உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

தற்போது ஆட்சிக்கு வரும் டென்மார்க்கின் புதிய அரசாங்கம்பற்றி பொது மக்களிடையே என்ன கருத்து நிலவுகிறது என்பதே இன்றைய கேள்வியாகும். டென்மார்க்கில் ஆட்சி மாறிவிட்டது ஆனால் மற்றைய எதுவுமே மாறவில்லை பழைய வென்ஸ்ர ஆட்சியே தொடர்கிறது என்று மக்கள் கேலியாக பேசுதை சர்வ சாதாரணமாகக் கேட்கமுடிகிறது. தற்போதய அரசு 24 வயது திருமணச் சட்டத்தை நீக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது. வெளிநாட்டவருக்கு எதிராக உள்ள சட்டங்களில் ஒரு அடையாளச் சின்னமாக இந்தச் சட்டம் இருக்கிறது. இதை விலத்திவிட்டால் எதுவும் இல்லாத வெற்றிடம் ஏற்பட்டுவிடும் என்று புதிய அரசு அஞ்சுகிறது. இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்ற றடிகல வென்ஸ்ரவின் கொள்கை ஏற்கப்படவில்லை. ஆனால் றடிகல வென்ஸ்ரவின் பொருளாதாரக் கொள்கைகள் பல ஏற்கப்பட்டுள்ளன. இதன்படி நிலமையை தொகுத்துப் பார்த்தால் றடிகல வெனஸ்ர மூலம் வென்ஸ்ர அரசின் பொருளாதார கொள்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. சோசல்டெமக்கிரட்டி, எஸ்.எப் மூலமாக டேனிஸ் மக்கள் கட்சியின் வெளிநாட்டவருக்கு எதிரான கொள்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் சிவப்பு நிறத்தில் வென்ஸ்ர ஆட்சி வந்துள்ளது. இந்த ஏமாற்றமான ஆட்சியைவிட பழைய பிரதமரே ஆட்சியில் இருந்திருந்தால் தேவையில்லையே என்ற கருத்தும் பலர் மனதில் முளைவிட ஆரம்பித்துள்ளது. அதேவேளை மோண்ஸ் லுக்கரொப்ற் இன்று கூடிய பாராளுமன்றில் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இவரை எதிர்த்து எவரும் போட்டியிடவில்லை. அதே நேரம் நாளை வெள்ளி 13.00 மணிக்கு பாராளுமன்றில் ஆட்சி மாற்றம் உறுதி செய்யப்பட வேண்டும்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து