி மோதல்களில் ஆட்படாமல் மனதை ஒருநிலைப்படுத்தி தியானித்தால் அக உலகம் ஒன்று இருப்பதை நாம் உணர்வோம். இத்தகைய அமைதிப் பிரதேசத்தை உனரத் தொடங்கிவிட்டால் புற உலகம் நம்மைப் பாதிப்பது படிப்படியாக குறைந்து விடும். இந்நிலையை அடைந்தவர்களையே இன்ப துன்பங்களைக் கடக்கிறவர்கள். பிறகு, உடம்பிலிருந்து ஆத்மாவைப் பிரித்து உணர வேண்டும். அணு போன்றதும், ஆனந்தம் நிறைந்ததுமான ஆன்மாவை இவ்வாரு பிரித்தரிபவன் ஆனந்தம் பெறுகிறான். இதை இன்னும் கொஞ்சம் ஆழமாக் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு உடல்கள் இருக்கின்றன. அவை நம் புற உடல். நம் கண்களால் பார்க்க முடியும். இரண்டாவது அக உடல் அல்லது மாய உடல். அதை கண்களால் பார்க்க முடியாது. இந்த இரண்டும் நம்முடனேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. நம் உடல் சக்தியை சத்துள்ள காய்கறிகளும் உணவும் உட்கொள்வதால் பெறலாம். மாய உடலின் சக்தியை அதை உணர்வதால் மட்டுமே பெற முடியும். உடலின் இயக்கத்திற்கு மூளை சக்தியாக இருக்கிறது என்பதை புறப்பொருள் இயக்கங்களால் உணர முடியும். மாய உடலின் சக்தியை இயக்குவதும் அதன் மூலமாக இருப்பதும் ஆத்மாவே ஆகும். இத்தகைய புற உடலுக்கும் அக உடலுக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருப்பதே எண்ணங்கள் அல்லது மனம். அதனால் தான் மனம் அல்லது எண்ணங்கள் புறத்தே தெரிவதில்லை. ஆனால் அவற்றின் ஆற்றலை புற உடலால் உணர முடிகிறது. அதாவது அவற்றால் உண்டாகும் தாக்கத்தை புற உடல் மூலமாக வெளிப்படுத்த முடிகிறது. அதனாலேயே அக உடலை அடைவதற்கான ஒரே வழியாக எண்ணங்களை குறிப்பிடுகிறார்கள். மனத்தை அமைதிப்படுத்தினால், எண்ணங்களை ஒருமுகப்படுத்தினால் அது நம்மை அக உடலான மாய உடலுக்கு அழைத்துப் போகும். அவ்வாறு எண்ணங்களை ஒருமுகப்படுத்தி மனத்தை உள்புறமாக செலுத்தி தியானிப்பவர்களுக்கு உடலுக்கு உள்ளே இருக்கும் ஆத்ம சுவரூபம் தெரியத்துவங்கும். அக உடல் வேறும், புற உடல் வேறாகவும் புலப்படும். இவ்வாறு மாய உடலையும் அதை இயக்கும் சக்தியான ஆத்மாவையும் புற உடலில் இருந்து பிரித்து அறிபவன் ஆனந்தம் அடைகிறான். இந்த இரு உடலையும் ஒரு சேர இயக்கக் கற்றுக் கொண்டவர்களே சித்தர்கள் ஆகிறார்கள்.

  • தியானம் பழக அல்லது பண்ணுவதற்கு வருகிற புதன் கிழமையில் இருந்து grindsted இல் இலவசமாக தொடங்குகிறது

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து