உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Part 2


4 Responses to “அமரர் திரு.விமலன் அவர்களின் திருஉடல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட போது”

 • நண்ப நான் நம்பவில்லை
  எமை விட்டு
  நீ சென்ற செய்தி!
  ஐயகோ என் செய்வோம்?
  காலம் கட்டி
  இழுத்துச் சென்றதேனோ?
  உன் கோலம் தான் என்னே!
  கொடுமையின் வடுவோ
  மரணம்!!??
  பால் மணம் மாறுமுன்பே
  நட்பை உணர்த்தியவன்.
  பள்ளிப் பருவமதில்
  துள்ளி விளையாடும்
  அகவையதில்; குமூக நலன்
  பேசியெமை ஊர் மீது
  பேராவல் கொள்ள வைத்தாய்,
  ஊர்தனையே காதல் கொண்டாய்.
  ஊரென்று வந்தவரை உறவென்று
  கொண்டவனே!
  உறவென்று வந்தவரை உயிராகக்
  கோண்டவனே!
  பேருக்கோ பெருமைக்கோ
  ஊர்ச் சேவை செய்யவில்லை
  எம்மூரும் இவ்வுலகில் பேரூராய்த்
  திகழவெண்ணி பெரும் சேவை செய்தவனே!
  யாவர்க்கும் நல்லவனாய்
  நற்பணியாளனாய்
  இடுக்கண் களையும் நண்பா
  உன் கனிவுத் திருவை
  காண்பதெப்போ மாநிலத்தே
  கண்கலங்கி நிற்குதையா
  ஊரும் உறவும்
  தேற்றுவார் யாருமில்லை
  ஆற்றுவார் யாருமில்லை
  வாராயோ மீண்டும் வாரோயோ
  வந்தெம்மைப் பாராயோ
  தகைவுடை நண்பா
  நும் பிரிவு தாங்கமுடியவில்லை
  தக்க துணையின்றி தவிக்கின்றோம்
  கண்ணீரில் கரைகின்றோம்
  நும் பொன்னிடல் அமைதியுற
  வணங்கி நிற்போம்
  இயற்கையையே!

  Viji

 • இந்த படங்களை பார்க்கும் போது கண்ணீர் சர மாரியாக வழிகிறது .
  அதற்கும் மேல் அவனை பெற்ற .அன்னை குலமனிக்கும் தொண்டருக்கும்
  நான் ஒன்றை சொல்லவேணும் “”.ஈன்ற பொளிதின் பெரிது உவக்கும்
  தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் .”” அவன் உங்களுக்கு ஒரு
  சராசரி பிள்ளை இல்லை .அவன் உலகத்தோரின் பிள்ளை .வந்த மலர்வளையங்கள் ,இரங்கல் வாழ்த்துக்கள் ,கண்ணீர் அஞ்சலிகள் இன்னும் பல அதற்கு சான்றுகள் .அவன் உலகம் உள்ளவரை வாழ்வான் .நீங்கள்
  அமைதி ஆகுங்கள் .அவன் பெயரில் நான் நிதியம் ஒன்றை ஏற்கனவே
  ஆரம்பித்துள்ளேன் .தொண்டர் ஒரு தொண்டர் .அவன் தொண்டர் வர்க்கம் .
  SQUAD . நாங்கள் பயமின்றி பயணிப்போம் .

 • சச்சி:

  விமலா நீவிர் மரித்தீரோ யாம் உம்மை மறப்பதற்கு.
  மருந்தூட்டினிரே நின்னை மறக்காமல் இருப்பதற்கு.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  கனடா தவிர்ந்தவர்களையும் கருத்தில்கொண்டு இணையத்தில் இதை எம்மோடு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து