நேற்று இரவு முதல் இன்று பகல் வரை இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்க எல்லை பாதுகாப்பு படை பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான அதிநவீன வசதிகளுடன் கூடிய ஹெலிகொப்டர் இன்று காலை ராஞ்சியில் இருந்து சாய்பாசா என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது.
ராஞ்சி அருகேயுள்ள குந்தி காட்டுப்பகுதியில் ஹெலிகொப்டர் சென்று கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக என்ஜீன் தீப்பற்றி எரிந்தது. இதில் ஹெலிகொப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.
இதில் ஹெலிகாப்டரில் இருந்த பைலட்டுகள் தாமஸ், எஸ்.பி.சிங், டெக்னீசியன் மனோஜ்குமார் சுவெயன் ஆகியோர் பலியானார்கள்.மீட்புக் குழுவினரும் அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.
இதேபோல இந்திய விமானப்படைக்கு சொந்த மான மிக்-29 ரக ஜெட்விமானம் நேற்று இரவு இமாச்சலபிரதேசத்தில் உள்ள மலைப்பகுதியில் சென்ற போது கீழே விழுந்து நொறுங்கியது.
இதில் விமானத்தில் இருந்த விமானியை காணவில்லை. விமானப்படை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இந்த மாதத்தில் மட்டும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 7 விமானங்கள் நொறுங்கி விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது