உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பண் கலை பண்பாட்டுக் கழகம் – கனடா 09.10.2011 அன்று நடாத்திய வாணி விழா; கலைமகளின் அருள் பெற்ற நிகழ்வாகதரமான பல கலை நிகழ்ச்சிகளுடன் மண்டபம் நிறைந்த எம்மூர் மக்களின் மனதைக் கவர்ந்த நிகழ்வாக இனிதே நிறைவு பெற்றது.திரு. சுப்பிரமணியம் சிவகுமார் அவர்களால் லைவாணி – பூஜை நிகழ்த்தப்பெற்றதுடன்,பண் கலை பண்பாட்டுக் கழக இசைக் குழுவினரால் சரஸ்வதி தோத்திரம் (பஜனை) பாடப் பெற்று பூஜை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து அண்மையில் எம்மை விட்டுப் பிரிந்த எம் கழகத்தின் ஆரம்ப கர்த்தா அமரர். சங்கர் அவர்கள் நினைவாக ஒரு நிமிட மௌன சஞ்சலி நிகழ்வுற்றதுஇவ் விழாவின் கலை நிகழ்ச்சிகளை இளைப்பாறிய பொலிஸ் அதிகாரி திரு. நாகலிங்கம் கனகரத்தினம் தம்பதியினர் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர்.இவ் விழாவின் பிரதம விருந்தினராக அண்மையில் கனடாவிற்கு விருந்தினராக வருகை தந்த எம்மூர் சமுகத் தொண்டனும், பிரபல சட்டத்தரணியும், சமூக சீர்திருத்த வாதியுமாகிய சோ. தேவராசா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற எம்மூர் சிறியோர், இளையோரால் பல தரமான கலை நிகழ்ச்சிகள் அங்கு வருகை தந்திருந்த மண்டபம் நிறைந்த மக்கள் அனைவரினது மனதை ஈர்ந்து கொண்டதுடன் வழங்கப் பெற்ற சிற்றூண்டிகள் விழாவிற்கு மேலும் மெருகூட்டியது

நன்றி

கனடா பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்திய வாணி விழாவைச் சிறப்பித்த எங்கள் ஊர்ப் பெருமக்கள், நண்பர்கள், தாங்களாக முன்வந்து தம் முழுத்திறமைகளையும் வெளிப்படுத்தி சிறப்பான தரமான நிகழ்ச்சிகளைத் படைத்து, விழாவிற்கு வருகை தந்தோரை மெய்மறக்கச் செய்த இளையோருக்கும், தமிழ்ப் பேச்சுப் போட்டிக்கான பரிசில்களை வழங்கிய அமரர். முருகேசு விருத்தாசலம் குடும்பத்தினருக்கும், அமரர் . வயித்திலிங்கம் சுப்பிரமணியம் குடும்பத்தினருக்கும், தாமாகவே முன்வந்து தரமான ஒலிப் பதிவுகளை வழங்கி விழாவைச் சிறப்பித்த ராகவன் அவர்கட்கும், தற்கால தொழில் நுட்பத்துடன் ஒளிப்பதிவுகளை மேற்கொண்ட “அபிநயா வீடியோ” அண்ணண் ஆனந்தன் அவர்கட்கும், எமது கழகத்தின் மறைந்த செயளாளர் சங்கர் அண்ணா அவர்களின் நினைவாக (மண்டப வாடகையின் ஒரு பகுதியை) மண்டப வாடகையை உவந்தளித்த அன்னாரின் பெற்றோருக்கும், அமரர் சங்கரின் BANNER ஐ தயாரித்து அன்பளிப்பாக தந்துதவிய ஜஸ்மின் – பாலா (NEW JASMIN PARTY HALL) அவர்கட்கும், விழாவிற்கான உணவுகளை தயாரிப்பதற்கு இடவசதி, பாத்திரங்கள் என்பனவற்றை தந்துதவிய நல் உள்ளங்கள் சிவானந்தம்-ராணி குடும்பத்தினருக்கும், இவ் விழாபற்றிய விபரங்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவித்த எம்மூர் இணையத் தளங்களான பணிப்புலம்.கொம்,பணிப்புலம்.நெற், கலட்டி.கொம், பண்கொம்.நெற், காலையடி.நெற், சாந்தை.நெற் ஆகியவற்றிக்கும். எமது அழைப்பை ஏற்று இவ் விழாவிற்கு கௌரவ விருந்தினராக வருகை தந்து சிறப்பித்த சோ.தேவராசா அவர்கட்கும், இறுதிவரை நின்று மண்டபத்தை துப்பரவு செய்த எங்கள் அன்புச் சகோதரர்களுக்கும், பல சிரமங்களின் மத்தியில் தளராது தங்களின் கடுமையான உழைப்பைக் கொடுத்த கழக நிர்வாகிகள், கழக நண்பர்கள் எல்லோருக்கும் பண்கலை பண்பாட்டுக்கழகம் நன்றிகளைக் கூறி தலை வணங்குகின்றது.
பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா

19 Responses to “பண் கலை பண்பாட்டுக் கழக வாணி விழா – 2011”

 • அழகரத்தினம் ப‍கீரதன்:

  இந்த விழா கனடாவில் மிகவும் சிறப்பாக நிகழ்ந்த த‍தில் எமக்கு மகிழ்ச்சியும் பெருமிதமுமாக இருக்கின்றது.எம்மவர்கள் கனடாவில் சிறப்பாக வாழ்வதும் அவர்களது கலைத்துவ வாழ்வும் எமக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கின்றது. எமது ஊரில் இத்தகைய விழாக்கள் நடாத்துவதற்கு கனடாவிலுள்ளவர்கள் எமக்கும் பங்களிப்பு செய்துள்ளார்கள். அவர்களுக்கும் நன்றிகள். ஆயினும் சிறப்பான முறையில் மன்றத்தில் இத்தகைய விழாக்களை நடாத்துவதற்கு இளைஞர்களும் மாணாக்கர்களும் ஒத்துழைப்பு வழங்கினால் சிறப்பாக இயங்கமுடியும். ஊரில் இளைஞர்கள் கற்றறிந்தோரின் ஆலோசனைகளை மதிக்காமல் தம்போக்கில் ஈடுபடுவதும் மிகுந்த வேதனைக்குரியது. நான‍றிந்த வரையில் கனடா பண் கலை பண்பாட்டு கழகம் நேரடியாகவும் அதன் மன்ற உறுப்பினர்கள் மூலமாகவும் கிடைத்த உதவிகள் போல் வேறுநாட்டவர்கள் ஊருக்கு சரியான முறையில் வழங்கவில்லை. ஆயினும் அதனை கொண்டு நடாத்துவதற்கு இங்கு அந்த நேரம் யுத்த சூழலில் போதுமான ஆட்கள் இல்லை. ஓரளவுக்கு கனடாவின் உதவியுடன் மன்றம் இதனை செய்த‍ து. நாம் வேதனைப்படுவது ஊரில் இவ்வாறான விழாவை நடாத்திட இளைஞர் சமூகம் நல்லவகையில் உருவாகவில்லை என்பதுதான். மக்கள் அரசியல் ரீதியில் தெளிவுபெறாமல் புரட்சிகரமான மாற்றங்கள் சாத்தியமில்லை. அரசியல் ரீதியில் தெளிவுபெறாத தற்கு சர்வதேச ரீதியிலான அழுத்தங்களும் காரணமாக இருக்கின்றன. மூன்றாமுலக நாடுகளில் சோசலிச மாற்றம் ஏற்படாமல் மக்களை கையேந்த வைப்பதில் அர்த்தமில்லை. அவர்கள் எப்போதும் கையேந்திக்கொண்டே இருப்பார்கள். ஆக மொத்தத்தில் மாற்றம் என்பது மக்கள் சார்ந்தாக இருக்கும் போதே மாற்றம் சமூக நோக்குடையதாக இருக்கும். நாமும் அந்த நேரம் கனடாவுக்கோ டென்மார்க்குக்கோ இடம் பெயர்ந்திருந்தால் நாம் சிறந்த வாழ்வை பெற்றிருப்போம் என்பதில் ஐயமில்லை, இத்தகைய ஒன்றுகூடல்களை இணைய மூலம் தரிசிப்பதில் அகமகிழ்வடைகின்றோம்.

 • பண்கலை பண்பாட்டுக் கழகம் ஊருக்கு ஒன்று செ’ய்யவில்லை என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது.
  1. முதலில் ஊரில் மரண ஊர்வலத்திற்கு மையவண்டி உருவாக்கத்திற்கு உதவியது.
  2. பள்ளி ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருவதற்கு சிக்கல்கள் ஏற்பட்டு மாணவர்கள் கலவி பாதிக்கப்பட்ட போது தனி நிலைக் கல்வியை ஆரம்பிக்க உதவியது.
  மன்றத்தின் தேவைகள் பணிப்புலம்சன சமூக நிலையத் தேவைகள் போன்றவற்றிற்கு உதவிகள் தேவைப்படும் போது அவ்வப் போது உதவிகளை பண்கலை பண்பாட்டுக் கழகம் செய்தது.
  பண்கலை பண்பாட்டுக் கழகத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்படும் பண் ஒளி நூலில் ஆண்டு தோறும் பண் கலை பண்பாட்டுக் கழகத்தினால் அந்தந்த ஆண்டு ஆற்றிய பணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் அவற்றைப் படித்தால் இந்த விடயங்கள் தெளிவாகும்.
  கண்ணால் காண்பதுவும் பொய். காதால் கேட்பதுவும் பொய். தீர ஆராய்ந்து அறிவதே மேல்.

  வேந்தன்

  • நந்தன்:

   இக் கழகம் எந்தக் காலப்பகுதியில் இந்த விடயங்களை செய்தது என்று கூற முடியுமா… நன்றி…

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   வேந்தன் ஐயா,
   நன்றி இரண்டு செயல்களையும் அறிவித்ததற்கு. எனது கூற்றான ´எதையும் செய்திருக்கவில்லை´ என்பதை நான் வாபஸ் வாங்கிறேன் – என்னை மன்னிக்கவும்.
   நீங்கள் குறிப்பிட்ட இரண்டும் போராட்ட சூழலில் செய்யப்பட்டவை, அதில் முதலாவது ஊரில் ஆண்கள் குறைவான காலகட்டத்தில் பெரும் உதவியாக இருந்ததை நான் அறிந்திருக்கிறேன். ஊரில் உள்ளவர்களுக்கு இப்பவும் எக்கனும் நோடிக்க பூதி இவற்றை கனடா கழகமா செய்திருந்தது என்று. செய்யப்பட்டதுதான் முக்கியம்.

   “கண்ணால் காண்பதுவும் பொய். காதால் கேட்பதுவும் பொய். தீர ஆராய்ந்து அறிவதே மேல்“
   நாங்கள் வெறும் ஊர் வாசகர்கள் மட்டுமே, வழக்கறிஞர்கள் அல்ல ஆராய்வில் இறங்குவதற்கு. சிறிய விடயங்களை பகிரங்கப்படுத்துமளவுக்கு இந்த இரண்டு செயல்களில் கனடா கழகத்தின் அடையாளம் இருந்திருக்கவில்லை என்பது காரணமாக இருக்கலாம். நீங்கள் இணையங்களில் விடும் அறிவித்தல்கள்/படங்கள் மட்டுமே எங்களுக்கு தகவல்கள்.

   தயவுசெய்து என் கருத்தை பிழையாக விளங்கவேண்டாம் நீங்கள் அறிவித்த இரண்டு செயல்களையும் ஊரைநோக்கி செய்தாச்சு இன்னும் பல வருடங்களுக்கு ஒன்றும் பெரிதாக செய்யவேண்டிய தேவையில்லை என்று. உங்கள் இளையோர் அமைப்பிற்கு ஊரைநோக்கிய சிந்தனைகளையும், பெரிய திட்டங்களை பற்றிய யோசனைகளை ஊட்டும் வண்ணம் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுடன் நல்ல புதுமையான திறமையான யோசனைகள் உண்டு. கனடா அமைப்பை பார்த்தே பிற நாடுகளில் நாம் அமைப்புக்களை உருவாக்கினோம். உங்கள் பெயரையே இந்த நாடுகளிலும் சூடும்வண்ணமும் பலரால் வேண்டுகோள்கள் விடப்பட்டிருந்ததும் எனக்கு ஞாபகம் வருகிறது.
   ஊரைநோக்கிய (கோவில்தவிர்ந்த) செயல்களில் நீங்கள் இனி காட்டும் உதாரணங்களையே நாமும் பின்பற்ற முயற்ச்சிப்போம்.
   நீங்கள் இனி செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, நாமும் எங்கள் பலமுக்கிணங்க உங்கள் பின்தொடர்வோம்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   வேந்தன் அண்ணை,
   உங்கள் புத்திமதிக்கமைய பண்-ஒளி 2011 ஐ ஆர்வமாக எடுத்து விரித்து படித்தேன்.
   பக்கம் பக்கமாக எவ்வளவு எழுதியிருக்கிறது.

   பிறநாட்டு அமைப்புக்களும் இவற்றை பின்பற்றுவதற்கு முன்வரலாம்.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  ஒரு நிகழ்வை செய்து முடிப்பதற்கு எல்லாருடைய ஒத்துழைப்பும் கிடைப்பதை பார்க்கையில் பெருமையாக இருக்கிறது. எல்லா நிகழ்வையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக செய்துமுடிக்கும் அமைப்பின் நிர்வாகத்தன்மையும் பாராட்டுக்குரியதே.

  வருடாந்தம் 10 நிகழ்வுகளை வெற்றிகரமாக செய்யும் பிரமாண்ட அமைப்பின் பதினொராவது நிகழ்வு ஊரைநோக்கியும் ஏதாவது ஒன்று இருந்தால் எல்லாரும் ஒரே ஊரில் இருந்து வந்தவர்கள் என்றதையும் ஞாபகப்படுத்தும் நிகழ்வாகவும் இருக்கும், ஊரிலும் ஏதோ இந்த அமைப்பு செய்திருக்கிறது என்ற ஒரு சரித்திர அடையாளம் (historical mark)இருந்தால் ஊரவர்களுக்கும் பெருமையாக இருக்கும்/இருக்கலாம்.
  (இனியாவது) புதுயுகம் படைப்போம்!

 • முச்சந்தி சோமன்:

  எனக்கு விழங்குது.பனிப்புலம்.நெர்ரும் அவியழ்ழ ஒரு பிரிவுதான்.திருடர்கள் ஒன்றுசேர்ந்தால் ஆழுக்குப்பாதியாம். அப்பிடியெண்டா நாங்கள். எங்கட கருத்த வெழுய தெரிவிக்கேலாதெண்ணிறீங்க.சரி பாப்போம் வேற நெர்ருகள்ளறைபண்ணுவோம்.ஊடகமெண்டால் ஒருத்தர்ர பக்கமும் சாராது.இருசார்ர பக்கமும் சாயவேணும்.இது அப்பிடியில்ல,நானும் ஏதோ பெரிய. சணல் 4 .cnn .bbc போலநினைச்சு நேரத்த மினக்கெடுத்திப்போட்டன்.பாப்போம் கலையடி நெர். ************நெர்ரிலேம் எழுதமுடியுமோ பாப்போம்.உங்கள் உதவிக்கு நன்றி.எனக்குத்தெரியும்.இதயும் நீங்க போடமாட்டீங்களெண்டு.இது நான் பனிப்புலம் .நெர்ருக்குமட்டுமே எழுதுகின்றேன்.என்னதான். இருந்தாலும் ********* விழுத்த வந்த ஊடகம் தானே உங்கட நெர்ரு.எதுக்கும் டென்மார்க்கில வேலயில்லத்திண்டாட்டம் தான் பிரச்சன.வேலியள் மட்டும் எல்லாருக்கும் கிடைக்க வேணும் பனிப்புலம்.நெர்ர நடத்த ஊரிலஇருந்துதான் ஆக்கள றக்கவேணும்.அதுக்காக நான் ஒண்டும் நீங்க சரியில்யெண்டு தனிய ஒரு நெர்ரு துறக்கிறெண்டு வெழிக்கிட மாட்டன் ஏனெண்டால் உழ்ழ நெர்ருகள பாக்கச்சனங்களுக்கு நேரமில்ல.அத்தோட உதுகளோட மினைக்கெட எங்களுக்கு நேரமில்ல.உதெல்லாம் டென்மார்க்கில வேலயில்லாம இருக்கிறவைக்குத்தான் சரி.நன்றி .

  • admin:

   எங்களுக்கு நீங்கள் வழங்கிய பாராட்டுகளுக்கு நன்றி… சம்மந்தப்பட்டவர்ளை விமர்சிப்பதற்கு தைரியம் இருந்தால் உமது பெயரை பாவிக்கவும்.

 • முச்சந்தி சோமன்:

  இவர் யார் என்று தெரியவில்லை.
  அதனால் இந்த செய்தி சம்மந்தமான இவரது காட்டமான விமர்சனம் உள்வர அனுமதிக்கப்படவில்லை.
  அட்மின்

 • பலெர்மோ. த .சங்கர்:

  வாணி விழா நிகழ்வுகள் படம் மிகவும் சிறப்பாக இருக்கின்றது கலத்துகொண்ட எம் உறவுகளுக்கும் எம் எதிர்கால குழத்தகளுக்கும் இதை முன்னின்று நடத்திய கனடா பண் கலை பண்பாட்டுக் கழக த்துக்கும் வாழ்த்துக்கள்

 • கனடா பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்திய வாணி விழாவைச் சிறப்பித்த எங்கள் ஊர்ப் பெருமக்கள், நண்பர்கள், தாங்களாக முன்வந்து தம் முழுத்திறமைகளையும் வெளிப்படுத்தி சிறப்பான தரமான நிகழ்ச்சிகளைத் படைத்து, விழாவிற்கு வருகை தந்தோரை மெய்மறக்கச் செய்த இளையோருக்கும், தமிழ்ப் பேச்சுப் போட்டிக்கான பரிசில்களை வழங்கிய அமரர். முருகேசு விருத்தாசலம் குடும்பத்தினருக்கும், அமரர் . வயித்திலிங்கம் சுப்பிரமணியம் குடும்பத்தினருக்கும், தாமாகவே முன்வந்து தரமான ஒலிப் பதிவுகளை வழங்கி விழாவைச் சிறப்பித்த ராகவன் அவர்கட்கும், தற்கால தொழில் நுட்பத்துடன் ஒளிப்பதிவுகளை மேற்கொண்ட “அபிநயா வீடியோ” அண்ணண் ஆனந்தன் அவர்கட்கும், எமது கழகத்தின் மறைந்த செயளாளர் சங்கர் அண்ணா அவர்களின் நினைவாக (மண்டப வாடகையின் ஒரு பகுதியை) மண்டப வாடகையை உவந்தளித்த அன்னாரின் பெற்றோருக்கும், அமரர் சங்கரின் BANNER ஐ தயாரித்து அன்பளிப்பாக தந்துதவிய ஜஸ்மின் – பாலா (NEW JASMIN PARTY HALL) அவர்கட்கும், விழாவிற்கான உணவுகளை தயாரிப்பதற்கு இடவசதி, பாத்திரங்கள் என்பனவற்றை தந்துதவிய நல் உள்ளங்கள் சிவானந்தம்-ராணி குடும்பத்தினருக்கும், இவ் விழாபற்றிய விபரங்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவித்த எம்மூர் இணையத் தளங்களான பணிப்புலம்.கொம்,பணிப்புலம்.நெற், கலட்டி.கொம், பண்கொம்.நெற், காலையடி.நெற், சாந்தை.நெற் ஆகியவற்றிக்கும். எமது அழைப்பை ஏற்று இவ் விழாவிற்கு கௌரவ விருந்தினராக வருகை தந்து சிறப்பித்த சோ.தேவராசா அவர்கட்கும், இறுதிவரை நின்று மண்டபத்தை துப்பரவு செய்த எங்கள் அன்புச் சகோதரர்களுக்கும், பல சிரமங்களின் மத்தியில் தளராது தங்களின் கடுமையான உழைப்பைக் கொடுத்த கழக நிர்வாகிகள், கழக நண்பர்கள் எல்லோருக்கும் பண்கலை பண்பாட்டுக்கழகம் நன்றிகளைக் கூறி தலை வணங்குகின்றது.
  பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா

  • உந்த ஆக்களையும் உடுப்ப்புகளையும் நிகழ்சிகளையும் ,நடந்துகொள்ளுகிற பக்குவங்களையும் பார்கேகுள்ளை வலு புளுகமாய் கிடக்குது .உவயள் பிறந்து
   தவழ்ந்து வளர்ந்து ஆளாகி வாழ்ந்த வளமாகிய கிராமம் எண்டு ஒண்டு இருக்குதல்லோ.
   வயது போனதாலை அதையும் கொஞ்சம் யோசிச்சு பாத்தால் நல்லா இருக்குமல்லோ .அவையளுக்கு எல்லாம் மறந்து போச்சுது .சிலவேளை வயது போனதாலை இருக்கலாம் .இல்லாடில் இப்ப லோஞ்சு உடுக்கிறதாயும் இருக்கலாம்
   நாங்கள் அறிய உவை எல்லாம் எப்பிடி வாழ்ந்தவர்கள் என்பது எங்கள் விரல்
   நுனியில் (finger tippil ) எனவே எங்களுக்கு ஷோ காட்டி பம்மாத்து பண்ணவேண்டாம் .
   நீங்கள் பிறந்து வளர்ந்து தவழ்ந்த ஊரில் உள்ள உதவி அற்ற சின்னஞ்சிறார்களுக்கு
   எங்கேயோ உள்ள விலாசம் இல்லாத நண்பர்கள் குழாம் ஊரிலை குழநதைகளுக்கு சோறு போடுகுது அண்ணைமாரே .நீங்கள் பரத நாட்டியத்தில் லயங்கள் நளினங்களை தேடி நல்லாய் வாழுங்கோ அண்ணைமாரே .உங்களுக்கு எங்கள்
   பரிபூரண இதயபூர்வ வாழ்த்துக்கள் .பொன்னாடை ஆருக்காவது போத்தவேணுமெண்டால் வலு மலிவிலை இஞ்சை ஒரு இடம் இருக்குது .ஒருத்தருக்கும் சொல்லன் .உடனை என்னை CONTACT பண்ணு அண்ணை
   இப்ப எனக்கு கனடாவிலை இருந்து கனதியான ஒரு கோல் வருகுதடா .அதுக்கு
   நான் awnser பண்ணியே ஆகவேணும் . நான் இப்ப சிறீ எஈ லண்காவிலை .
   .நாங்கள் இன்னும் நாங்கள் பிறந்து தவழ்ந்து வளர்ந்த
   அந்த கிராமம் எங்கள் சனம் எங்கள் ஊர் உடன் உண்மையாக வாழ்ந்துகொண்டிருக்கும் சுய மரியாதை உள்ள வெறும் மனித பிண்டங்கள்
   அண்ணைமாரே .

   • பிரவின்:

    உங்கள் கருத்து தவறு. நிங்கள் முதல் நண்பர்கள் குழாம் திட்டம் யாருக்கு அறிவித்திர்கள் இப்பிடி ஒரு திட்டம் செய்ய போகின்றோம் என்று முதல் உங்களை நீங்கள் திருத்தி கொள்ளவும் ஒரு செயல் திட்டத்தில் இறங்கும் போது புலத்தில் இருக்கும் மக்களுடன் கதைத்து கலந்து உரையாடி செயல் பட்டிர்களா?’ நீங்கள் ஒரு 7 அல்லது 8 பேர் சேர்ந்து நண்பர்கள் குழாம் இது தவறு உங்களை நீங்கள் நல்லவர்களாக காட்டுவதற்கு. குழந்தைகளுக்கு சாப்பாடு குடுக்கின்றின்கள் வாழ்த்துக்கள்
    2 புலம்பெயர்த்த நாட்டில் நாம் நடாத்துகின்ற எமது சமய கலாச்சாரம் தமிழ் அறிவு நிகழ்வுகள் உங்களுக்கு ஷோ காட்டி பம்மாத்து பண்ணுகின்ற மாதிர இருக்கோ ஐயா இதுகளை ஒழுங்கு செய்யாமல் பின்பற்றாமல் எமது வருங்காலத்துக்கு பின் எந்த மொழியில் அவர்கள் உரில் இருக்கும் எம் உறவுகளுடன் கதைப்பது நாங்கள் இல்லாத காலத்தில் எமது சந்ததிகள் எப்படி கழகம் இணையத்தளம் நடத்துவது ????
    3 எதோ நல்ல கழகம் எமது தாய் குலங்களை சாரிகளுடன் வர வைக்கின்றது. மேலும் உங்கள் மிது குன்றம் சொல்லுவதாக நினைக்க வேண்டாம் எமது நிலைகளையும் புரிந்து கருத்து எழுதவும்

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

     பிரவீன் அண்ணாவிற்கு தீபாவளி வாழ்த்துக்கள்,
     சாப்பாடு கொடுப்பதற்கு அறிவித்தல் விட்டு, திட்டம் போட்டு, கலந்துரையாடி, கூட்டம் கூடி, படம் வரைந்து, கீரையை பால்விடாமல் அவிச்சுக்குடுக்கலாம, கடலைக்கு செத்தல்முழகாய் போடலாமா என்றெல்லாம் செயலில் இறங்காமல் கதைத்துக்கொண்டு காலத்தை விழுங்குவதற்கு இது ஆடம்பர விடயமும் இல்லை நீண்ட கால செயல்திட்டமும் இல்லை. பிள்ளைகளே ஒரு 2 மாதங்கள் பொறுங்கோ நாங்கள் சாப்பாடு தரப்போறோம் என்று பறை மட்டும் தட்டிக்கொண்டு திரியவில்லை, அதை பிரபல்யப்படுத்த நேரங்களையும் சக்தியையும் வீணாக்கவில்லை, இறுதியில் சிறார்களுக்கு ஏமாற்றத்தையும் உண்டுபண்ணவில்லை.

     இப்படி ஒரு பிரச்சனை நிகழ்கிறது என்று 13 நாட்களுக்கு முன் அறிந்து இருவர் தனிய தொடங்கிய சிறிய விடயம் இன்று 15 நண்பர்கள் வரை மேற்கத்தேய நாடுகளிலிருந்து ஒன்று சேர்ந்திருக்கிறார்கள், இன்னும் சேருவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
     செய்யத்தொடங்கிய பின்னரும் அறிவித்தல்விட நான் தனிப்பட்டளவில் விரும்பியிருக்கவில்லை, ஏற்பட கூடிய விளைவுகளை தவிர்க்கவே
     சிலரின் ஆலோசனைகளுக்கமையவே தகவல் பிரசுரிக்க நேரிட்டது. இல்லாவிட்டால் நம்மில் பலருக்கு இப்படி ஒரு விடயம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிய இதுவரை சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. ஊரில் இருந்து அறிந்தேன் ஊரிலும் பலருக்கு தெரியாதாம் இப்படி ஒரு விடயம் ஊருக்குள் நடந்துகொண்டிருக்கிறது என்று. இதுதான் எங்களுக்கு தேவை. வேலை நடப்பதே இங்கு முக்கியம், அது நடக்கிறது அதுவே எங்களுக்கு திருப்தி/சந்தோசம்.

     நீங்கள் அவதானிக்காத துளி ஒன்று:
     சிறார்களுக்கு சாப்பாடு கொடுக்க ஒரு வருடத்துக்கு தேவையான மொத்த தொகை Rs 75,000. இதே தொகைதான் ஊரில் உள்ள ஒரு பிரதான கோயில் ஒன்றின் ஒரு நேர திருவிழா உபயத்துக்கு கொடுக்கப்படுவதும.
     இதில் எதை முக்கியப்படுத்தவேண்டும், கடவுள் எங்கு இருக்கிறார் என்பதற்கு இந்த நண்பர்கள் சரியான முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

     உங்களது 2 வது, 3 வது சம்பந்தப்பட்டவர்(கள்) பதில் தருவார்கள்.

     • பிரவின்:

      01சுதர்சன் நாங்கள் அவதானிக்காத துளி ஒன்று:
      02 ??????நிங்கள் அவதானிக்காத துளிகள் பலது
      03 நண்பர்கள் குழாம் திட்டம் அது தப்பு என்று சொல்ல வில்லை அதை மக்களுக்கு விளக்க படுத்தி செயல் பண்டிருக்கலம் நண்பர்கள் குழாம் திட்டத்தின் அங்கத்தவருக்கு எனது வாழ்த்துக்கள் நன்றிகளும்

   • CHANDRAHASAN:

    ஊருக்கு உதவ வேண்டுமென்பது நியாயமான எதிபார்ப்பு. ஆனால் அதே வேளை புலம் பெயர்ந்தவர்கள் கேளிக்கை எதிலும் ஈடுபடாமல் இயந்திரம் மாதிரி உழைத்து உழைத்து மாயவேண்டுமென்று எதிர்பார்ப்பது நியாயம் போல் தெரியவில்லை. ஆரோகியமான சமுக வாழ்வை ஊரிலே தொலைத்துவிட்டு வந்தேறிய நாட்டு பண்பாட்டில் இசைந்து வாழ இயலாது தனித்தனி தீவுகளாக திரியும் எம்மவர்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகளே சமுக வாழ்வை மீட்டுத் தரும் நிவாரணி. மேலோட்டமாக பார்க்கும்போது இது வெறும் பம்மாத்து காட்டும் ஷோ மாதிரி தெரிந்தாலும் ஆழமாகப் பார்க்கும்போது இது போன்ற நிகழ்வுகளே இயந்திர வாழ்வில் மனநோயாளிகளாய் மாறாமல் எங்களை காக்கும் மருந்து. புலம்பெயர்ந்த நாடுகளில் திருமண விழாக்கள் கோயில்கள் திருவிழாக்கள் பிறந்த நாள் சாமத்தியச் சடங்குகள் எல்லாம் ஆடம்பரமான அனாவசியமான பம்மாத்துக்கள் போல் தெரிந்தாலும் இவைகள் இல்லாமல் எல்லோராலும் புத்திஜீவிதனமாக வாழ முடியாது. அப்படி இல்லாததால் அல்லது அவற்றை ஏற்று இணங்க முடியாததால் நான் நிறையவே அனுபவித்துள்ளேன்.
    நாங்கள் விரும்பிய ஒன்றை செய்யவில்லை என்பதற்காக அவர்கள் செய்வது எல்லாம் தவறு என கொள்ளமுடியாது. எமது கிராமத்தவர்களை புலம்பெயர்ந்த நாடொன்றில் இணைத்து இயங்கிய முன்னோடிகள் என்ற வகையில் கனடிய பண் கலை பண்பாடு கழகத்தின் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறுகிறது. அவர்களால் நீங்கள் எதிர்பார்ப்பது போல் எதிர்காலத்தில் ஊரை நோக்கிய பெருமுயற்சியில் பங்களிக்க முடியும் என நம்புகிறேன்.

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

     கேளிக்கை கொண்டாட்டங்கள், ஒன்றுகூடல்கள், கலைவிழாக்கள், கலாச்சாரம் & பாரம்பரியம் பேணல் போன்ற நிகழ்வுகளை புலத்தில் நிகழ்த்துவது அவசியமென்பதற்கு எவரிடமும் மாற்றுக்கருத்து இருக்காது. பொதுவானவைகளை கையாளும் முறை தொன்றுதொட்ட வழமையை விட ஆடம்பரம் உச்சமாக உயர்த்துவதும், வருடாந்தம் அவை தொகைகளில் அளவுக்கதிகமாவதும் அவை பின்னர் வருடாந்தம் கட்டாய அடிப்படையாக உருவெடுப்பதும் இக்காலக்கட்டத்தில் குறிப்பிட்ட நிகழ்வுகள் (நீங்கள் கூறியதுபோல்) இயந்திர வாழ்க்கைமுறையின் அங்கங்களாக மாறிவிட்டால் அவைகளை பின்னர் சந்தோசத்துக்காக நிகழ்த்தும் நிகழ்வுகளாக அமையாது என்பது என்பார்வை. இந்த முறை தொடருமானால் நிர்வாகிகளை ஊழியத்துக்காக நிர்வாகத்துக்குள் அமர்த்துவதும் ஒரு தேவையாக மாறலாம். இது ஆரோக்கியமானதா என்பது எனக்கு தெரியாது, ஆனால் என்னால் நிச்சயமாக சொல்லக்கூடியது பொதுநோக்குடைய கருமங்கள் எதிர்காலத்தில் வியாபார நோக்கமாக மாறிவிடும் என்பதே.

     கடந்த நாட்கள் ஐரோப்பிய நாடு ஒன்றின் ஊரவர் அமைப்பின் ஒரு நிர்வாகியோடு உரையாடியபோது தெளிவானது என்னவென்றால்: ‘கூடிய ஊர்ச்சனம் இருக்கிற நாட்டில இவங்கள் இவ்வளவை நல்லா செய்து தள்ளுறாங்கள் அப்பா, ஒரு நிகழ்வுக்கு வரும் ஒவ்வொருவரிடமும் ஆக கூடியது $௦0.50 சதங்கள்படி பங்களிப்பு ஊரைநோக்கிய நலத்திட்டத்துக்கு அதில்வைத்து சேர்த்தாலே ஊரில் உள்ள சில பெரிய அடிப்படை பிரச்சனைகளை (எப்பவோ) தீர்(த்திரு)க்கலாம் என்று’.

     ‘நாங்கள் விரும்பிய ஒன்றை செய்யவில்லை’ என்ற உங்கள் வசனத்தை ‘எங்கள் கடமைளில் எதையும் செய்யவில்லை’ என்றும் எடுத்துக்கொள்ளலாம். இல்லையா?
     அல்லது நாம் வந்த ஊரை நோக்கி ஏதாவது ஒன்றை செய்துகொண்டு புலத்தில் எதை எப்படி செய்தாலும் ஒருவரும் பொருள்படுத்தமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

     கண்டிப்பாக நான் முதிலில் எங்கோ கூறியதுபோல் நிச்சயம் சம்பந்தப்பட்டவர்கள் கடந்த 23 வருடங்கள் ஊரைநோக்கி செய்யத்தவறிய ஏதாவது ஒன்றை தமது 25 வது வெள்ளிவிழாவை காணும்முன் நிச்சயம் செய்துமுடித்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு பிறந்து கொஞ்ச கிழமைகள் ஆகிவிட்டன. அதற்கான தூண்டுதல் வேலைகளில் ஒன்றையும் என் பங்கிற்கு செய்துவிட்டேன் என்ற திருப்தியும் எனக்குண்டு. அடுத்த தலைமுறைக்கு சகல பொறுப்பை ஒப்படைக்கமுன் இந்த தலைமுறை ஏதாவது உதாரணம் காட்டியிருக்கவேண்டும் என்ற ஒரு அவசியமுண்டு.

     (இனியாவது) புதுயுகம் படைப்போம்!

     We’re very far from perfect, but we’re all in the positive direction!

     (சரி, எல்லாரும் வெளிக்கிடுங்கோ வரிஞ்சுகட்டிக்கொண்டு என்னை fire பண்ண, அதற்கு முன் என்னுடையை ‘சொந்த’ பெயரில் வெளிப்படுத்திய ‘சொந்த’ கருத்துக்களை ஒழுங்கா வாசிக்கவும் 🙂 🙂 ).

   • பலெர்மோ \த..சங்கர்:

    வெளிநாடுகளில் உள்ள எமது உறவுகள் நடத்தும் கலாச்சாரம் தமிழ் அறிவு நிகழ்வுகள் வாழ்த்துக்கு உரியது பிற்காலஅவர்கள் எமது கலாச்சாரம் தமிழ் அறிவு தெறித்து இருக்கவேணும் அதுக்காக அவர்கள் முன்னின்று செயல் படுத்த்கின்ரர்கள் தயவு செய்தது குறை சொல்ல வேண்டாம் எல்லோரு உரை நோக்கிய சிந்தனைகள் இல்லாமல் இல்லை

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து