உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பொருளாதார ஒன்றியமாக மாற்றாவிட்டால் இன்று தோன்றியுள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாதென்று ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலும், பிரான்சிய அதிபரும் கடந்த சில தினங்களாக கூறிவந்தார்கள். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு கடனைக் கொடுத்துவிட்டு அவர்கள் போன போக்கிலேயே விட்டால் கொடுத்த பணத்தையெல்லாம் நாசமாக்கிவிட்டு மறுபடியும் தலையை சொறிந்தபடி நிற்பார்கள். ஆகவே யூரோ நாணயத்தை அடிப்படையாகக் கொண்ட 17 நாடுகளுக்கும் முதற் கட்டமாக பொருளாதார யூரோ வலயம் ஒன்றை அமைப்பது அவசியமானது. வெறுமனே கடன் கொடுத்த நாட்டை மட்டும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் அது பாரபட்சமாக அமையும், ஆனால் பொதுவான பொருளாதார யூரோ வலயம் பாகுபாடற்றதாக இயங்கும் என்றும் கூறப்பட்டது. இந்த விடயத்தில் தற்போது தலைவர்களிடையே ஓர் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதில் உள்ள முக்கிய விதிகள் வருமாறு : 01. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். 02. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது வரவு செலவுத்திட்டத்தை ஒழுங்குபடுத்தும் போது 0.5 வீதத்திற்கு மேலோ கீழோ பற்றாக்குறை போகக்கூடாது. 03. அனைத்து நாடுகளுக்கும் சமமான விதிகளே இருக்கும் 04. பற்றாக்குறை 3 வீதத்தை தாண்டினால் தண்டம் விதிக்கப்படும் 05. பெரியளவில் பற்றாக்குறை ஏற்பட்டு உதவி பெற்ற நாடுகள் யூரோ கமிசனின் ஆலோசனைகளை பெற்று பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக புறுக்சல்சில் நடந்த மாநாட்டின் பின்னர் தலைவர்கள் இந்த இலக்கை எட்டித் தொட்டுள்ளனர். சுனாமியில் சிக்குப்பட்ட நாய் அதை எதிர்த்து நீந்தவா முடியும் என்ற நிலையில் நீரோடு போவது போல நாடுகள் வேறு வழி தெரியாது இழுவுண்டு போவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து