உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சுவீடனில் உள்ள விமான ஓட்டிகளின் அமைப்பு நடாத்திய ஆய்வின்படி சுமார் அரைப்பங்கு விமானிகள் நன்றாக தூங்குகிறார்கள். விமானம் பறந்து கொண்டிருக்கும்போது இவர்களின் தூக்க நாடகம் அரங்கேறுவதாகவும் அது கூறுகிறது. விமானப் பயணத்தில் ஏற்படும் 70 வீதமான தவறுகளுக்கு விமானிகள் கட்டுப்பாட்டு அறையில் தூங்கிவிடுவதே காரணம் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. இன்றுள்ள நிலையில் பாரிய வேலைச்சுமை விமானிகளின் முதுகில் சுமத்தப்பட்டுள்ளது, இதனால் ஏற்படும் களைப்பே அவர்கள் தூங்குவதற்குக் காரணம் என்று 80 வீதமான விமானிகள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 625 பைலட்களிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடாத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய சட்டப்படி ஒரு விமானி 13 மணித்தியாலங்களே வேலை செய்ய வேண்டும், ஆனால் இன்று 16 மணித்தியாலங்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையுள்ளது. விமான சேவைகளின் மலிவு விலை, போட்டிச் சந்தை நிலை காரணமாக விமானிகளின் வேலைப்பழு அதிகரித்துள்ளது. இப்போது அமலில் உள்ள வேலை நேரச்சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமென விமானிகள் கேட்டுள்ளனர். விமானிகளும் மனிதர்களே என்பது அவர்களுடைய வாதமாகும்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து