உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பெற்றதோடு முடிவதில்லை பெற்றவர்கள் கடன். ஒரு குழந்தையை பெற்றெடுப்பதை விட அதனை நன்கு வளர்த்து அறிவுட்டி சான்றோனாகவும் நற்பண்பினனாகவும் வளர்ப்பது சவாலானதாயினும், தவறாது ஆற்றவேண்டிய பெற்றோரின் தலையாய கடனாகும்;. “பிள்ளை வளர்ப்பு என்பது அப்படி என்ன பெரிய விடயமா?” எனக் கேட்பவர் எம்மில் பலர் உள்ளனர். பிள்ளைகளை சரியாக வளர்க்காவிடில் வெறும் பதராவரேயன்றி பயிராகி வளம்சேர்க்க மாட்டார்கள். பிள்ளை வளர்ப்பு என்பது வெறுமனே ஒரு கலையல்ல.

பொறுப்பாக ஆற்றவேண்டிய பாரிய கடனாகும்.குழந்தை வளர்ப்பில் பருவ வேறுபாடுகளா-வன அதிமுக்கியமாக கவனத்திற்கொள்ளவேண்டிய அடிப்படை விடயங்களாகும்.ஐந்து வயது குழந்தைப்பருவத்துடன் பதி-னைந்து வயதினரை ஒருபொழுதும் ஒப்பிடமுடியாது. குழந்தைகளின் பருவமாற்றத்திற்கமைய பெற்றோர் தம் மனப்பாங்கினையும்மனப்பக்குவத்தினையும் மாற்றியமைப்பதுஅவசியமாகும். இதர வயதினரை விட 9-12வயதினருடனான அணுகுமுறைகள் வளர்ப்பு முறைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதனால் இவ்வயதினரை சேய்களாக கொண்ட பெற்றோர் தம்மை தக்கமுறையில் நன்கு அறிவுறுத்தி பக்குவப்படுத்தி வைத்திருப்பது மிக மிக அவசியமாகும். 13 வயதிற்கு பின்வரும் பதின்ம வயதுக்கு முன்னைய பருவமான 9 முதல் 12  வரை- யான வயதினைக் கொண்ட பதின்ம முன் பருவத்தில் ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியும் தனித்துவமானதாகவும் ஒருவருக் கொருவர் அதிகளவில் மாறுபட்டதாகவும் இருப்பதைக் காணலாம்.
பூப்பெய்தும் பருவத்தினையொட்டிய வயதி னரான இவ்வயதினர் ஒருவருக்கொருவர் உடல் வளர்ச்சியில் வேறுபட்டிருப்பதனைக் காணலாம். இவ்வேறுபாடுகள் உளவியல் வேறுபாடுகளுக்கான காரணிகளாகவும் திகழ்வதுண்டு குழந்தைப் பருவத்திற்கு விடை கொடுத்து பருவ வயதிற்குள் காலடி எடுத்து வைக்க ஆயுத்தமாகும் இவ்வயதினருள் உளவியல் மாற்றங்களும் நிறையவே நிகழ் வதனை பெற்றோர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயுள்ள தலைமுறை இடைவெளியானது அடிப்படைப்
புரிந்துணர்வினால் அகற்றப்பட்டு இறுக்கமான பாசப்பிணைப்பால் இல்லாமல் செய்யப்படு- கின்றது. எனவே பிள்ளைகளின் பருவப் படி- முறைப் பயணங்கள் பற்றி பெற்றோர் அறிந்து வைத்திருப்பதானது பிள்ளைகளில் ஏற்படும் சடுதியான மாற்றங்களை அடையாளம் கண்டு புரிந்துகொள்ள உதவுகின்றது. அத்துடன் அதற்கேற்ப எம்மை மாற்றிக்கொண்டு சரியான நெறிவழியில் சரியானபடி பிள்ளை வளர்ப்புப் பணியை தொடர உதவுகின்றது.

சில விடயங்களில் பெற்றோரில் தங்கியும் சில விடயங்களில் தன்னாளுமையுடன் சுதந்திர மாகவும் வாழும் இப்பருவத்தினர் தம் பருவமாற்றம் குறித்த தெளிவற்ற பருவக் குழந்தைகள் என்றே கூறவேண்டும். அவர்களே அவர்களுக்கு அந்நியமான வேளையில் பெற்றோர் தம்மை இன்னமும் குழந்தைகளாக நடாத்துவதனால் சலிப்புற்று சினமடைவதனை பரவலாக காணமுடியும். பல சமயங்களில் அவர்களின் பிடிவாதம் வாக்குவாதம் முன்கோபம் பெற்றோர்களையும் அதிர்ச்சியூட்டி, சினமூட்டி, வேதனையும் ஆத்திரமும் கொள்ளவைத்து வன்முறையாளராக்க முயல்வதுமுண்டு. ஆயினும் சரியான அணுகுமுறைகள் பற்றிய தெளிவினை பெற்றோர் கொண்டிராவிடில் விளைவுகளின் விபரீதங்கள் அதிர்ச்சிகளையும் வேதனைகளையும் நிரந்தரமாக உருவாக்க நேரிடும் என்பதனைப் பெற்றோர் புரிந்திருக்க வேண்டும்.

பிள்ளைகள் குறித்த சவாலான பொறுப்புக்-
களைச் சாதுரியமாக கையாளக் கற்றுக் கொள்வீர்களேயானால்; உங்கள் பிள்ளைகளை நீங்கள் சாதனை படைக்கும் சாதுரியர்களாக நிச்சயம் வளர்க்க முடியும் என்பது உறுதி. முதலில் அந்த நம்பிக்கை பெற்றோருக்குள் காத்திரமாக ஆணித்தரமாக இருக்க வேண்டும்.
உங்கள் குடும்பத்தின் ‘வீட்டு விதிமுறைகள்’-
வீடு என்றால் கோவில் போன்றிருக்க வேண்டும். கோவிலுக்குள் சென்றால் ஆறுதலும் மன அமைதியும் கிடைப்பது போல்
வீடு குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் ஆறுதலை அளிக்கும் இல்லமாகத் திகழ வேண்டும். பெரியோருள் மட்டுமன்றி சிறியோருள்ளும் இத்தகைய எதிர்பார்ப்பு இயல்பாகவே இருப்பதுண்டு. பெரியவர்களுக்கு வாழ்க்கைப் போராட்டம் ஒருவகை அழுத்தத்தை உளப்பழுவைத் தருவதுபோல் சிறுவர்களுக்கும் அவர்களின் பாடசாலை கல்விப்பழுவினால் இத்தகைய மனப்பாரங்கள் உருவாவதுண்டு என்பது
பல பெற்றோருக்கு தெரிவதில்லை.
பாடசாலையில் ஒழுக்கவிதிமுறைகள் பலவற்றிற்கு கட்டுப்பட்டு செயற்பட்டு விட்டு வீட்டிற்கு வந்தால் வீட்டிலும் விதிமுறைகள் வகுத்து கட்டுப்படுத்தும் பெற்றோரை சலிப்போடு வெறுத்துச் சினத்துக் கொள்கின்றனர்
சிறார்கள். விதிமுறைகள் நெறிப்படுத்தலுக்கு அவசியமானவை. ஆனாலும் அவற்றை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மென்மையாக ஏற்புடைய வகையில் அறிமுகப்படுத்துவது
அவசியம்.
விதிமுறைகள் எவையுமே ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், சரியான விதிமுறைகளை சரியான வழிகளில் வகுத்துக் கடைப்பிடிக்க கற்றுக் கொண்டோமேயானால் நேரம் சேமிக்கப்படுவதோடு நிர்வாகமும் நேர்த்தியாக சிறப்பாக இருக்கும். இது காரியாலயங்களுக்கும் நாட்டுக்கும் மட்டுமன்றி வீட்டிற்கும் பொருந்தும்.
சில வீடுகளில்  “எப்படி வேண்டுமானாலும் பிள்ளைகள் குப்பைபோட்டுவிட்டு போகட்டும். நாம் சுத்தப்படுத்தி விடலாம்” என எண்ணி வீட்டுச் சுத்தம் குறித்த விதிமுறைகளை தம்பிள்ளைகளைக் கடைப்பிடிக்க ஊக்குவிக்காத பெற்றோர் எம்மில் பலர் உள்ளனர்.
வேறு சில வீடுகளில்  “வரவேற்பறையில் சாப்பாடு கொண்டுவந்து சாப்பிடக் கூடாது. சாப்பாட்டு மேசையில் இருந்து கொட்டாமல்
சாப்பிட வேண்டும்” என கண்டிப்போடு பிள்ளைகளுக்கு விதிமுறை வகுத்து அதில் கண்டிப்பாக இருக்கும் பல பெற்றோர் தாங்கள் மட்டும் தொலைக்காட்சி பார்த்த வண்ணம்; வரவேற்பறையிலிருந்து சாப்பிடும்
போது “நீங்கள் மட்டும் அப்படி சாப்பிடுகிறீர்களே, ஏன் நான் அங்கு இருந்து சாப்பிடக்கூடாது?’ என பிள்ளைகள் வாதிடுவதனைக்
காணலாம். இவ்வாறான நியாயங்களைச் சிறுவர்கள் கேட்கையில் பதில் சொல்ல முடியாமல் சில பெற்றோர் தமது அதிகாரபலத்தை அத்தகைய பொழுதுகளில் பிள்ளைகள் மீது பிரயோகிப்பதனையும் சில
வீடுகளில் காண்கின்றோம்.
குழந்தை வளர்ப்பில் அதிகார போக்கு
இருப்பதைவிட புரிந்துணர்வுடனான நட்புமுறை
வழிநடத்தலே வெற்றியைத்தரும். சிறுவர்-
களேயானாலும் நீதி நியாயம் குறித்த எதிர்
பார்ப்பு அவர்களுக்குள்ளும் உள்ளதனைப்
பலசமயங்களில் பெரியவர்கள் உணர மறந்து
விடுகின்றனர்.
வீட்டு விதிமுறைகள் வீட்டிலுள்ள எல்லோ-
ருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டதாக பொதுவாக
பெரியோர் முதல் சிறியோர் வரை அனை-
வராலும் கடைப்பிடிப்பதாக இருப்பது மிக
மிக அவசியமாகும்.
வீட்டு விதிமுறைகள் வீட்டை மட்டுமன்றி
குடும்பத்தினரையும் நேர்த்தியாகச் செயல்ப்
பட உதவுபவையாதலால் நிச்சயம் எல்லா
வீடுகளிலும் இத்தகைய விதிமுறைகள்
இருப்பது அவசியமாகும்.
வீட்டு விதிமுறைகளாவன காலத்திற்கு
காலம் மாற்றப்பட வேண்டும். ஒரு குழந்தை
5 வயதாக இருக்கும் போதிருந்த விதி-
முறைகள் 9 வயதாக இருக்கும் போது
வயதுக்கேற்ப மாற்றப்பட வேண்டும். வளர்ந்
துவரும் சிறுவர்களின் பக்குவத்திற்கேற்ப
பகிரப்படும் பொறுப்புக்கள் பரிசீலிக்கப்பட்டு
மாற்றியமைக்கப்பட வேண்டும்.
“வீட்டு நிர்வாகம் அபப்டியென்ன பெரிய
விடயமா?” என நீங்கள் கேட்கலாம். சிலர்
எப்பொழுது கேட்டாலும்  “நேரமில்லை”
என்பதைப் பார்த்திருப்பீர்கள். சிலர் ஏனை-
யோரைவிட பன்மடங்கு வேலைகளைச்
செவ்வனே திட்டமிட்டுச் செய்வதைப்
பார்த்திருப்பீர்கள். இவ்விரு பகுதியினருக்-
கும் 24 மணி நேரமே ஒரு நாளில் கிடைக்
கின்றது. எனினும் நேரத்தை சரிவர நிர்வகிக்க
தெரிந்தவரால் நேரத்தை சிக்கனப்படுத்தி
நிறைய விடயங்களைச் சாதிக்க முடிகின்றது.
நேரத்தை நிர்வகிக்கத் தெரியாதவருக்கோ
24 மணிநேரம் மட்டுமல்ல எவ்வளவு நேரத்
தைக் கொடுத்தாலும் நேரம் ஒருபோதுமே
இருக்கப் போவதில்லை.
ஒழுங்குவிதிகள் மற்றும் பொறுப்பு பகிர்வுகள்
சரிவர இருந்தால் அத்தகைய குடும்பங்க-
ளின் செயலாற்றல் (Pசழனரஉவiஎவைல) அதிகமாக
வெளிப்படும். அத்தகைய குடும்பங்களில்
வாழும் சிறார்கள் நாளை ஒரு முழுமையான
சமூக மனிதனாக வளர்ந்து வரும்போது
சமூகத்திற்கு பயன்தரும் வகையில் தன்னாற்-
றலை பெருக்கி பயன்தருகின்றார்கள்.
வீட்டு விதிமுறைகளிலும் பழையன
கழிதலும் புதியன புகுதலும் பேணப்படுதல்
அவசியமாகும்.
(Pசநவநநளெ) பதின்ம முன் பருவத்தினர்கள்
ஒழுங்கு விதிகளிளைக் கடைப்பிடித்தலில்
அதன் விளைவுகள் காரண காரியங்கள்
எனப் பலநோக்குகளில் ஆராய முற்படுகின்-
றனர். எதற்கெடுத்தாலும்  ‘ஏன்?’ என்று
கேட்கும் இவர்களை  “அது அப்பிடித்தான்.
செய் என்றால் செய்!” என அதட்டி அடக்கும்
பல பெற்றோர்களை எம்மிடையே காண்கின்-
றோம். இது தவறு! இன்னும் அவதானித்தால்
அத்தோடு அந்த வாதம் அவர்கள் மத்தியில்
நின்று விடுவதில்லை. “ஏன் என்று சொல்லுங்-
கோவன்” என்றும் “ஏன் என்று சொல்லாட்டில்
நான் செய்ய மாட்டன்” என்றும் “என்னால்
முடியாது” என்றும் மல்லுக்கட்டி நிற்கும்
இவர்களை அடிக்க ஈற்றில் வழி தெரியாமல்
பல பெற்றோர் சிலசமயங்களில் இரண்டு
அடியும் போட்டு விடுவார்கள். இதுவும் மா
பெரும் தவறு என்பதை எம் பெற்றோர்
உணர்வதில்லை.
“ஏன்?” என்ற கேள்வியில் மனிதன் அறிஞன்
ஆகின்றான் என்பதனை விஞ்ஞானமும்
மெய்ஞானமும் வாழ்வியல் ஆதாரங்களோடு
எடுத்து இயம்புகின்றன. கேள்விகள் சிறுவ-
ருள் உள்ள ஆராய்வு மனப்பான்மையை,
அறிய விரும்பும் ஆர்வத்தை, அறிவின்
வளர்ச்சியினை வெளிப்படுத்துகின்றன. அறி-
வுத்தேடலின் அறிகுறிகள் அவை. அவற்றை
அடக்கி நசுக்குவது சரியல்ல. சில கேள்வி
கள் பெரியோர்களாகிய எமக்கு முட்டாளத்
தனமாகப் படலாம். ஆனால் வளர்ந்து வரும்
சிறுவர்களுக்கு புதிய உலகத்தினைக் கற்றுக்
கொள்ளும் அறிவியல் தேடலே அவை
யாகும். முட்டாள்த்தனமான கேள்வி என
உலகில் எதுவுமே கிடையாது. அறியும்
வரை அறியாமைகள் இருக்கவே செய்யும்.
அவர்களின் அறியாமைகளை அவர்கள்
வெளிப்படுத்துகின்றபோது அவற்றை அகற்றி
அறிவூட்டவேண்டியது பெற்றோரின் கடனாகும்.
சில சமயங்களில் இந்த வயதினர் தம்
வயதுக்கு ஒவ்வாத காரணம் சொல்ல
முடியாத விடயங்களைத் துருவித் துருவி
ஆராய்வர். ஞாபகமிருக்கட்டும் அவர்கள்
பதின்ம வயதை வெகுவிரைவில் தொடப்
போகின்றவர்கள். அடுத்து தம் வாழ்வில்
என்ன நடக்கும் என அவர்கள் அறிய முயல்-
வது இயல்பானவொன்றே. இது பாலியல்
சம்பந்தப்பட்ட விடயங்களுக்கும் பொருந்தும்.
அதனை அவர்கள் வயதுக்குரிய முறையில்
மட்டுப்படுத்தப்பட்ட தகவல்களுடன் விளக்கு
வது பெற்றோரின் கடன். சிலவேளைகளில்
அவர்களின் வயதுக்கு சற்றும் பொருந்தாத-
வையாயின் அது அவர்களுக்கு அந்த
வயதில் தேவையற்றவை என்பதை பண்பாக
சொல்லி புரிய வைக்கலாம். ஓரளவுக்கு
எளிமைப்படுத்தி அவர்களின் வினாக்களுக்கு
அவர்கள் வயதுக்கு அறிந்திருக்கவேண்டிய
விடயங்களுடன் பதிலளிப்பதே நல்லது.
பெற்றோரிடம் கேட்டுக் கிடைக்காத பதில்;களை
வெளி உலகிடம் கேட்டறியும் ஆவலோடு
குழந்தை எடுத்துச் செல்கையில் விபரீத
மான விளைவுகள் உருவாக நேரிடும்என்பதை
பெற்றோர் அறிந்திருக்க வேண்டும். சொல்
லக்கூடிய விடயங்களாயின் போதிய நேரம்
ஒதுக்கிச் சொல்லிப்புரிய வைப்பதே நல்லது.
இந்த வயதினரிடமிருந்து அயராமல் தொடர்ச்-
சியாக கேள்விகள் வந்தவண்ணமே இருக்கும்.
இது பெற்றோருக்கு அயர்ச்சியையும் சலிப்
பையும் தரக்கூடும். அதனால் நாம் அவற்றை
உதாசீனம் செய்ய எண்ணலாம். இதனால்
சிறுவர்கள் மேலும் சினமூட்டப்படுவரே-
யொழிய அவற்றை விட்டுவிடுவதில்லை.
இந்த வயதினர் பொதுவாகவே விதிமுறைக
ளை விரும்புவதில்லை. மாறாக சுதந்திரத்தின்
பால் நாட்டமுற்று இருப்பர். எனினும் பயிற்ச்
சியுடனான நெறிமுறைப் புகட்டல்கள் அவர்
களை நெறிப்படுத்தி வளர்க்க உதவும். இது
சவாலான பணியாயினும் பயன்தரும் பணி-
யாகும். எனவே சிரத்தையுடன் பயிற்றுவிக்க
வேண்டும்.
உதாரணமாக “உடைகளை கழற்றி மூலை
க்கு மூலை வட்ட வட்டமாக போட்டுவிட்டு
போகின்றான்” என சலிக்கின்ற தாய்மாரைக்
காண்கின்றோம். இப்படியாக சலிப்போடு
பேசிப் பேசியே தாமே வீட்டைத் தனியாக
ஒழுங்குபடுத்தும் தாய்மாரே எம்மில் அதிகம்.
அவரவர் போட்ட குப்பையை அவரவரே
துப்பரவாக்க வேண்டும் என்ற விதிமுறை
வீட்டில் இயன்றவரை கடைப்பிடிக்கப்பட
வேண்டும். தாம் குடித்த குவளையை சாப்பிட்ட
சாப்பாட்டுக் கோப்பையை தாமே கழுவுவது,
உடைகளை கழற்றித் தோய்க்கப் போடு-
வது போன்ற சின்னச் சின்ன விடயங்களை
பொறுப்போடு செய்யப் பழக்குவதற்கு இது
சிறந்த பருவமாகும்.
விதிமுறைகளை வகுத்த பின் அதை கடைப்-
பிடிப்பதை உறுதிப்படுத்துவதில் கண்டிப்பாக
இருந்தேயாகவேண்டும். விதிமுறைகளைக்
கடைப்பிடிப்பதன் முக்கியத்துவமானது எந்தச்
சிறாருள்ளும் நன்கு வலியுறுத்தப்பட
வேண்டும்.
ஆரோக்கியம், சுத்தம், பாதுகாப்பு, சமூகநலன்,
சமுதாயநலன், அடுத்தவர்நலன் என்னும் அனைத்து விடயம் சார்ந்த விதிமுறைகளும்
இவ்வயது சிறாருள் தெளிவாக இவ்வயதி-
லேயே பதிய வைக்கப்பட வேண்டும்.
படுக்கைக்கு வாரநாட்களில் 10 மணிக்குள்
போக வேண்டும் எனும் விதிமுறையை
பிள்ளைகளிடம் நாம் கூறும்போது “நீங்கள்
மட்டும் முழிச்ச்சிருந்து படம் பார்க்கிறீர்கள்.
ஏன் நான் பார்க்கக்கூடாது?” எனச் சிணுங்கும்
பிள்ளையிடம் ‘ஏன்?’ என்பதற்கான விளக்-
கத்தை சரியாக சொல்லி புரியவைத்து
ஏற்க வைக்க வேண்டும். பெரியவர்களும்
சிறியவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய விதி
முறைகள் சில சில விடயங்களில் வேறு
படுகின்றன என்பதை சிறுவர்கள் புரியும்
வகையில் புரிய வைக்க வேண்டும். பெரி-
யோருக்குள்ள கடமைகள் என்பன சிறுவர்-
களுக்கில்லை. பெரியவர்கள் வேறு சிறிய-
வர்கள் வேறு. இத்தகைய வேறுபாடுகளை
குழந்தைகளும் புரிந்து வளர வேண்டும்.
எனின் ‘நீங்கள் சொல்வது நீதியல்ல (ஐவ’ள
ழெவ கயசை)’ என்ற வாதம் அவர்களுள் எழ-
மாட்டாது. வார இறுதி நாட்களில் வேண்டு
மானால் அவர்கள் சற்று தாமதமாக
படுக்கலாம் என சில விட்டுக்கொடுப்புக்-
களையும் செய்ய வேண்டும்.
குடும்ப விதிமுறைகள் ஒவ்வொரு குடும்பத்-
தினதும் வாழ்வு முறைகட்கேற்பவும் சிறாரின்
மனப்பக்குவம் கோபம் கொள்ளும் குணம்,
என்பவற்றுக்கேற்பவும் மாறுபடுகின்றன. சில
சிறார்களுக்கு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க
பயிற்றுவிக்க நீண்ட காலம் எடுக்கின்றது.
சிலர் அதன் நற்பயனை புரிந்து கொண்டு
அவற்றை அநுபவிக்கும் நோக்கில் விருப்
போடு ஏற்றுக் கடைப்பிடிக்கின்றனர். குடும்ப
சூழ்நிலைகளும் இவற்றிற்கு ஒரு முக்கிய
காரணியாகத் திகழ்கின்றது என்பதனையும்
மறுக்க முடியாது.

Thanks to
சிவவதனி பிரபாகரன்

2 Responses to “பதின்ம முன் பருவத்தினரின் (9-12) வளர்ச்சிப் படிநிலைகள்”

  • என்ர ஐயோ இதை நான் உட்கார்ந்து வாசித்தால் என்ர பெண்சாதி என்னை உடனே டிவோஷ் எடுத்துப்போடுவா.
    ஏதாவது எழுதுகிறது எண்டால் கொஞ்சம் சுருக்குங்கோ.உப்பிடி சுணாமி அடிச்சமாதிரி எழுதாதையுங்கோ.

  • vinothiny pathmanathan:

    மிகவும் சிறப்பான கருத்துக்கள் . கட்டுரை மிகவும் நீண்டு விட்டது . நம் எழுத்துக்களை மற்றவர்கள் எவ்வளவு தூரம் பொறுமையுடன் வாசிப்பார்களோ என்பதை யோசித்து இதனை சற்று சுருக்கமாக அல்லது இரண்டு பிரிவாக இணையத்தில் பிரசுரித்திருக்கலாம் .அருமையான கருத்துக்கள் .எழுதிய சிவவதனி பிரபாகரன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .admin இற்கும் நன்றிகள் .

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து