உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

யாழ்ப்பாணத்து மக்களின் உணவுப்பழக்க வழக்கங்கள் சத்துடன் கூடிய சுவையான உணவுப்பழக்க வழக்கங்களாக இருப்பதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மரவள்ளிக் கிழங்குக்கறி, மீன் குழம்பு, ஒடியல் பிட்டு, ஒடியல் கூழ், குரக்கன் பிட்டு என நீண்டு செல்கிறது அவர்களுக்கே உரித்தான உணவுகளின் பட்டியல்.

அங்குள்ள மக்களில் சைவ உணவு மாத்திரம் உண்பவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் காலத்தின் தேவை காரணமாக சைவக்குடும்ப வாரிசுகள் வெளிநாடுகளுக்குச் செல்லத்தலைப்பட்ட காரணத்தாலும் அங்கு பீஸா, பேர்கர் போன்ற உணவுப் பொருட்களின் தாக்கம் காரணமாகவும் அவர்களின் உணவுப்பழக்க வழக்கங்கள் தற்போது மாற்றமடைந்துள்ளன.

யாழ்ப்பாணத்து தமிழர்கள் இல்லாத நாடு இல்லை என்று கூறுமளவிற்கு அவர்கள் உலகமெல்லாம் பரந்து, விரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் எங்கு சென்றாலும் யாழ்ப்பாண வாசம் வீசும் உணவுகளை மறப்பதில்லை. அவ்வாறான உணவுகளில் ஒன்றுதான் பருப்புக்கறி ஆகும்.

இப்பருப்புக் கறியானது சைவ உணவு மற்றும் அசைவ உணவு என அனைத்து உணவுக்கும் பொருத்தமானது. அதுமாத்திரமல்லாமல் பாணுக்கும் பருப்புக்கறிக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

தேவையான பொருட்களும் செய்முறையும்

1. 100 கிராம் மைசூர்ப் பருப்பை எடுத்து, நன்றாகக் கல்லரித்துக் கழுவி, அதை ஒரு மண் சட்டியில் போட்டு சிறிதளவு தண்ணீர்விட்டு, அதனுடன் சிறிதளவு வெட்டிய சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து அவிய விடவும்.

2. பருப்பு நன்றாக அவிந்ததும் சிறிதளவு மஞ்சள்த் தூள் சேர்க்கவும். அதுவரையில் மண் சட்டிக்குள் அகப்பையை/கரண்டியைப் போடக்கூடாது.

3. அதன் பின்னர் கெட்டியான (முதல்) தேங்காய்ப்பால், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும்.

4. இறுதியாக இடித்த நற்சீரகம் ,மிளகு, உள்ளிக் கலவையை இடவும்.

5. இன்னொரு தாச்சியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, வெட்டிய சிறிய வெங்காயம், கருவேப்பிலை, செத்தல் மிளகாய், பெருஞ்சீரகம், கடுகு ஆகியவற்றைப் போட்டுத் தாழித்து எடுக்கவும்.

6. கொதித்த பருப்புச் சட்டிக்குள் தாழிதத்தைப் போட்டு பருப்புக்கறியை இறக்கிப் பரிமாறுங்கள்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து