உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Manoharan Kandiah->சங்கரின் இறுதி கிரிகைகள் நடைபெறும் இன்று எனது நீண்ட கால கனவொன்றை நடைமுறைபடுத்துகின்ர அதே வேளை அத்திட்டத்துக்கு மறைந்த எமதருமை சங்கரை கவுரவிக்கும் பொருட்டு சங்கரின் பெயர் சூடலாம் என்று முடிவு செய்தேன். சாதி மத குல பேதமின்றி நம்மூரில் இனிவரும் காலத்தில் ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சை,க பொ த (சா /த ,உ /த) பரீட்ச்சைகளில் உச்ச பெறுபேறுகளை அடையும் மாணவர்களுக்கு மாதாந்த உதவித்தொகையாக முறையே 300 =/ ,500 =/,1000=/ வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளேன் .அதற்கான ஆரம்ப நிதியை என் சொந்த முதலை வைப்புசெய்வதாக உத்தேசம் .அதன் பின் நிதி விருத்திக்காக பல்வேறு திட்டங்கள் கைவசம் .புலம் பெயர் தாரள மனமுள்ளவர்களிடமிருந்து
நிதியை எதிர்பார்கவில்லை .உங்களை உதாசீனம் செய்வதாக கணமேனும் கருதவேண்டாம் என தயவுடன் வேண்டுகிறேன் .
அதற்கான காரணங்கள் இதோ பல இடங்களிலிருந்து நிதி வந்து சேரும் போது அதை கையாளவும் ,முகாமைத்துவம்
செய்வதற்காகவும் (financial management ) ஒரு சபை நிறுவவேண்டும் .அடுத்து திட்டங்கள் தீட்டல் ,முடிவு (decesion
making.) மற்றும் நடைமுறைபடுத்தல் என்பவற்றில் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரும் .கடந்த கால அனுபங்கள் ஒரு பாடம்.
கன எலி கூடினால் புத்து எடுபடாது என்ற முது மொழி .too many cooks spoil the soup .M G R கருனாநிதியிட்டை கணக்கு கேட்ட மாதிரி
என்பார்வை அறிக்கை சமர்பிக்கவேனும் .சில நல்ல மனமுள்ள அன்பர்கள் உவன் காசை அடிக்கிறான் என்பார்கள் .எனவே
இவட்டிலேல்லாம் விடுபட்டு சுதந்திரமாக தனிஆளாக நின்று செய்வதே நலம் என்று கருதுகிறேன் .என் நிலைப்பாட்டை
ஏற்றுக்கொள்வீர்கள் என கருதுகிறேன் .அண்மையில் ஊரில் இணையதின் தம்பி இராமச்சந்திரனுடன் இதுபற்றி விரிவாக
உரையாடினேன் .மற்றும் பாலா உடன் தொலை பேசியில் ஒரு மணிக்கு மேல் உரையாடினேன் .உதவித்தொகைக்கு
பெற்றோரின் வருமானம் கவனத்தில் எடுக்கப்படமாட்டாது .எம்மூர் மாணவர் கல்விச்செயட்பாட்டை ஊக்குவிப்பதே முதல்
நோக்கம் .அனைத்து அன்பு உள்ளங்களிடமிருந்து அதற்கான ஆலோசனைகள் அறிவுரைகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்

17 Responses to “அமரர் சங்கர் ஞாபகார்த்த நிதியம்”

 • வணக்கம்
  மனோகரன் கந்தையா
  உங்களின் இணையம் வழி நிதியம் சிறப்புற வாழ்த்துவதோடு கனடாவில் இருக்கும் சிலர் தங்களது இத்திட்டத்திற்கு உதவுவதற்கு முடிவு செய்துள்ளார்கள். அவர்கள் உங்கள் திட்டத்திற்கு பண உதவி அளிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? உங்களுடைய வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்பி வைப்பதாயின் கணக்கு இலக்க விபரங்களைத் தெரியப்படுத்தவும். அல்லது நீங்கள் இந்நிதியத்திற்காக வங்கியில் கணக்கு திறந்துள்ளீர்களா? உதவ முன் வந்திருக்கும் நண்பர்களின் அன்பளிப்புக்களை ஏற்றுக் கொண்டு விமலன் நிதியத்தைப் பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
  உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்தி விடைபெறுகின்றோம்.

  வேந்தன்

  • வேந்தன் உமது ஆதரவிற்கு நன்றிகள் பல .ஆரம்ப கட்ட நடவடிக்கைகள்
   நடந்து கொண்டு இருக்கின்றது .உடனடி அமுலாகத்திட்காக எனது கணக்கிலிருந்து ஊக்குவிப்பு தொகையை வழங்க இருக்கிறேன் .அடுத்தகட்டமாக ஒரு தொகையை வைப்பிலிட்டு நிதியத்தை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து சட்டரீதியாக பதிவு செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டிப்பணத்தில் கொடுப்பனவுகளை தொடர உத்தேசம் .நீண்ட
   கால நகர்வுக்கு தனியாக நின்று செய்வது சாத்தியமல்ல என்பதை உணர்கிறேன் .இங்கு பல நல்ல உள்ளம் கொண்டவர்களுடனான உரை ஆடல்களின்போதும் அதையே கூறுகின்றனர் .நிதியத்தை பெருப்பிபதட்கான
   பல்வேறு திட்டங்கள் கை வசம் இருந்தும் நடைமுறை படுத்துவதில் சில சிக்கல்கள் .என் தொழில் இடம் தராததனால் .நிதியத்தை ஆரம்பித்து
   மறுமலர்ச்சி மன்ற நிர்வாகிகளிடம் அளிக்க உள்ளேன் .அதன் பின் உங்களின் நிதி சார் பங்களிப்புகளை இலகுவாக செய்யலாம் .அதற்கு முன் எனது சொந்த கணக்கிற்கு நீங்கள் நிதி பங்களிப்பு செய்தால் அது தேவை அற்ற தப்பபிப்பிரிராயங்களை தோற்றுவிக்கக்கூடும் .எதற்கும் வரு ஞாயிறு
   உம்முடன் தொலை பேசியில் தொடர்பு கொள்ள முயலுகிறேன் .முடிந்தால்
   நீரும் முயலவும் .தயாபரியிடம் என் நம்பர் பெறலாம் .மீண்டும் நன்றிகள் பல

   • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    ஒரு தனி நபரின் செயல் திட்டம் என்று முன் அறிவித்தபடியால் வாழ்த்து தெரிவித்திருந்தேன். அந்த வாழ்த்தை இப்பொழுது திருப்பி பெற்றுக்கொள்கிறேன் – மன்னிக்கவும்.

    • சுதர்சன் வாழ்த்தும் போது புளங்காகிதம் அடைதலும் வாழ்த்தை வாபஸ் பெறும்போது சோர்வு அடைபவனும் அல்ல நான் .தனியாக வே இதுவரை
     நகர்கின்றேன் .எதிர்கால விரிவாக்கத்திற்கும் .தொடர்ச்சியான நகர்த்தலுக்கும் தனியாக இயங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை
     அனுசரித்தே எதிர்கால திட்டங்களில் சில மாற்றங்களை செய்ய உத்தேசம் .

 • T,BALAKUMAR www.panncom.net:

  ஏன் தான் இந்தமுயற்ச்சிகளை முடக்கப்பாரக்கிறோம்? இணையத்தினர் ஒருவனின் முயற்ச்சியை தட்டிக்கொடுக்க மறுப்பதுதான் ஏனோ? சில முயற்ச்சிகள் வடிவமைத்து முக்கியத்துவம் கொடுக்காமை ஏனோ? நேரமின்மை என்பது நாமாய் உருவாக்குவதே. பண்கொம்.நெற் பண் த.பாலா

  • பாலகுமார் முயற்சிகள் முடக்கப்படுவதாக நான் உணரவில்லை .எல்லாம் நன்றே நடந்துகொண்டிருக்கிறது .எம் எல்லைக்கு உட்பட்ட ஐந்து சன சமூக
   நிலையங்களினூடாக இறுதியாக வெளிவந்த புலமை பரீட்சையில் சித்தி
   அடைந்தவர்கிளிடமிருந்து விண்ணப்பங்கள் கோருவதற்கான விடயங்களை
   அழ பகீதரன் மேட்கொண்டுள்ளார் .உச்ச புள்ளி அடிப்படையில் தெருவு செய்யப்பட்டவரின் பெயர் அறிவிக்கப்படும் .அவரின் பெயரில் வங்கிகனக்கொன்று aarampikkappaddu மாதாந்த ஒக்குவிப்பு தொகை
   அனுப்பி வைக்கப்படும் .நீங்கள் தரும் இந்த ஆதரவுகள் எனக்கு போதுமானது

 • சச்சி:

  மனோகரன் கந்தையா:அது இவர் தான்.

 • T,BALAKUMAR www.panncom.net:

  இந்த ஆரம்பம் எங்கு ஆரம்பிக்கப்படவேண்டுமோ அங்கு ஆரம்பமாகாமல்! இன்று ஆரம்பம் ஆரோக்கியமே.’ எது இல்லை எம்மிடம் இருக்கின்ற வளத்தைக்கொண்டு வளம் பெறுவோம்’ இவ்வாக்கியத்தை நான் எதை நோக்கி எழுதினேனோ அதை திரு மனோகர் கந்தையா அவர்களால் முதல் படியில் தன் திட்டத்தை வெளிப்படையாக அறிக்கையாக அனுப்பியுள்ளார்கள்.இதை பார்க்கும் புலம் பெயர்மக்களாகிய நாமெல்லாம் வெட்க்கி தலைகுனியவேண்டும்.அவரது அனுபவம் தனது சொந்தமுயற்ச்சி எனவும் தனது வருமானத்துக்குள் உட்பட்டும் தனது கட்டுப்பாட்டோடு நடாத்தவிரும்புவதாய் கூறினார். இவரது ஆர்வத்துக்கு நாங்கள் அவரது இந்த திட்ட உருவாக்கத்தை பாராட்டி தட்டிக்கொடுக்கவும் பழகவேண்டும்.பணிப்புலத்தில் நாங்களே சமூகத்தொண்டர்கள் எனவும்,நானே ராஜா, நானே மந்திரி,நானே நிதியமைச்சர் என சிலர் வலம்வரும் காலங்களில்.தானாக சிந்தித்து தன் சுயமுடிவை ஒரு சில ஆர்வலருடன் கலந்த ஆலோசனைபண்ணி செயல்வடிவமும் கொடுத்தாயிற்று.நம் பணி அவர் பாதங்களை தொட்டு அவரது பணியைவாழ்தியும் நம் அறியாத்தன்மைக்கு மன்னிப்புகேட்டு இன்னும் ஒரு செயல்த்திட்டத்துக்காய் உழைப்போமாக.’எது இல்லை எம்மிடம் இருக்கின்றதைக்கொண்டு வளம்பெறுவோம்’ பண்கொம்.நெற் பண் த.பாலா

 • jegatheeswaran:

  இது எங்கலுக்கு வெட்க்கம் இந்த வெளிநாடுகளில் இருந்து கொண்டு பார்க்க அல்லது கேட்க்க நீங்கள் ஊரில் இருந்து கொண்டு செய்கிறது உங்கள் காலில் விழுந்து வணங்கவேண்டும் நான் அல்லது நாங்கள்.
  நோர்வே இல் இருந்து ஜெகதீஸ்வரன் தங்கராஜா

 • வணக்கம்
  இந்தத் திட்டம் பற்றி சங்கரின் தந்தையார் நேற்றுப் பேசினார். நல்ல விடயம் செய்வதற்கு எல்லோரும் துணை நிற்பார்கள். இந்தத் திட்டத்திற்கு உலகில் உள்ள எமது ஊர் அமைப்புக்கள் அனைத்தும் ஒத்துழைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும். அது பல்வேறு துறைகளுக்கும் உதவியாக இருக்கும். உதவ வேண்டும் என்று கூறிக்கொண்டு விடை பெறுகின்றேன். சங்கரின் பள்ளி முதல் இன்று வரை நற்றோழன்.
  வேந்தன்(விஜி)

 • CHANDRAHASAN:

  மிக அருமையான முயற்சி. இது போன்று ஒரு முயற்சியை மன்றம் அல்லது பனிப்புலம் வாசிகசாலையும் துவங்குமையின் பலர் உதவி செய்வார்கள். படிப்புக்கு மடுமல்லாமல் விளையாட்டு கலை இலக்கிய ஆக்கங்களுக்கும் ஒவ்வொரு வருடமும் போட்டிகள் மூலம் சிறந்த பங்களிப்பு செய்பவர்களை தேர்ந்தெடுத்து உதவித் தொகை வழங்கி ஊக்கப்படுத்தலாம். மன்றம் உடனடியாக களத்தில் இறங்கலாம்.

  • சந்திரன் நான் இப்ப ஒரு மணிக்கு முதல் உன் தம்பி பகி உடன்
   தொலை பேசியில் உரையாடினேன் . இந்த செயல் திட்டத்தை
   உடனடியாக அமுல் படுத்தும் முதல் கட்டமாக ஐந்தாம் ஆண்டு புலமை
   பரீட்சையில் கடைசியாக வந்த பெறு பேறுகளின் அடிப்படையில் இந்த
   உதவித்தொகையை உடனடியாகவே வழங்குவதற்கான தகவல்களை
   பெற அவருடன் தொடர்பு கொண்டேன் .துரதிஷ்டவசமாக அவர்
   சங்கரின் அஞ்சலி நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதில் மிக buisy ஆக இருப்பத்தால் தொடர்பு கொள்வதில் சிக்கல் .அவரின் வங்கியூடாகவே
   வைப்புக்களை செய்து இந்த திட்டத்தின் செயற்பாடு முன்னே போகும் .

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   தயவுசெய்து மன்னிக்கவும்.
   மனோகரன் கந்தையா அவர்களின் தனிச்சியான இச்செயலை அவர் வழியில் அவரே குறிப்பிட்டதுபோல் ஆரம்பித்து அவரின் தனி யோசனையில் இன்னொரு கழகங்களோடு இணையாமல் தனிமையில் இயங்குவதே இன்று சாத்தியமாகும் – பலதை சாதிக்கலாம் என்று நம்புகிறேன்.
   இருக்கும் அமைப்புக்களும் அவற்றின் அங்கத்துவர்களினது தலையீடுகளும் இவரின் யோசனையை நகர்த்துவதன் கதியை குறைக்கும் என்பது என் கருத்து.
   இவரின் யோசனைக்கு எவரும், எந்த அமைப்புக்களும் (மறைமுகமாக) ஆதரவுகள் வழங்குவதும் ஒரு யோசனை.

   • சுதர்சன் u r great அடா இருந்தாலும் உந்த சனத்திட்டை ஏதாவது
    வந்தால் அவைக்கு நான் கணக்கு காட்டவேனுமடா பிறகு ஊழல்
    என்னுவான்கள் .அதை விட என்னிடம் பல ஆக்கபூர்வமான
    திட்டங்கள் உண்டு .அதில் சிலவற்றை சொல்லுகிறேன் .என் நண்பன்
    ஒருவன் (பொறியியலாளன் ) பொழுது போக்கிற்காக மாஜா ஜால வித்தைகள் செய்பவன் .அவனை கூப்பிட்டு யாழ்பாணத்தில் உள்ள
    பாடசாலைகளில் நிகழ்சிகளை நடத்துவதில் நிதியை திரட்டலாம் .
    அவர் எனக்கு இலவசமாக வழங்குவார் .அதோடு இது போன்ற அநேக
    திட்டங்கள் என்னிடம் உண்டு .உங்களின் moral சப்போர்ட் மட்டும் எனக்கு
    காணுமடா சுதர்சன்

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  என்னை வாய்மூட செய்துவிட்டீர்கள் – வெளிநாடுகளில் இருக்கும் எங்களை வெட்கத்துக்குள்ளாக்கிவிட்டீர்கள்; உணர்ச்சியுள்ளவர்களைப்பற்றியே கூறுகிறேன்.
  நடைமுறை சிக்கல்களை நன்றாக உணர்ந்து சரியான முடிவு எடுத்துள்ளீர்கள்.
  வாழ்த்துவதற்கு என்னிடம் வார்த்தைகள் வரவில்லை…..

  • சுதர்சன் உன்றை வாயை நான் மூடவில்லையடா .உன்றை வாய் எப்பவுமே
   திறந்தது உளறிக்கொண்டு இருக்கவேனுமடா .உனக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன் ,நாங்கள் முட்டி மோதி தான் ஒன்றாகினோம்.
   உன் அறிவையும் ஆற்றலையும் நான் கணித்துள்ள இடத்தை
   நீ அறியாய் .நானுன்னை என் சொந்த பிள்ளையை போல் உணர்கிறேன் .
   வாடா கைகோர்த்து ஒன்றாக பயணிப்போம் .பாலா இப்ப டெலிபோனில்
   கதைத்தான் .நீ என்னுடன் தொடர்பு கொள்ளுவதாக சொன்னான் . உன்
   உடனான உரையாடலை ஆவலுடுடன் எதிர் பார்த்து நிற்கும்
   உன் அன்பன் மனோகரன்

   • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    உங்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதைத்தபின் உங்களின் திட்டத்திலுள்ள மரியாதை இன்னும் கூடிவிட்டது.
    Hats-off
    ஊர் சரித்திரத்தின் trendsetter .

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து