உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சீனாவிற்குள் பலவந்தமாக அபின் வணிகச் சந்தையை திறப்பதற்காக பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சீனாவுக்கு எதிரானப் போரில் இறங்கியது. இதுவே முதலாம் அபின் போர் என்றழைக்கப்படுகின்றது. உலகில் போதைப்பொருள் வணிகத்திற்கான முதல் போரும் இதுவே ஆகும்

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலம். பிரித்தானிய வணிக நிறுவனமான பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சீனாவுடனான வணிகத் தொடர்பைக் கொண்டிருந்தது. அதாவது தென்சீனப்பகுதியான குவாங்தோவ் மகாணத்தில் அமைந்திருந்த கெண்டன் துறைமுகத்தூடாகவே தமது வணிகத்தொடர்பைக் கொண்டிருந்தது. சீனாவில் இருந்து பெருமளவிலான தேயிலை ஏற்றுமதியை செய்து வந்தது. அதற்கு ஈடாக கைக்கடிகாரம், மணிக்கூடு போன்ற ஆடம்பரப் பொருற்களை பிரித்தானியா சீனாவிற்குள் இறக்குமதி செய்தது. இந்த வணிகத்தில் சீனாவின் கைமேலோங்கி இருந்தது. சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யும் தேயிலையின் பெருமதிக்கு ஏற்றவாறு பிரித்தானியாவின் பொருற்களை சீனாவில் இறக்குமதி செய்ய முடியாத நிலை தோன்றியது.

எனவே தேயிலையைச் சீனாவிடம் இருந்து கடன் வாங்கும் நிலை பிரித்தானியாவிற்கு தோன்றியது. இதனை ஈடு செய்யும் முகமாக இந்தி்யாவில் வங்காளப் பகுதிகளில் மேற்கொண்டு வந்த ஒரு வகைப் போதைப் பொருளான அபினை சட்டவிரோதமான முறையில் சீனாவில் இறக்குமதி செய்தது. இந்த சட்டவிரோதமான கடத்தல் ஊடான போதைப்பொருள் வணிகத்தில் பிரித்தானியா அதிக இலாபம் ஈட்டத்தொடங்கியது. இதனால் சீனப் பொதுமக்கள் இப்போதைப் பொருளுக்கு அடிமையானதுடன் பல சமூக சீர்கேடுகளும் எழத்தொடங்கின.

அப்பொழுது சீனாவில் குவிங் வம்ச பேரரசு ஆட்சியில் இருந்தது. இத்தகைய சட்டவிரோதமானதும் பொது மக்களுக்கும் தீங்கானதுமான பிரித்தானியாவின் கல்லக்கடத்தல் போதைப்பொருள் வணிகத்தை குவிங் சீனப்பேரரசு அதிகார பூர்வமாகத் தடைச்செய்தது. இருப்பினும் குவிங் பேரரசின் தலமையகம் பெய்ஜிங்கில் இருந்தது. பெய்ஜிங்கில் இருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் தென்சீன நிலப்பரப்பான குவாங்தோவ் மகாணத்தில் நடைப்பெற்று வந்த இச்சட்டவிரோதப் போதைப் பொருள் வணிகத்தை குவிங் பேரரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

அப்பொழுது லின் சீசு (Lin Ze-xu) என்பவர் குவிங் பேரரசின் குவங்தோவ் மகாணத்தின் சிறப்பு ஆளுநராகப் (special commissioner to Guangzhou) பதவியேற்றார். இவர் சீனாவிற்குள் சட்டவிரோதமாக நடைப்பெற்றுவரும் போதைப்பொருள் வணிககத்தை தடுத்து நிறுத்துவதற்காக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதேவேளை பிரித்தானியா தமது நாட்டிற்குள் போதைப்பொருளான அபின் புகைத்தலை தடைச் செய்திருந்தது. பிரித்தானியா தமது நாட்டில் அபின் போதைப்பொருள் பாவனையை தடைச்செய்துக்கொண்டு, அதனை சீனாவிற்குள் சட்டவிரோதமாக விணியோகித்து அப்பாவி பொதுமக்கள் அழிவுக்குள்ளாவதைக் கண்டு லின் சீசு ஆத்திரமுற்றார். இந்தச் சட்டவிரோத அபின் வணிகத்தை உடனடியாக நிறுத்தும்படி விக்டோறியா மகாராணிக்கு லின் சீசு எழுத்து மூலமாக அறிவித்தார்.[10] குவிங் வம்ச சீனப்பேரரசும் மீண்டும் மீண்டும் தடை உத்தரவுகலை பிரப்பித்துக்கொண்டே இருந்தது. ஆனால், இவை எவற்றையும் பிரித்தானியா ஒரு பொருட்டாகக்கொள்ளவில்லை. சீனப்பேரரசின் தடை உத்தரவுகளை மீறி தொடர்ந்து போதைப்பொருள் இறக்குமதியை தொடர்ந்த வண்ணமே இருந்தது. அதேவேளை குவாங்தோவ் சிறப்பு ஆளுநரான லின் சீசு இப்போதைப்பொருள் புகைப்போருக்கும், விற்பனைச் செய்வோருக்கும் எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்கி தண்டித்தார். இப்போதைப்பொருள் ஏற்படுத்தும் வன்மையான தாக்கத்தினையும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் மக்களுக்கு அறிவித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இவை எதுவும் நடைமுறைச் சாத்தியமாகவில்லை. பிரித்தானியா போதைப்பொருள் கல்லக்கடத்தல் வணிகம் மேலும் மேலோங்கிக்கொண்டேப் போனது. இதனால் லின் சீசு வின் நடவடிக்கைகளும் கடுமையானது. குவாங்தொவ் மகாணத்தில் களஞ்சியப்படுத்திருந்த அபின்களை எல்லாம் தேடி தேடி அழிக்கத் தொடங்கினார். அபின் வணிகத்தில் ஈடுப்பட்டோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அபின்கள் ஏற்றி வந்த கப்பல்களும் தாக்கப்பட்டது. அத்துடன் வெளிநாட்டு வணிகம் அனைத்தையும் இடைநிறுத்தினார்.

இதற்கு எதிராகவும் சீனாவிற்குள் பலவந்தமாக அபின் வணிகச் சந்தையை திறப்பதற்காகவும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சீனாவுக்கு எதிரானப் போரில் இறங்கியது. இதுவே முதலாம் அபின் போர் என்றழைக்கப்படுகின்றது. உலகில் போதைப்பொருள் வணிகத்திற்கான முதல் போரும் இதுவே ஆகும்.

1984 இல் சீனாவும் பிரித்தானியாவும் ஏற்படுத்திக் கொண்ட ஓர் உடன்படிக்கையின் படி 1997 யூலை 1 ஆம் நாள் ஹொங்கொங் சீனாவிடம் கையளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. ஆனால் 1997 ஆம் ஆண்டு ஹொங்கொங் சீனாவிடம் மீள்கையளிக்கப்பட்டாலும் பிரித்தானியா மற்றும் சீனா இரண்டு நாடுகளும் கைசாத்திடப்பட்ட உடன்படிக்கையின் படி 1997 ஆம் ஆண்டில் இருந்து 2047ஆம் வரை பிரித்தானிய ஆட்சி அமைப்புக்கு அமைவான முதலாளித்துவ கொள்கை நடைமுறையில் இருக்கும் என்பதும் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

3 Responses to “போதைப்பொருள் வணிகத்தில் பிரபலமாக இருந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி”

 • நந்தகுமார்:

  இவர்கள் செய்த ஊர் கொள்ளைகளை விட எமது ஊரவர்கள் ஒரு தூசுக்கும். செய்யவில்லை. ஆனால் எங்களுக்கு எங்கள் ஊர் பெயர் சொல்ல பயம். எமது கிராமத்து மொழி பற்றி பேச பயம். எவ்வளவு பெரிய அறியாமை—–

 • theepan:

  நந்தகுமார், நன்றிகள். சுவாரசியமான விடயங்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.

  • பலெர்மோ த .சங்கர்:

   லேற்ற வத்தலும் சுவாரசியமான விடயங்கள்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து