உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

17 . 7 . 2011 அன்று நோர்த் பீச், கனடா ஏரிக்கரியில் ஜல-சமாதி
அடைந்த எமது அன்பு மகன் விசு. க. விமலன் (சங்கர்) அவர்களின் 31ம் நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனை எதிர்வரும் 20.08.2011 சனிக்கிழமை 635 Middlefield Road , Scarborough வில் அமைந்திருக்கும் கனடா – ஐயப்பர் இந்து ஆலய விழா மண்டபத்தில் இடம்பெறும் என்பதனை அனைத்து அன்பு உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் அறியத்தருவதுடன்; இவ் ஆத்மசாந்திப் பிரார்தனையிலும், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

அன்புடன்
விசு. கந்தசாமி குடும்பம்

தொடர்புகளுக்கு:
கு வி கந்தசாமி : 647 – 349 – 3947 / 647 – 385 – 8895
வைகுந்தன்: 416 – 726 – 1698

நன்றி நவிலல்:

பண்டத்தரிப்பு பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் (RBC) றோயல் வங்கியில் பணியாற்றி வந்தவருமான அமரர் திரு. விசு. க. விமலன் (சங்கர்) அவர்களது மரணச் செய்தி அறிந்து பங்கு கொண்டு நேரிலும் தொலைபேசியிலும், மின் அஞ்சல் மூலமும் ஆறுதல் கூறியவர்கள், Sheppard and Midland சந்திப்பில் அமைந்திருக்கும் Ogden Funeral Home இல் பார்வைக்கு (22 , 23 , 24 திகதிகளில்) வைக்கப்பட்டிருந்த போதும் கிரியைகளின் போதும் பெருந்திரளாக வருகை தந்து அன்னாருக்கு அஞ்சலி செலுத்திய எங்களது அன்புள்ளங்கள் அனைவருக்கும், அஞ்சலிப் பிரசுரங்கள், கவிதைகள் ஆகியன வெளியிட்டும், மலர்வளையங்கள் வைத்தும் பக்திப் பிரார்த்தனையை உவந்தளித்தும், இரங்கல் உரைகள் ஆற்றிய பெரியோர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கும் மற்றும் உரிய நேரத்தில் ஓடி வந்து குடிநீர் உணவு வகைகள் ஆசன வாகன வசதிகளும் இன்னோரன்ன உதவி ஒத்தாசை புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அமரர் விமலன் அவர்களின் இறுதிக் கிரியைகளின் போது மலர்மண்டபம் அமைத்து, தீப அஞ்சலி செலுத்திய கனடா-பண் கலை பண்பாட்டுக் கழகத்தினருக்கும், காலையடி மறுமலர்ச்சி மன்றத்தினருக்கும் எமது அன்பு நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

விசு. கந்தசாமி குடும்பம்
பரந்தாமன் குடும்பம்

6 Responses to “31 ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும்”

 • நான் கூறியிருப்பது யாதெனில்
  எந்தத்திட்டம் செய்வதென்றாலும் செய்து முடிக்க வேண்டும் அதை சும்மா சொல்லுங்கொண்டு இருக்க கூடாது
  வெளிநாட்டில் காசை அள்ளுவதாக நான் கூறவில்லை நீங்கள் சும்மா ஊரின் பெயரில் இணையத்தை ஆரம்பித்து ஊரில் என்ன செய்கின்றீர்கள்? என்பது தான் என் கேள்வி?
  இது என்னைப் பொறுத்தவரை நியாயமான கேள்விதான்
  ஆளும் கட்சியுடன் நின்று ஐால்றா போடுபவன் நானில்லை
  ஒருவன் சதாரணமான கருத்தைக் கூறினார் அது வேட்டியை மடித்துக்கட்டுகொண்டு வருவது எனப்பொருளில்லை விமர்சனங்கள் தான் அபிவிருத்தியில் படிகற்கள் சும்மா நீங்கள் செய்வது சரி சரி என்று கூறுவதில்லை

  • கவிஞன்:

   நாம் ஊருக்கு சொன்னதெல்லாம் செய்ய வேண்டும் என்பது எமது கட்டாயமா?
   எமது கவிதைகள் வடிவுற அமைய எழுதும் அனைத்து கவிதைகளையும் காவியமாக்க வேண்டும் என்பது எமது விதியா?
   நாம் எழுதுவது அனைத்தையும் வைத்து உங்களுடைய கற்பனைகளை நீங்கள் வளர்த்து கொள்வது எமது குற்றமா?

 • இரங்கல்நாதன்:

  சிறப்பிபதற்கு சந்தோசமான கலை நிகழ்வு
  புலத்தில் புதிய சம்பிரதாய அறிமுகம்

 • அமரர் கந்தசாமி விமலனின் நினைவாக ஊரில் உள்ள மாணவர்களிற்கு ஏதே செய்யப்போவதாக பக்கம் பக்கமாக கட்டுரை எழுதினீர்கள் ஆனால் அது கட்டுரை மட்டும் தானா? செய்வதானால் அதை சீக்கிரம் செய்யவேண்டும் எங்களாலும் திட்டங்களை தீட்டமுடியும்…….
  ஊரில் உள்ளவர்கள் இணையத்தளத்தை பார்ப்பதில்லை என்பதை வைத்து நீக்கள் எழுதுவதைப் பார்த்துக்கொண்டிருக்கு நானும் ஊரில் உள்ள வெறும் பயல்கள் போல் அல்ல……….
  உங்களால் முடிந்தால் இதை அழிக்க மட்டும் தான் முடியும் ஆனால் ????????

  • theepan:

   நிவர்சன், எதற்கெடுத்தாலும் வேட்டியை மடிச்சுக் கட்டிக்கொண்டு மல்லுக்கு நிக்க வேண்டாம். வெளிநாடுகளில் உள்ளவர்கள் சும்மா காசை அள்ளவில்லை. அவர்கள் நித்திரை கொள்ளக் கூட நேரமில்லாமல் உழைத்த காசைத் தான் இவ்வாறு செலவழிக்கிறார்கள். அவர்களும் எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்கிறார்கள். என்ன அவர்கள் பனர் வைத்தோ, இணையத்தில் விளம்பரப் படுத்தியோ எல்லாவற்றையும் செய்வதில்லை.நீர் நல்ல காரியங்கள் செய்கிறீர்,பாராட்டுக்கள்,அதற்காக மற்றவர்கள் மனம் நோக வைக்காதீர்.
   எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்.

   • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    நல்ல சாந்தமான பதில்.

Leave a Reply for theepan

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து