ஆலயங்களில் நாம் கடவுளைக் காணும் மார்க்கம் என்ன.? கருங்கல்லில் நாம் கடவுளைக் காணலாமா..? என்று இன்றைய இளைஞர்கள் கேட்கிறார்கள். சடப் பொருட்களையெல்லாம் மனிதன் தனது சக்தியைக் கொண்டு பாட, ஆட, ஓட வைக்கின்றானே. சடப் பொருட்களில் இந்த நிலை சாத்தியமாக இருக்கும்போது ஏன் மனிதன் சடப்பொருளான கல்லில் மட்டும் ஒருசக்தியை காண முடியாது என்று கேட்க விரும்புகிறேன். கோவில் வழிபாட்டில் நமக்கு இறுக்கமான நம்பிக்கை வேண்டும். அது மிக முக்கியமானதாகும். பண்பட்ட சைவ நெறியை அனைவரும் போற்றிக் காப்பாற்ற வேண்டும். இது எனது வேண்டுகோளாகும். இன்றைய விஞ்ஞானம் இருக்கிறதே அது கடவுள் தன்மைக்கும் சைவ சித்தாந்தத்துக்கும் மாறுபட்டதல்ல. ஆகர்ண சக்தி இருக்கிறதே அதைக் கண்டு பிடித்தவன் விஞ்ஞானி. நீரில் உள்ள மின்சாரத்தை விஞ்ஞானி காண்கின்றான். நீரில் மின்சாரத்தை பொருத்திய ஒருவரின் மூலதனம்தான் அந்த விஞ்ஞானியின் மூளைக்குப் புலப்பட்டது.