உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பேச்சுப் போட்டி – 2011

தரம்: அதி கீழ்ப்பிரிவு – பாலர் வகுப்பு

எமது பெற்றோர்

அம்மாவும் அப்பாவும் எமது பெற்றோர்கள். அவர்கள் எம்மீது அன்புள்ளவர்கள்.

அம்மா எமக்கு பாலூட்டுகின்றார். உணவு ஊட்டுகின்றார், சீராட்டுகின்றார். பாதுகாக்கின்றார்.

அப்பாவும் எமக்காக உழைக்கின்றார். எமக்கு விருப்பமானவை எல்லாம் வாங்கித் தருகின்றார். ஊக்கம் அளிக்கின்றார்.

அன்புடன் எம்மை ஆதரிப்பவர்கள் எமது பெற்றோர்கள். அவர்கள் எமது தெய்வங்கள். பிள்ளைகள் நாம் அவர்களை மதிக்க வேண்டும். துதிக்க வேண்டும் இல்லையா பெரியோர்களே!

நன்றி வணக்கம்

பேச்சுப் போட்டி – 2011
தரம்: கீழ்ப்பிரிவு – வகுப்பு – 1, 2

எனது பாடசாலை

நான் படிக்கும் பாடசாலை ஒரு ஆரம்ப பாடசாலையாகும். நான் அங்கு ஆரம்ப வகுப்பு படிக்கிறேன். அங்கு பல வகுப்பு அறைகள் உண்டு. பல பிள்ளைகள் படிக்கிறார்கள். பல ஆசிரியர்கள் கடமை செய்கிறார்கள்.

எனது வகுப்பு ஆசிரியர் பண்பானவர். பாசமுடன் எம்முடன் பழகுவார். அன்புடன் பாடங்கள் சொல்லித்தருவார்.

என்னுடன் பல நாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் நல்லவர்கள். நட்புடன் பழகுவார்கள். நாங்கள் அவர்களுடன் ஆங்கிலத்தில் கதைப்போம். சில நேரங்களில் நாங்கள் எல்லோரும் வெளியில் விளையாடுவோம்.

எனது பாடசாலை எனக்கு மிக மிக விருப்பமானது. நான் ஒழுங்காக பாடசாலை செல்வேன். நன்றாகப் படித்து பெரியவன் ஆவேன். அதுதான் எனது இலச்சியம்.

நன்றி வணக்கம்

பேச்சுப் போட்டி – 2011
தரம்: மத்திய பிரிவு – வகுப்பு – 3, 4

கல்விஇவ்வுலகிலுள்ள செல்வங்களில் மிகவும் மேலானது கல்விச் செல்வமாகும். “மன்னனுக்குத் தன் தேசத்தில் தான் மதிப்பு உண்டு ஆனால் கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”. கல்வி கற்றவர்கள் யாவரும் சபையில் முன் இருப்பர்.
வாழ்வைச் செழுமைப் படுத்துவது கல்வியே. இக் கல்வி ஒவ்வொருவருடைய முயற்சிக்கும் ஓர் உயர்ந்த வழிகாட்டியாகும். இது அறிவு வளர்ச்சிக்கு அருமருந்தாகும். அதேவேளை பிரச்சனைகளுக்கும், தடைகளுக்கும் விடையாகவும் உள்ளது. இதனாலேயே “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்பர். மேலும் எண்ணும், எழுத்தும் கண்ணெனத் தகும் எனவும் கூறுவர்.ஏனைய செல்வங்கள் கொடுக்கக் கொடுக்க குறைந்து கொண்டே போகும். ஆனால் கல்விச் செல்வமோ கொடுக்கக் கொடுக்க வளர்ந்து கொண்டே போகும். இதை நீரினாலோ, தீயினாலோ, புயலினாலோ அழித்துவிட முடியாது. அதனை கள்வராலோ, அரசினாலோ கவரப்படவும் முடியாது.ஒருவரின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது இளமைப் பருவம். எனவே இளமையிற் கற்றல் அவசியமாகின்றது. அதனாலன்றோ “இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” எனக் கூறப்படுகின்றது. எனவே என்றும் அழியாமல் எமக்கு வழிகாட்டும் கல்வியை இளமையில் கற்பதில் நாம் ஆர்வம் கொள்வோம்.நன்றி வணக்கம்
பேச்சுப் போட்டி – 2011
தரம்: மேற்பிரிவ் வகுப்பு – 5, 6
நன்றி மறவாமை
“எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந் நன்றி கொன்ற மகற்கு” என்றார் திருவள்ளுவர்.

மனிதராகப் பிறந்த நாம் ஒருவருக் கொருவர் உதவியாய் இருந்தாலே வாழ்வு நலம் பெறும். எமக்கு ஒருவர் உதவிசெய்தால் அவரைப் பற்றி நம் மனதில் ஓர் இனிய உணர்வு ஏற்படும். அவ்வுணர்வு எம் மனதில் பதிவாகும்.

அப்பதிவு காத்திருந்து அவருக்கு பிரதி உபகாரம் செய்யச் சொல்லும். அச் செயல் நன்றி மறவாமை எனப்படும். அதாவது,
மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்தும், உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருந்தும் காப்பாற்றப்பட்ட ஒருவர், தம்மைக் காப்பாற்றியவருக்கு, ஏதாவது ஒருவகையில் பேருதவி புரிதல் நன்றி மறவாமை ஆகும்.

ஒருவரிடம் இருந்து உதவியைப் பெற்றவர் காத்திருந்து காலத்தின் தேவையை உணர்ந்து, அவருக்கு தகுந்த உதவியை செய்ய வேண்டும். அது எவ்வாறு எனில் தென்னை மரம் தான் பெற்ற நீரை தனக்கு நீர் தந்தவனின் தாகம் தீர்க்க, இளநீராக தன் தலையாலே தருதல் போலாகும்..

தான் பெற்ற உதவிக்கு பிரதி நன்றி செலுத்தாதவர்களுக்கு உலகில் உய்வில்லை. அது மாத்திரமன்றி அவர்கள் மதிக்கப்படவும் மாட்டார்கள்.

எனவே நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து நன்றி மறவாது வாழ்வில் உய்வோமாக.

நன்றி வணக்கம்

பேச்சுப் போட்டி – 2011
தரம்: அதிமேற்பிரிவு வகுப்பு 7, 8

சொல்லொழுக்கம்

மனிதப் பிறப்பு மேலானது. உயர்வானது. காரணம் அவனது பேச்சாற்றலின் வளர்ச்சி. மிருகங்களும், பறவைகளும் ஒலி மட்டுமே எழுப்புகின்றன. ஆனால் மனிதனின் குரல் ஒலிப்பது மட்டுமன்றி பேசவும் செய்கின்றது. சிரிக்கவும் முடிகிறது. கருத்துக்களை பரிமாறிக் கொள்கின்றது. அதனால் செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது. கடமைகள் செயற்படுத்தப்படுகின்றன.

ஒரு செயலுக்காகப் பேச வேண்டும் எனில் அப்பேச்சுக்கு நற்பண்பு வேண்டும். இல்லையேல் அது வன்சொல் எனப்படும். வன்சொல் வன்முறைக்கே வழிசமைக்கும்.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
நற்பண்பில் இருந்து விலகாத பயனுள்ள சொற்கள் பேசுவோனுக்கு நன்மை கிடைக்கும் என்கிறார் வள்ளுவர். அதனால் யாரிடத்தில் பேசினாலும் எந்நிலையிலும் இன்சொல் பாவியுங்கள். அது பேசுபவனை நாகரீகம் உடையவனாக உலகிற்கு உணர்த்தும். நற் பண்பாடு உள்ளவனாக காட்டி நிற்கும் எனக் கூறுகின்றார்.மனித உறவு என்பது பேச்சுறவு, நண்பர்கள்தானே என்று அவர்களைக் கேலி செய்யக்கூடாது. பகைவரையும் கூட பழித்துப் பேசக்கூடாது. ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பமே தரும்.கேலிப் பேச்சு கேட்டையே கொடுக்கும். இழிசொல் இயம்பாதாற்கு உறவு பெருகும். மனிதநாட்டம் வளரும். பெருமதிப்பும் உண்டாகும்.”நாகாக்க” என்பது பொய்யாப் புலவரின் எச்சரிக்கை. எனவே எம்மைக் காக்க, எம் வாழ்வை வளமாக்க, எம் நாவை நல்நாவாக வழிநடத்துவோம். இன்பமாக வாழ்வோம்.நன்றி வணக்கம்
இப் போட்டி பற்றிய விபரங்கள் அறிந்து கொள்ள விரும்புவோர் திரு. செல்லத்துரை மனுவேந்தன் அவர்களை தொலைபேசி 416-792-1820 ல் அழையுங்கள்.

Canada_pechchukal AS PDF file to print

5 Responses to “கனடா பண்-கலை பண்பாட்டுக்கழக அறிவித்தல்”

 • வணக்கம்

  வழமைபோல் இவ்வருடமும் பேச்சுப் போட்டி நடைபெறுவது வரவேற்கத்தக்கதே. கடந்த காலங்களில் குறைந்தது 75 மாணவர்களுக்கு மேல் பங்கு பற்றுவார்கள்; ஆனால் 2010 ம் ஆண்டுப் பேச்சுப் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்கள் தொகை மிக மிகக் குறைவாக இருந்தது. அந்த நிலை இவ்வாண்டு தொடரக் கூடாது. இவ்வாண்டு உலகத்தில் உள்ள அனைத்து உறவுகளும் இப்போட்டியில் மாணவர்களை அதிகரிப்பதற்கு உதவ முடியும். எப்படி என்றால் கனடாவில் இருக்கும் உங்கள் உறவுகளின் பிள்ளைகளுடன் இந்தப் பேச்சுப் போட்டி பற்றிப் பேசுங்கள். அவர்களின் பெற்றோர்களுடன் பேச்சுப்போட்டியின் முதன்மைத் தன்மையை கூறி எல்லோரையும் இணைத்துக்கொள்ளுங்கள். இம்முறை குறைந்தது 100 மாணவர்களாவது பங்குபற்றவேண்டும். கனடாவில் இருக்கும் பிள்ளைகள் தமிழ் கற்றுக் கொள்வதனூடாக அவர்கள் கனடியப் பல்கலைக் கழகங்களில் தாங்கள் விரும்பிய துறையில் கல்விகற்க உதவுவதுடன் உளச்சார்பு உதவிப் பெறுவார்கள். எனவே எமது மாணவர்களைத் தமிழ் கற்க ஊக்கமளிப்போம். நன்றி

 • பண் கலை பண்பாட்டுக் கழகத்திற்கு எனது வாழ்த்துக்கள் அருமையான விடயங்கள் மன்றும் எனது தாழ்மையான வேண்டுகோள் ஆங்கிலத்தில் எழுதபண்ட pan cultural centre of Canada இதை 2வதாக போடலாம் தானே தமிழ் எங்கள் மூச்சு

 • theepan:

  நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
  பண்பில்சொல் பல்லா ரகத்து
  திருவள்ளுவர் முக்காலமும் அறிந்தவர் தான்.
  அந்தக் காலத்திலேயே நயன்தாராவைப் பற்றிக் குரல் எழுதியுள்ளாரே.

 • அருமையான விடயங்கள் நடந்துகொண்டிருக்கிறது .நாங்கள் நாங்களாக
  வாழ்வதற்கான பிரயத்தனங்கள் .எங்கள் சுய அடையாளங்களை தொலைக்க
  முயற்சிகள் நடக்கின்ற இந்த சந்தர்பத்தில் செ.மனுவேந்தன் தனது தொலை
  பேசி இலக்கத்தை இங்கு தெரிவித்தது ஒரு ஆரோக்கியாமான செயல்
  நான் அவருடன் வெகு விரைவில் தொடர்புகொள்வேன் .இது பகிடி இல்லை
  எங்கள் முன் பாரிய பொறுப்பு உள்ளது .வெறுமனே புனை பெயர்களில் வந்து ஜோக்குகளை மட்டும் பகிர்ந்து கொள்வதால் ஒண்டும் உருப்படியாக
  நடக்கப்போவதில்லையடா தம்பிமாரே .இனியாவது உருப்படியாக ஏதாவது
  செய்வோம் வாரீர் .

  • theebam.com:

   க.மனோகரன் அவர்களுக்கு வணக்கம்,

   எனது ஈமெயில்:-manuventhan@hotmail.com

   ——அன்புடன் theebam.com மனுவேந்தன்

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து