உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சோழிங்கநல்லூர் புதிய ராஜீவ்காந்தி சாலையில் ஆர்க்கிட் மருந்து நிறுவனத்தின் ஆராய்ச்சி நிலையம் உள்ளது.
2 மாடி கொண்ட இந்த நிலையத்தில் கீழ்த் தளத்தில் இன்று காலை 7 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதைக் கண்ட காவலாளி தீ அணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் தீ மளமள வென பரவி 2 தளங்களிலும் பற்றி எரிந்தது.

திருவான்மியூர், நீலாங்கரை, சிறுசேரி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.2 மணி நேரத்திற்கு மேலாக போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. எங்கும் புகை மூட்டம் சூழ்ந்தது.

இந்த ஆராய்ச்சி நிலையத்தில் விலை உயர்ந்த ஆய்வு உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் இருந்தன. இவை அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாயின. இதன் சேத மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது.தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

இது குறித்து செம்மஞ்சேரி பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அடையாறு கமிஷனர் சுதாகர், துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர். தீ விபத்து நடந்த போது கட்டிடத்துக்குள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து