உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பன்னல – குலியாபிட்டி வீதியில் போவத்தை பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை 04.15 அளவில் இடம்பெற்ற வான் விபத்தில் ஒருவர் உயிழந்ததோடு நால்வர் படுகாயமடைந்து குலியாபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பன்னலையிலிந்து குலியாபிட்டி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த வான் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கொங்றீட் தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சாரதியான கணவர், அவருடைய மனைவி, இரு பிள்ளைகள் மற்றும் மேலுமொருவர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் குலியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை 27 வயதுடைய மனைவி உயிரிழந்துள்ளார்.

பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து