உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

BY வினோதினி பத்மநாதன்……   “நான் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவன்”  என்று நம்மில் சிலர்
எண்ணிக்கொண்டிருக்கின்றோம். வேறு சிலரை சுட்டிக்காட்டி “இவர்கள் தாழ்ந்த
அல்லது குறைந்த சாதியை சேர்ந்தவர்கள் “என்று கூறுகிறோம் .உண்மையில் மனிதனுடைய
வரலாற்றினை அறிந்திருந்தால் இப்படி எல்லாம் நாம் சிந்தித்துக்கொண்டிருப்பதை   பார்த்து நாமே வெட்கப்பட வேண்டி வரும் . தொடக்க காலத்தில் மனிதன் மலைகளின் மேலேயே வசித்து வந்தான்.ஏனெனில் அங்கே அவனுக்கு வேட்டையாடி உண்ண  தேவையான பறவைகளும் விலங்குகளும் மலையிலேயே நிறைய  இருந்தன. அதுமட்டுமன்றி பழங்கள்,கிழங்குகள் ,தேன் போன்ற இயற்கையின் கொடைகளும் மலைகளிலேயே அவனுக்கு சுலபமாக கிடைத்தது  .நீர் பெற்றுக்கொள்ள அருவிகளும் உறங்குவதற்கு குகைகளும் இருந்தன. ஆனாலும் அந்த வாழ்க்கைமுறை அவனுக்கு கடினமாகவே இருந்தது. காலங்கள் எப்போதும் ஒரே போன்று இருப்பதிலை .சில நேரங்களில் வேட்டையாட விலங்குகளோ, பறைவைகளோ கிடைக்காமல் போயின.அல்லது சில வலிமையான விலங்குகளுக்கு பலியாக நேர்ந்தது  . அதன் பிறகு அவன் ஆடு,மாடுகாளை பிடித்து வளர்க்க ஆரம்பித்தான் . உணவு உடை ஆகிய
இன்றியமையாத சில
தேவைகள் ஆடு மாடுகளினால் நிறைவேறக் கூடியதாய் இருந்தது. ஆடு மாடுகளை வளர்ப்பதற்காக
அவன் மலைகளிலிருந்து மேய்ச்சல் நிலங்களை  நோக்கி நகர ஆரம்பித்தான். அப்படியே எளிய
கருவிகளைக் கொண்டு நிலத்தைக் கொத்தி பயிர்களை
விளைவிக்க கற்றுக்கொண்டான். அப்படியே வேறு சிலர் கடலில் இருக்கும்
வளங்களை  கண்டு அங்கேயே கடற்கரைகளில்
குடியேறினர் .அதனால் அவர்கள் மீனவர் என அழைக்கப்பட்டனர் .இதுவே உலகில் வாழும்
மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான வரலாறு ஆனது.

 

கி.மு 10 .௦௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் வரை மனிதர் வேட்டையாடியும் ,இயற்கையின் உணவுப்பொருள்களை உண்டும்
வாழ்ந்து வந்தனர். கி .மு 7000 ஆண்டுகளிலேயே கால்நடைகளை மேய்த்து வாழத் தொடங்கினர் என்றும் ,கி.மு 3000 ஆண்டுகளின் பின்னரே பெரும்பாலானோர்
வேளாண்மை எனப்படும் விவசாயத்தில் ஈடுபடத்தொடங்கினர் என்றும் அறிஞர்கள்
கூறுகின்றனர் .

 

தமிழ் இலக்கணத்தின் வரலாற்றுக்குறிப்பின்படி மக்கள் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் ,பாலை எனப்படும் நிலங்களில் வாழ்ந்தனர்
என்று கூறப்படுகிறது. இதில் குறிஞ்சி என்பது மலை சார்ந்த இடத்தையும், முல்லை காடு சார்ந்த இடத்தையும் ,மருதம் வயல் சார்ந்த இடத்தினையும் ,நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த
இடத்தினையும் குறித்தது.பாலை குறிஞ்சியும்  முல்லையும் கோடைகாலத்தில் வாடிப்போனதால்
அவை பாலை  நிலம் என அழைக்கப்பட்டது  . குறிஞ்சியில் வசித்தவர்கள் குறவர் எனவும் ,முல்லை நிலத்தில் வசித்தவர் இடையர் அல்லது
ஆயர் எனவும், மருதநிலத்தில் வசித்தவர்கள் கடையர்,பள்ளர்,உழவர் எனவும்,நெய்தல் நிலமக்கள் மீனவர்,பரதர் எனவும் அழைக்கப்பட்டனர் .

 

இதிலே குறவர் ,இடையர்,பள்ளர் ,கடையர் என்ற சொற்கள் நாம் கவனிக்கத்தக்கது .அதாவது குன்றவர் என்ற
சொல்லே மருவி குறவர் என ஆனது.உயர்ந்த மலைக்கும் தாழ்ந்த சமவெளிக்கும்( இடையே
)இடையில் காடு இருந்ததினால்  அங்கே
வாழ்ந்தோர் இடையர் எனவும் ,குறிஞ்சி மலை நாகரீகங்களுக்குப் பின்னர் ஏற்பட்ட நாகரீகம் என்பதால்
மருத நில மக்கள் கடையர் எனவும் (கடைசியில் வந்ததால் )மலையை நோக்கிய சமவெளி
பள்ளத்தில் குடியேறிய மக்கள்  (பள்ளத்தில் வாழ்ந்ததால்)பள்ளர் எனவும் அழைக்கப்பட்டனர்.உலகம்
முழுவதும் மனித இன வரலாறு  இப்படித்தான்
உருவானது.. குறவர் ,இடையர்,பள்ளர் ,என்பவை தாழ்ந்த அல்லது இழிந்த சொற்கள் அல்ல .இவை தான் மனித இன
வரலாற்றின் மைல்கற்கள் .

 

 

இதிலே இன்னுமொரு உண்மை என்னவென்றால் இன்று உலகிலே வாழும் மனிதர்கள்
அனைவரும் இந்த குறவர்,இடையர்,பள்ளர்,மீனவர்களுக்குப் பிறந்தவர்கள் தான்.சாதிப்பிரிவினை என்பது மூடர்களினாலும்
,அயோக்கியர்களினாலும்
ஏற்படுத்தப்பட்டவையே.அப்படிப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினரை சாதி மத பேதங்களினால்
இழிவுபடுத்தியதன் பின்னணியே நம் நாடுகள் முன்னேறாமல் போனமைக்கு ஒரு பெரிய காரணமாக
இருக்கலாம் . .நாம் புலம் பெயர்ந்து வாழும் மேலைத்தேய நாடுகளில் எந்த ஒரு தொழிலும்
இழிவுபடுத்தப்படுவதில்லை .அவர்கள் உழைப்பிற்கு மரியாதை கொடுக்கக்
கற்றுக்கொண்டிருக்கின்றார்கள் .அதனால் தான் அவர்களின் நாடுகள் மாபெரும் வளர்ச்சி
பெற்றுள்ளன .குப்பை எடுப்பது,செருப்புத் தைப்பது ,உடுப்புத் துவைப்பது போன்ற வேலைகளை எல்லாம் இவர்கள் செய்யாமல் போனால்
அல்லது செய்ய மறுத்தால் நாடு என்ன ஆகும்?உண்மையில் நாம் அவர்களை பாராட்ட வேண்டும் , நன்றி சொல்ல வேண்டும் .அதை விடுத்து
அவர்களை இழிவுபடுத்துவோமானால் அது ஒரு நன்றிகெட்ட செயல்.

திருடுபவன் ,கொள்ளையடிப்பவன்,சாராயம் காய்ச்சுபவன்இவர்கள் எல்லாரும் தான் சமூகத்தில்
கேவலமானவர்கள். மீனவர் தீண்டத்தகாதவர் என்கிறோம் ,ஆனால் அவர்கள் பிடித்த மீன்களை
சாப்பிடுகிறோம்,அதேபோல தீண்டதாகாதவர்கள் துவைத்துத் தரும் ஆடையை அணிகிறோம்,அவர்கள் கட்டிய வீடுகளில் வசிக்கிறோம்
.அப்போதெல்லாம் எங்கள் தீண்டாமை எங்கே போகிறது?எதையெல்லாம் இழிந்த வேலைகள் என்று சொல்லித்
திரிந்தோமோ அதையெல்லாம்   இன்று
நாமே செய்யும்படி
காலம் மாற்றி விட்டது.

இப்போது எல்லோருமே துணி துவைக்கிறோம்,கழிப்பறைகளை சுத்தம் செய்கிறோம்,ஏன் பொழுது போக்கிற்காக மீன்களையும்
பிடிக்கிறோம்,மீன் விற்கிறோம் இந் நிலையில் நாங்கள் யாரைப் பார்த்து  நீ தீண்டத்தகாதவன் என்று சொல்ல முடியும் ?????????.
வினோதினி பத்மநாதன்

16 Responses to “சாதிகள் இல்லையடி பாப்பா !”

 • vaaliban:

  பாரதி கண்ட புதுமைப் பெண்ணே..வாழிநீ..வாழிநீ…அருமையான கருத்துக்கள்…உங்கள் கருத்துக்கள் மிகவும் சிறப்பு. காய்த்த மரம் கல்லடி படும். நல்ல செய்திகள் பல சொல்லும் போது இப்படிதான் பிரச்சனை வரும். உலகம் உண்மையை விரைவில் ஏற்காது. பரவாயில்லை. உங்கள் நோக்கம் சரி. நன்று..நன்று…உங்கள் எழுத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்காக எழுதுங்கள். குறை கூறுபவர்கள் கூறட்டும். உண்மை என்று தெரிந்தும் எற்க மறுக்கும் கோழைகள்..மா, பாரதி சொன்னதை மறக்காதீர்கள். “ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்”..உங்களுடைய இது போன்ற முயற்சிகள் தொடர என் வாழத்துகள்

 • பலெர்மோ -த -சங்கர்:

  நல்லதொரு தலைப்பு ஒன்று ஆண் யாதி ஒன்று பெண் யாதி இதுதான் உன்மெய் என்மவர்கள் யாதி என்ற பெயரில் முடபிக்கை வழக்கபண்டுள்ளது வெள்ளைகாரரே பார்த்து நாங்கள் திருத்தவேணும்

 • vinothiny pathmanathan:

  இந்த விடயத்திற்கு கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. என்ன இந்தக் கட்டுரையை நான் எழுதிய நோக்கை ஒரு சிறிதளவேனும் எட்டிப்பிடித்தேனா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்வேன். இந்த கட்டுரையை வாசித்தஒரு நபர் என்னை நேரிலே கண்ட போது என்ன நீ சாதிகளை பற்றி எழுதியிருக்கிறாய் ? யாரிட்டையாவது அடி வாங்கப் போகிறாய் .முடிந்தால் இதை இணையத்தில் இருந்து அகற்றி விடு என்று கூறினார் .உண்மையில் அந்த நபர் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் மிகவும் அக்கறை கொண்டவர். என்ன என்னுடைய கட்டுரை முழுவதையும் வாசித்த பின் இப்படி ஒரு கருத்தை அவர் சொன்னது ,நான் சொல்ல வந்த விடயத்தை அவர் எவ்வளவு தூரம் விளங்கிக்கொண்டிருக்கின்றார்/புரிந்துகொண்டிருக்கிறார்
  என்பதை பார்த்த போது எனக்கு பெரிய இக்கட்டான நிலைமை .அவருக்கு இது பற்றிய விளக்கத்தை நான் கொடுக்க முற்பட்ட போது என் கருத்தை கேட்காமல் தன் கருத்தையே வலியுறுத்திக்கொண்டிருந்தார்.கருத்து சரியோ பிழையோ அந்த சாதி என்ற பெயரை உச்சரிப்பதையே எம்மவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையெனில் எப்படி இது சாத்தியமாகும்? இது பற்றி மேற்கொண்டு நான் எழுத முற்பட்ட வேளையில் , இன்னொரு நண்பரின் கருத்தும் கிட்டத்தட்ட இதுபோலவே இருந்தது. சோ இனி நான் இந்த தலைப்பில் தொடர்ந்து எழுத முயற்சிக்க மாட்டேன்.வேந்தன் அண்ணா உங்கள் கருத்துப்படி கருத்துக்களத்திற்கு இந்த தலைப்பு விடப்பட்டால் பல வித்தியாசமான கருத்துக்கள் உள்வாங்கப்படலாம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை.
  அது இணையத்தின் முடிவுக்கே விட்டுவிடுவோம்.

  • வினோதினியின் நிலையை நோக்கும்போள் பரிதாபப்படுவதை தவிர வேறொன்றும் இல்லை.ஒரு இளைஞியாய் புலம் பெயர் நாடொன்றில் இருந்துகொண்டு உண்பள்ளிபடிப்பு மற்று உன் வாழ்வியல் அனுபவங்களை
   யான் பெற்ற இன்பம் இவ்வய்யகம் பெற என்பதற்கிணங்க உன் அற்புத எழுத்துக்களால் செய்து கொண்டிருக்கிறாய் .ஆனாலும் இந்த பாழ் பட்ட சமூகம் – உள்ளதை சொன்னால் உடம்பெல்லாம் புண்ணாகும் – என்பதன் வெளிப்பாடுகள் தான் பிள்ளை உதுகள் .என்னைபொறுத்த வரை பாரதி கண்ட புதுமை பெண்களில் ஒருவராகவே உன்னை காண்கிறேன் .இது வெறும் புளுகு இல்லை பிள்ளை .ஆரம்ப கட்டத்தில் உன் எழுத்துக்களை
   கண்டு வியப்புற்று இதார் இந்த வினோதினி என்றதை கண்டு பிடிச்சு
   உன் பெற்றோரின் தொலை பேசி இலக்கத்தை அறிந்து அவர்களுடன் தொடர்பு கொண்டு நான் அவர்களுக்கு கூறிய வார்த்தைகளில் ஒரு சில இதோ .உங்கடை மேளும் நானும் இப்ப நண்பர்கள் .அவள் ஒரு பயங்கர
   அறிவாளி .எனவே மன சோர்வை மற. வாசர்களின் கேள்வி (demand ) இற்கு
   ஏற்றவாறு வினியோகி (supply ).commerce பாடத்திலை படிச்சிருப்பாய் .எடுத்து விடு சினிமா சமாச்சாரங்கள் ,மற்றும் நாங்கள் பரம்பரை பரம்பரையாக
   சவங்களை தகனம் செய்த சம்பில் துறை சுடலை இலை சம்புனதீஸ்வரர்
   ஆலயம் .நாங்கள் ஜம்புகோள பட்டினம் என்கிறோம் .பக்கத்திலை தம்ப
   கொல பட்டுன .அங்க போட் பலகை சிங்களத்தில் மட்டுமே போட்டிருக்கிறாங்கள் .சிங்களம் வாசிக்க தெரிஞ்ச சில பண்டிதர்கள் ,சமூக சேவகர்கள் சிலர் இருந்தாலும் அவைக்கெல்லாம் இதுகளை பற்றி கதைக்க நேரம் இருக்காது .எங்கடை பணிப்புலத்துக்கு ஒரு போட் பலகை பானிபுலம்
   எண்டு போட்டிருக்கிறாங்கள் .எனவே கவலையை விடு பிள்ளை .முன்னே போ .இன்னும் கொஞ்ச கோயிலுகள் மிச்சம் இருக்குதடி பிள்ளை .பெரிய கும்பிக்கு அங்காலை இருக்கிற காட்டு வைரவர் கோயில் .மற்றது மழுவை
   சுடலையை கொஞ்சம் தள்ளி போக வரும் ஐயனார் கோயில் .கட்டுவோம் சுத்து மதில் ,பிறகு ஒரு மடப்பள்ளி ,ஸ்தூபி ,கோபுரம் ,கும்பாபிஷேகம்
   அத்தோடு ஒரு பிரம குரு.இன்னும் கன இடங்கள் உண்டு .

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   உங்கள் குடும்பத்தில் அக்கறையும் மரியாதையும் கொண்டவர் உங்களிடம் காளானில் அட்டை ஏறி திரிவது காளான் சாப்பிடுவதை நிறுத்து என்றால் நீங்கள் நிறுத்த தயாரா?
   மரியாதை கொடுப்பவர் உங்களின் தனித்துவத்துக்கும், உங்கள் ஆக்கங்களுக்கும் மரியாதை கொடுப்பவராக இருக்கவேண்டும். அத்துடன் அவர் உங்கள் ஆக்கங்களை நோக்கும் முறை (interpretation) வேறு கோணமாகவும் இருக்கலாம், அதனால் அது திட்டவட்டமாக தவறு என்று ஒரு கோணத்தில் இருந்து மட்டும் முடிவெடுக்க முடியாது.

   ஆரோக்கிய விடயங்களை தொடர்ந்து எழுதுங்கள். ஆர்வம் உள்ளவர்கள் வாசிக்கட்டும், இல்லாதவர்கள் அதை தட்டிவிட்டு திருவிழா படங்களை பார்த்துவிட்டு திருப்தியடையட்டும்.

   ஒருவரையும் குறை கூறவில்லை. எமது வளர்ச்சியை குறைப்பதும் இப்படியான சிறு காரணங்களே. ஊரவர்களில் ஒரு பெண்ணாக இருந்து முன்வந்து நல்ல விடயங்களை எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். அதை தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் மகத்தான தனித்துவத்தை தளரவிடுவதற்க்கு இந்த காரணம் தகுதி இல்லாததே என்பது என் கருத்து.

   🙂 🙂 🙂 🙂
   நீங்கள் கலந்து கொண்ட சடங்கில் உங்களுக்கு சங்கடமாக இது இருந்திருக்கிறது என்பதை நீங்கள் கருத்து எழுதின நேரத்தை வைத்து உணரமுடிகிறது.
   🙂 🙂 🙂 🙂

  • சச்சி:

   உலக மகா உண்மையை தெரிந்தும் தெரியாமலும் இருந்தவர்களுக்கு இதுதான் உண்மை என்று கூறிய உண்மைவாதியே,ஒரு நல்ல விடயத்தை சொல்ல வரும் போது தீயனவற்றைபற்றியும் கூறித்தான் ஆகவேண்டும்.உதாரணத்திற்கு சினிமாப்படங்களில் கதாநாயகன் நல்லவனாகத்தான் இருப்பான்,கதையில் அவனை நல்லவனாக காட்டவேண்டும் என்றால் வில்லன் என்ற தீய பாத்திரத்தையும் அதற்குள் புகுத்தியே ஆகவேண்டும்.அப்படி செய்தால்தான் கதாநாயகனின் நற் செயல்களை வெளிக்காட்ட முடியும்.அதைத்தான் தாங்கள் செய்திருக்கிறீர்கள். அதை உங்கள் குடும்ப நண்பர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். அவருடைய சில ஆலோசனைகள் தங்களின் சிறகுகளை உடைத்துவிடும் என்று எனக்கு தோன்றுகிறது.அவர் இனி தங்களை ஊக்குவிக்கும் ஏணியாக இருக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • theepan:

   “சாதிகள் இல்லையடி பாப்பா”.
   இதில் என்ன மாற்றுக் கருத்து இருக்க முடியும்?. சாதிகள் இருந்த வரை நாம் என்ன சாதித்தோம்?. மற்றச் சாதிக் காரன் தன்னை விட மேலே போய்விடக் கூடாது என்று தானே காட்டிக் கொடுத்து, காட்டிக் கொடுத்து, தமிழன் இன்று இந்த நிலையில் இருக்கிறான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே நாகரிகம்?? ?? அடைந்த நாம் இன்னும் ஏன் இந்த நிலையிலிருக்கிறோம்?.

   ஆயிரச் சொச்சம் வெள்ளைக் காரனால் லட்சக் கணக்கான எம்மை ஆள முடிந்தது எவ்வாறு?. ஏனென்றால் நம்மிடம் இருந்த பிரிவினைகள். ஊர் ,சாதி, குடும்பம்,குலம், கோத்திரம் ……அப்பப்பா !! எத்தனை பிரிவுகள். மேலை நாடுகளில் குடியேறிய பின்பும் திருந்தாத அல……குகள் இப்பவும் உள்ளது. எங்கட அடுத்த தலைமுறை, தமிழையே மறந்து கொண்டு இருக்குதுகள். வெள்ளை , கறுப்பு ,சப்பட்டை என்று கலியாணம் கட்டிக் கொண்டு போகுதுகள்.
   உங்கள் எழுத்துகளை பொறுத்துக் கொள்ள முடியாத ஏதோ ஒரு ஓ….. ஊளையிடுவதை பார்த்து உங்கள் எழுத்துகளின் வீச்சைக் குறைக்க வேண்டாம் .

   • சச்சி:

    வெள்ளைக்காரனுக்கு விட்டுக்கொடுத்தது எங்கள் அறியாமையும் மூட நப்பிக்கயையும் என்பவற்றையும் சேர்த்துக்கொள்ளவும் தீபன்.

 • Ratnarajah:

  நல்ல பல தகவல்கள் . இன்னும் சிறிது ஆழமாகச் சென்று இந்துசமயத்தில் எப்படி
  சாதிப்பாகுபாடு வந்தது என்பதையும் சிறிது விளக்கி இருக்கலாம்.கட்டுரைக்கு நன்றிகள்.

 • .அற்புதன்:

  மிகவும் வரவேர்க்கதக்கிய விடயங்கள் நானும் இதில் 100% உன்மையாக உள்ளேன் சொல்வதற்கும் கேட்பதற்கும் இதுசரியாக இருக்கலாம் ஆனால் அவர்ரவர் வாழ்க்கையில் வரும்போது ஏதோ ஒரு முனையில் உறுத்திக்கொண்டே இருக்கும் நாங்கள் இதை ஏற்றுக்கொண்டாலும் சில பட்சோந்தி வேலை பார்க்கும் சமுதாயத்தினர் இதை இடியப்ப சிக்கல்லாக்கி விடுவார்கள் இதை பற்றி நிறைய சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன் நேரம் பற்றாக்குறை நன்றி

 • உங்கள் கருத்துக்கள் நன்று. இன்னும் இந்த விடயம் தொடர்பாக நிறைய எழுதலாம். இதைக் கருத்துக் களத்தில் பதிவு செய்து நிறையக் கருத்துக்களை உள்வாங்கலாம். தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

 • theepan:

  மிக நல்ல விடயங்கள். உங்கள் கருத்துடன் 100 % உடன்படுகிறேன்.
  நன்றி

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  என் சாதிப்பெயரை இந்த கட்டுரையில் குறிப்பிட தவறிவிட்டீர்கள்.
  குளத்தில் இருந்து வந்தவர்கள் குள்ளர்களா அல்லது கள்ளர்களா? 🙂 🙂

  நல்ல கட்டுரை, ஆனால் பெயர்கள் குறிப்பிட்டது சர்ச்சையை உருவாக்கலாம்.

  • அருமை இலும் அருமையான கருத்துக்கள் வினோதினி .ஆனால் என் கேள்வி என்னவென்றால் உங்கள் வேதம் ,உபநிடதம் ,மனுநீதி சொல்லும்
   அந்தணர்(வேதியர்) சூத்திரரர் ,வைசிகர் என்பவற்றிற்கான விளக்கனகளையும் தந்தால் வலு விசேஷமாக இருக்கும் பிள்ளை ?

   • உந்த கருத்தை ஒட்டி எழிலை எழுவதில்லை ,எழுநூறு பக்கங்களும் எழுதி
    தள்ளலாம் .எங்களை லூசு பட்டம் கட்டி போடுவங்கள் என்பதால் நிப்பட்டுகிறோம் .சரியான ஆரோக்கியமான கருத்துக்களை எதிர்பார்த்க்கிறோம் . நன்றி .

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து