உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Premalatha Vimalan
38 Buckhurst Crescent
Scarborough Ontario
M1S-4c4,br>
T.P.. 647-349-3947.
———————–


மறுமலர்ச்சி மன்ற கனடா பழைய நிர்வாகிகளின் ஒன்றுகூடலில் திரு. சங்கர் உரையாற்றுகையில்
http://www.youtube.com/watch?v=Rp0NJ6vCvtk&feature=player_detailpage#t=1329s——————————————————–


—–STOP THE MUSIC—–

35 Responses to “மரண அறிவித்தல்”

 • விமலன் குடும்ப உறவுகள்:

  17 . 7 . 2011 அன்று நோர்த் பீச், கனடா ஏரிக்கரியில் ஜல சமாதி அடைந்த எமது அன்பு மகன் விசு. க. விமலன் (சங்கர்) அவர்களின் பிரிவு குறித்து , இணையத்தின் ஊடாக ஆறுதல் செய்திகளும் ஆத்மா ஈடேற்ற கருமங்களும் பற்றி அறியத் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்களது பணிவன்பான நன்றி அறிதலை தெரியத் தருகிறோம்.

  கு. வி. கந்தசாமி குடும்பத்தினர்
  27 . 7 . 2011

 • CHANDRAHASAN:

  விதியே விதியே என் செய நினைத்தாய்

  விதிகள் ஏனோ சில வேளைகளில்
  விளங்காத புதிராகி
  சதியோ இது எனக்
  கதி கலங்க வைக்கிறது

  ஆற்றலும் அறிவும்
  அனைவரையும் அணைத்தியங்கும் பண்பும்
  வாய்த்த சங்கரை
  ஏய்த்து
  ஏரியில் இழுத்து
  மாய்த்தது விதியல்ல
  காலன் செய்த சதியே.
  கணப்பொழுதில் நிகழ்ந்த சதியில்
  எமது கனவுகளும் சேர்ந்து அழிந்ததை
  அறிவானோ காலன்

  வலது கையை வெட்டி
  வா சண்டைக்கு இனி என
  எதிரி அழைத்து போல
  உன் இழப்பு எங்களுக்கு

  துன்பங்களை துணிவோடும்
  இன்பங்களை பணிவோடும்
  தன்னிலை தவறா கண்ணியத்தோடு
  உன்னால் ஏற்க இயலும் ஆனதால்
  சித்தனோ அன்றில் புத்தனோ நீ என
  மற்றோரை வியக்க வைத்தாய்

  உற்றார் உறவினர்களுக்கு அப்பால் – நலிந்த
  மற்றோர் உயர்விற்காய்
  எப்போதும் எழுகின்ற உன் குரலை
  தண்ணீர் வந்து தடுத்ததோ என
  கண்ணீரில் தோழர்கள்
  கனத்த இதயத்தோடு.

  வென்ற வரலாறே மன்ற வரலாறு
  என்ற உறுதியை நெஞ்சில் நிறுத்தி
  மீண்டும் எழுவோம் மிடுக்கோடு என
  துவண்டு கிடந்தவரை
  தூண்டி எழுப்பி
  இணைத்து ஓர் இயக்கமாக்கி
  பயணத்தை துவக்கி வைத்தாய்
  இப்போ
  பாதியில் எம்மை விட்டாய்
  நீதியோ

  இனி ஒரு விதி செய்வோம்
  ஐயோ என இனி அழுவதும் வேண்டாம்
  இல்லையே நீ என ஓய்வதும் வேண்டாம்
  பாதியில் நிற்கும் பயணத்தின்
  மீதியை தொடர்வோம் துணிவோடு.
  கனவுகள் ஒருநாள் நிறைவுறும்
  காட்சிகள் எல்லாம் மாறிடும்
  நலிந்தவர் வாழ்வு உயர்ந்திடும்
  நம் ஊர் கண்டு உலகு வியந்திடும்
  அப்போது
  நிற்பாய் நீ அங்கே
  எந்தையும் தாயும் குழவி மகிழ்ந்த
  மண்ணில் உரமாக
  மண்டபங்களில் கல்லாக
  மரங்களில் கனியாக
  மலர்களில் இதழாக
  மீண்டும் மீண்டும்
  பிறப்போம்
  என்றும் அழியாமல்.

 • sivamoorthy family:

  சங்ரின் இழப்பு காதில் கேட்டதும் கதி கலக்கிப்போனேன் .அவரின் மறைவால் அல்லலுறும் குடும்பத்தினரக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திகின்றோம்

 • இதய அஞ்சலி
  தொண்டரின் தொண்டன்
  அன்று முதல் இன்றுவரை அல்லும் பகலும்
  ஆறுதலின்றி அயராது தளராது சலியாது
  இன்னோரன்ன துன்பங்களிலும் துயரங்களிலும் தர்ம சங்கடமான நிலையிலும் ஈடுபாடு கொண்டு பொறுப்பாகவும் சிறப்பாகவும், உதவியும் ஒத்தாசையும் உழைப்பும் வழங்கி ஊருக்கு உழைத்த உத்தமனே, வித்தகனே என்னவாச்சு என்னவாச்சு எமக்கு ஏன் இந்த அனியாயம் அக்கிரமம்,கொடுமை ஐயோ ஐயோ அலறினாலும் அழுதாலும் தீராது.
  ஒற்றுமையாக ஒவ்வொருவரும் ஒன்றினைந்து ஓயாது ஒழியாது ஊருக்காக உழைக்க வேண்டும்.ஔவையின் நல்வழயில் வாழ வேண்டும்.
  அஃது அவரின் ஆத்மாவிற்கு சாந்தி அளிக்கும்.
  ஓம் சாந்தி சாந்தி சாந்தி
  உன் பிரிவால் வாடும்
  சிவா மணியம் கனடா

 • நண்பா உன்னோடு சுற்றி திரிந்த காலங்கள், பழைய ஞாபகங்கள் என் கண் முன்னே நிழலாக ஆடுகிறது.கனடாவில் எம் ஊரவர்களின் வளர்ச்சிக்கும்
  ஒற்றுமைக்கும் நீ ஓடி ஓடி உழைத்து உருவாக்கிய‌
  கனடா பண் கலை பண்பாட்டுக் கழகம்,உன் பிரிவால் தவிக்கின்றது.பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் கண்ணீருக்கு என்ன சொல்லப் போகிறாய்.
  உன் பிரிவால் வாடும் நண்பன் நடேசன் றஜனி குடும்பம்.

 • T,BALAKUMAR www.panncom.net:

  இங்கே அனுதாபம் தெரிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல்.ஆக்கபூர்வமான ஒரு செயல்வடிவம் பெறவேண்டும்.தனியவே வார்த்தைகளும்,கவிதைகளும் மட்டும் சங்கரின் ஆத்மாவை சாந்தியடைய வைக்குமா என்பது ஒரு ஆறுதலே.எப்படி நாம் எல்லாம் கைகோர்த்து அவரது கனவை நிறைவேற்ற கைகோர்க்கவேண்டும். தயவு செய்து வெறும் வார்த்தைகளுடன் நிற்க்கவேண்டாம். பண்கொம்.நெற் பண் த.பாலா

 • R.thirunavukkarasu kalaiyady:

  அன்பு மகன் சங்ரின் இழப்பு காதில் கேட்டதும் கதி கலக்கிப்போனேன் .அவரின் மறைவால் அல்லலுறும் குடும்பத்தினரக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திகின்றோம்

  .

 • kethees family .... UK:

  நண்பன் சங்கரின் அகால மரண செய்தி கேட்டு எனக்கு எதோ ஒன்றை இழந்தது போலவே எனக்கு ஒரு தோற்றம் …. உன்னோடு சுற்றி திரிந்த காலங்கள் பழைய ஞாபகங்கள் ……

  உன் பிரிவால் வாடுகின்றோம்
  அன்னாரை இழந்து தவிக்கும் அன்னாரது குடும்ப உறவுகளுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.

 • selvraja kanesaratnam:

  நண்பர் சங்கரின் பிரிவுகேட்டு அதிர்ச்சியில் இருக்கும் குடும்ப உறவுகளுனும்,நண்பர்களுடனும் துயரை பகிர்ந்து கொள்கின்றோம்.அன்னாரின் வெற்றிடத்தை எவர்வரினும் நிரப்பமுடியுமா? உன்கனவை நனவாக்குவதே அனைத்து நண்பர்களின் கடமை என ஏற்று உனது ஆத்மாசாந்திக்காய் எல்லாம் வல்ல அம்பிகையைப் பிரார்த்தனை செய்வோம்.
  ஓம் சாந்தி சாந்தி,
  துயருடன் இணைவோர் பணிப்புலம் கணேசர் குடும்பம்.

 • சங்கர் கனடாவில் ஆற்றிய உரையை கண்டேன் .அவர் இணையத்துக்கு வழங்கிய கருத்துக்கள் அனைத்தையும் துளாவினேன் .எனது கணனியின்
  விசைபலகை கண்ணீரினால் நனைந்தது .இங்கு ஒரு விசித்திரத்தை கண்டேன் .மற்றவர் நலன்களில் அக்கறை கொண்ட கள்ளம் கபட மற்ற
  பிள்ளை உள்ளம் கொண்டவர்க்கு தம் மரணத்தை முன்கூட்டியே உணர்வார்கள் என்பது மனோ தத்துவவியலாலர்களின் கருத்து. என் கவிதைக்கான கருத்துக்கூரலில் இறுதியாக அவர் இவ்வாறு முடித்திருந்தார்
  பொத்தனை அமுக்கிவிட எம்முடல்
  பொசுக்கென்று போய்விடும் என்று . .இது தெரிவிக்கப்பட்டது ஜூலை
  6 ஆம் திகதி .

 • k.vigneswaran swiss:

  சங்கரின் மறைவு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரின் இழப்பால் தவிக்கும் பெற்றோர் உடன்பிறந்தோர் மனைவி பிள்ளைகள்
  உறவினர்கள் உறவுகளாய் இணைந்து
  எங்கள்குடும்பமும் ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.
  ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

 • V.RAGUNATHAN:

  அன்பின் சங்கர் அண்ணாவின் இழப்பு அறிந்து மிகவும் மனவருத்தமாக உள்ளது அவரது குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் .

 • T,BALAKUMAR www.panncom.net:

  திரு விசு விமலன் கந்தசாமி (சங்கர்) மறைவால் துயருற்றிருக்கும் உற்றவர், உறவுகள்,நண்பர்கள் அனைவருடனும் துயரைபகிர்ந்து கொள்வதோடு இவரது ஆத்மா சாந்திக்காய் பிராரத்திப்போம். உங்கள் இளப்பு உன் கனவுக்கு நீ விட்ட விதை.விதை முளைவிட்டு தளிவிட்டு பரந்து வர சகலரும் கைகோர்ப்போம்.இதுவே இவரின் ஆத்மாவின் சாந்திக்காய் நாம் செய்யும் பிரார்த்தனையாகும். உங்கள் துயருடன் பணிப்புலம்அம்பாள் சன சமூகநிலைய நிர்வாகசபை.புலம்பெயர்வாழ் பழையநிர்வாகிகள். பணகொம்.நெற் பண் த.பாலா

 • t.pirakalathan. chulipuram:

  ஷங்கர் அண்ணரின் திடீர் மறைவு அறிந்து அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளோம். இந்த இழப்பை தாங்கி நிற்கும் அவரது குடும்பத்தினருக்கு, உறவினருக்கு, நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவிக்கின்றோம்.

 • SIVAMALAR RASAGURU:

  தம்பி சங்கர் அவர்களின் அகால மரண அறிவித்தல் கேட்டு எங்களால் தாங்க முடியவில்லை.
  மறைவால் துயர் அடைந்து இருக்கும் மனைவி,பிள்ளைகள், உற்றார், உறவினர்களிற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன், அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி

 • நீ மரிக்கவில்லையடா சங்கர் .நீ சதா காலமும் உயிர் வாழ்வாய் .மனிதகுல
  மேம்பாட்டுக்காக அன்று நீ மருமலர்ச்சியாரல்களுடன் ஆற்றிய பணிகள்
  இன்றும் உயிர்ப்புடன் செயல் பட்டுக்கொண்டு இருக்குதடா .புலம் பெயர்ந்தும்
  நீ ஆற்றிய பணிகள் முழு உலகமும் அறியுமடா .கவலையை விடடா சங்கர் .நிம்மதியாக தூங்கடா .நீ வளர்த்தவர்கள் உன் பணியை தொடரவார்கலடா.எனக்கு விசர் பிடிக்கும் போல உணர்கிறேனடா என் அருமை சங்கர்

 • என்னத்தை எழுத எப்பிடி எழுத என்று தெரியாமல் தத்தளிக்கிறேன் .
  இன்று காலை இணையத்தை திறந்தபோது இடிவிழுந்தது போன்ற இந்த செய்தியை கனிவிலும் கூட கற்பனை பண்ணமுடியாத செய்தியாக கண்டேன் .எத்தனையோ வருடங்களின் பின் இந்த இணையம் என்னையும்
  உன்னையும் இணைத்தது .மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தேன் .எல்லாம் ஒருகணத்தில் காற்றாக போய்விட்டது .நான் வழங்கிய அனைத்து கருத்து
  களுக்கும் தவறாது ஆரோக்கியமான ஊகிவிக்கும் பதில் கருத்துக்களை
  அள்ளி வழங்கியவண்ணம் இருந்தாய் .உறவு பாராட்டி ஒவ்வொரு தடவையும் நீ என்னை மாமா என்று விளிக்கும் வேலைகளின் நான்
  அடைந்த ஆனந்த்தத்தை நீ அறியாயடா சங்கர் .அது பற்றி அண்மையில்
  தயாபரி உடனான உரையாடலில் கூறி இருந்தேன் .அமைதியான சுபாவம்
  ஆழ்ந்த அறிவு ,ஆற்றல் மிகு ஆளுமை இவைதானே உன் சுய அடையாளங்கள் .உன்னால் எம்மவருக்கு ஆகவேன்டிவை இன்னும் ஏராளம்
  நாம் கொடுத்து வைச்சது அவ்வளவு தான் .சொல்லால் விபரிக்கமுடியாத
  வேதனையில் மூழ்கியுள்ள உன் அனைத்து உறவுகள் உலகெலாம் பரந்து
  வாழும் உன் உற்ற நண்பர்கள் அனைவருடன் நானும் ஒருவனாக இணைந்து துயர் பகிர்வதை தவிர எனக்கு வேறொரு வழியும் தெரியவில்லையடா என்னருமை சங்கர் .என்றும் உன் மனோகரன் மாமா

 • CHANDRAHASAN:

  இடி போல் செய்தி வந்து இறங்கியது தலையில். அடி மேல் அடி வாங்கி மீண்டும் எழ முயல, முடிவே இல்லை என பேரிடியாய் வந்த பேரவலம். சுயநலமிகளின் செயல்களால் துவண்டு போன வேளை எல்லாம் பின்னால் இருந்து பொறுமையோடு தடைகளை அகற்றி ஊக்குவித்து மன்ற அபிவிருத்தியை முன்னெடுக்க இனிமேல் யார் எமக்கு?. அமைதியும் சாதுர்யமும் பணிவும் துணிவும் அபூர்வமாய் இணைந்த ஆற்றல் மிக்க சாரதியை இந்த வயதில் எமது மக்கள் இழப்பது என்ன நியாயம்?சொந்தங்களுக்கு அப்பால் சுய தேட்டங்களுக்கு அப்பால் நலிந்தவர்களுக்காக உளைக்கும் பண்பை முதுசமாகப் பெற்ற உன்னை இடையிலேயே இழந்துவிட எம்மவர்கள் என்ன பாவம் செய்தனர்?

 • balasubramaniam:

  திரு. கந்தசாமி சங்கர் அவர்களின் அகால மரண அறிவித்தல் கேட்டு எங்கள் எல்லோரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.அன்னாரின் பிரிவால் மனம் வருந்தும் எம்மால் ஆறுதல் ஒன்று மட்டுமே கூறமுடியும்.அவர்களின் மறைவால் மாறாத துயருற்று இருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவர்க்கும் எமது குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தி சாந்தி அடைவதற்காக இறைவனை பிரர்த்திகின்றோம்.

  அன்னாரின் பிரிவால் வருந்தும்
  தியாகராஜா பாலசுப்ரமணியம் குடும்பத்தினர்
  திருகோணமலை
  இலங்கை.

 • சங்கர் அண்ணை
  நீங்கள் கோவம் கொண்டதோ நான் அறியேன்
  எப்பவுமே செழித்த முகம்
  நீங்கள் ஆற்றிய சேவைகளோ எண்ணில் அடங்காது
  பண்பும் தன்னடக்கமும் உங்களிடம் நிறைந்தே உள்ளது
  உங்கள் இழப்பு நெஞ்சை பிளக்கிறது
  எல்லாவற்றையும் கொடுத்த கடவுள், ஏன் இடையில் உங்களை எம்மிடத்தில் இருந்து பிரித்து எடுத்தான்
  உங்கள் பிரிவால் வாடும் {கெங்கா கனடா}
  உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்

 • Ratnarajah:

  ஐயோ!! விமல் அன்பான விமல்
  அருமை நண்பா உன் அன்பான
  அழைப்பினை ஏற்று வந்தநான்
  அஞ்சலியோ!ஐயோ! நான் உனக்கு எழுத!!!!!
  கண்கெட்டகாலன் என்னையும் உன் உறவுகளையும்
  கண்கலங்க வைத்துவிட்டு கண்காணாத தேசத்துக்கு
  ஏன்தானோ எப்படியடா அழைத்து சென்றான்

  ஐயோ விமல் குளறி அழமுடியாமல்
  குமுறுகிறேன் உள்ளதிற்குள்
  நிலத்திலும் புலத்திலும் நீ ஆற்றிய சேவைகள்
  ஆயிரம் ஆயிரமாய் அடுக்கிக் கொண்டே போகலாம்

  எம் ஊரவர்களின் வளர்ச்சிக்கு நீ ஒருதூணாக‌
  என்றும் எங்களை தாங்கி நின்றாய்
  ரெலிபோன் எடுத்தால் எப்போதும் என்னோடு
  கதைப்பாய் எம் ஊரவர்களின் வளர்ச்சிக்கான‌
  பல திட்டங்கள் பல‌ பகிர்வாய்

  மறுமலர்ச்சி மன்ற மூத்த உறுப்பினர்களோடு
  தொலைபேசியில் தொடர்புகொண்டு
  மன்ற வளர்ச்சிக்கான கருத்துகளை கேட்டு அறிந்து
  பலதடவைகள் பல‌கருத்துக்கள் பகிர்வாய் என்னோடு

  மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவராய்
  செயலாளராய் அங்கத்தினராய் நீஆற்றிய பணிகள்
  எத்தனை !எத்தனை எண்ணில் அடங்கா
  எண்ணில் அடங்கா

  கனடாவில் எம் ஊரவர்களின் வளர்ச்சிக்கும்
  ஒற்றுமைக்கும் நீ ஓடி ஓடி உழைத்து உருவாக்கிய‌
  கனடா பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களின்
  ஊரவர்களின் கண்ணீருக்கு என்ன கதை சொல்லப் போகிறாய்
  எங்கிருந்து சொல்லப்போகிறாய் !!எப்படி ஆறுவோம்!!

 • Rasaguru Germany:

  தம்பி சங்கர் அவர்களின் அகால மரண அறிவித்தல் கேட்டு எங்கள் எல்லோரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அவர்களின் மறைவால் மாறாத துயருற்று இருக்கும் அவர்களின் குடும்ப உறவினருக்கும் மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அணைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவிக்கின்றோம்.

 • o நெதர்லாந்திலிருந்து. அற்புதன்:

  திரு. சங்கர் கந்தசாமி அவர்களின் மறைவு குறித்து எமது ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தினருக்கு தெரிவிப்பதோடு அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்

 • PATHMANATHAN:

  ஷங்கர் அண்ணரின் திடீர் மறைவு அறிந்து அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளோம். இந்த இழப்பை தாங்கி நிற்கும் அவரது குடும்பத்தினருக்கு, உறவினருக்கு, நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவிக்கின்றோம்.

 • இத்தாலி பண்மக்கள் ஒன்றியம்.:

  திரு. சங்கர் கந்தசாமி அவர்களின் அகால மரண அறிவித்தல் கேட்டு எங்கள் எல்லோரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அவர்களின் மறைவால் மாறாத துயருற்று இருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அணைவருக்கும் இத்தாலி பண்மக்கள் ஒன்றியம். தனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது. இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிண்றோம்.
  இத்தாலி பண்மக்கள் ஒன்றியம்

 • கனகன் குடுப்பம் கனடா:

  மண்ணுலகில் வந்து உதித்தோர் மாய்வதில்மாற்றம் இல்லை எனிணும்
  கண்ணான உன் மனைவி கதிகலங்க
  நீ பெற்று எடுத்த முத்துக்கள் பரிதவிக்க உன்னை பத்து மாதம் சுமந்த அண்னை கதறியழ உன் உடன் பிறப்புக்கள் உணர்விழந்து நிற்க ஈடு செய்ய முடியாத உன் இழப்பால் உறவுகள் எல்லாம் நிற்கதி ஆயின ஐயா…எம்மை எல்லாம் ஏமாற்றி எங்கு சென்றாய் ஐயா கனகன் குடுப்பம் கனடா

 • ala paheerathan:

  நானே செத்தது போலிருக்குது என் உயிரை இழப்பது போல என் உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் உதிர்வது போல… எப்படி ஆற்றுவது என்னை நான் எப்படி தேற்றுவது

 • super visvalingam family srilanka:

  எங்கள் உறவின் இழப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். எம்மால் ஆறுதல் கூறுவதைத் தவிர என்ன செய்ய முடியும், சங்கரின் இழப்பு எம்மூர் உறவுகளால் தாங்க முடியாத இழப்பாகும்.
  அன்னாரை இழந்து தவிக்கும் குடும்ப உறுப்பினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்,

 • T.THANAGOPALFAMILY FROM NORWAY:

  மண்ணுலகில் வந்து உதித்தோர் மாய்வதில்மாற்றம் இல்லை எனிணும்
  கண்ணான உன் மனைவி கதிகலங்க
  நீ பெற்று எடுத்த முத்துக்கள் பரிதவிக்க உன்னை பத்து மாதம் சுமந்த அண்னை கதறியழ உன் உடன் பிறப்புக்கள் உணர்விழந்து நிற்க ஈடு செய்ய முடியாத உன் இழப்பால் உறவுகள் எல்லாம் நிற்கதி ஆயின ஐயா…எம்மை எல்லாம் ஏமாற்றி எங்கு சென்றாய் ஐயா…..

 • T,BALAKUMAR panncom.net:

  நண்பர் சங்கரின் பிரிவுகேட்டு அதிர்ச்சியில் இருக்கும் குடும்ப உறவுகட்க்கும்,நண்பர்களுடனும் துயரை பகிர்ந்து கொள்கின்றோம்.அன்னாரின் வெற்றிடத்தை எவர்வரினும் நிரப்பமுடியுமா? உன்கனவை நனவாக்குவதே அனைத்து நண்பர்களின் கடமை என ஏற்று உனது ஆத்மாசாந்திக்காய் பிரார்த்தனை செய்வோம். துயருடன் இணைவோர் பணிப்புலம் அம்பாள் சன சமூகநிலைய நிர்வாகம்.புலம்பெயர் பழையநிர்வாகிகள்.

 • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே:

  திரு. சங்கர் கந்தசாமி அவர்களின் அகால மரண அறிவித்தல் கேட்டு எங்கள் எல்லோரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அவர்களின் மறைவால் மாறாத துயருற்று இருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அணைவருக்கும் நோர்வே பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது. இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிண்றோம்.
  பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.

 • tharmarajah family germany:

  ஆருயிர் தம்பி சங்கரின் இழப்பு எங்களால் தாங்க முடியவில்லை. அன்னாரை இழந்து தவிக்கும் அன்னாரது குடும்ப உறவுகளுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.

 • நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்.:

  கருணை அற்ற காலன்தான் எத்தனை கொடுமையானவன். மனம் தான் வந்ததோ எம்மிடம்மிருந்து விமலனை அபகரிக்க? நேற்றும் இணையத்தோடு இணைந்திருந்தாயே விமலா.அகால மரணம்தானா நின்னை அபகரிக்கவேண்டும்.ஜாபகம் வந்து மனதில் நிக்கிறதே நீ இணையத்தில் எழுதிய எழுத்துக்கள்.நின் இடத்தை நிரப்புவதற்கு யார்தான் வருவார் நின்னைப்போல்?நினைக்க நினைக்க நெஞ்சு வெடிக்கிதையா நின் பிரிவை.நின்னைப்பெற்ற பெற்றோரும்,உன்னோடு உடன் பிறந்த உடன் பிறப்புகளும்,உன்னையே சரண் அடைந்த உன் குடும்பத்தாரும்,அத்தோடு உன் உறவுகளும் எப்படித்தான் தான்கினரோ இவ் இடியை?என்றும் நின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம் நின் உறவுகளோடு நாமும் சேர்ந்து.
  நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  அன்பின் ஷங்கர் அண்ணையின் திடீர் மறைவு அறிந்து அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளோம். திடீர் இழப்பை தாங்கி நிற்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு, உறவினருக்கு, நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவிக்கின்றோம்.

 • T,BALAKUMAR panncom.net:

  திரு விசு விமலன்(சங்கர்) அவர்களின் அகாலமரணச்செய்தி என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இவரது சிறப்புக்கள் எமது இணையமும் வாசகர்களும் அறிவார்கள்.இவரது இழப்பால் துயருக்குள் இருக்கும் மனைவி,பிள்ளைகள்,பெற்றோர்,சகோதர,சகோதரிகள்,மைத்துணர்கள்,நண்பர்கள்,பண்கலைநிர்வாகிகள்,மன்ற உறுப்பினர்கள், உற்றார்கள், உறவினர்கள் சகலருடனும் இந்த ஆறாத்துயருடன் எங்கள்குடும்பமும் இணைந்துள்ளது.அன்னாரின் ஆத்மாசாந்திக்காய் இறைவனை பிராரத்திப்பதோடு இவரது கனவுகள் நிறைவாக அனைவரும் கைகோற்ப்போம். பணிப்புலம் பண் த,பாலகுமார் குடும்பம் டென்மார்க் பண்கொம்.நெற்

Leave a Reply for Ratnarajah

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து