உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

செல்விகள் றொசானா ராதாகிருஷ்ணன், அபிஷா ராதாகிருஷ்ணன்

உலகில் வாழ்கின்ற  உயிரினங்களில் அனைத்தும் இயற்கையின் அசைவுகளுடனும் , இயற்கையின் சத்தத்துடனும் இணைந்து மகிழ்ச்சியுடன்   வாழ்ந்து வருவது கண்கூடு.பகுத்தறிவு  கொண்ட உயிரினங்களாகிய    மனிதன் இவ்வியற்கை அசைவுகளை கலைவடிவமாக்கி பலவகை பட்ட கலைகளை  உருவாக்கி மனிதன் மனிதப் பண்புடன் வாழ் வாங்கு வாழ்வதற்கு வழிகாட்டி வருகின்றான் .இவ்வரிய கலைகளில் குறிப்பிடத் தக்கவற்றை பாரதநாட்டியம் மூலம் தம் சிறு பருவம் முதல்  பயின்று  சிறந்த அரங்க நிகழ்வாக சமர்ப்பித்த செல்விகள் றொசானா ராதாகிருஷ்ணன், அபிஷா ராதாகிருஷ்ணன் இருவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அக்டோபர் 15,2011  சனிக்கிழமை யோர்க்வுட் நூலக க் கலையரங்கில் இடம் பெற்ற பரதநாட்டிய சலங்கை பூஜை என்ற கலை நிகழ்வு திரு திருமதி கந்தையா முன்னை நாள்  ஆசிரியர்கள் அவர்களின்  மங்களவிளக்கேற்றலுடன்  சிறந்தமுறையில் விழாஆரம்பமானது.சலங்கை பூஜை நிகழ்வினை தமிழில் செல்விகள் றொசானா ராதாகிருஷ்ணன், அபிஷா ராதாகிருஷ்ணன் அவர்களின் குருவான கலைக்கோவில் நாட்டிய மன்ற ஆசிரியர் திருமதி வனிதா குகேந்திரன்  வனிதா குகேந்திரன்  அவர்களின் கணவரும், மிருதங்க வாத்திய ஆசிரியருமான திரு.குகேந்திரன் கனகேந்திரம் அவர்கள் தமிழில் தொகுத்து வழங்க,கலைவாணி பரதநாட்டிய ஆலய அதிபர் செல்வி றிசாயினி மனுவேந்தன்  அவற்றை ஆங்கிலத்தில்,தொகுத்து வழங்கினார்.

செல்விகள் றொசானா ராதாகிருஷ்ணன், அபிஷா ராதாகிருஷ்ணன் அவர்களின் அழகு அபிநயங்கள் ஆரம்பமாவதற்கு முன் திரு.சுப்பிரமணியம் சிவகுமார் சிறந்த முறையில் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து தொடர்ந்து தமிழ்த்தாய்     வாழ்த்தும்,கலைக் கோவில்   நாட்டிய மன்றத்தின் கீதமும் பாடப்பட்டு,நாட்டியத்தாரகைகளின் நடனம் மங்கள பாடலுடன் ஆரம்பமானது .

அடுத்து ஆரம்பமான அலாரிப்பு நடனத்தில் நடனச் சகோதரிகள் இருவரும்,தங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி  தம் அங்கங்களை அடுத்துவரும் நாட்டியங்களுக்கு தம்மைத் தயார் படுத்திக் கொண்டனர். அடுத்ததாக நவரசத்திற்கான நடனம் இடம்பெற்றது.இருவருமே ஒன்பது விதமான பாவங்களையும் விதம்விதமாகச் செய்து அனைவரையும் கவர்ந்து கொண்டனர். அடுத்து இடம்பெற்ற “சப்தம்”, அபிநயத்தில் பக்தியும் ,அதனால் இரசிகர்கள் மத்தியில் அமைதியும் நிறைந்து   காணப்பட்டது.

மேலும் இறைவனைப் போற்றி இடம்பெற்ற”கீர்த்தனம்” நடனத்துடன் நடன சகோதரிகள் பற்றி ஆங்கிலத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளரும், கலைவாணி பரத நாட்டியாலய அதிபருமாகிய செல்வி றிசாயினி மனுவேந்தன் கூறுகையில் , செல்விகள் றொசானா ராதாகிருஷ்ணன், அபிஷா ராதாகிருஷ்ணன் “இருவரும் சிறுவயதிலிருந்து பண் கலை கலாச்சாரகழகத்தின்   அனைத்து கலை விழா மேடைகளிலும் தம் பரத நாட்டிய வடிவங்களை தந்து தமக்கும்,ஊருக்கும் பெருமை தேடித்தந்ததுடன்  தம் திறமைகள் அனைத்தினையும் இன்று ஒன்று திரட்டித் தந்து கொண்டு இருக்கின்றனர்.”எனப் பாராட்டினார்.

அடுத்து “என்ன தவம் செய்தனை யசோதா”என்ற பாடலுக்கு செல்வி றொசானா ராதாகிருஷ்ணன் தனித்து வந்து அபிநயம் செய்து சபையோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.தொடர்ந்து “இடது பாதம் தூக்கி” என்ற பாடலுக்கு  அபிஷா ராதாகிருஷ்ணன் தோன்றி  அக்காவுக்கு தான் சளைத்தவரல்ல    என நிருபித்து சபையோரை மகிழ்வித்தார்.அடுத்து செம்புடன் மேடைக்கு வந்த நாட்டியத் தாரகைகள் இருவரும் செம்பு நடனத்தின் மூலம் சபையை அதிர வைத்தனர்.

அடுத்த நிகழ்வாக விழாவின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட திரு.சாமி.அப்பாத்துரை அவர்கள் பேசுகையில் புலம்பெயர்ந்து வாழ்ந்தும் நம் கலை வடிவங்களை இன்றுவரை பேணிவரும் திரு திருமதி ராதாகிருஷ்ணன் அவர்களையும்,சலங்கை பூசை நாயகிகளையும் பாராட்டினார்.

விழாவில் அடுத்ததாக நாட்டிய சகோதரிகளினால்  அன்பின் ஆழத்தினை வர்ணிக்கும் “பதம்”மேடை ஏற்றப்பட்டது.மேலும் “ஜெய ஜெய தேவி” என்ற பாடலுக்கு அபிநயம் சபையோரின் கவனத்தினை ஈர்ந்தது.

அடுத்து,சலங்கை பூஜை விழாவின் கெளரவ விருந்தினராக கலந்துகொண்ட சட்டத்தரணி  திரு.சோ.தேவராஜா அவர்கள் உரையாற்றுகையில்,நாட்டிய சகோதரிகளை பாராட்டியதுடன்,இக் கலைப் பணி நிகழ்வு காலங்களையும் சுமந்து செல்லவேண்டும் என வேண்டிக்கொண்டார்.

அடுத்து,அஷ்வினி சிவானந்தனின் நன்றியுரையினை தொடர்ந்து,  செல்விகள் றொசானா ராதாகிருஷ்ணன், அபிஷா ராதாகிருஷ்ணன் அவர்களின் குருவான கலைக்கோவில் நாட்டிய மன்ற ஆசிரியர் திருமதி வனிதா குகேந்திரன்  அவர்களினால்  நாட்டியத் தாரகைகளுக்கு விருது வழங்கப்பட்டது.

நாட்டியத் தாரகைகள் செல்விகள் றொசானா ராதாகிருஷ்ணன், அபிஷா ராதாகிருஷ்ணன் அவர்கள்   நிறைவாக,”தில்லானா “வினை சிறப்பாக அபிநயம்  செய்து மங்கலத்துடன் சலங்கை பூஜை கலை விழாவினை நிறைவுக்கு கொண்டு வந்தனர்.

முடிவாக சபையில் இதுவரையில் விழாவினை இரசித்துக் கொண்டிருந்த பெரியோர்கள்,கற்றோர்கள்,உறவுகள்,நண்பர்கள் அனைவரும் எழுந்து வந்து  அவர்கள் இருவரையும் வாழ்த்திச் சென்றனர். விழாவும் இனிதே நிறைவேறியது.

                                      வாழ்க,வளர்க நம் மக்கள்.

பண்கலை பண்பாட்டு க்கழகம்

One Response to “பாராட்டும்,விமர்சனமும்.- சலங்கை பூஜை”

  • verny kannan:

    ரொசானா & அபிஷாவுக்கு எமது வாழ்த்துக்கள் உங்கள் கலை நயம் மென்மேலும் வளர வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

Leave a Reply for verny kannan

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து