உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

தற்போது உலகளாவியரீதியில் பொருளாதார சமநிலை வேண்டி நடைபெறும் ஆர்பாட்டங்கள் நேற்று டென்மார்க்கிலும் வெடித்தது. டென்மார்க் தலைநகரில் உள்ள மாநகரசபை சதுக்கத்தில் பல நூற்றுக் கணக்கானவர்கள் ஆர்பாட்டங்களை நடாத்தினார்கள். இவர்கள் கார்களுக்கு தீ வைத்து, கண்ணாடிகளை உடைத்து தமது கோபத்தை வெளிப்படுத்தினார்கள். அமெரிக்காவில் ஆரம்பித்த ஒக்கிபை வேள் ஸ்ரீட் என்னும் குறியீட்டு போராட்டத்தின் ஓரங்கமாக ஒக்கிபை டென்மார்க் என்ற தலைப்பில் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

அதேவேளை டென்மார்க் பொருளாதாரம் கடந்த பத்து ஆண்டுகால ஆட்சியில் முதலாளிகளுக்கு வாய்ப்பான பொருளாதாரமாக இருந்தது தெரிந்ததே. இப்போது புதிதாக மலர்ந்துள்ள சிவப்பு ஆட்சியாவது அதை ஏழைகளுக்கு சார்பாக திருப்புமா என்ற ஏக்கம் தேர்தல்வரை இருந்தது, இப்போது ஏறத்தாழ அதுவும் பகற்கனவாகிவிட்டது. புதிய அரசின் பொருளதார திட்டங்கள் ஏழை பணக்காரர் இடைவெளியை அதிகரிக்கவும், பணக்காரருக்கே வாய்ப்பாகவும் உள்ளது. இப்படியான அவல நிலை ஏற்பட றடிகல வென்ஸ்ரவே காரணம் என்று அரசாங்கத்தின் கூட்டுக்கட்சியான எஸ்.எப் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் கூட்டுக்கட்சி என்ற காரணத்தால் உண்மைகளை மறைக்க வேண்டிய தேவை இல்லை என்று எஸ்.எப் தவிசாளர் ஜஸ்பா பீட்டர்சன் தெரிவித்தார். அரசின் உட்கட்சிகளின் குடுமி பிடி சண்டையை இன்றைய ஞாயிறு பொலிற்றிக்கன் அம்பலத்திற்கு கொண்டு வந்துள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து