உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இந்த முயற்சியில் முன்னணியாக செயற்பட்ட நெதர்லாந்து பண்முக ஒன்றியத்திக்கு வாழ்த்துகள்.

21 Responses to “கறி மிளகாய்த்துாள் ( Made in panipulam )”

 • vigneswaran:

  வணக்கம் .சுதர்சன் !
  துரநோர்க்கு திட்டங்கள்,அனைத்தும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். எப்படி கொள்வனவு செய்வது ,என்னமாதிரி என்ற விபரங்களையும் வெளிவிடலாமே !

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   விக்கி அண்ணை,
   உங்கள் வாழ்த்துக்களுக்கு நெதர்லாந்து வாழ் ஊரவர்கள் சார்பில் நன்றிகள்.

   ஊரிலிருந்து ‘பணிப்புலம்’ என்ற சொல் பொறித்த பொருள் ஒன்றை தான் புலம்பெயர்ந்த நாட்டில் கண்டு, தொட்டுணர்ந்த ஊரவர் ஒருவர் சந்தோசத்தில் மூழ்கிப்போய் இப்படங்களை Panipulam.net இற்கு இரவிரவாக அனுப்பி வைத்து இச்செய்தியை ஊரவர்கள் எல்லாருடனும் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த நலன்விரும்பிக்கு நன்றி.
   இத்தகவலை நெதர்லாந்து ஒன்றியம் உத்தியோகபூர்வமாக (இன்னும்) வெளியிடவில்லை.
   ‘செய்யப்போகிறோம்’ என்று பறை தட்டுவதைவிட ‘செய்துவிட்டோம்’ என்பதிலேயே நெதர்லாந்தில் வாழும் ஊரவர்களுக்கு நம்பிக்கை அதிகம்.
   ஒன்றுகூடலை நடாத்தி இன்றுவரை (13-12-11) இரண்டு மாதங்களுக்குள் 90KG வரை நெதர்லாந்தில் இறக்கிவிட்டோம், அத்தோடு பிறநாடுகளுக்கும் 50KG களையும் அனுப்பிவைத்துள்ளோம் என்பதே எமது குறுகிய பலம்படைத்தவர்களுக்கு பெரும் சாதனையே!
   எங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை.

   நெதர்லாந்திலுள்ள 15 ஊர்க்குடும்பங்கள் (ஒரு இடத்தில் ‘ஒன்றுகூடி’, ‘ஒன்றியம்’ ஒன்று உருவாக்கி, ‘ஒற்றுமையாக’ சேர்ந்து 🙂 ) தமது பெலமுக்கிணங்க இத்திட்டத்தை சிறிதாக தொடங்கி ஒவ்வொரு குடும்பமும் 10KG விகிதம் தமது குடும்ப தேவைக்கு ஊரில் உற்பத்திசெய்து அனுப்பி எடுத்து தம்முடன் பழகும் வேறு ஊரவர்களுக்கும் கொடுத்து காலப்போக்கில் உற்பத்தியின் அளவை உயர்த்துவதே இதன் அடிப்படை நோக்கம்.
   உற்பத்திகளின் தரங்களை தகுந்த முறைப்படுத்துவதற்கு முதல் 150KG களையும் விமானத்தில் இறக்கி எடுத்து, பின்னர் அதிகளவு தொகைகளை கப்பலில் இறக்கி எடுப்பதற்காக வழிமுறைகளை ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். நெதர்லாந்தில் ஊரவர்கள் இத்துறையில் அனுபவம் இல்லாதபடியால் பல சவால்களை சந்திந்து வருகிறோம்.
   நேரங்கள் கனிந்துவந்திருந்தால் ஜேர்மனிய ‘தமிழரின்’ ஒன்றுகூடலில் இவற்றை சுலபமாக ஊரவர்களுக்கு (மன்னிக்கவும்: தமிழர்களுக்கு) கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கலாம்.

   ஊரவர்கள் ‘குறைய’ வாழும் நாடுகளில் இருந்து ஊரில் உற்பத்தியின் அளவை உயரத்துவதற்கு அக்கறைகொண்டு முயற்ச்சிகள் எடுத்துக்கொண்டு உள்ளார்கள்,,,,,,,,,

   (கடைசிவசனத்தை ஒரு ‘comma’ (,) வோடு இடைநிறுத்தியுள்ளேன், அவ்வசனத்தை நீங்களே நிறைவுசெய்து வாசித்துக்கொள்ளவும்)

   • jegatheeswaran:

    சுதர்சன் நான் நோர்வேயில் இருந்து ஜெகதீஸ்வரன் தூள் கிடைத்துவிட்டது ஆனால் உங்களுடன் தொடர்பு tp கஷ்டமாக இருக்கிறது தொடர்பு கொள்ளவும் பணம் விபரம் மேலேதிக ஓடர் எல்லாம் tp ல் கதைப்போம் நன்றி வணக்கம் jegatheeswaran

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

     நீங்கள் அனுப்பிவைத்த பணம் ஊரில் கிடைக்கப்பெற்றதாக உங்களுக்கு தகுந்த முறையில் அறிவிக்க உங்களின் தொபே இலக்கத்தை பழைய தொலைபேசியில் தொலைத்துவிட்டேன். நன்றி பக்கத்தில் இருக்கும் ஊரவர்களை ஊக்குவித்தமைக்கும், உலர் உணவுபொருட்களை மேலும் ஊரிலிருந்து அனுப்பி எடுப்பதற்கும.

     இணையம் மன்னிக்கவும் தொடர்புசாதனமாக பயன்படுத்துவதற்கு. தனிப்பட்ட விடயமில்லை என்பதால் இணையம் இதை பொருட்படுத்தாது என்று நம்புகிறோம். நன்றி.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  நன்றி யாதவனண்ணை. ஊரில் வசிக்கும் உங்களைப்போல் பெரியவர்களின் ஆசீர்வாதம் உங்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யவைக்கும்.
  நெதர்லாந்து வாழ் ஊரவர்களின் பலத்துக்கு தம்மால் இயன்றளவுக்கு இந்த சிறிய திட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். உற்பத்தியை பெருக்க பிற நாடுகளில் வாழும் ஊரவர்களும் நிச்சயம் கைகோர்ப்பார்கள்.
  நெதர்லாந்து ஊரவர் சார்பில் நன்றிகள்.

 • jegatheeswaran:

  எனக்கு 40 kg அனுப்ப ஒழுங்கு பண்ணுங்கோ சுதர்சன் விலாசம் த.ஜெகதீஸ்வரன்

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   நன்றி உங்கள் ஆர்வத்துக்கு.
   தொபேசியில் கதைத்ததுபோல் விலாசத்தை அனுப்பிவைக்கவும்.
   நன்றி.

 • சச்சி:

  இம் முயற்ச்சிக்கு எமது ஊரவர்கள் வழங்கப்போகும் நல் ஆதரவே எமது அடுத்த முயர்ச்சிகளான அரிசி மா,மாங்காய் வத்தல்,வடாகம்,மற்றும் அப்பளம் போன்ற தயாரிப்புகளை இறக்குமதி செய்வதற்கு மிகவும் ஊக்கிவிப்பாகும்.ஏனைய ஒன்றிய அங்கத்தவர்களே தயவு செய்து எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் இம் முயற்ச்சியின் விரிவாக்கத்திற்கு எம்மால் இயன்ற அனைத்து முயற்ச்சிகளையும் ஒன்று சேர்ந்து முன் எடுப்போம்.

 • Ratnarajah:

  மிகவும் ஆரோக்கியமான நல்ல‌ முயர்ச்சி
  .உங்கள் சேவை தொய்வின்றிதொடரட்டும்.
  நன்றி! வாழ்த்துக்கள்!!!!

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   நன்றி ரட்ணராஜா அண்ணை உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆசிக்கும். ஒரு சிறிய முயற்சி எமக்கு அனைவருக்கும் ஒரு பெரிய வெற்றியை தரும் என்பது நிச்சயம்.

 • நல்லதொரு தொடக்கம் இது மேலும் , பெரு விருட்சமாகி எமது ஊர் மக்களின் தொழில் முயர்ச்சி ஊக்குவிக்க நல்ல திட்டம் , எனவே புலத்து எம் உறவுகள் நம்மவர் உற்பத்தியான இந்த கறிப்பவுடரை வாங்கி உங்கள் அன்றாட தேவை பூர்த்தி அடய்வதோடு இதன் பலம் மேலும் நிறைவு பெறும் அதோடு பன்முக ஒன்றியத்துக்கு வாழ்த்துக்கள் ,

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   நன்றி முரளியண்ணை உங்கள் வாழ்த்துக்களுக்கு.
   நெதர்லாந்து வாழ் ஊரவர்களின் இந்த சிறிய முயற்சிக்கு இங்கிலாந்தில் வாழும் எமது ஊரவர்களும் கைகோர்ப்பார்கள் என்று நம்புகிறோம்.
   நெதர்லாந்து ஊரவர் சார்பில் நன்றிகள்.

 • yathavan:

  இந்தச் செயற்பாடு மிகவும் பாராட்டகூடியது இதில் ஈடுபடுபவர்களை வாழ்த்துகின்றோம் தொடர்ந்து வரும் காலங்களில் இதன் உற்பத்திகள் அனைத்தும் எமது புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் கொள்வனவு செய்து எம்மவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வேண்டுகின்றோம் எஸ் யாதவன் ( கலைத் தலைவர் மறுமலர்ச்சி மன்றம்

 • கனடாவில் நடைபெற இருக்கும் குளிர் கால ஒன்று கூடலில் இதனை மக்களுக்கு அறிமுகம் செய்யக்கூடிய வகையில் எம்மூர்த் தயாரிப்பான மிளகாய்த்தூளை குறுகிய எண்ணிக்கையை கனடாவிற்கு மார்கழி மாதம் 23 ஆம் திகதிற்கு முன்பு கிடைக்கக் கூடியதாக ஏதாவது ஒழுங்குகள் செய்யமுடியுமா? அப்படிக் கிடைத்தால் நாங்கள் இதை எம் ஒன்று கூடலில் அறிமுகத்தோடு விற்பனையையும் தொடங்கலாம்.கனடா மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பையும் தருவார்கள் என்பது உறுதி.ஏதாவது தொடர்புகளுக்கு என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

 • பலெர்மோ \த..சங்கர்:

  நல்லதொரு செயல் வெளி நாடுகளில் உள்ள எம்மவர்களின் கடைகளில் பனிப்புலம் கறி மிளகாய்த்துாள் விற்பனே முயச்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   நன்றி சங்கர் அண்ணை. இது விற்பனை முயற்சியில்லை எமது ஊரவர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே ஆரம்பிக்கப்பட்டது. காலம் கைகொடுத்தால் எதிர்காலத்தில் எமது ஊருக்குள் நிறுவனமாகவும் இயங்கலாம். எல்லாம் எமது புலம்பெயர் ஊரவர்களின் ஆர்வங்களிலேயே உண்டு.
   நெதர்லாந்து ஊரவர் சார்பில் நன்றிகள்.

 • அற்புதன்:

  ஏழ்மை நிலைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் நம்பிக்கையுடன் நடந்து செல்ல வளிகாட்டியமைக்கு முதலில் நெதர்லாந்து பண் முக ஒன்றியத்துக்கு நன்றிகள் முடியும் என்பதற்கு உதாரணம் நெதர்லாந்து பண் முக ஒன்றியமாகத்தான் இருக்கும்மென்று எனதுகருத்து

  . முடியும்.. நிச்சயமாய் முடியும்! நம்மால் எதையும் சாதிக்க முடியும்! முயன்றால் முடியாததென்பது எதுவுமில்லை! நாம் முயற்சி செய்யாமல் இருந்துக்கொண்டு, விதிமீது வீண்பழி சுமத்திக்கொண்டிருக்கிறோம். விதியொன்றையும் வழிநடத்தும் ‘விதியின் விதியாய்’ யாவரும் மாற முடியும்! தன்னம்பிக்கைக் கொண்டு செயல் பட்டால்…பனிப்புலத்தில் “நம்மால் எதையும் சாதிக்க முடியும்..

 • இது வறுத்த மிளகாய்த்தூளா?அல்லது வறுக்காததா?.இது எங்கே விற்பனையாகின்றது.கனடாவிலும் வாங்கலாமா?

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   இது எங்கள் ஊரில் வறுமையில் இருக்கும் பெண்களால் வறுக்கப்பட்ட கறித்தூள். நெதர்லாந்து உறவுகளின் மொத்ததேவையான 150KG வின் முதல் 40KG நெதர்லாந்தை வந்து சேர்ந்தததன் படங்கள். அதாவது ஒன்றுகூடல் செய்து (08-10-11) ஒரு மாதத்துக்குள் உற்பத்தி செய்யப்பட்டு (07-11-11), விசித்திரமான நாளான 11-11-11 அன்று சட்டிக்குள் ஏறி முதன் சாதனை படைத்த வறுத்த பணிப்புலத்து கறித்தூள்.

   இது இலாபநோக்கற்ற, வியாபார நோக்கற்ற, ஊரவர்களின் வறுமையை நீக்க முயற்சிக்கும் நெதர்லாந்தவர்களின் தமது குறுகிய பலமுக்கிணங்க வந்திறங்கிய முதல் வறுத்த பணிப்புலத்து கறித்தூள். (பண)பலம்வாய்ந்த ஊரவர்கள் வாழும் கனடா நாட்டின் ஊரவர்களும் கைகோர்த்தால் நிச்சயமாக இந்த தூளும், இன்னும் ஊரில் இதே நோக்கில் உற்பத்தியாக இருக்கும் உலர்உணவுப்பொருட்களும் கனடாவில் நிச்சயம் கிடைக்கும்.

   கெங்கா அண்ணை,
   உங்களுக்கும் தனிப்பட்ட முறையில் 10KG – 4 விதமான ´சாதாரணம்´; ´உறைப்பு குறைந்தது´; ´இறைச்சிக்கறித்தூள்´ & ´மல்லித்தூள்´ என்பவையை – உங்களின் வீட்டிற்கு அனுப்பிவைப்பதற்கு உங்கள் வீட்டு விலாசத்தை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். அதற்கான தொகையை நான் பின்னர் உங்களுக்கு அறிவிப்பேன், நீங்களே உங்கள் உறவினர் மூலம் எவரின் தலையீடுமின்றி நேரே ஊரில் கொடுக்க வசதிகள் செய்யலாம்.

   உங்களின் தேவையின் அதிகரிப்பே குறிப்பிட்ட பெண்களின் நிரந்தரமான தொழிலுக்கு உதவி செய்யும்.

   உங்களுக்கு தூள் = அவர்களுக்கு வாழ்க்கை!

   SutharSan18@hotmail.com
   Miss Call விட: +31 – 62 30 89 326

 • வாழ்ந்து காட்டுவோம்:

  • Ruban Thirunavukkarasu:

   நல்ல விசயம்,
   பணிப்புலத்திலும் நம்மவர் எதாவது ஒன்றை உற்பத்தி செய்ய முடியம் அதாவது வசதி இருந்தால் நாங்களும் செய்வோம் என்று இந்த கறித்துள் செய்து காட்டிட்டினம்.

   இதை புலம்பெயர்ந்து வாழும் பணிபுலத்துமக்கள் தங்களுடைய வீட்டு தேவைக்கு வாங்கி, பணிபுலத்தில் வேலை செய்து வாழ விரும்பும் நம்மவருக்கு உதவி செய்யவும்

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து