உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பாரிய அளவில் கள்ள நோட்டுக்களை அச்சிட்டு நாடு முழுவதும் விநியோகித்து வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 1000 ரூபா கள்ள நோட்டுகள் 20ஐ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கெஸ்பேவ பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ள நோட்டு அச்சிட பயன்படுத்தப்பட்ட உபகரணம், கள்ள முத்திரைகள் 49, போலி தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம், போலி மணல் அகழ்வு அனுமதிப் பத்திரம் உள்ளிட்ட பலவற்றை பொலிஸார் சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் அவர் 30 லட்சம் ரூபா கள்ள நோட்டுக்களை இதுவரை அச்சிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து