உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இந்த ஆண்டு 1ம் திகதி யூன் மாதம் முதலாக மொழி பெயர்ப்பாளர் தொடர்பாக புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்த துண்டுப்பிரசுரம் தற்போது வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கில் ஏழு வருடங்களுக்கு மேலாக வாழும் ஒருவர் வைத்தியசாலைக்கு மொழி பெயர்ப்பாளருடன் வரவேண்டும் என்றால் ஒவ்வொரு தடவையும் 150 குறோணர்களை செலுத்த வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. அதேவேளை சில சந்தர்ப்பங்களக்கு இது பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தகைய தருணங்களில் கட்டணம் அறவிடலாமா இல்லையா என்பதை வைத்தியரே முடிவு செய்வார். உதாரணமாக :

1. சுகயீனம் காரணமாக டேனிஸ் மொழியை இழந்து, அல்லது பேச முடியாமல் போனால், வலது குறைவு காரணமாக மொழியைப் பாவிக்க இயலாமல் போனால்..
2. ஒரு பிள்ளையின் சுகயீனத்துடன் பெற்றோர் தொடர்புபட்டிருந்தால்.. அத்தருணம் மொழி பெயர்ப்பாளர் வேண்டியிருந்தால்..
3. பிள்ளைகள் பெற்றோர் இல்லாமல் வைத்தியத்திற்கு வந்தால் அத்தருணத்தில்..
4. ஜேர்மனிய மொழி பேசும் மக்களுக்கு உதவி தேவையானால் அதற்கும் விலக்கு உண்டு.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து