உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வணக்கம் எம் சமூக உறவுகளே !  எல்லா நாடுகளில் உள்ள எம் ஊரவர்களின் கேள்வி ?

ஏன் ! யேர்மனில் சந்திப்புக்கள் நடத்தப்படுவதில்லை,! காரணம் இருக்கு . எமது நோக்கம். ஒன்றுபட்ட தமிழ்மக்கள் . நாம் தங்கியிருக்கும் நாட்டில் எல்லா ஊர் மக்களும் உள்ளார்கள்,அயல் ஊரவர்களும் உள்ளார்கள்.இங்கு நன்மையோ தீமையோ எல்லா சன்பவங்களுக்கும் எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் என்று எங்கள் விருப்பம். இங்கு நாம் , நீர் என்று பார்ப்போமானால்.தமிழ் மக்ககள் ஒற்றுமை எங்கே ?.இங்கு கிராமமக்கள் நகரமக்கள் ஊர் மக்கள் என பிரித்துபார்தல் ,நாம் இருக்கும் இடத்தில் எம் ஊர் மக்களுடனே மட்டும் உறவு வைக்க நேரிடும் .எமது நோக்கம் என்ன. தமிழ் .தமிழ்.தமிழ்…… ஒருபுறம் நீங்கள் உம்!மனதை திறவுங்கள்… எம் பிள்ளையிடம் உம் விலாசம் எது என்று கேட்டால்.தாம் இருக்கும் ஊர் பெயர்தான் சொல்லும் .ஆகையால் அவ் ஊரில் உள்ள மக்கள் எம் ஊர் மக்கள் அல்லவா,அவ் ஊரில் எம் ஊர் மக்கள் மட்டுமா உள்ளார்கள். இது எனது காலத்தின் கேள்வி இல்லை .எங்கள் பிள்ளைகளின் காலத்தின் கேள்வி .நாளை எங்கள் பிள்ளை இங்கே ஒரே ஊரில் இருந்து கொண்டு.நான் அந்த ஊர் ,இவன் இந்த ஊர் ,அவன் எந்த ஊர், ? என்ற வேற்றுமைகள் தான் வரும் . எமது ஊர் ஒற்றுமையில் மற்றவர்களையும் .
அழையுங்கள்.நாம் தமிமக்கள் என்ற பார்வையில் எல்லோரையும் அழைத்து ஊர் விழாவை நடத்துங்கள்.
. நன்றியுடன் .

கனகசபை விக்கினேஸ்வரன் ( சாந்தையூரன் )

50 Responses to “யேர்மனியில் இருந்து எம்மவர் ஒருவரின் கேள்வி ?”

 • Manithan:

  அட ஏன்டா இப்படி வாக்குவாதம் பன்னிரியல்???இப்ப பண்டத்தரிப்பு ஒன்றுகூடல் நடத்திரிங்க…. கொஞ்சகாலம் போக சாந்தை ,காலைஜடி ,பன்னமுளை என்று துவங்கி எம் ஊரவரிலே பிரிவினவாதத்தை கொண்டுவர்ற வேலைதான் இது.1948 ஆம் வேல்லைஜர் வெளியேரேக்க நாங்கள் ஒற்றுமையை இருந்திருந்தால் ஏன் இந்த வாழ்க்கை எங்களுக்கு இப்ப????? ஏன் 40000 மாவீரர்கலும் 250000 மக்களைஜும் நாம் இழக்கவேண்டும் ???? நாம் வாழும் நாடுகளில் பலதரப்பட்டநாட்டவர்கள் வாழ்கிறார்கள் அவர்களில் நான் இப்படியான ஊர் ஊராய் ஒன்றுகுடல் விடஜம் கேல்ல்விபட்டதிள்ள இப்படியான சின்ன சின்ன தவறுகள் நாளைக்கு எங்களை அழிவுக்கு கொண்டுபோககூடது (1948இல் நடந்ததுபோல ) என்னவோ நாம் தமிழர்கள் என்ற ஒற்றுமையோடு இருக்கவேண்டும்.

  எனது கருத்தில் தவறு இருந்தால் மண்ணிக்கவும்

 • vigneswaran:

  வணக்கம் எம் உறவுகளே !
  ஜேர்மனில் உள்ள அநேகமான எம் உறவுகளுடன் உரையாடிய
  போது வந்த கருத்துக்களின் அடிப்படையில்தான்,இந்த கேள்வியை என் உறவுகளிடம் உலா வர விட்டேன்.
  வணக்கம் நிலா அக்கா.
  எங்கள் உறவுகள் சந்திப்பது என்பது எல்லோருக்கும் சந்தோசம்.உங்கள் ஆதங்கம் புரிகிறது.இன உணர்வுகள் பகிரப்படவேண்டும் .

  வணக்கம் சுதர்சன்!
  உங்களின் ஆதங்கம் புரிகிறது.நீங்கள் சொன்னமாதிரி
  செடிகளை அகற்றி பயனுள்ள மரத்தை பாதுக்காக சொல்லியுல்லிர்கள்.எங்களின் ஏக்கம்
  ஏன் ? அந்த செடிகளையும் சேர்த்து சோலைகளாக உருவாக்கலாம் அல்லவா !
  சுதர்சன் ஒவொரு ஊரவற்கும் சங்கம் இருக்கிறது என்று சொன்னீர்கள் நாமும் அறிவோம்
  அவர்களின் விழாவில் கலந்து கொண்டு பொறமை அடைந்தீர்கள் என்று சொல்லியுல்லிர்கள் .அன்று தோன்றியது உங்களிடம் பொறமை அல்ல,எங்களை பிரித்து
  விட்டார்களே !… எங்களை தனிமைபடுத்திவிட்டர்களே !…..என்ற ஆவேசம் தான் உங்களிடம் அந்த நேரம் தோன்றியது . சுதர்சன் எங்களால் இந்த நகரத்தில் உள்ளவர்களை
  பிரித்துபார்க்க முடியவில்லை.ஏன் எம்மவர் வசிக்கும் நகரங்களான osnabruk ,Hamm போன்ற நகரங்களிலும்.இதே நிலைமைதான். கனடாவில் வசிக்கும் எம்மவரின் நிலை
  வேறு ,அங்கு எம்மவர் தொகை கூட,அவர்கள் கூடுதலாக எம்மவரோடுதான் உறவு வைத்திருப்பார்கள்,மற்ற ஊரவர்களுடன் தொடர்புகள் குறைவாகத்தான் இருக்கும் .
  எங்கள் ஊர் மாதிரி, தேவையோடு பழகுவார்கள் ,இவர்களின் கூடல் புரிந்துகொள்ளக்குடியதொன்று .
  நன்றி சுதர்சன் .

  வணக்கம் சிவானந்தம் அண்ணர்.
  நீங்கள் கூறியமாதிரி பலர் இணையங்களில் வராமல் உள்ளார்கள் ,ஏன் விதண்டவாதம் ,ஏன் எம் உள்ளங்களுக்குள் தர்க்கம் .நான் அறிய எம் பண்டிதர்கள் ஒருவரும் இன்னும் இணையங்களுக்கு வரவில்லை .ஏன் …..?
  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு .
  நன்றி அண்ணா!

  வணக்கம் கிறுக்கண் அண்ணா !
  உங்கள் தமிழ் பற்றுக்கு நன்றிகள் ,
  எனது வேண்டுகோள் உங்கள் புனைப்பெயருடன் வந்தால் உங்கள் கருத்து பலம் இல்லாமல் போய்விடும் அல்லவா!?

  வணக்கம் எந்திரன் அண்ணா!
  எமக்கு ஒரு பிரச்சனையும் இல்லை .எமது ஏக்கம் !இப்போது
  இம் நாட்டில் உள்ள எம் நாட்டு உறவுகளை தனிமைபடுத்தி விடுவோமோ ? அல்லது தனிமைபட்டு விடுவோமோ? அப்படிவந்தால்.எம் சந்ததியினரின் காலம்………..?
  உங்கள் பெயரில் வரப்பாருங்கள் அண்ணா!
  நன்றி .

  வணக்கம் சங்கர் அண்ணா!
  உங்கள் கருத்துக்கள் தான் அநேகமானோரின் விடைகளும் .
  நன்றி அண்ணா !

  வணக்கம் யாழினி !
  நீங்கள் கூறியமாதிரி எவ்வளவோ சந்தர்பங்கள் .
  நன்றி .

  வணக்கம் சந்திரஹாசன் அண்ணா!
  ஒவ்வொருத்தரின் அனுபவங்கள் தான் ( கசப்பான ,இனிப்பான ) வேறுவேறு திசைகளாக வழிகாட்டும் .நீங்கள் பயணித்த பாதையில் எவ்வளவோ ! முற்களையும்,சேறுகளையும் சந்தித்து வந்திருப்பீர்கள் ,நான் அறிவேன் .
  ஆழ்கடலில் முத்து எடுப்பதைபோல்.அண்ணா நீங்கள் கூறியது எல்லா நாடுகளிலும் நடந்திருக்கலாம்,சிலரின் வழிநடத்தல்களில் தவறு இருந்திருக்கலாம் ,அதை வைத்துக்கொண்டு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று இந்த விடையத்தில்
  பார்க்கமுடியுமா! எங்களின் வேண்டுகோள் ! எம் ஊர் விழாக்களில் எல்லோரையும் இணைப்போம் ஊரோடு ஊராக ஒன்றுபடுவோம் .அதில் ஊராக ஒன்றினைவோம்.
  அண்ணா நீங்கள் அனுபவசாலிகள்,பலதும் பார்த்தும் ,படித்தும் ,பட்டும்,தெளிந்தவர்கள் ,
  உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் எம் ஊர் மக்களின் மனச்சாச்சிகளை தட்டும்.
  தட்டப்படுகின்ற மனங்கள்…………..சிந்திக்கத்தொடங்கினால்………அண்ணா கூறுங்கள் !
  நூறு பூக்கள் பூக்கட்டும். அதில் ஆயிரம் வர்ணங்கள் தோன்றட்டும் !
  ஒற்றுமையின் பூங்காவாக மலரட்டும்.- ஒரு
  நாரில் மாலையாக ஜொலிக்கட்டும் !

  நன்றி அண்ணா .

  வணக்கம் சசிமோகன் அக்கா!
  உங்கள் உறவாடல்! புரிந்துகொள்கிறேன்.எங்கள் சமூக அந்தரங்கங்களை உரையாட முடியாது . அதற்காக பிரிந்து நிர்கவா? நான் அறிவேன் சுவிசில் பல அமைப்புக்கள்.
  எனதும் யேர்மன் வாழ் எம் ஊரவரின் கேள்விகளும் .இதுவாகவே இருக்கிறது !

  ஒற்றுமையின் கீல் ஒர்ருமைப்படுவோம் வாரீர்- இம்
  நட்டவர்கு நாம் தமிழர் என பறை சாற்றுவோம் வாரீர்.

  நன்றி .

  வணக்கம் சிம்பு அண்ணா !
  பூர்வீகத்தை மறக்கக்கூடாது எம் தமிழ் ஒற்றுமையை இன் நாட்டில் சிதைக்கக் கூடாது .ஒர்ருமைப்படுவோம்.ஊரோடு ஊராக .

  நன்றி .

  வணக்கம் ஜெனா.
  உங்கள் ஆர்வம்! ஒற்றுமையின் பலம் அறிந்து குமுறியுல்லிர்கள் !
  நன்றி

  வணக்கம் ரட்னராய அண்ணா!
  உங்கள் விருப்பம் எல்லோர் மனதிலும் உள்ள எண்ணங்கள்.
  எங்கள் கிராமங்களை நாங்கள் தான் அபிவிருத்தி செய்யவேண்டும் .இன்றைய எம் நாட்டின் அரசியல் நிலைமை அப்படி.நெதர்லாந்தில் உள்ள எம் உறவுகள் காட்டிய வழிகள்.
  நாம் அறிவோம் போற்றத்தக்கது .அண்ணா தனித்து நிற்போம் என்கிறீர்களா ? பல சங்கங்கள் உருவாகட்டும் என்கிறீர்களா ? நடப்பது நடக்கட்டும் என்கிறீர்களா ?பார்த்தும் பாராமல் போவோம் என்கிறீர்களா ?………….

  நன்றி .

  வணக்கம் சிவானந்தன் அண்ணா !
  மீண்டும் மீண்டும் ஒற்றுமையின் வர்ச்சிக்ககவும் ;
  எம் சந்ததிகளின் தமிழ் ஒற்றுமைக்காகவும் ,தமிழ்………… கக்கப்படவேண்டும்.என்று
  மீண்டும் மீண்டும் கருத்து கூறியமைக்கு நன்றிகள் .

  வணக்கம் சச்சி அண்ணா !
  மண்ணிக்கவேண்டுகிறேன் !

  வணக்கம் குணேஸ் அண்ணா !
  நீங்கள் கூறிய தகவல்கள் ஏன் இப்படி சித்தரிக்கப்பட்டது என்பது எனக்கும் BIELEFELD எம் ஊரவர்களுக்கும் புரியாத புதிராக உள்ளது .நீங்கள் பல காலமாக எம் ஊரவர்களுடன் விவாதித்து வந்துல்லிர்கள் ( HAMM ,OSNABRUK உட்பட )
  ஒவ்வொருவரின் கருத்தும் உங்கள் கருத்துக்கு மறக்கவே இருந்தது .தயவு செய்து எம் ஊரவர் விவாதத்தில் மற்ற ஊரவர்களை சாடவேண்டம் .நீங்கள் சொல்வது போல் ஒட்டுமொத்த எம் ஊரவரும் தூண்டுதல்கள் மூலம் தான் செயல்படுகிரர்களா ?………

  உங்களுடன் சேர்ந்து இருக்கும் அயல் ஊரவர்கள் ,எங்களையும் அழைத்திருக்கலாம் என்று ஊங்களிடம் புலம்பியிருப்பார்கள் .வேண்டம் எம் வீட்டுக்குள், பிளவு வேண்டாம்.

  நாங்கள் கூடத்தான் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் எம் ஊரவர் எல்லோரையும் அழையுங்கள் கூடினால் கூடுவோம் ( நாம் ஊரோடு ஊராக உறவாடுவோம் .)

  எமக்குள் வேண்டாம் முரண்பாடு, அயல் நகரங்களில் இருந்து கூட எம் ஊரவர் ஓடி வரட்டும் ,வருவார்களாயின் ( அண்மையில் அழைப்பிதல் கொடுத்ததும் வரவில்லை )
  முழங்கட்டும் எம் ஊர் சங்கொலிகள். உலகம் முழுவதும் பறை சர்றட்டும் எம் ஊர் இணையத்தளங்கள். வேற்றுமை காட்டுவோம், நாம் பிரிந்து நிற்போம், தனியாக நிற்போம்
  நாளை எமது பிள்ளைகளும் தனித்து நிற்கட்டும் அவர் அவர் நகரங்களில் , ஊர் பெயர்சொல்லி,முகம் மறைத்து ஒளிந்த்திருக்கட்டும் , மறைந்திருக்கட்டும் , இன் நேரத்தில் எம் புத்தியீவிகளின் கருத்துக்கள் எங்கே ?
  காலம் பதில் சொல்லட்டும்………………………..!

  இன்றைய நாள் எல்லோருக்கும் நன்றாக அமையட்டும் .
  நாளைய நாள் அவரவர் விருப்பத்துக்கேற்ப அமையட்டும் !

  நன்றி
  கனகசபை விக்னேஸ்வரன் ( சாந்தையூரன் )

  • பலெர்மோ இருத்து தமிழ் கிறுக்கன்:

   வணக்கம் விக்கி அண்ணா உங்கள் ஆதங்கம் எனக்கு விளங்கிறது சிறு மாற்றத்துக்காக புனைப்பெயரில் வருகின்றேன் எனது இமெயில் முகவரி சொத்த பெயரில்தான் அனுப்புகின்றேன் அதில் எந்த மன்றமும் இல்லை

   உங்களைவிட உயர்ந்தவர் யாருமில்லை;
   உங்களைவிடத் தாழ்ந்தவர் எவருமில்லை!
   ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்!
   வாழ்க தமிழ்! வளர்க தமிழர் உறவு!
   மலர்க தமிழர் ஒற்றுமை!

 • nalla thampi:

  பனிப்புலம் நெட் இந்த கருத்தை என்ன செய்யப்போகிரிகள் .அக்கா யாழினி அவர்களே நீங்கள் ஒப்பின் மர்க்கர்ரை மறந்து விட்டிகளே .வணக்கம் விக்கி அவர்களே இந்த கருத்தை வெளிஜிடும் போது மற்றவர்களின் ஆலோசனையுடன் வெளிடவேண்டும் .நீங்கள் சொல்வதை பார்த்தல் மற்றவர்களின் சொல்லை கேட்டு எங்களையும் நடக்க சொல்வது போல்ஜிருக்கிறது .அப்படி தானே .குனேசின் கருத்தை நான் ஏற்ருக்கொள்கிரின். நன்றி நல்ல தம்பி. பனிப்புலம் நெட் அவர்களே நான் முன்பு எழுதிய கருத்து வெளிவந்தது . ஆனால் மறுபடியும் காணவில்லை .அது ஏன் ?

 • sivanantham.s.:

  உள்ளூரார் உறவோ உள் வீட்டு உறவு
  அது வளர்த்திடும் உற்றார் உறவுதனை!
  மாற்றூரார் உறவோ தாய்மண் உறவு
  அது வளர்த்திடும் தமிழரெனும் இன உறவுதனை!

  வேண்டாம் எமக்குள் பல வாதம்
  வேண்டும் எமக்கு ஓர் வாதம்-அதுவே
  நாமெல்லாம் தமிழரெனும் இன வாதம்
  அது வளர்த்திடும் எம் இன உறவுதனை.
  இன உணர்வோ இணைத்திடும்
  நாமெல்லாம் இழந்த பல உறவுகளை.

  வாழ்க தமிழ்! வளர்க தமிழர் உறவு!
  மலர்க தமிழர் ஒற்றுமை!

 • பண் கு குணேஸ், பீலெவெட்:

  உலகம் எல்லாம் பரந்து வாழ்கின்ற எமது ஊர் உறவுகளே,நாம் இன்று இவ்வளவு உறவுகளும் எல்லா நாடுகளில் பரந்து வாழ்கிறோம் என்றால், அன்று வெளிநாடுகளில் இருந்தவர்கள் எமது ஊர், கோயில்,வீடு சகோதரங்கள் மாமா,மைத்துனர் ஊர் உறவுகள், என்று நேசித்ததால்தான் அவர்கள் அன்று, எங்களோடு இருக்கும்,மற்ற ஊர்மக்கள் தான் எங்களுக்குதேவை, எமது ஊரைவிட்டு வந்ததால் இவர்கள் தான் நமது உறவுகள் என்று எண்ணி இங்குள்ள மற்ற ஊர்மக்களோடு சேர்ந்துதான், எமது கலாச்சாரத்தை வளர்க்கவேணும் என்று எண்ணியிருந்தால்,நாங்கள் அனைவரும் செத்து சுடுகாடு போய்யிருப்போம்.ஜேர்மனியில் இருந்து வந்த கடிதத்திற்கு ஜேர்மனியில் இருந்து பதில் எழதவில்லை என்று ஒரு உறவு ஆதங்கப்பட்டார், ஜேர்மனி பீலெவெல்லைப் பொறுத்தளவில், எமது ஊர் உறவுகள் தன்னிச்சையாக செயல்ப்படுவதற்கும் ஒற்றுமையாக எமது ஊர் உறவுகள் என்று ஒன்று கூடல் செய்வதற்கும், இங்குள்ள மற்ற ஊரவர்கள் ஒருசிலர் மறைமுகமாக எதிர்க்கி றார்கள்,காரணம் அவர்கள் செய்யும் பொதுவிடயங்களுக்கு எமது உறவுகளின் ஒத்துழைப்புதேவை,காரணம் நாங்கள் வாழம் நாகரத்தில் பெரும்பான்மையனவர்கள் எமது ஊர் உறவுகளே, இவற்றை உணராத எம் ஊர் உறவுகளின் ஒருசிலர் அவர்கள் சொல்லும்வார்த்தையே பொன்னானது என்று எண்ணி அவர்களின் பின்னால் கொடிபிடித்து நிற்கி றார்கள்! இப்படி நிற்கும் எமது ஊர் உறவுகள் சிந்திக்கவில்லை வேறுநாடுகளில் உள்ளவர்கள ஒவ் வொரு ஊருக்கும் சங்கம் அமைத்து, நாட்டில் உள்ள தமது ஊர்மக்களுக்கு, உதவி செய் கிறார்கள், இங்குள்ள ஒருசிலர் மறைமுகமாக எதிர்க்கும் காரணம் இவர்கள், தமது ஊர் தமது ஊர் ஒன்று கூடல் என்று தன்னிச்சையாக செயல்பட்டால், தங்களோடு சேர்ந்து செயல்படமாட்டார்கள், என்ற ஆதங்கத்தினால் மறைமுகமாக எதிர்கிறார்கள், தமது கைக்குள் எமது ஊர் உறவுகள் ஒருசிலரைவைத்துக்கொன்டு எதிர்க்கிறார்கள், ஏன் எமது ஊர் சட்டத்தரணி சோ தேவராசாவின் வரவேற்பு,கௌரவிப்பு விழாவிற்கு தங்களுக்கு, ஏன் அறிவிக்கவில்லை,நிங்கள் உங்கட ஊர் என்று தனியக செயல்படக்கூடாது, என்று கேள்விகள் மற்ற ஊர் உறவுகள் கேட்டார்கள், எமது ஊர் உறவுகளுக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி பிரித்து,பார்க்க நினைக்கிறர்கள், இதனை உணர்ந்து எமது ஊர் உறவுகள் எமது ஊர் எமது பிள்ளைகள் எமது ஊர் உறவுகளோடு சேர்ந்து பழகவேணும் என்று என்னி செயல்படுவோம் வருங்கள்,பீலெவெல்ட் வாழ் எமது ஊர் உறவுகளே,நாம் மற்ற ஊர் உறவுகளின் செயல்பாட்டுக்கும் ஒத்துழைப்பு வழங்கி, எமது ஊர் உறவுகளின் சங்கமங்களில் ஈடுபட பணிவக வேண்டுகிறேன், இங்கு நடந்த வரவேற்பு, விழாவிற்கு இணையத்தளங்கள் மூலம் வாழ்த்து செய்திகள் அனுப்பிய அனைவருக்கும் நன்றிகூறி. விடாத மழைபெய்தாலும் அடாத நாடகம் நடந்தே தீரும், என்ற கூற்றுக்கு இனங்க, ஒன்று கூடல் நிகழ்வுகள் தொடர்ந்து நடத்த முயற்ச்சி செய்வோம் என்று கூறி விடைபெறும் உங்கள் உறவு
  பண் கு குணேஸ், பீலெவெட்

  • சச்சி:

   சபாஸ் அப்படி சொல்லுங்கள் குணேஸ்.இப்போளுதல்லவா உண்மை தெரிகிறது.

  • நந்தன்:

   ஐயா உங்களால் முடியாது என்றால் ஏன் ஐயா மற்றவர்களை வம்புக்கு இழுக்கின்றீர்கள். உங்களால் முடியாது என்று சொன்னால் நாங்கள் ஒன்றும் கோபிக்க மாட்டோம்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   உங்கள் இயல்பான சிந்தனை எனக்கு நன்றாக பிடித்துள்ளது: `பீலெவெல்ட் வாழ் எமது ஊர் உறவுகளே,நாம் மற்ற ஊர் உறவுகளின் செயல்பாட்டுக்கும் ஒத்துழைப்பு வழங்கி, எமது ஊர் உறவுகளின் சங்கமங்களில் ஈடுபட பணிவக வேண்டுகிறேன்`

   Bielefeld நகரத்தில் வேறு ஊரவர்களோடு எப்படி சேர்ந்து வாழ்கிறார்களோ, அதே போல் தான் வேறு புலம்பெயர் நாடுகளிலும் எங்கள் ஊரவர்கள் வேறு ஊரவர்களோடு சேர்ந்து வாழ்ந்துகொண்டு ஒன்று கூடல்களையும் செய்தபின்னும் வேறு ஊரவர்களோடு தொடர்ந்து சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

   எங்கள் ஊரவர் ஒன்றுகூடல் என்றவுடன் தமிழர் என்று பரந்து யோசிக்கிறோம் – வரவேற்ககூடிய பொதுநலம்!
   எங்கள் பிள்ளைகளுக்கு கல்யாணம் என்றவுடன் எங்கள் ஊர்வட்டத்தை விட்டு யோசிக்கமாட்டோம் – எமது ஊர் என்ற சுயநலம்! அப்பொழுது மட்டும் நாம் தமிழர் என்ற பரந்த மனப்பாங்கு…….

 • Ratnarajah:

  புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்ற என‌து அன்பான ஊரவர்களே புலம் பெயர்ந்து நாம் வாழ்ந்து வருகிற ஒவ்வொரு நாடுகளிலும் எமது ஊரவர்களின்ஒன்றுகூடல்கள் நடத்துவது மிகவும் நன்று. அத்தோடு எமது சிறார்களின் வளர்ச்சிக்கும்,எங்களிடையே இருக்கின்ற ஒற்றுமை மிகவும் பலப்படுவதற்க்கும் எமது ஊரவர்களின் ஒன்றுகூடல்கள் மிக மிக‌ அவசியம். மேலும் எமது ஊரின் வளர்ச்சிக்கு, அபிவிருத்திக்குஎமது ஊரவர்தான் உதவிசெய்வார்கள். எமது ஊரின் வளர்ச்சிக்கு வேறு ஊரவர் உதவமாட்டார்கள்.பொதுவாக .நமது ஊரவர்க்கும்,உறவினர்க்கும்நாம் தான் நல்லதை செய்யவேண்டும் .புலம் பெயர்ந்த தேசங்களில் இருந்து எமது ஊரவர்கள் சங்கங்கள் அல்லது அமைப்புகளை உருவாக்கி நாம் பிறந்தமண்ணுக்கு, எமது ஊரில் ஒரு தொழிற்பேட்டை , மாலை நேர வகுப்புக்கள், சிறந்தபாலர்பாடசாலைகள். எமது இளைஞர் ,யுவதிகள். சிறுவர்கள் வழிதவறிப்போகாமல் இருக்க ஒரு சிறந்த ஒரு விளையாட்டுத்திடல்,நல்ல பொழுதுபோக்குகள் முதியோர் பராமரிப்பு போன்றவற்றை நாம்தான் எமது ஊருக்கு செய்யவேண்டும் . குறிப்பாக பல நாடுகளில் எமது ஊர்ச்சங்கள்
  பல உண்டு .அனைத்து நாடுகளிலும் எமது ஊரவர் திறம்பட இயங்குகிறார்கள். புலம்பெயர்ந்த தேசங்களில் எமது ஊரவர்,உறவுகள் சாதனைகள் பலபடைக்க ஊரவரின் ஒன்றியங்கள் ஊன்றுகோலாக நிற்க வேண்டும்.. மேலும் குறிப்பாக கனடா ,நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருக்கிற எமது ஊர் ஒன்றியங்கள் சிறந்த முறையில் எமது ஊரின் வளர்ச்சி நோக்கி சிறந்த முறையில் செயலாற்றுகிறார்கள். அவர்களுக்கு நன்றிகள் . இதேபோல் எதிர் வரும் காலங்களில் வேறு நாடுகளில் இருக்கின்ற எமது ஊரவர்களின் ஒன்றியங்கள் இணைந்து செயலாற்றுவார்கள் நம்பிக்கை உண்டு.மேலும் எமது ஊரவர்களின் இணையத்தளங்கள் அனைத்தும் மிகவும் திறம் பட சேவையாற்றுகிறது.அவர்களுக்கும் நன்றிகள்.
  அன்பான எமது ஊர் உறவுகளேஎமது ஊரின் வளர்ச்சி நோக்கி
  எல்லோரும் ஒன்றுகூடி ஒற்றுமையாய் தேர் இழுப்போம்
  வாருங்கள்
  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு –நம்மில்
  ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
  நன்றிது தேர்ந்திடல் வேண்டும் ——-இந்த‌
  ஞானம் வந்தாற்பின் நமக்கேது வேண்டும்

 • nalla thampi:

  கருத்து சுகந்திரத்திற்கு நன்றி . பனிப்புலம்.நெட் அன்புடன் நல்ல தம்பி .

  • admin:

   இதில் பேசப்படும் விடயம் முக்கியமானது உங்கள் பெயரை தெளிவாக எழுதவும்

 • எழிச்சித்தமிழன் ஜெனா (ஜேர்மனி):

  அன்பான அண்ணன் விக்கினேஸ்வரனுக்கு எனது வணக்கம். அண்ணா உங்கள் செயற்பாடு எங்களை மிகவும் மகிழ்வுக்குள்ளாக்கிறது. ஏனென்றால் ஜேர்மனிய தேசத்திலே இவ்வளவு காலமும் எம்மவர் ஒன்றுகூடல் நடைபெற்றதாக வரலாறு இல்லை. அதற்கும் அருமையான காரணம் சொன்னீர்கள். உண்மைதான். நீங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவு மிகவும் காத்திரமான முடிவாகும். அனைத்து ஊர்மக்களையும் ஒன்றிணைத்து தமிழர் என்ற தேசிய இன அடையாளத்தின் கீழ் நிகழ்வுகளை நடத்த எண்ணியது மிகவும் உன்னதமானது. தமிழனாக நீங்கள் எடுக்கும் எந்த முயற்சிக்கும் இந்த தமிழன் துணை நிற்பான். அன்பார்ந்த உறவுகளே தமிழன் பெருமைப்படும் விடயங்களில் ஈடுபடுங்கள். தமிழ் வரலாறுகளை உங்கள் அடுத்த சந்ததிக்கு கொண்டுசெல்லுங்கள். தமிழ் வீரர்களை பெருமைப்படுத்தும் விடயங்களில் ஈடுபடுங்கள். தமிழரை ஒன்றிணைத்து தமிழ் விழாக்களை நடாத்தி தமிழை பெருமைப்படுத்துங்கள். நடாத்த முடியாவிட்டாலும் நடத்துபவர்களை உற்சாகப்படுத்துங்கள். இது தான் என் உறவுகளே இக்காலத்தின் தேவையாக இருக்கிறது. அண்ணா நீ போராடு உனக்குப்பின்னால் நாமிருப்போம்.
  எம் தமிழுக்காக போராடி வீழ்ந்த வீரர்களது கனவுகள் எம்மை வழிநடத்தட்டும்.
  வாழ்க தமிழ்……. வெல்க தமிழர்……….. எழிச்சித்தமிழன் ஜெனா (ஜேர்மனி)

  • mayuran:

   ஜெனா நீ சொல்ல வந்த விடயம் கடைசி 2 வரிகளில் உள்ளன அல்லவா?

 • simbu:

  பூா்வீகத்தை மறக்கக்கூடாது தலைவா

 • தங்களின் கேள்விக்கு எனது கருத்து
  1.ஒரு குடுபத்தில் அந்தகுடும்ப அங்கத்தவர்கள் அல்லாத ஒருவர் இருந்தால் நாங்கள் சுதந்திரமாக இருக்கமுடியுமா?
  அதனால்தான் நாங்கள் எங்கள் உறவுகளிடம் மாத்திரம் உறவாட ஒருநாள்
  2.இங்கு எல்லா ஊர் மக்களும் இப்படிச் செய்கறார்கள் இரண்டு ஊர்ரவர்கள் தம்பதிகள் என்றால் அவர்களக்கு இரண்டு கொண்டாட்டம் நான் இரண்டு கொண்டாட்ட்திற்க்குப் பலகாரம் செய் வேன்.
  3.சகோதரி குறிப்பிட்டது போல் பாடசாலை கோயில் கொண்டாட்டம் என்று சந்திப்பது அதன்அதன் தேவைகளுக்குத்தான் சந்திக்கின்றோம் இப்படிஒருநாள் சந்தித்துப் பாருங்கள் அதன்சுவை உங்களுக்குப் புரியும்.
  4.எங்கள் உறவுகளின் திறமைகளை வெளிக் கொண்டுவர ஒரு சுதந்திரமான தளத்தினை அமைத்துக் கொடுக்கவேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது.

  விக்கி தாங்கள் நினைத்தால் முடியும்
  5.சுவிஸ் எங்களுடைய ஒன்றுகூடல் முலம் எங்கள் இளைய தலைமுறை ஒன்று பட்டுள்ளது அவர்கள் ஆர்வத்தினை எழுதுவது என்றால் நேரம் போதாது.
  6.நாங்கள் யாரும்மற்ற ஊரவர்களை ஒதிக்கி வைக்கவில் தாயும்பிள்ளையும்
  எ ன்றாலும் வாயும்வயிறும் வேறுதானே
  சசிமோகன்

 • CHANDRAHASAN::

  தம்பி விக்கி
  உங்கள் பதிலுக்கு நன்றி. என்னுடைய அனுபவமும் கருத்தும் வேறாக இருக்கிறது. நான் சிட்னியில் குடியேறிய காலத்தில் எல்லா தமிழ் கலை கலாசார நிகழ்சிகளும் ஒரே அமைப்பினாலேயே நடத்தப்பட்டது. தமிழ் கல்விநிலயங்களும் கோயிலும் மட்டுமே அவர்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருந்தது. அவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்ச்சித்து இயலாததால் தங்கள் அமைப்புக்கு கீழே ஒரு
  ோயிலையும் தமிழ் பாடசாலையையும் அமைத்தது உளைத்துக்கொண்டனர்.

  அவர்களுடைய சினிமாத்தனமான மூன்றம்தரமான நாடகங்களை பார்த்து கவலை கொண்ட நானும் எனது நண்பர்களும் இணைந்து 1992 இல் சிட்னி தமிழ் அரங்கக் கலைகள்+ இலக்கிய பவர் என்ற அமைப்பை உருவாக்கி ஈடு எனும் மூன்று மணித்தியால நீண்ட நாடகமொன்றை அரங்கேற்றினோம். இது தமிழர்களின் ஒற்றுமையை குலைக்கும் செயல் எனவும், வேண்டுமானால் தங்கள் அமைப்பின் ஊடாக மேடையேற்றும்படியும் கூறி சாம பேத தான தண்டம
  ஆகிய எல்லா வழிகளிலும் எம்மை தடுக்க முயன்றனர்.

  இதனால் பயம் விட்டுப்போன பல துறைகளிலும் ஆர்வமுள்ள தமிழர்கள் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி போட்டி போட்டுகொன்று தமிழ் கலை கலாசாரத்தை வளர்க்கத் தலைப்பட்டனர். ஒரே அமைப்பின்கீழ் செயல்பட்டிருந்தால் மாற்று கருத்துள்ள திறமை மிக்கவர்கள் வெளியிலே வந்திருக்க மாட்டார்கள். எமது கலையும் பண்பாடுகளும் மலடு தட்டிப்போய் புதிய சமுதாயத்தால் தூக்கி வ
  ீசப்பட்டிருக்கலாம். ஒருவரின் அல்லது ஒரு அமைப்பின் சர்வதிகாரத்தின் தோல்விகளை சமகால உலக அரங்கில் தரிசித்துக் கொண்டிருக்கும் இந்தக்காலத்தில் நாங்கள் தொடர்ந்து அதை இறுகப் பிடித்து அழியவேண்டுமா?

  நூறு பூக்கள் பூக்கட்டும். ஆயிரம் சிந்தனைகள் மோதட்டும்.

  • பலெர்மோ இருத்து தமிழ் கிறுக்கன்:

   வணக்கம் சந்திரஹாசன் அண்ணனே அல்லது நண்பனே
   1எனது கேள்வி யார் அத்த திறமை மிக்கவர்கள்? இப்போது என்ன செய்கின்றேர்கள்
   எதை நோக்கி செல்வர்கள்
   2 எனது கேள்வி தற்போது எமது நாட்டில் கலையும் கலாச்சாரமும் தல விரித்து அடுகின்றேது இது உங்களுக்கு தெரியாத அல்லது தெறித்தும் தெரியாத மாதிரியா?
   3 எனது கேள்வி இப்பிடியான கலாசாரத்தைய எதிர் பார்த்திர்கள் நாட்டில் வாழ்க
   4 விக்கினேஸ்வரன் அண்ணா அவர்களே!
   முதற்கண் நன்றிகள் எமது உறவார் சங்கம் அமைக்கும் பொது மற்ற ஊரவர்களையும் இணைத்து ஒன்று குடினால் மிகவும் சிறப்பு அவர்களும் எமது ஒருதாய் பிள்ளைகள்தான் அச்சம் மில்லை அச்சம் மில்லை அச்சம்என்பது இல்லையா………………… நீ பெரியவர் நான் பெரியவர் என்பத விட …………………….அது

   • CHANDRAHASAN:

    ஏதோ காரணங்களால் பனிப்புலம் நெட் இணைப்பு சில வாரங்கள் கிடைக்கவில்லை. அதனால் உடன் பதிலளிக்க முடியவில்லை. இன்றைய கலாசாரங்கள் நேற்றைய நிகழ்வுகளில் விளைவே. கட்டறுத்து விட்ட இன்றைய கலாசாரத்தை உடனடியாக மாற்ற முடியாது. இன்று நாம் செய்யும் செயல்களே நாளைய எமது கலாசாரத்தை தீர்மானிக்கும். கல்வியில் பின்தங்கிய பிரதேசமாக கணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்த வருடம் முழு நாடிலும் கணிதத் துறையில் முதல் மாணவனையும் உயிரியல் துறையில் இரண்டாவது மாணவனையும் தந்திருக்கிறது. இது யாழ்பாணம் மீண்டும் எழுச்சி பெரும் என்பதை கட்டியம் கூறுகிறது. வெயிலுள்ளவர்கள் தங்கள் சுய நல அரசியலுக்கு அவர்களை பலிகாடாக்காமல் இருந்தாலே போதும்.
    நீண்டதாயினும் கனடா பன் ஒளிக்கு எழுதிய கட்டுரை கேழே.
    அபிவிருத்தியும் புலம்பெயர்வும்
    அபிவிருத்தியின் தேவை ஈழத் தமிழர்களிடையே இன்னும் சரியாக உணரப்படாமையால் மீண்டும் அது பற்றியே எழுதவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    போர் முடிந்த இன்றைய சமாதான காலத்திலேயே தாயகத்தில் வாழும் இளம் சமுதாயத்தின் நிலைப்பாடு பற்றி நம்பிக்கையற்ற கருத்துக்களை இணையங்கள் எங்கும் காணலாம். வெளிநாட்டு பணம் இளையோர் பொறுப்பற்ற வாழ்க்கையை நாடுவதற்கு காரணமாகிறது என்பது பலரின் வாதம். அதேவேளை பொறுப்புள்ள அறிவுள்ள ஆற்றலுள்ள இளையோர் மேற்கு நாடுகளுக்கு புலம் பெயருவதையே இலட்சியமாக கொண்டுள்ளனர். ஒரு பிரகாசமான எதிர்காலம் பிறந்த நாட்டிலே கிடைக்கும் என்பதில் அவர்களுக்கு எந்த நப்பிகையும் இல்லை. அண்மையில் நடத்தப்பட்ட பேராசிரியர் சிறி கேடரிகேயின் ஆய்வுகளின்படி 50 % மான இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புகின்றனர். மூன்றில் ஒரு இலங்கையர்கள் நிரந்தரமாகவே வெளிநாடுகளில் குடியேற விரும்புகின்றனர். தமிழர்களை பொறுத்தவரை இந்த விகிதாசாரம் இன்னும் அதிகமானது. கொழும்பிலுள்ள IIS நிறுவனத்தில் வெளிநாடு செல்வதக்கேன்றே தமிழ் இளையோர் பயிற்சி பெறுகின்றனர். இவர்களோடு நடாத்தப்பட்ட நேர்காணலில் அவர்களின் ஒரே நோக்கம் வெளிநாடு செல்வதே என தெரிவித்தார்கள்

    நாங்கள் கல்வி கற்ற வேளைகளில் ஒரு சிலரை தவிர எல்லோரும் தாயகத்தில் வேலை செய்யவே விரும்பினார்கள். வெளிநாடு செல்வதற்கு பயிற்சி கொடுக்கும் கல்வி நிறுவனங்கள் பற்றி நாம் கேள்விப்பட்டதேயில்லை. இன முரண்பாடுகள் கூர்மை அடைந்த காலத்தில் நாட்டுக்காக உழைக்க விரும்பிய தமிழ் புத்திஜீவிகளும் நாட்டை விட்டு வெளியேறினர். தீவிர தேசப்பற்று கொண்ட சிலரும் வெளிநாடுகளுக்கு போக இயலாதோரும் எஞ்சியிருக்க மற்றவர்கள் நாட்டை விட்டு விலகினர்.

    இன்று முழு தேசமும் குறிப்பாக வடக்கும் கிழக்கும் புத்திஜீவிகள் பற்றாக்குறையால் திட்டமிட்ட அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க முடியாமல் திண்டாடுகின்றன. பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் இப்போது படிக்கின்ற திறமைமிக்க இளைஞர்களும் வெளிநாடு செல்வதிலேயே குறியாய் உள்ளனர். இது ஈழத்த்தில் தமிழ் மக்களின் தொகையை மேலும் குறைக்கவும், கல்வி அறிவற்ற வலுவில்லாத சமுகமாக எமது இனம் மாறவும் காரணியாகிறது. ஏற்கனவே பல்கலைகழக அனுமதி சனத்தொகை விகிதாசாரத்தில் குறைவாகவிருப்பதால் யாழ்பாணம் கல்வியில் பின்தங்கிய பிரதேசமாக கணிக்கப்படுகிறது.
    முன்னர் கல்வி கற்ற யாழ்ப்பாணத்தவர் இலங்கையின் பல பகுதிகளிலும் பணி புரிந்து அப்பகுதிகளின் அபிவிருத்தி பணிகளின் முக்கிய பங்குதாரிகள் ஆயினர். ஆனால் இன்று யாழ்பாணத்தை அபிவிருத்தி செய்ய அந்த நாட்களில் பின்தங்கிய பிரதேசங்களாக கருதப்பட்ட சிங்கள கிராமங்களிலிருந்து பொறியியளார்கள் தொழில்நுட்பவியலாளர்கள் வைத்தியர்கள் வருகின்றார்கள். தமிழ் புத்திஜீவிகளின் புலம்பெயர்வு இவ்வாறே தொடருமானால் சிங்கள புத்திஜீவிகள் வடக்கிற்கு இடம்பெயர்ந்து அதை அபிவிருத்தி செய்யவேண்டிய கட்டாயம் உருவாகும்.

    அங்குள்ள திறமை மிக்க இளையோரை இங்கு வரவேண்டாம். தாயகத்துக்கு சேவை செய்யுங்கள் என வெளிநாட்டிலே வசிக்கும் புலம்பெயர் மக்களால் கேட்கமுடியாது. ஆனால் இன்றைய சூழலில் புலம்பெயர்ந்த தமிழர்களால் அவர்கள் வெளிநாட்டிற்கு செல்லும் தேவையை இல்லாமல் செய்யமுடியும். புத்திஜீவிகள் வெளிநாட்டிற்கு செல்வதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று தங்களுடைய அறிவையும் ஆற்றலையும் வளர்க்கக்கூடிய வாய்ப்புக்கள் தாயகத்தில் இல்லை. இரண்டாவது தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை வளமாக அமைக்கக்கூடிய வசதிகளும் வாய்ப்புகளும் தாயகத்தில் இல்லை
    இந்த இரண்டையும் வழங்கக்கூடிய வல்லமை புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உண்டு. பல பில்லியன் டொலர்களை போருக்கு செலவளித்தவர்களால் சில பில்லியன் டொலர்கள் அபிவிருத்திக்கு செலவழிக்க நிச்சயமாக முடியும். அபிவிருத்தி வேலைகளுக்கு அரச உதவிகளில் தங்கியிருக்க வேண்டிய அவசியமுமில்லை. அதன் காரணமாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டிய தேவையும் இல்லை. அந்த பொருளாதார சுதந்திரமே மக்களுக்கு அரசியல் சுதந்திரத்தையும் அரசியல் அதிகாரத்தையும் வழங்கும். பொருளாதரத்தில் பின்தங்கிய மக்கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்படுவதே உலக வரலாறு.
    கிராமிய மட்டத்தில் புலம்பெயந்தவர்கள் உதவியுடன் அபிவிருத்தி செய்வதில் நிர்வாக சிக்கல்கள் அதிகம் இருக்க முடியாது. மேலும் உதவி செய்பவர்கள் தங்கள் பங்களிப்பின் பயனை நேரடியாக காணக்கூடியதாக இருப்பதால் திருப்தி கொள்ளுவர். புலம் பெயர்ந்த தமிழர்கள் விடுமுறையில் ஊருக்கு போகும்போது தாங்கள் பழைய நினைவுகளை மீட்டு புத்தாக்கம் பெற கோயில்கள் கட்டுவதோடு நிற்காமல் தாயகத்து மக்கள் மீட்சிபெற, அங்குள்ள பிள்ளைகளும் எங்கள் பிள்ளைகள் போல் தங்கள் அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள தேவையான உள்கட்டுமானங்களை உருவாக்க உதவவேண்டும். அங்குள்ள மக்களும் தங்கள் சுயங்களை களைந்து தேவைகளை உணர்ந்து உதவிகளை உரிய முறையில் பயன்படுத்த முனையவேண்டும். இவ்வாறன கிராமிய மட்டத்திலான அபிவிருத்தி முடுக்கி விடப்பட்டால் அங்குள்ள புத்திஜீவிகளுக்கும் பெரு வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் வெளிநாடு செல்லவேண்டிய தேவையும் அற்றுப்போகும். பின் ஒருநாள் புலம் பெயர்ந்தவர்களும் மீண்டும் தாயகம் செல்லும் நிலை ஏற்படலாம்.
    அன்றாட வாழ்விற்கே அல்லல் படும் தாயகத்து மக்களுக்கு இந்த ஆடம்பரங்கள் தேவையா என கேட்கலாம். மறு மலர்ச்சி மன்ற அபிவிருத்தி திட்டத்தை பார்வையிட்ட சிலர் அவர்களுக்கு நீச்சல் தடாகம் எதற்கு என வினாவியதாக அறிந்தேன். அனாதைகளுக்கு உதவுதலும் அன்னதானம் செய்ததும் ஒரு இடைக்கால தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளாகவே கருதப்படவேண்டும். எப்போதும் அவர்கள் அனாதைகளாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதோ, இருக்கவேண்டும் என விரும்புவதோ உதவி செய்பவர்களின் நோக்காக இருக்காது. அவர்களும் எங்களை போல அல்லது எங்களை விட மேலாக வளரவேண்டுமேன்பதே எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கும். இன்றைய உலக போக்கில் அது நிச்சயமாக நடக்கும். அதை விரைவாக்குவதே எங்கள் பணி. அந்தப் பிள்ளைகளும் எங்கள் பிள்ளைகள் போல் நீச்சல் தடாகத்தை எப்படி பபடுத்துவது என்பதை கற்று எமக்கு உபதேசிக்கும் காலம் விரைவில் வர உதவுவோம்.

    தூர நோக்கற்றதும் சுயநலம் மிக்கதுமான அரசியல் தாயகத்திலும் புலம்பெயர் தமிழ் சமூகத்திலும் ஆதிக்கம் செலுத்துவது துரதிச்டவசமானதே. இருந்த போதும் மானுட நேயமும் தடைகளை கண்டு தளராத சித்தமும் கொண்டால் ஒவ்வொரு கிராமத்தவரும் தங்கள் கிராமங்களை அன்னியர் உதவி இல்லாமல் மேற்கு நாடுகளுக்கு இணையாக வளர்ப்பதன் மூலம் நாம் இழந்த பெருமைகளை மீளப் பெறுவதோடு பொருள் வளத்திலும் மனித வளத்திலும் முன்னேறிய சமுகமாக வளர்வதன் மூலம் அரசியல் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம். மாறாக எதையும் செய்யாமல் இருப்பவர்களையும் வெளிநாடுகளுக்கு ஓடுவதற்கு காரணமாக நாம் இருப்போமாயின் மனித வளமும் பொருளாதார வளமும் குன்றிய பின்தங்கிய ஈழம் ஒன்று உருவாக நாம் காரணமாவோம்.

    • புலத்தில் இருந்து ஒரு பாணத்தான்:

     1) ஆம், போர் முடிந்தது ஆனல் அது தொடங்கிய காரணங்களுக்கு தீர்வுகாணப்படவில்லை.
     (புத்தரின் தர்மம் இதுதான் எண்டால்? கூட்டமைபையும் ஓஓஓஓ பிரச்சனை முடிஞ்சுது)
     2) இன்றய ஒரே ஒரு பலம் புலத்தில் இருக்கும் தமிழன்
     3) ஊங்களுக்கு வசதிகளும் தொரிவுகளும் கிடைத்தபடியால் நீங்கள் இன்று இந்த நிலமையில் இருக்கிறீங்கள். ஆனல் எங்களுக்கு?
     4) புலத்தில் உருவான புத்திஐpவிகள் இனப்பற்று, தேசப்பற்று மனிதபிமானம் கொண்டவர்கள்.
     5) ஆம் அந்தக்காலத்தில் தமிழரில் சிலர் தென்பகுதியில் கடமை அற்றினர், ஆனல் அவர்களால் அங்கு தமிழர்களக வேர் ஊண்ட முடியவில்லை. ஆனால் இன்று?
     6) தீர்வு கணப்பட்டால் புலத்தில் உருவான புத்திஐpவிகள் நாட்டுக்குச்சென்று உதவ காத்து இருக்கின்றனர்.

     • CHANDRAHASAN:

      இதற்க்கு பதிலளிப்பது மிகப்பெரிய அரசியல் விவாதமாகிவிடும். எது சரியான மார்க்கம் என்பதை வரலாறுதான் தீர்மானிக்க வேண்டும். மதவாதம் இனவாதம் தேசிய வாதம் எல்லாமே பிற்போக்கானது என்பது எனது கொள்கை. அரசின் இனவாதச் செயல்கள் எங்கள் இனவாதத்தை நியாயப்படுத்திவிட முடியாது. ‘தீதும் நன்றும் பிறர் தர வார’ என்ற தமிழ் வாக்கிலும் எனக்கு நம்பிக்கை உண்டு. அது தனிப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல இனத்துக்கும் நாட்டுக்கும் பொருந்தும். தவறு செய்வது இயல்பு. தனிபட்டவர்களுக்கும், இனத்துக்கும், நாட்டுக்கும் பொருந்தும். புத்திசாலிகள் தவறை இனம்கண்டு திருந்திக்கொள்ள முயலுவார்கள். முட்டாளோ தனது தவறுகளுக்கும் தோல்விகளுக்கும் மற்றவர்களே காரணம் என மேலும் தவறுகளை செய்து தோல்விகளைஅடைவான். புலம் பெயர்ந்த தமிழர்களின் உணர்வுகள் நியாயமானவை. ஆனால் அவர்களை வழிநடத்தும் தலைவர்களின் நேர்மை அறிவு ஆற்றல் கேள்விக்குரியது. இவர்களில் பலர் சொந்த நாட்டில் இருக்கும்போது மக்களுக்கு எதுவும் செய்யாதவர்கள். தாங்கள் உண்டு தங்கள் குடும்பம் உண்டு என புத்தகமும் கையுமாக அலைந்தவர்கள். தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் வளமான வாழ்கையை வெளிநாடுகளில் அமைத்துவிட்டு பொழுதுபோக்காக அரசியல் செய்பவர்கள். இவர்களை பயன்படுத்தி மேற்குநாடுகள் இலங்கையை தங்கள் பிடிக்குள் கொண்டுவர முயல்கிறார்கள். மீண்டும் நாம் வேறு எவருடைய தேவைக்காக தமிழா நலன்களை பலியிடப்போகிறோம். இதை நன்கு உணர்ந்த படியால் இந்தியாவோ மேற்கு நாடுகளோ தங்களை பாவிக்க அனுமதிக்கவில்லை. இப்போது இவர்கள் எங்கள் இனத்தை விற்று பிழைப்பதை தடுக்க தாயகத்தில் ஒருவருமில்லை. இதற்க்கு ஆதாரம் தேவையானால் பினோருமுறை வருகிறேன்.

 • Yalini T.:

  நாம் தமிழ் பாடசாலையின் மூலம் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒன்று கூடுகின்றோம்…..
  வாணி விழாவின்போது ஒன்று கூடுகின்றோம்…..
  விளையாட்டுபோட்டி அன்று ஒன்று கூடுகின்றோம்…..
  ஒவ்வொரு வெள்ளியும் விசேட தினங்களில் கோவிலில் ஒன்று கூடுகின்றோம்…..

  இதுவும் ஒரு காரணம்…

  • எந்திரன்:

   சகோதரி யாழினி & கனகசபை விக்னேஸ்வரன் ( சாந்தையூரன் )
   நாம் ஒன்று கூடும் இடங்களை சூப்பர சொன்னிங்க போங்க ….
   அந்த இடங்களில் ஒன்றுகூடி அடுத்த வீட்டில் என்ன என்பதை கதைக்கவே தவிர
   வேறு நல்ல விடயம் ஒன்றும் நடப்பதாக நான் உங்கள் நாட்டில் கேள்வி படவில்லை .
   இந்த விடயத்தில் உங்களுக்கு சம்மதம் இல்லை என்றால் , இது பிடிக்காத உங்களை போன்ற அதி புத்திசாலிகளாக கருதிக்கொள்ளும் நல்ல மனம் படைத்தவர்கள் விலகி நின்று இதில் ஈடுபாடு உள்ள உறவுகள் ஒன்று கூடுவதை வேடிக்கை பார்த்தல் சிறப்பாக இருக்கும்
   இதை புரிந்து கொள்வது உங்களைபோன்ற நல்லவர்களுக்கு மிக்க சிரமம்

   எந்திரன்

   • sankar:

    ஐயா எந்திரன் அப்படியான அறிவாளிகள் யார் என்று சொல்லுங்கள்..பார்போம். எல்லாரும் தானுண்டு தன்னுடைய வீடு உண்டு என்று திரிகின்றார்கள்.ஊர் பெருமை பேசித் திரியும் சில பெரியாக்களுக்கு ஒன்றும் தெரியாது.அவர்கள் மேடையில் எமக்கு சம்மந்தம் இல்லாத விடயங்களை பேசி எமது நேரத்தை வீணாக்குவதே அவர்கள் தொழில்.

    இன்றைய காலகட்டத்தில் நாங்கள் எமது மொழியை பேசி பழக பெரிய கடின படுகின்றோம். அப்படிக் கிடைக்கின்ற நண்பர்களையும் ஊர் சங்கம் என்று சொல்லி நீங்கள் நடாத்தும் களியாட்டத்திற்கு வந்து நாம் இழக்க வேண்டுமா என்னா….

  • Jessy:

   இவை அனைத்தும் எதற்கான காரணங்கள்?

 • பலெர்மோ இருத்து தமிழ் கிறுக்கன்:

  அண்ணா விக்கினேஸ்வரன் அவர்களே!
  ,புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாய் மொழியாம் தமிழ் மீது கொண்டிருக்கும் பற்றுக்கும், முதற்கண் நன்றிகள்.

 • Sivanantham.si:

  தம்பி விக்கினேஸ்வரன் அவர்களே!
  முதற்கண் உமது கருத்துக்கும், ,புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாய் மொழியாம் தமிழ் மீது கொண்டிருக்கும் பற்றுக்கும், முதற்கண் நன்றிகள்.
  உமது கருத்தினை முதற்கண் பார்த்தவுடன் எனது நன்றியைத் தெரிவிக்க நினைத்தேன் ஆனால் ஊரவர் இணையங்களின் அதிகரிப்பும், இதனால் வளர்ந்து வரும் கருத்து வேறுபாடுகளும், ஒற்றுமையீனமும், சற்று வெறுப்பினை உருவாக்கி விட்டது.எனினும், உமது கருத்துக்கு கருத்து எழுதியவர்களுக்கு இன்று நீர் பதில் அளித்திருக்கும் விதம் உமது புத்தி சாதுரியத்தையும், திறனையும் சிறப்பாக வெளிக்காட்டி நிற்கின்றன. உம்மைப்போல் திறன்கள் பல கொண்ட மக்கள் பலர் நம்மிடையே வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓரூரார் என்ற சிற்றறிவைச் சிதைத்துவிட்டு நாமெல்லாம் தாய் மொழியாம் தமிழால் ஒன்றுபட்ட தமிழர் என்ற உணர்வை நம்மிடையே வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களுடனும் இணைந்து, தமிழர் என்ற உணர்வை உலகிற்கு உணர்த்துவதுடன், எமது எதிர்காலச் சந்ததியினராகிய பிள்ளைகளுக்கும் புரிய வைக்க வேண்டும். ஊரவர் ஒன்று கூடல் என்பது நாம் தமிழர் என்ற உணர்வை எமது பிள்ளைகளிடையே வளர்க்காது என்பது எனது பணிவான கருத்தாகும்.
  நன்றி!

 • vigneswaran:

  வணக்கம் எம் உறவுகளே !
  உங்கள் கருத்துக்களுக்கு என் நன்றிகள் ,ஜேர்மன் நாட்டில் இருந்து கருத்துக்களை எதிர்பார்த்தேன்………வரவு குறைவு .

  எனது பதில்கள் .

  வணக்கம் தமிழன் அண்ணன் .தமிழ் சாகவில்லை நீங்களே உங்கள் பெயரில் சூடியுல்லிர்கள் .

  வணக்கம் சந்திரகாசன் அண்ணர் அவர்களே !
  உங்களை எனக்கு தெரியாது ;ஆனால் உங்கள் பல கருத்துக்கள் என்னை ஈர்த்துள்ளன .

  நீங்கள் கூறியது போல் சங்கம் ஒன்று இந்த நகரத்தில் திறப்போமகயிருந்தால் தமிழர்கள் என்ற பெயரில் இந்த நாட்டில் ஒவ்வொரு ஊரவற்கும் சங்கம் திறக்கவேண்டும்.இந்த நாட்டவர் , யார் இவர்கள் என்று கேக்கமட்டர்களா ? அண்ணர் எங்கள் வேண்டுகோள் எல்லா நாடுகளிலும் ஊரவர்களின் பெயர் சொல்லி, ( சுதர்சன் கூறியது போல் எல்லாரையும் அழைத்து செய்யலாம் தானே ?) தமிழர் சங்கம் ஒன்று . அதில் பல ஊரவர் உண்டு , ஒவ்வொரு ஊரவற்கும் ஒவ்வொரு கிளை . அவர் அவர்கள் அந்த பெயரின் கீல் அந்த அந்த ஊர் வளர்சிகளை முன்னெடுக்கலாம் அல்லவா ,சிக்கலான காரியம் ஆனல் முடியும் , அண்ணா, நான் வேண்டாம் என்று கூறவரவில்லை, எமது ஊர் முன்னேற்றம் எங்களிடம் தான் உள்ளது.நாட்டின் நிலைமை அறிந்த சமூக நோக்கம் கொண்ட எல்லாருக்கும் தெரிந்திருக்கும். சதீஸ் கூறியது போல் எங்கள் ஊர் தெருக்கள் ,பள்ளிகள் ,
  கிராம நிலையங்கள்.அனைத்தும் ………….! அண்ணா…!அன்மையில் நடந்த திரு .தேவராசா ( சட்டத்த்ருணி ) அவர்களையும் சமூக நோக்குடன்,வரவேற்றோம். அந்த நேரத்தில் உருவான கேள்விகள் தான் இது . அண்ணா நீங்கள் எனக்கு பதில் தருவீர்கள் .நன்றி .
  இது எனது ஊர் ஒற்றுமையை சீர் குலைப்பது என்று அர்த்தப்படாது . வேற்று நாட்டில் இருக்கின்றோம்,தமிழன் என்ற பெயரில் இருக்கின்றோம் ,இம் நாட்டிலாவது ஒற்றுமையை கடிப்பிடிப்போம் .

  வணக்கம் மனிதன் . நீங்கள் நியம் தானா? நன்றி .

  வணக்கம் நிவாஸ் அண்ணா !
  நீங்கள் கூறியது போல் கட்டியகோபுரம் உடைந்துவிட்டது .
  நாங்கள் தான் கறையன்களாக இருக்கவேண்டும் .மீண்டும் எழுப்புவதற்கு . சதீஸ் கூறியது போல் இங்கு உள்ள ஊர் கிராமங்களின் ஒற்றுமையுடன் எல்லாம் நடந்தால் நன்று . நீங்களும் அதைத்தான் கூறியுல்லிர்கள்.எல்லாரையும் அனைத்து நடத்துங்கள் என்று . நன்றி நிவாஸ் அண்ணர்.

  வணக்கம் சச்சி அண்ணா .
  வணங்குகிறேன் .சச்சிகள் பல, அதில் நீங்கள் யார் என்பது எனக்கு தெரியவில்லை.எந்தவொரு விசயமானாலும்.நிதானமாக,மற்றவர்கள் பாப்பார்கள். எப்படி
  ஒரு விஷயத்தை ஒருவருக்கு கூறினால், எப்படி அதை எடுத்துக்கொள்வர் ,என்பதை தெரிந்துகொண்டு.மற்றவர் மனசு நோகாமல் சொல்லவேண்டும் . இதுதான் மற்றவர்க்கு கருத்து கூறும்போது கடைப்பிடிக்கப்படவேண்டும் .அதற்காக ஒருவர் மனம் நோப்படும் மாதிரி எழுதக்கூடாது ( கையாலாகத்தனம் ).சந்திரகாசன் அண்ணர் கூறியதுபோல் இருக்கவேண்டும் . இது எனது வேண்டுகோள் . நீங்களும் சமூகத்துக்கு ஏதாவது ஒரு விதத்தில் தொண்டு செய்பவர்களாக இருக்கலாம்.

  வணக்கம் எந்திரன் .அண்ணா. உங்கள் முகம் தெரியவில்லையே !

  வணக்கம் சதீஸ் .
  நீங்கள் யாராக இருக்கும் என்று நினைத்து ,சொல்லுகிறேன் .நீங்கள் சொல்கிறீர்கள் குறிச்சிகளாக கூடவேண்டும் என்று .வேண்டாம் சதீஸ் நாம் பண் மக்கள் .
  எமது ஆணி வேர் பணிப்புலம். காரணம் எண்கள் சமூகத்தில் ஆரம்பத்தில் எந்தவொரு விசயமானாலும்.பணிப்புலம் பெயர் சொல்லித்தான் ஆரம்பிக்கும் ,எந்த இடத்துக்கு போனாலும் பணிப்புலம் என்றால் எல்ல்லோருக்கும் தெரியும் . ஏன் வெளிநாடுகளில் கூட
  பணிப்புலம் என்றால் பற்றிக்கொள்ளும் .பணிப்புலம்,கலையடி ,சாந்தை ,கலட்டி .அனைத்தும் “பண்” என்ற பதத்துக்குள் அடங்கப்படும் .பண் என்றால் ,பாட்டு,பதப்படுத்தல்,பணிசெய்தல் ,என்று பல.வேண்டாம் சதீஸ்.
  நன்றி ,

  வணக்கம் அற்புதன் அண்ணா ,
  தானாக திருன்தவிடில் சமூகம் திருந்தாது,
  யோசியின்கள் அற்புதன் .என்ன செய்யலாம் என்று .
  நன்றி.

  வணக்கம் சுதர்சன் .
  நாங்கள் இங்கு கூடி வாழ்கிறோம்,எங்கள் கூழ் பாணையை நாமே உடைப்பதா ?.திரு .தேவராசாவின் ஊரவர் சந்திப்பு படங்கள் பார்த்திர்களா ?பகீரதன் அண்ணர் கருத்து சொன்னார் .எல்லாம் தெரியாத முகங்கள் என்று .ஆனால் அறியாதவர் ?…..பலர்.
  நன்றி .

  வணக்கம் தமிழன் அண்ணா !
  முதல் ஒரு தமிழன் வந்தார் .இது வேறுஒருவர் என்று
  நினைக்கிறேன் .ஜெர்மனில் உள்ளவர்களின் பார்வை வித்தியாசமாக இருக்கும் .
  காரணம் அவர்கள் பரந்து இருக்கிறார்கள் .பக்கத்துவீட்டில் கூழ் குடிப்பார்கள் ..
  நன்றி . ( எனது வேண்டுகோள் உங்கள் பெயரில் வரப்பாருங்கள் .)

  வணக்கம் நியாயம் அவர்களே !
  மறைந்து வந்தபடியால் நீங்கள் யார் என்று தெரியவில்லை .நன்றி
  நியாயம் கூறியது போல் ஜெர்மனில் வசிப்பவர்களின் கருத்து பொருத்தமாக இருக்கும் .
  எம்மவர் கருத்து எங்கிருந்தாலும் எம் சமூகத்தின் கருத்தாகத்தான் இருக்கும் .

  வணக்கம் சுள்ளான் அண்ணர் .
  ஒருவர், ஒரு சமூகம், ஒரு விஷயத்தை ஆரையும்போது
  ஏன் சின்னப்பிள்ளைத்தனம்.முகத்தை மறைத்து ஏன். இங்கேயும் முகமுடியா…….

  வணக்கம் புயல் அண்ணர் ! நன்றி .உங்கள் கருத்துக்கு நன்றி .
  மக்கள் ஒற்றுமை வேண்டும். -எம்
  இன மக்கள் ஒற்றுமை வேண்டும் .-பாரினில்
  தமிழ் சொல்லவேண்டும் -பல்
  கலை படித்தவன் பறைசர்ரவேண்டும் .-அவன்
  ஊருக்கு உளைத்தகவேண்டும்.-உள்
  நோக்கம் அற்றவராகவேண்டும்,

  நன்றி .
  கனகசபை விக்னேஸ்வரன் ( சாந்தையூரன் )

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   நேரம் ஒதுக்கி எல்லாருக்கும் பதில் அளித்துள்ளீர்கள் – பாராட்டக்கூடிய விடயம்.
   உங்கள் தமிழுணர்வும், ஜேர்மனியில் தமிழர்களை ஒருமைப்படுத்த முயல்வதற்கும் தலைவணங்குகிறேன் – இந்த விடயத்தில் நானும் உங்களுடன் இணைகிறேன், மாற்றுக்கருத்தும் எதுவும் இல்லை.

   உங்கள் கருத்துக்களில் இருந்து எனக்கு தெளிவாவது என்னவென்றால் நீங்களே ஒரு வட்டத்தை கீறிவிட்டு அதனுக்குள்ளேயே செயல்பட முயல்கிறீர்கள் என்பது, கீறிய கோடு அழிந்துவிடுமோ என்ற பயத்தில் ஒரு முயற்சியுமே வேண்டாம் என்கிறீர்கள் (Alles oder Nichts | Everything or Nothing).
   நீங்கள் நினைப்பது ஆகப்பெரியளவில் – ஆரோக்கியமான சிந்தனை, அதை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்றால் பல காலங்கள் தேவை, அதற்கும் எங்காவது ஒரு தொடக்கம் தேவை. தொடக்கங்கள் வழமையாக பெரும்பான்மையினராலேயே சின்னனாக இயற்றப்படும். Bielefeld (/Osnabrück) இல் எமது ஊரவர்களே பெரும்பான்மையினர் வாழ்கிறார்கள் என்ற காரணமே அதற்கு போதும் என்று நினைக்கிறேன்.

   பல கிளைகள் விட்டு வளர்ந்து நிற்கும் மரங்களும் ஆரம்பத்தில் அவை செடிகளாகத்தான் வளர்ந்திருக்கும் என்பது நான் உங்களுக்கு சொல்லி விளங்க வேண்டிய அவசியம் இல்லை. என்ன செடிகளை கூடுதலாக பொருள்படுத்தமாட்டோம் அவை எமக்கு உடன் பயனளிக்காததால், இல்லையேல் வழமையாக எமது பேச்சுக்களில் ‘ஆலச்செடி’, ‘அரசச்செடி’, ‘புளிச்செடி’ எனக்குறிப்பிடுவோம். இவை தானாக வளர்வன, நாமாக ஒரு பெரிய மரத்தை பயனுள்ளதாக உருவாக்க வேண்டுமாயின் அந்த செடியை யாராவது நட முன்வர வேண்டும். இல்லையேல் எமக்கு வெறுப்பற்ற மரங்கள் எம்மைச்சுற்றியே தானாக சோலைகளாகிவிடும் என்ற அபாயமும் உள்ளது இல்லையா?

   ஊரவர் ஒன்றியங்கள், ஒன்றுகூடல்கள் என்பது எமது ஊரவர்கள் பலருக்குத்தான் புதிசு. வேறு ஊரவர்கள் இதை பல காலமாக தமக்குள் நிகழ்த்திவருகிரார்கள். நானும் ஒரு சிலதில் கலந்திருக்கிறேன், தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன், பொறாமையும் அடைந்திருக்கிறேன். இந்த கலாச்சாரம் எமது ஊரவர்கள் அறிமுகப்படுத்தியது அல்ல.
   அறியாத முகங்கள் தெரியாத முகங்களாகவே இருந்தும் போயவிடலாம், சந்தர்ப்பங்கள் உருவா(க்)காவிடின். இப்பொழுது ஒரு சில முகங்கள் தான் அறிமுகம் இல்லாதவை இந்த தலைமுறையில் இந்த சந்தர்ப்பத்தை நாம் உருவாக்காவிடின் அடுத்த தலைமுறையே அறிமுகம் இல்லாமல் சிதறிப்போய்விடும்.

   ஒரு சில விடயங்களில் எம்மை மாற்றவேண்டிய நிர்ப்பந்தங்கள் உண்டு.
   (வேறு ஊரவர்கள்) எல்லாருடனும் சூழ்ந்திருந்து கூடி கூழை குடிப்பதை மாற்றாதீர்கள், மண்சட்டியை மட்டும் மாற்றிவிடுங்கள் அது உடையும் அபாயத்திலிருந்து தப்பவைக்கலாம்.

   • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    வெறுப்பற்ற = வெறுப்பேற்றும்.

  • சச்சி:

   மிக புத்திசாலி தனமாக பதில் சொல்லியிருக்கிறீர்கள்?தம்பி விக்கினேஸ்வரன் அவர்களே என்று ஒருவர் தென்ஜா கூட போட்டிருக்கிறார்.

 • nila:

  ஒன்று கூடல் எனும் பெயரில் ஏற்கனவே வளர்த்த வயிற்றை இன்னும் கொஞ்சம் வளர்க்கிறதும் லொள்ளு விடுறதும் தவிர ஒரு வேளை உணவுக்காக அங்கே ஏங்கி நிற்க்கும் எம் உறவுக்காக ஏதாவது செய்தோமா இல்லையே

  • mayuran:

   இதுதான் அண்ணா உண்மையான (original ) ஈழதமிழனுடைய கருத்து…
   ..உங்களுக்கு இந்த சிறியவனுடைய பாராட்டுக்கள்

 • புயல்:

  எமது தலைவன் இருக்கும் பொது இல்லாத சங்கம் இப்போ எங்கிருத்து முளைத்தது “யேர்மனியில்உள்ள தோழர்கள் ஊருக்கோ இனத்துக்கோ நாட்டுக்கோ எதிராக இல்லாமல் அமைதியாக இருக்க விருப்பிகின்ரர்கள் 20 வருடத்துக்கு முதல் பாசமாகவும் அன்பாகவும் பழகியவர்களைய் இப்ப முளைத்த சங்கம் பிரிப்பத சொல்லுங்கள் எம் மக்களே யாமிருக்க பயமேன் ???? பூனே இல்லை என்றால் எலிக்கு கொண்டண்டம் புயல்

  • தம்பி புயலே என்னா—-ல தாங்க——–முடியாம இருக்கப்பா—-.ஏன் தம்பிஈஈஈஈஈ என்ன ஆச்சு.கண்ணா இப்படியெல்லாம் எழுதக்கூடாது ராசா—.அடி சாரதா இந்த தம்பிக்கு சற்று விளக்கம்கொடடி.புயலே கோழி முட்டை போட்டால் உடையாது கண்ணா,ஆனா நாங்கள் முட்டை போட்ட உடைஞ்சுடும் கண்ணா உடைஞ்சிடும்.சங்கம் தொடங்கினால் தப்பில்ல ராசா.இந்த பட்டாங்கத்தி பைரவனோட கழகத்தில முட்டாளுக்கு இடமுண்டு ஆனா கோழைக்கு இடமில்ல.

 • என்னுடைய பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு.சங்கம் தொடங்குகிறீர்கள இல்லையோ எனக்கு இன்னும் இரண்டுநாளில் முடிவு வரவேண்டும்.இல்லையேல் நான் உவ்விடம் வரவேண்டிவரும்.என்னுடைய ஒரு பக்கத்தைத்தான் உங்களுக்குத் தெரியும்.மறுபக்கத்தை பார்க்க முற்பட வேண்டாம். அதை என்னாலையே சகிக்க முடியாமல் இருக்கின்றது.வறட்டா

 • Niyayam:

  எனது அன்பான ஊரவர்களுக்கு வணக்கம்,

  விக்கி அவர்கள் கூறிய கருத்தை ஏன் அவர் அப்படிக் கூறினார். அவர்கள் வாழும் நகரத்தில் உள்ள தமிழர்களிடம் உள்ள கட்ட அமைப்பு என்ன,. அவர்கள் புலம் பெயர்ந்து வந்த காலத்தில் இருந்து எப்படி வாழ்கிறார்கள், இவ்வளவு காலமும் அந்த நகரத்தில நிகழ்வுகள் ஒன்று கூடல்கள் எப்படி நடை பெற்றுள்ளது என்பதை கருத்தில் கொள்ளாமல், கையில வந்த படி கணனியில் எழுதுவது நியாயம் இல்லை என்பது என்னுடைய கருத்து. இது வரைக்கும் யேர்மனியில் உள்ள சம்பத்தப் பட்ட யாரும் கருத்துக் தெரிவிக்க இல்லை, மற்றும்படி மற்றைய நாட்டில வசிப்பவர்கள் தான் யேர்மனியில் உள்ளவர்களுக்காக முடிவு எடுக்க முன்வருகிறார்கள். இது வரைக்கும் யேர்மனியில் வசிக்கும் எமது ஊரவர்கள் எல்லா விதத்திலும் மிகவும் செழிப்புடன் தான் வாழ்கிறார்கள், கல்வியாக இருக்கட்டும், பணமாக இருக்கட்டும், உற்றார் உறவினருக்கு உதவி புரிவாதாக இருக்கட்டும். ஆகவே அவர்கள் தங்களுக்கு சரியான முடிவு எடுத்து செயல் படும் திறமை அவர்களிடம் உள்ளது.

  நன்றி
  நியாயம்

  • சச்சி:

   நியாயமே இல்லாமல் நியப்பெயரில் வராமல் வந்த நியாயமே நியாயமாகச்சொல்லும் உங்கள் இடத்தில் நியாயமான பிரச்சனை அதுதானா?அல்லது பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பிரச்சனையா?

 • thamilan:

  தம்பி விக்கியின் கருத்தை நான் ஏற்றுகொல்லுறேன் . நாங்கள் இந்த ஊரில் ஒரு குறீபிட்ட மக்கள்தான் இருக்குறோம் கிட்டதட்ட 25 வருடமாக ஒன்றித்தான் இருக்குறோம் இதில் இருந்து நாங்கள் பிரிந்து செயல்பட்டால் நன்றாக இல்லை . கடந்த வாரம் எமது இடத்தில நடந்த கௌரவிப்பு விலாவையும் நான் கண்டிக்குறேன் .காரணம் இளம் வயதில் அந்நிய மொழி படித்து அதில் என்க்னியரிங் பட்டம் பெற்றும் பின்பு கலாநிதி பட்டம் பெற்ற பகிதரனுக்கு ஏன் ? ஒரு கௌரவிப்பு விழ நடத்தவில்லை ? பகி எந்த உர்? பணிபுலத்தில் யாராவது ஒரு என்க்னியரிங் இருக்குரரா ?அல்லது சுத்து வட்டராத்தில கலாநிதி பட்டம் பெற்றவர் இருக்குறார ? ஜெர்மனியில் கலாநிதி பட்டம் பெறுவது என்றால் இலகுவனகரியம் இல்லை (ஜெர்மன் அரசியல்வாதி ஒருவர் கலாநிதி பட்டம் களவாக பெற்றதால் பதவி விலகியவர் )இதை நான் வன்மையாக கண்டிக்குறேன் , நாம் முதலில் தமிழராக ஒற்றுமையாக இருப்போம் .30 – 35 வருடமாக ஒற்றுமையா எம்மை கட்டி கார்த்த தமிழன் இல்லாத காரணத்தால் மீண்டும் பிரிவுகள் தலை துற்குது ,

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  விக்கி அண்ணோய்,
  மத்திய ஐரோப்பாவிலே பெரிய நாடு ஜேர்மனி. ஐரோப்பாவிலேயே எமது ஊரவர்கள் கூட வாழும் நாடுமாகவுள்ளது. மேற்கத்தேய நாடுகளில் கனடாவிற்கு பின் ஜேர்மனியிலேயே எமது ஊரவர்கள் கூட வாழ்கிறார்கள். அதுவும் நீங்கள் வாழும் Bielefeld ஐ சொல்லவே தேவையில்லையே. வேறு ஊரவர்கள் Bielefeld ஐ குட்டிப்பணிப்புலம் என்று குறிப்பிடுவதை கேட்டிருக்கிறேன். படத்தில் admin ஆல் தரப்பட்ட பெரிய கேள்விக்குறிபோல் இந்த பெரிய நாட்டில் ஊரவர் ஒன்றுகூடல் உருவாகாதா?

  கிழக்கு ஜேர்மனி, மேற்கு ஜேர்மனி என (முதலில்) இருந்தது, அவற்றில் பல மாகாணங்கள் உண்டு, பல Stads உண்டு, அவற்றில் பல Kreisen உண்டு, அவற்றில் பல தெருக்கள் உண்டு, பல வீடுகள் உண்டு. இந்த வரிசை நீங்கள் இறுதியில் உங்களை ´சாந்தையூரான்´ என்று அடையாளப்படுத்தியது போல் ஜேர்மனிய நாட்டின் வெறும் சில அடையாளங்கள் மட்டுமே. இந்த அடையாளங்கள் ஜேர்மனிய நாட்டினை பிரிவினையாக்குபவை அல்ல – ஜேர்மனிய நாட்டினை ஒருமைப்படுத்தும் சின்னங்களே.

  Bielefeld இல் பாடசாலைகள் பலதுண்டு, அப்பாடசாலைகளில் வேறு வேறு விளையாட்டுக்கழகங்கள் இருக்கும் அந்த கழகங்களுக்கு இடையில் ஆரோக்கியமான விளையாடுப்போட்டிகள் இடம்பெறும். விளையாட்டுக்கள்தான் போட்டிகளாக இருக்கும், விளையாட்டு நிகழ்வுகள் கழகங்களின் ஒற்றுமையாலேயே இடம்பெறுகிறது. ஒரே நகரம், ஒரே பாடசாலை, ஒரே கழகம் என்பது நடைமுறையாகாது.
  இதேபோல் Bielefeld இல் McDonalds 🙂 இம் உண்டு, BurgerKing ம் உண்டு (இது உங்களுக்கு மட்டும்தான் விளங்கும்).

  Oxford University யில் தமிழில் சாதனை புரிந்து அடையாளம் பொறித்த நாளைய தலைமுறையினர் இன்னும் ஒரு சில வருடங்களில் Autobahn இல் Bielefeld ausfahrt பலகையை தமிழிலும் குறிப்பிட வைப்பது சாத்தியமாகலாம்.

  பெருமைமிக்க இன்றைய தலைமுறையினர் ஒன்றுகூடி 40,000 தமிழருக்கு உணவு ஆக்கி பரிமாறும் வல்லமையுள்ள எமது Bielefeld ஊரவர்களுக்கு ஊரவர் ஒன்றுகூடல் செய்வது ரஜினி சொல்வதுபோல் ஒரு ஜுயுப்பி வேலையப்பா. வேறு ஊரவர் கலந்து கொள்ள விரும்புகையில் அவர்களையும் சேர்ப்பது பெரிய விடயமா இங்கு? ஒன்றுகூடல விளையாட்டுகளில் அவர்களை நடுவர்களாக உபயோகிப்பது அவர்களை கெளரவிப்பதுபோல் அமையும்.
  தயக்கம் வேண்டாம் உங்கள் ஒன்றுகூடல் திகதியை வலு விரைவில் அறிவிக்கவும். நாங்களும் கலந்துகொள்ள முயல்கிறோம்.

 • Why this kolaveri:

  என்ன நம் ஓன்று குடுவதில் இவலவுகுள்ளபம் சீலர் குருவதிபோல் இங்கு மற்றவரக்ல் நமை
  இல்லிவுடனும் போரமிசுடனும் தன பகுரர்கல் !Why this கொலைவெறி

 • அற்புதன்:

  நிறைய பேர் உலகம் இப்படி இருக்கிறதே, மனிதர்கள் இப்படி இருக்கிறார்களே என்று புலம்புவார்கள். இவர்கள் எப்போதுதான் மாறுவார்களோ, இவர்கள் எப்படித்தான் திருந்துவார்களோ என்று கூறுவார்கள். ஆனால் உலகத்தை மாற்ற முயற்சிப்பதை விட, நம்மை மாற்றிக் கொள்ள முயற்சிப்பதுதான் சிறந்தது.

 • எந்திரன்:

  ஒரு ஒன்று கூடல் செய்ய இவ்வளவு கதை விடுகிரியல் …
  நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறியள் ?????
  உங்களை நினைத்தாள் சிரிப்பு வருகிறது .
  நீங்கள் பெரிய பெரிய அறிவாளிகள் ,
  ஐயோ ஐயோ ( வடிவேலு ஸ்டைல் )
  எந்திரன்

 • Sathees:

  விக்கி நங்கள் இங்குதான் நங்கள் எல்லாம் ஒன்று என்று நினைக்கிறோம்.அனல் நங்கள் உருக்கு சென்றால் பணிபுலாதர் பணிபுலோதர்த்தன்.சந்தை மக்கள் சந்தை மக்கள்தான். விக்கி சாந்தை ஒன்ருகுடல் செய்தல் நன் சேந்து முதல் அழகா ஒத்துழைப்பேன்.எந்த ஒரு ஒன்ருகுடல் என்றால் அது எமது உருக்கு பிரிஜோசனமாக இருக்கனும். எமது மக்கள் கோவிலுக்கு பணத்தை அள்ளி கொடுகிறார்கள்.அனல் எமது உரில் இரவுகளில் விதிகளில் விள்ளகுகள் இல்லை.எமது கிராமம்துகு அடிப்படை வசதிகளை செய்துகொடுகனும் .
  நன்றி sathees

 • சச்சி:

  எப்படி உமக்கு ஒரு தாய் தந்தையோ.எப்படி உமக்கு ஒரு சகோதரன் சகோதரியோ.எப்படி உமக்கொரு குடும்பம் இருக்கிறதோ.அப்படி உமக்கொரு ஊரும் இருக்கிறது அந்த ஊருக்குள் உமக்கொரு சொந்தங்களும் இருக்கிறது.வருடம் 365 நாட்களில் ஒரு நாளை தெரிவு செய்து அந்த உறவுகளோடு கூடல் நடத்துவதில் தவறே இல்லை.அதை விட்டு பொருத்தம் இல்லாத காரணங்கள் கூறுவது உமது கையாலாகாத்தனத்தை வெளிக்காட்டுகிறது.

 • நா.சிவாஸ்:

  தமிழன் சாகும் வரை தமிழ் சாகாது.
  தமிழன் சாகாமல் தமிழ் தலையெடுக்காது.

  எம்மவர் ஒன்றுகூடல்
  எனக்கு சின்ன வயசிலை நடந்தசம்பவம் ஒன்று ஞாபகம் வருகின்றது. நான் பள்ளிக்குப் போகேக்கை றோட்டிலை சின்ன கறையான் புத்து கிடக்கும். அதை காலாலைதட்டிப்போட்டுப் போவன் பின்னர் பள்ளியாலை வரேக்கிள்ளை அதேஇடத்திலை அந்தக்கறையான் பாதிப்புத்துக் கட்டிப்போடும். அதைபற்றி சிந்திக்கும் வயசு அப்போது இல்லை. ஆனால் இப்போது உள்ளது.
  நாம் கட்டிய கோபுரம் இடிந்துவிட்டது என்பதற்காக. கொட்டில் கூட கட்டாமல் இருப்பதா? இப்படியே எமது சமூகத்தை தெருனிலே விடுவதா? பருத்தி பருத்தியாக இருந்தால் சேலையாக முடியாது. திரிக்கப்பட்டு தூலாக்கி. பின்னர் இணைக்கப்பட்டால் தான் செலையாக முடியும். என்பதை தாங்கள் அறியாததா?
  யேர்மனி ஓர் பெரிய நாடு. சமூக நோக்கம் கொண்ட நீங்கள் அங்கு வாழ்கின்றீர்கள். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. சிந்தியுங்கள். செயல்படுங்கள்.
  எம்மவர் ஒன்றுகூடல் ஓர் முதல்படி இதில் மற்ற ஊரவர்களையும் இணைப்பதில் தப்பென்ன உள்ளது. அவர்களும் மனிதர்கள் தானே.
  அன்புடன்.
  நா.சிவாஸ்.

  • பலெர்மோ \த..சங்கர்:

   உங்களுக்கு கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா

 • Manithan:

  They go very well together .விக்கி அன்ன

 • CHANDRAHASAN:

  இன்றைய உலகின் பிரதான முரண்பாடான பிராந்திய உலக கலாச்சாரங்களை எவ்வாறு கையாள்வது என புரிந்துகொண்டால் இதற்கு எளிதாக விடை காணலாம். மேற்கு நாடுகளில் குடியேறிய தமிழர்கள் தங்களுக்கென சங்கங்கள் அமைத்து தங்கள் கலாசாரங்களை இங்கே இறக்குமதி செய்யும்போது அதை வெள்ளையர்கள் எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள். பரந்த அறிவும் மனமும் இல்லாத வெள்ளையர்கள் எரிசலடைவார்கள். சட்டப்படி எதுவும் செய்ய முடியாமைக்காக மனம் புளுங்குவர். பரந்த மனமும் அறிவும் கொண்ட வெள்ளையர்கள் அதை அனுமதிப்பதோடு மற்ற கலாசாரங்கள் நாட்டின் ஒரு அங்கமாக ஏற்று வேற்றுமையில் ஒற்றுமை என பெருமை கொள்ளுவர்.

  அதேவேளை எம்மவர்களும் வெள்ளையர்களின் கலாசாரம் கேவலமானது என பிள்ளைகளின் மூளைகளில் உருவேற்றாமல் எல்லா கலாசாரமும் சமன் என்ற உணர்வோடு எமது கலாசாரத்தை பேணும்போது நல்ல சமுதாயத்தை உருவாக்கியவர் ஆவோம்.
  இதுபோலவே மற்ற ஊரவருக்கு எதிராக இல்லாதவிடத்து ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சங்கம் அமைப்பதும் மற்ற பாடசாலைகளுக்கு எதிரில்லாமல் ஒவ்வொரு பாடசாலைக்கு ஒரு சங்கம் அமைப்பதும் ஒற்றுமையை வளர்க்குமே ஒழிய கெடுக்காது. அந்த எண்ணக்கருத்தில்தான் மேற்கு நாடுகளின் வந்தேறிய மக்களின் பண்பாடுகளை பேண அரசே உதவி செய்கிறது. ஒன்றிலிருந்து என்னொன்று கற்றுக்கொள்ளும்.

  ஆனால் ஒரு ஊருக்கு எதிரான எங்கள் ஊருக்கு சங்கம் அமைப்பதும் ஒரு இனத்துக்கு எதிராக எங்கள் இனத்துக்கு சங்கம் அமைப்பதும் ஒரு நாடுக்கு எதிராக எங்கள் நாட்டுக்கு சங்கம் அமைப்பதும் பிற்போக்கானது, ஒற்றுமைக்கு எதிரானது, மனித குலத்துக்கு விரோதமானது.

  ஒரு ஊருக்கோ இனத்துக்கோ நாட்டுக்கோ எதிராக இல்லாமல் சங்கம் அமைப்பது ஒற்றுமையை குலைக்கும் என அடுத்தவர் கருதினால் அதற்க்கு அவரின் குறுகிய சுயநல புத்தியே காரணம், அக் கருத்துக்களுக்கு இடம் கொடுத்தால் அது இக் குறுகிய மனம் படைத்தவர்களையே ஊக்குவிக்கும்.

 • தமிழன்:

  உங்கள் கருத்தெல்லாம் கேட்க நல்லாய் இருக்கும். நடை முறைக்கு சாத்தியப்படாது. தமிழ் செத்து நிறைய காலமாய் விட்டு.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து