உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கல்யாணம் என்பதுஆயிரம் காலத்துப் பயிர்.ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் உன்னதமான உறவை ஏற்படுத்தித் தருவது. ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்க வேண்டும்,பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்க  வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் இதை உணருவதில்லை. நினைத்துப் பார்ப்பதும்  இல்லை.

கடமைக்காக தங்கள் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்கின்றார்கள்.  தம்பதிகளுக்கு
மனப்பொருத்தம் வேண்டும் என்பதை யோசிப்பதேயில்லை  .மனப்பொருத்தம் சரியாக
இல்லாவிட்டால் வேறு என்ன பொருத்தம் ,எத்தனை  பொருத்தம் இருந்தாலும் வாழ்க்கை சரியாக
அமையாது. இதனால் பாதிப்பது அந்த தம்பதிகளின் வாழ்க்கை மட்டுமல்ல
பெற்றோர்களின் வாழ்க்கையும் தான் .

கல்யாணத் தேதி குறித்தாயிற்று.பத்திரிகை அடித்தாயிற்று.நகைகள் ,புடவைகள்
வாங்கியாயிற்று இவை தான் பெற்றோரின் பெருமிதங்கள் . பெற்றோர் பிள்ளைகளின் சம்மதம் இல்லாமல் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைக்கக் கூடாது.

ஒருத்தி மனதிலே ஒருவன் இருந்தால் அது பெண்மையின் ஆச்சாரம்,இன்னொருவனை  திணிக்க
முற்பட்டால் அதுவும் ஒருவகையில் அபச்சாரம்  .அந்த அபச்சாரத்துக்கு  பெற்றோர்
ஒருபோதுமே துணை போகக் கூடாது.

எனவே அன்பான பெற்றோரே சிந்தித்து உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி
செயற்படுங்கள். உங்கள் விருப்பங்களை உங்கள் பிள்ளைகளின்மேல் திணிக்க முற்படாதீர்கள்.நன்றி

வினோதினி பத்மநாதன்

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து