உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

 

கொழுப்பு கலந்த உணவுப் பொருட்களின் விலையை ஏற்றி, டென்மார்க்கில் உள்ள மக்கள் உயிர் வாழும் காலத்தை அதிகரிக்க புதிதாக வந்துள்ள அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் கொழுப்பு கலந்த உணவுப் பொருட்கள், குடிபானங்களின் விலையை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. வரும் தைமாதம் முதலாம் திகதியுடன் பியர், வைன், சிகரட், சாக்லேட், இனிப்பு வகையறாக்களின் விலைகள் இமயமலை உச்சியை எட்டிப்பிடிக்கும். சிகரட் பக்கட் விலை 39 குறோணரில் இருந்து 42 குறோணராக உயர்கிறது. சாக்லேட் கிலோ விலை 6 குறோணர் கூடுகிறது. வைன், பியர் போன்றவற்றின் உயர்வால் உடனடியாக 625 மில்லியன் குறோணர் இலாபம் எடுக்கும் அரசு மற்றய பொருட்களின் விற்பனையால் வருட முடிவில் மிகுதி 625 மில்லியன் குறோணர்களை எடுக்கும். அதைத் தொடர்ந்து வரும் 2013 ல் இதர கொழுப்பு பொருட்களான ஜாம், யோக்கட், கொக்கோபால், இனிப்புக்கூடிய பழங்கள், தக்காளி சோஸ் என்பவற்றின் விலைகளை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இவ்விதம் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும் டேனிஸ் அரசின் இந்த நடவடிக்கை 1.3 பில்லியன் குறோணர்கள் வருமானத்தை தரவுள்ளது. மேற்கண்ட தந்திரமான விலையேற்ற உத்தியை மற்றய நாடுகளின் ஆட்சியாளரும் பின்பற்ற இது ஒரு முன்மாதிரியாகப் போகிறது. இது உலகளாவிய விலையேற்றத்திற்கு தூண்டுகோலாக அமையலாம். மேலும் கொழுப்பில்லாமலும், விலையேற்றத்தால் எழைகளாகி மடியப்போவோர் தொகைபற்றி யாதொரு செய்திகளும் இல்லை. மக்கள் அதிக காலம் உயர்வாழ்வார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். விலையேற்றமும் ஆரோக்கிய வாழ்வும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை அல்ல என்பது கவனிக்கத்தக்கது. அன்று 10 குறோணர் விற்ற சிகரட் பாக்கட் இன்று 39 குறோணர் விற்கிறது. இந்த உயர்வு புகைப்பிடித்தலை குறைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து