உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

அப்துல் கலாம் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை(படங்கள், ஒலிவடிவம்)

37 Responses to “யாழ்பாணத்தில் அப்துல் கலாம்”

 • Niyayam:

  அன்பான உறவுகளே,

  இதில் நடக்கும் கருத்து பரிமாற்றத்தை பார்க்கும் பொது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  மதிப்புக்குரிய சந்திரகாசன் அன்னார குறும் கருத்து மிகவும் கவனத்தில் எடுக்கப் பட வேண்டியவை என்பதில மாற்றுக் கருத்து இல்லை, அனால் இவரின் கருத்து வேண்டும் என்றால் புத்த பகவான் அல்லது இயேசு பகவான் அல்லது காந்தி அடிகள் வாழ்ந்த காலத்திற்கு பொருத்தமாக அமையலாம், அனால் ம***** மற்றும் தன்னலம் கொண்ட மேற்கத்திய அரக்கர்கள் அதிகமாக வாழும் காலத்திற்கு துளியளவும் பொருந்தாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இந்தப் பெரியவரின் கருத்து காதுக்கு கேட்க இனிமையாக இருக்கலாம், அனால் நடைமுறைக்கு பொருத்தம் அற்றது. ஆயுதம் ஏந்தி போராடிய காலத்தில் உங்களுடைய வழிமுறையில தமிழனுக்கு சம உரிமை பெற்றுக் கொடுக்க உங்களால் முடியாமல் இருந்தது என்ற கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று வைப்போம், அப்படியானால் இன்று ஆயித போராட்டம் அமைதி உறங்கி முன்று வருடங்கள் ஆகின்றன. இந்தக் காலத்தில யாரால் எதை தமிழர்களின் நலனுக்காக செய்து முடிக்க முடிந்தது என்று நீங்கள் ஆதர பூர்வமாக முன்வைப்பிங்கள் என்றால் உங்களுடைய கருத்து நடைமுறைக்கு சாத்தியப் படும் என எங்களைப் போல அரசியல் முதுமை இல்லாத ஆட்களாலும் ஏற்றுக்கொள்ள முடியும்.

  அன்று தொடக்கம் இன்று வரைக்கும் சாத்தியப்படாத கருத்துக்களை முன் வைத்து செயல் படும் உங்களைப் போன்றவர்களால் தான் எமது சுதந்திரம் பறிக்கப் பட்டு நாடற்ற மக்களாக நாங்கள் தவிக்கிறோம்.

  இந்தியர்களில் மிகவும் அதிகமானவர்கள் எங்களின் இரத்தத்தில் இன்று தங்களது இனிமை காண்கிறார்கள். அதே போல் இந்தியனின் இரத்தத்தில் நிச்சயமாக என்னொருவன் இனிமை காணுவான், அதில் சந்தேகம் இல்லை.

  அமைதி வளியில போராடிய எங்களுக்கு வேள்விக்கு ஆட்டுக் கிடை வளர்ப்பது உணவையும் உறங்குமிடத்தையும் தந்து வேள்வி வந்ததும் கிடாய் வெட்டுவது போல வெட்டி விட்டான். அகவே எங்களுடைய முழு அழிவிக்கும் இந்தியன் தான் காரணம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதில வந்து இந்தியவை அதிகம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்ச்சியின் முக்கிய பிரமுஹருக்கு பங்கு இல்லை அவர் அப்பாவி என்று கூறுவதில எந்த வித நியாயமும் இல்லை.

  நன்றி
  நியாயம்

  • CHANDRAHASAN:

   உங்களின் பெரும்பாலான கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன். எங்கள் முரண்பாடுகளை தனது பிராந்திய மேலாதிக்க தேவைகளுக்காக பயன்படுத்தி இறுதியில் எங்களை வரலாற்றுக் குப்பைத் தொட்டியில் வீசியது இந்தியாதான். இதை அமேரிக்கா ரஷிய அதிகார வர்க்கமும் வேறு நாடுகளில் காலம் காலமாக செய்து வருகிறது. இந்தியா ஈழத் தமிழர்களுக்கு வான வெளியில் உணவுப்பொதிகளை போட்டபோது இது தமிழர்களுக்கு மோசமான விளைவுகளை தரப்போகிறது என எனது அரசியல் ஆசானாகிய மணியம் தோழர் குறிப்பிட்டார். இந்தக் கருத்துக்காக இயக்கங்களால் துப்பாக்கி முனையால் அவர் எச்சரிக்கப்பட்டார். இன்று இந்தியாவின் பிடியில் முழுத்தேசமும் வந்து விட்டது.

   இப்போது எங்கள் கனவான்கள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிடம் கை ஏந்துகிறார்கள். அது கை கூடுமானால் எங்களை காப்பாற்ற கடவுளாலும் முடியாது. சாட்சிக்காரனின் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என முன்னோர்கள் அனுபவம் சொல்கிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதில் எனக்கு நப்பிக்கை உண்டு. பொன்னம்பலம் அருணாசலத்தில் அல்லது நாவலரில் துவங்கிய எங்கள் தமிழ் தேசியத்தின் பிற்போக்கு தனத்தையும் யாழ் மையவாத சிந்தனையையும் எழுத இந்த இடம் போதாது. நாங்கள் எங்கள் தவறுகளை இனம் காணாது வெல்லும்போது அதை எங்கள் வெற்றியாக கொண்டாடிக்கொண்டு தோற்கும்போது அதற்கு காரணத்தை வெளியிலே தேடுகிறோம். எமது குறைபாடுகளை கண்டறிந்து எமது தவறான பாதைகள் மாற்றப்படும்போதுதான் எமக்கு விடிவு உண்டு.

  • அழகரத்தினம் பகீரதன்:

   ஜேசு நாதர் புத்தர் காந்தி வாழ்ந்த காலங்களிலும் உலகில் அரக்கர்கள் இருந்திருக்கின்றார்கள் தான். சோழ சாம்ராச்சியம் பலநாட்டவரை கொன்றும் பலநாட்டவரை அடிமைப்படுத்தியும் தான் உருவானது. உலகில் தோன்றும் அரசுகள் அத்தனையுமே மக்களை அடிமைப்படுத்தியே வைத்திருந்தன. வைத்திருக்கின்றன. மக்கள் நிம்மதியாக வாழவிரும்புவதில் தவறிருக்க முடியும் எனகருதவில்லை. மும்மொழிக்கொள்கையை நான் சிறுவயதில் ஏற்றுக்கொண்டு கற்க ஊக்குவித்திருந்தால் நான் முன்னுக்கு வந்திருக்கமுடியும். எனது துரதிஷ்டம் சிறுவயதிலேயே தமிழ்வாதிகளின் வலைக்குள்வீழ்ந்து விட்டேன். மார்க்சிய வாதிகள் என்னை இளம் வயதில் மீட்டெடுத்தும் கூட எனக்கு அடிப்படையில் மொழிப்பரீட்சயம் இன்மையாலும் சிறுவயதில் எனது மூளையில் இந்த தமிழ் தான் உலகு என்ற கருத்து விதைக்கப்பட்டதாலும் அதிலிருந்தும் விடுபடமுடியாமல் அவஸ்தைப்படுகின்றேன். தயவு செய்து எமது பிள்ளைகளை யாவது நல்லபடியாக நீங்கள் எப்படி வெளிநாடுகளில் அந்தந்த மொழியை படித்து பிழைக்கின்றீர்களோ அவ்வாறு எமது பிள்ளைகளையும் வாழவிடுங்கள். உங்கள் பிள்ளைகள் மட்டும் அன்னிய மொழியை படிக்கலாம் எங்கட பிள்ளைகள் அன்னிய மொழியை படிக்க முடியாதோ.

   • kadamban:

    பகீரதன் அவர்களின் கருத்துடன் நானும் உடன்படுகின்றேன்.புலம் பெயர்ந்த நம்மூரவர் இங்கிருப்பவர்களும் வாழப்பிறந்தவர்கள் என்ற மனப்பாங்குடன் தான் இருப்பார்கள் என்று எண்ணுகின்றேன். ஏனெனில் நாங்கள் எப்போதும் பகடைக்காய்களாக அவர்கள் எமக்காக முதலைக்கண்ணீர் வடிப்பவர்களாக இருக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்களும் எம்மூரவர்.

 • theepan:

  திரு சந்திரகாசன் அவர்களுக்கு, தங்கள் மீது பெரும் மதிப்பு வைத்திருப்பவர்களில் நானும் ஒருவன். மரணித்த மாவீரர்களைப் பற்றி உங்களுக்கோ அன்றில் எனக்கோ அருகதை இல்லை என்று நான் கூறியது தனிப்பட்ட வாழ்க்கையின் ( PERSONNEL STUFFS )அடிப்படையில் அல்ல. அந்த அவலங்களைத் தடுப்பதற்கு எம்மால் உருப்படியாக எதுவும் செய்ய முடியவில்லையே என்பதால் தான். மாற்றுக் கருத்துக்களை நான் வரவேற்கிறேன். எனினும் மரணித்தவன் கேவலமானவனாகவோ அல்லது எதிரியாகவோ இருந்தால் கூட மரியாதை கொடுப்பது எமது பண்பாடு. ஆனால் தாங்களோ, அவர்கள் இனமானத்தை மொத்தக் குத்தகைக்கு எடுத்தவர்கள் என்ற தொனியில் அத் தியாயிகலின் தியாகத்தை கேவலப்படுத்துவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இருப்பினும் எனது சற்றுக் காட்டமான கருத்தால் உங்கள் மனம் புண்பட்டு இருக்குமானால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.

  • CHANDRAHASAN:

   என்னால் ஏற்றுகொள்ள முடியாத கொள்கையானாலும் அதற்காக தங்கள் உயிரை அற்பணிப்பவர்களில் எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அதே போன்ற தியாக உணர்வோடு போராடிய நூற்றுக் கணக்கான மாற்று இயக்கக்காரர்களை சுட்டுக் கொன்று தீயிட்டு கொளுத்துபவர்களை அதே போன்ற கொள்கைப் பிடிப்போடு இருந்த ரஜனி திரணகம போன்ற புத்திஜீவிகளை கொலை செய்தவர்களை எப்படிச் சொல்வது. இவர்களுடைய பி*****ள் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் அன்னையை தாங்கள் தான் குத்தகைக்கு எடுத்ததுபோல தங்கள் ஆட்டங்களுக்கு தாளம் போடாதவர்களுக்கு துரோகி பட்டம் கொடுத்து தங்கள் ஊடகங்களில் அசிங்கப்படுத்டுவதை எப்படிச் சொல்வது. இன்றும் அந்த கலாச்சாரத்தை தங்களுக்குள் கச்சிதமாக செய்கிறார்கள். நான் குறிப்பிட்டது இவர்களைத்தான். போராளிகளை அல்ல.

   • சாமானியன்:

    அவர்கள் பிழை செய்தார்கள் என்று குறை காணும் உங்களால் இன்று அதே போல் வெள்ளைக் கொடி பிடித்து கொண்டு வந்தவர்களை துடைத்து அழித்தவர்களை( நான் சொல்லவில்லை உலகமே சொல்கின்றது) இன்று இந்த வாய் பேசா ஊமை (அப்துல் கலாம் ) அவர்கள் வாசல் சென்று (மும்மொழிதிட்டத்தை நடைமுறைப்படுத்த) பாலுக்கு பூனையை காவலுக்கு வைத்துவிட்டு கடலுக்கு சென்றவர்களை கொன்றவர்கள் யார் என்று தெரிந்திருந்தும் அவர்களோடு மகிழ்ந்து குலாவி மாணவர்களே என்போல் அந்நிய எஜமானிகளுக்கு படித்து சேவகம் செய்ய கனவு காணுங்கள் என்று சொல்லி ஒன்றுமே தெரியாதது போல் அறிக்கை சமர்பிக்கின்றாரே……….. இவரின் அறியாமையை என்ன என்று சொல்ல…………

 • சாமானியன்:

  திரு மனித நேயம் அற்ற விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களே இவ்வளவு நீண்ட அறிக்கை தயாரித்து வெளியிடத் தெரிந்த உங்களுக்கு ராமேஸ்வர மீனவர்கள் கடலில் மடிந்த போது நிறுத்துங்கள் என்று ஒருவார்த்தை யார் காதிலும் சொல்ல முடியாமல் போய் விட்டது ஏன். பல மனிதர் கொன்று குவிக்கப்பட்டார்கள் அப்பொழுதெல்லாம் நீங்கள் எங்கு இருந்திர்கள்……. நிங்கள சாகப் பிறந்தவர்கள் செத்து முடிந்த பின் நான் இப்படி வேதம் ஓதுவேன். சுடு காட்டில் இருந்து கேளுங்கள் என்று அமைதியாக இருந்திர்கள்.

  யாழ்பாணத்தில் எத்தனை அகதிமுகாங்கள் இருக்கின்றன. ஒரு வாசல் மிதிக்க உமக்கு நேரமில்லாமல் போய் விட்டது. சுடுகாடு நிங்கள் பார்த்தது போல் அமைதியாகதான் இருக்கும்.ஆனால் வசந்தம் பிறக்காது.
  உங்கள் கவிதையும் திருக்குறலும் அறிக்கையும் கடலில் காணாமல் போன எவரையும் மீட்டுக் கொடுக்காது. அகதி முகாமில் தாய் தந்தை இழந்து தவிக்கும் அனாதை சிறுவர்களுக்கு ஒரு வேளை பசியை போக்காது. கை கால் இழந்து தவிக்கும் மனிதர்களுக்கு நிம்மதியை கொடுக்காது.

  உம்மை பாதுகாக்க கறுப்பு பூனைகள் சுவருக்கு சுவர் காவல் காத்து நின்றதாமே..உமது அறிக்கை அழகாக சொடிக்கப்பட்ட மாலை நான்கு நாட்களில் வாடுவது போல் அர்த்தமற்றதாகி விடும்….வேணும் என்றால் செய்திகள் இல்லாமல் திரியும் பத்திரிகையாளர்களின் பத்திகளை நான்கு ஐந்து நாள் நிரப்பும்….மனிதர்களை கொன்றவர்களுக்கு தண்டனை கிடைக்காமல் செய்யும்.

  • CHANDRAHASAN:

   அங்குள்ள மக்கள் தொடர்ந்து சண்டை பிடிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா. பழிக்கு பழி வாங்கவேண்டுமென்று சொல்கிறீர்களா. அல்லது தங்களுக்குள் பிரிந்து ஆளை ஆள் கடித்துக் குதறும் புலம் பெயர்ந்த தமிழ் தலைவர்களிடம் தங்கள் எதிர்காலத்தை பணயம் வைக்க சொல்கிறீர்களா. அவர்கள் உம்மையும் என்னையும் போகவேண்டாம் என்கிறார்கள். காசு அனுப்பவேண்டாம் என்கிறார்கள். பொருளாதரத்தை வீழ்த்தவேண்டும் என்கிறார்கள். அதனால் அதிகம் பாதிக்கப்படுவது அங்குள்ள தமிழர்கள்தான் என்றாலும் அவர்கள் தியாகம் செய்யவேண்டும் என்கிறார்கள்.

 • CHANDRAHASAN:

  அப்துல் கலாம்

  இலங்கையின் அழைப்பை ஏற்று, ஜனவரி 20-24, 2012ல், அங்கு மும்மொழித் திட்டத்தை தொடங்கி வைக்கும் வைபவத்தில், நானும் என் குழுவினரும் கலந்து கொண்டோம். இலங்கையில் இதுவரை நடந்த, நடந்து வரும் அனைத்து சம்பவங்களையும், போர்க் கால சம்பவங்களையும் பற்றி, நான் கனத்த இதயத்தோடு அறிவேன். போருக்கு பின்னால், அங்கு வாழும் இலங்கை தமிழ் மக்களைச் சென்று பார்த்து, கலந்துரையாடி, அங்குள்ள நிலைமை என்ன என்று அறிந்து வர வேண்டுமென, வெகுநாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். எனவே, எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, இலங்கைக்கு சென்று வந்தேன்.

  இலங்கை தமிழர் பிரச்னையில், நான் இரண்டு விதமாக பங்கெடுக்க முடியும். ஒன்று, இந்தியாவில் இருந்து கொண்டே அறிக்கை விடுவது, பத்திரிகைகளில் எழுதுவது, பகைமையை வளர்க்கும் விதத்தில், அதைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது என்பது ஒரு வகை. இரண்டு, இலங்கைக்கு சென்று, அங்குள்ள சூழ்நிலைகளை நேரில் அறிந்து, அங்கு போரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து, உரையாடி, இப்போது இருக்கும் சூழ்நிலைகளை அறிந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களையும் மற்றும் அரசியல் தலைவர்களையும், பெருமக்களையும், இலங்கை அரசாங்கத்தையும் கலந்தாலோசித்து, பேச வேண்டிய விதத்தில், பேசவேண்டிய இடத்தில் பேசி, இந்தப் பிரச்னைக்குரிய தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பது இரண்டாவது வகை. நான் தெரிந்தெடுத்த வழிமுறை, இரண்டாம் வகையிலானது. இலங்கையின் மும்மொழித் திட்டத்தின் தொடக்க விழா அழைப்பை, அதற்கு பயன்படுத்திக் கொண்டேன். இலங்கையின் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தேன். அங்கு, தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களையும், மாணவர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்தேன். இளைஞர்களையும், அனுபவசாலிகளையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களையும் மற்றும் அரசியல் தலைவர்களையும், பெருமக்களையும், இலங்கை அரசாங்க அமைச்சர்களையும், அதிகாரிகளையும், இலங்கை ஜனாதிபதியையும் சந்தித்து உரையாடினேன். அவர்களது கருத்துக்களை அறிந்து கொண்டேன். அங்கு சிறப்பாக செயல்படும் சர்வோதயா திட்டத்தின் மூலம், எப்படி வட கிழக்கு மாநிலங்களில், பல்வேறு உதவிகள் சென்றடைகிறது என்பதையும் அறிந்தேன்.

  கொழும்புவில் மட்டும், 7 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினேன். மாணவர்கள் பல கேள்விகள் கேட்டார்கள், அவர்களிடமும் நான் பல கேள்விகளை கேட்டு, பல விஷயங்களை அறிந்து கொண்டேன். இலங்கையில் நல்ல ஜனநாயகம் மலர வேண்டும், அமைதி திரும்ப வேண்டும், அங்கு வாழும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக, சமாதானமாக, சரிசமமாக வாழவேண்டும், அங்கு வாழும் இளைஞர்களுக்கு, வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை வரவேண்டும், அவர்களும் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்பது தான், எனது பயணத்தின் நோக்கமாகும். அந்த பாதையில், மும்மொழித் திட்டம் முதல் முயற்சி என்பதால், அதை நாம் வரவேற்க வேண்டும். நம்பிக்கையின்மையால், யாருக்கும் நல்ல பயன் கிடைக்கப் போவதில்லை.

  மும்மொழித் திட்ட அறிமுக நிகழ்ச்சியில், ஒரு சிங்கள மாணவி, அருமையான தமிழில் பேசினாள், ஒரு தமிழ் மாணவி நன்கு சிங்களத்தில் பேசினாள், ஒரு முஸ்லிம் மாணவி, அருமையான தமிழிலும், சிங்களத்திலும் மற்றும் ஆங்கிலத்திலும் பேசினாள்.

  மொழி மனங்களை ஒன்றிணைக்கிறது
  மொழி சமுதாயங்களை ஒன்றிணைக்கிறது
  மொழி மதங்களை ஒன்றிணைக்கிறது
  மொழி நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது

  எனவே, அப்படிப்பட்ட ஒரு நிலைமை தோன்ற வேண்டுமென்றால், மும்மொழியையும், அனைவரும் வேறுபாடின்றி ஓர் உன்னத நோக்கத்தோடு மனம் ஒன்றுபட்டு பயின்றால், வேறுபாடு மறையும், கலாசாரம் சிறக்கும்; மொழியின் மூலம், வரலாறு சிறக்கும்; ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள உதவும் ஆட்சிமுறை, அனைவருக்கும் சென்றடையும் என்று நம்புவோமாக. எனவே, இந்தியாவின் சார்பாக, அந்த மும்மொழித் திட்டத்தில் நான் கலந்து கொண்டு உரையாற்றியது ஒரு வாய்ப்பாகும்.

  இலங்கையில் பல்வேறு சமுதாயங்கள் ஒன்று சேர்ந்து, ஒருங்கிணைந்த ஒரு சமூக அமைப்பை, ஒரு நாட்டை வடிவமைக்கும் போது, வளர்ச்சித் திட்டங்கள் எவ்வித வேறுபாடும் இன்றி, அனைத்து சமூகத்திற்கும் கிடைக்க வேண்டும். ஒரு மேன்மை தாங்கிய (Noble) நாட்டை உருவாக்க வேண்டுமென்றால், வேற்றுமையில் ஒற்றுமை காணவும், வேற்றுமையை போற்றும் தன்மையைப் பெறவும், அது மட்டுமல்ல, பல்வேறு இனங்களை, மொழிகளைக் கொண்ட மக்கள், அவர்களது கருத்துக்களையும், கலாசாரத்தையும், நம்பிக்கையையும், வாழ்க்கை முறையையும், சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக்கொண்டு வாழக்கூடிய ஜனநாயக நாடாக, இலங்கை மாற்றப்பட வேண்டும். அப்போது தான் அது, வேறுபாடற்ற ஒருங்கிணைந்த, மேடு பள்ளமற்ற, ஒரு சமதர்ம சமுதாயம் அமையப் பெற்ற ஜனநாயக நாடாக மலரும் என்ற என் கருத்தை, இலங்கை குடிமக்கள் முதல் ஜனாதிபதி வரை, அதுமட்டுமல்ல, பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்ற அந்த மும்மொழி திட்ட துவக்க விழாவில் தீர்க்கமாக எடுத்துரைத்தேன். எனவே, இப்படிப்பட்ட ஒரு நாட்டை உருவாக்க, இலங்கை பிரச்னை ஏற்படுத்திய அதன் அடிப்படை காரண காரியங்களை அறிந்து, அவற்றை அரசியல் சட்டத்தின் வழியில் ஜனநாயக அமைப்பின் மூலம் சரிசெய்ய வேண்டியது தான், இலங்கையின் தலையாய கடமை என்பதை வலியுறுத்தினேன்.

  அது மட்டுமல்ல, 40 ஆயிரம் கிராமங்களைக் கொண்ட இலங்கை கிராமப்புரத்தின் நீடித்த மேம்பட்ட வளர்ச்சிக்கு, 160 PURA Clusters அதாவது, நகர்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு அளித்தல் என்ற திட்டத்தின்படி, இந்தியாவின் உதவியுடன் செயல்படுத்த ஆலோசனை வழங்கினேன். ஜனவரி 21, 2012ம் ஆண்டு, இரவு, இலங்கை ஜனாதிபதியை சந்தித்த போது, இரண்டு முக்கியமான விஷயங்களைப் பற்றி அவரிடம் பேசினேன். அதாவது, மும்மொழித் திட்டத்தை முழுமையாக இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் செயல்படுத்துவதில் இந்தியாவின் ஆதரவை தெரிவித்து விட்டு, இலங்கையின் 13வது அரசியல் சாசன திருத்த சட்டத்தினை மேம்படுத்தி, 13+ என்ற அரசியல் சட்ட திருத்தத்தை விரைவில் இலங்கையில் அமல்படுத்த, இலங்கை ஜனாதிபதியை வலியுறுத்தினேன். அதாவது, இலங்கையில் உள்ள எல்லா புராவின்ஸ்களையும், அதாவது, வடகிழக்கு, தெற்கு, மத்திய, மேற்கத்திய புராவின்ஸ்களையும் மற்ற புராவின்ஸ்களையும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட, சுயநிர்ணய அதிகாரம் கொண்ட மாநிலங்களாக ஏற்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

  இரண்டாவது, இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்னை பற்றி, இலங்கை ஜனாதிபதியிடம் பேசினேன். மீனவர்களை, கடல் எல்லையால் தடை போட்டு தடுத்து நிறுத்த முடியாது. அவர்களுக்கு, மீன் எங்கிருக்கிறதோ அங்கு சென்று, அவர்களால் முடிந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மீன் பிடிப்பது தான் அவர்கள் வழக்கம். இலங்கை மற்றும் இந்தியாவின் கடல் எல்லை மிகவும் சிறிய பகுதியாகும். எனவே, சர்வதேச கடல் எல்லையை கடந்து மீன் பிடித்தார்கள்; அதனால் பிரச்னை என்ற நிலைக்கு பிரச்னையை வளர்க்காமல், அவர்களுக்கு, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், இலங்கையும் இந்தியாவும் ஒரு தீர்வை அடைய வேண்டும் எனக் கூறி, இரண்டு யோசனைகளை முன் வைத்தேன். இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் பிரச்னைகளை கலந்து பேசி, அவர்களுக்குள் ஒரு திட்டத்தை, வாரத்தில் மூன்று நாட்களுக்கு இலங்கை மீனவர்களும், மற்ற மூன்று நாட்களுக்கு இந்திய மீனவர்களும் சர்வதேச கடல் எல்லையைக் கடந்து மீன் பிடிக்கவும் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும். அவர்களது மீன்பிடி உபகரணங்களை யாரும் சேதப்படுத்தாத வகையில், இரண்டு நாட்டு மீனவர்களும் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அந்தந்த நாட்டு கடற்படைகளும் இதற்குரிய பாதுகாப்பை இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று கூறினேன். இரு நாட்டு மீனவர்களும் பேசி முடிவெடுத்தால், இலங்கை, இந்தியாவுடன் ஒப்பந்தம் போடத் தயார் என்று, இலங்கை ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார். எனவே, இதை அடுத்த கட்டத்திற்கு இந்திய மற்றும் இலங்கை அரசுகள் மற்றும் மீனவர்கள் ஒன்று சேர்ந்து, எடுத்துச் சென்று பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

  அது மட்டுமல்ல, Deep Sea fishing, அதாவது, ஆழ்கடல் மீன் பிடி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, மீன் பிடிக்கும் பயிற்சியை, இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் கற்றுக் கொடுத்து, ஆழ்கடலில் மீன் பிடித்து, அதை பதப்படுத்தி, மதிப்பு கூட்டி, ஏற்றுமதி செய்யும் கப்பல்களை இந்திய – இலங்கை அரசுகள் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். அதுமட்டுமல்ல, மீனவர் வாழும் பகுதியில், மீனை பதப்படுத்தி, மதிப்பு கூட்டும் மையங்களை இந்தியாவும், இலங்கையும் நிறுவ வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். அப்படி

  செய்தால், இரண்டு நாட்டு மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கும் என்று எடுத்துரைத்தேன். ஜனவரி 23ம் தேதி, ஒரு நாள் முழுவதும், யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையை புரிந்து கொண்டேன். யாழ்ப்பாணம் அரசு பிரதிநிதிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும், பத்திரிகை ஆசிரியர்களையும், யாழ்ப்பாணம் மீனவர்களையும் சந்தித்தேன். அவர்களது பிரச்னைகளை, என்னிடம் எடுத்துரைத்தனர். பிரச்னையின் யதார்த்தத்தை, நான் அவர்களை சந்தித்த பின் உணர்ந்து கொண்டேன்.

  யாழ் பல்கலைக்கழகத்திற்கு சென்றேன். அங்கு நுழைந்ததும், ஆயிரக்கணக்கான மாணவர்கள், மிகுந்த உற்சாகத்துடன் என்னை வரவேற்றனர். சொற்பொழிவு நடக்கும் இடத்திற்கு செல்ல முடியாத அளவில் கூட்டம். அந்த மாணவர்களிடம் உரையாடிக்கொண்டே, அவர்களிடம் அவர்களது உணர்வுகளை பகிர்ந்து கொண்டே சென்றேன். ஒரு மாணவர் “இதுவரை யாழ்ப்பாணத்திற்கு ஏன் வரவில்லை’ என்று கேட்டார். அவரிடம் “யாழ்ப்பாணத்தின் நிலைமைகளை பற்றி, நான் அறிவேன். என் ஆசிரியரே யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் தான், எனவே, நான் வராவிட்டாலும், உங்கள் நிலைமைகளை புரிந்திருக்கிறேன்; இப்பொழுது உங்கள் உணர்வுகளை அறியவே வந்திருக்கிறேன்’ என்று, கூறினேன். நான் என்ன சொல்ல வந்திருக்கிறேன் என்ற ஆவல் அவர்களுக்கு. எனவே தான், யாழ் மாணவர்கள் மத்தியில், “புயலை தாண்டினால் தென்றல்’ என்ற தலைப்பில், அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுக்கும் விதத்தில் பேசினேன்.

  அதாவது, ஒவ்வொருவரின் வாழ்விலும், பல புயல்களையும், சில தென்றல்களையுமே எதிர் கொள்ள நேர்கிறது. ஒரு தென்றலின் சுகத்தை நோக்கிச் செல்லும் போது, பல புயல்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. தோல்வியில்லாமல் வெற்றியில்லை. கண்ணீர் எப்போதும் கரிப்பாகவே இருக்கும். ஆனாலும், ஓரிரு சமயங்களில், அது இன்பமாகவும் இருக்கும். அந்த இன்பம் பெற வேண்டுமானால், பல புயல்களைக் கடக்கும் உள்ள உறுதியைப் பெற வேண்டும். நம் எண்ணங்கள் உறுதியானால், அவை உழைப்பாக மாறி, நாம் எண்ணிய லட்சியத்தை அடையலாம் என்று அவர்களுக்கு, என் வாழ்வின் பல சம்பவங்களை எடுத்து கூறி விளக்கினேன். எனவே, அந்த பேச்சை தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் முழுவதுமாக படிக்க வேண்டும். அவர்களுடன் பல கேள்வி, பதில்களுடன் கலந்துரையாடினேன், அவர்களுக்கு, என்னால் முடிந்த வரை, நம்பிக்கையை ஊட்டினேன். அதன் பின்பு, யாழ்ப்பாணத்தில் இருக்கும் இளைஞர்களையும், தொழில் துறையை சேர்ந்தவர்களையும், மீனவர்களையும், பெரியோர்களையும், யாழ் பத்திரிகையாளர்களையும் சந்தித்து உரையாடினேன். போருக்கு பின், அவர்களது நிலைமையை அறிந்தேன். அங்கு, நான் கண்ட காட்சி, மனதை உருக்கும் விதத்தில் இருந்தது. எல்லார் முகத்திலும் புன்னகை இருந்தாலும், அவர்களது புன்னகைக்குப் பின் சொல்ல முடியாத எதோ ஒரு துன்ப ரேகை இடையோடுவதை கண்டுணர்ந்தேன். அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்க முடியுமா என்று எண்ணி சிந்தித்தேன். போயிருக்குமோ என்று நினைத்தேன். இலங்கைக்கான, இந்திய தூதரை அழைத்து, அவர்களுக்கு, இந்தியா செய்து வரும் வளர்ச்சிக்கான உதவிகளையும், அதில் ஏற்படும் தாமத்தையும் கலைந்து, விரைந்து நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய சொன்னேன்.

  அதற்கு அடுத்தாற்போல், 120 ஆண்டுகள் பழமையான யாழ் இந்து கல்லூரிக்கு சென்றேன். மாணவர்கள் முகத்தில் என்ன ஒரு பரவசம். எங்கு பார்த்தாலும் உற்சாகம். அவர்களை கண்டவுடன், அந்த மாணவர்களின் பரவசமடைந்த முகத்தை பார்த்தவுடன், எங்கே நாம் வராமல் போயிருந்தால், இந்த மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை, நம்பிக்கையை கொடுக்க இயலாமல் எனவே, அந்த மாணவர்களுடன், “வாழ்வில் எப்படி பறக்க வேண்டும்’ என்று, அதாவது அந்த மாணவர்களுக்கு, கீழ்கண்ட இலட்சியத்தை அவர்கள் மனதில் விதைத்தேன். அனைத்து மாணவர்களும், என்னுடன் உற்சாகத்துடன் கீழே உள்ள கவிதையை, உரக்க திருப்பி சொன்னார்கள்.

  என் இலட்சியம்
  நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
  நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
  நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
  நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த
  நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
  நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
  நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்,
  தவழவே மாட்டேன், ஆகாய உச்சி தான் என் லட்சியம்,
  பறப்பேன், பறப்பேன், பறப்பேன்
  வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.

  யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களுக்கு, வாழ்க்கையில் தைரியத்தையும், லட்சியத்தையும் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது லட்சியம். யாழ்ப்பாணம் சென்றதினால், என்னால் அதை ஓரளவு செய்ய முடிந்தது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரு யாழ்ப்பாண மாணவியின் அபார திறமை, எனக்கு அந்த நம்பிக்கையை கொடுத்தது. நான் யாழ்ப்பாணத்துக்கு சென்று, இந்துக் கல்லூரி மாணவர்களை சந்தித்து, உரையாடிய போது, மாணவி ஒருவர், “பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்ய வேண்டும்’ என, என்னிடம் கேள்வி எழுப்பினார். அவ்வாறு திறமை வாய்ந்த மாணவியை, நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது. அம்மாணவி தொடுத்த வினாவிற்கு, பதிலளித்த நான், அந்த பதிலைத் திரும்பக்கூறுமாறு தெரிவித்தேன். உடனடியாக அவர், அதைக் கூறினார். அவ்வாறு மிகத் திறமையான மாணவியை, நான் சந்தித்தது யாழ்ப்பாணத்தில் தான்.

  நான் சொன்னேன்
  உனது இதயத்தில் நேர்மை இருந்தால், உனது நடத்தையில் அழகு இருக்கும்.
  உன் நடத்தையில் அழகு இருந்தால், வீட்டில் அமைதி இருக்கும்.
  வீட்டில் அமைதி இருந்தால், நாட்டில் அமைதி நிலைக்கும்.
  நாட்டில் அமைதியிருந்தால், உலகில் சமாதானம் பிறக்கும்

  என, ஆங்கிலத்தில் நான் ஒருமுறை கூறியதை, அதை அப்படியே எப்பிழையும் இல்லாமல், மடை திறந்த வெள்ளம் போல் அந்த மாணவி திரும்பக் கூறியதைப் பார்த்தவுடன், எனக்கு யாழ் இளைஞர்களைப் பற்றிய நம்பிக்கை ஒளி மேலும் பிரகாசித்தது. எனவே, என் அருமை தமிழ் நெஞ்சங்களே, திருவள்ளுவரின் திருக்குறள் நமக்கு அருளிய மிக உன்னத அறிவுரையாவது என்னவெனில்,

  சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
  சொல்லிற் பயனிலாச் சொல்

  அதாவது, திருவள்ளுவரின் வாக்குப்படி, சொற்களில் பயனுடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும். பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவே கூடாது. எனவே, நண்பர்களே, பயனில்லா சொற்களைப் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை. பேசிப் பேசி, நாட்களை வீணடிப்பதற்கு பதிலாக, தமிழ் உணர்வுள்ள உலக தமிழ் மக்கள், ஒரு கேள்வியை தங்கள் மனதில் கேட்க வேண்டும். இலங்கை தமிழ் மக்களுக்கு, என்னால் ஆக்கப்பூர்வமாக என்ன செய்ய முடியும்? என்ற கேள்விக்கு, ஆக்கப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக, விவேகத்துடன் செயல்பட என்ன செய்யலாம் என்று சிந்தித்து செயல்பட்டால், கண்டிப்பாக அதற்கான பதில் உங்கள் பணிக்கு உயிர் கொடுக்கும், இலங்கை தமிழருக்கு நல்வாழ்வு கிடைக்கும்.

  இலங்கையில் நடக்கக் கூடாத சம்பவம் நடந்து முடிந்து விட்டது. 200 வருடம், பிரிட்டீஷ் சாம்ராஜ்யம், இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தது; 17ம் நூற்றாண்டிலிருந்து பல லட்சம் சுதந்திரப் போராட்ட வீரர்களை, சுதந்திரப் போரில் நாம் இழந்தோம். அதையே நினைத்துக் கொண்டிருந்து, பேசிக்கொண்டு, இன்னும் ஆங்கிலேயர்களுடன் பகைமை பாராட்டிக் கொண்டே இருந்தால், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியாது. இந்த உலகம் எத்தனையோ போர்களை சந்தித்து விட்டது. அதற்கு பல காரண காரியங்கள் அலசப்படலாம். ஆனால், எத்தகைய ஓர் விளைவிற்கும், எதிர் விளைவாக போர் நடக்குமேயானால், அது ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. இனிமேல் நடப்பவற்றை பற்றி சிந்தித்து முன்னேறுவது தான் அறிவார்ந்த சமுதாயத்தின் அடையாளம். அகிம்சையை கையில் எடுத்து, இந்தியாவை ஜனநாயகப் பாதையில் மீட்டெடுத்து, மகாத்மா காந்தி சுதந்திரக் காற்றை சுவாசிக்க செய்தாரே, அதை, நாம் என்றென்றும் நினைவு கொள்ள வேண்டும்.

  பல்வேறு சமஸ்தானங்கள், ராஜ்யங்கள், ஜமீன்களை ஒருங்கிணைத்து, 30 மொழிவாரி மாநிலங்களை உருவாக்கி, ஒருங்கிணைந்த இந்தியாவாக இருக்கிறதே அதற்குக் காரணம் நமது ஜனநாயகமும், பலம் வாய்ந்த நமது அரசியல் சாசன சட்டமும் தான். அப்படிப்பட்ட ஜனநாயகம், நம் அண்டை நாடுகளில் வளர்ந்தோங்க, நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். எனவே நண்பர்களே, அந்த அடிப்படையில் என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும், இலங்கை தமிழ் மக்கள் ஒரு ஜனநாயக நாட்டில், மதிப்புடனும், சுய மரியாதையுடனும் வாழ, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க, என்னுடைய இலங்கை பயணமானது ஒரு முன்னோடியாக இருக்கும் என்று நம்புகிறேன். எனவே, இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் அமைதியையும், அவர்களது வளர்ச்சியையும் ஜனநாயக முறையில் அடைய, நாம் என்றென்றும் உறுதுணையாக இருப்போம்.

  • theepan:

   இலங்கை அரசுக்கு நன்றாக பல்லக்குத் தூக்குகிறீர்கள். இலங்கையில் நடந்த எந்த ஒரு அவச் சம்பவத்திலும் பாதிக்கப்படாது பாதுகாப்பாக இருந்த காரணத்தால் தான் உங்களால் மரணித்த மகா புருஷர்களை பற்றி, மொழியையும் இனத்தையும் மொத்தக் குத்தகைக்கு எடுத்தவர்கள் ; அவர்களுக்கு நடந்தது என்ன என்று தெரியும் தானே என்று எகத்தாளமாக கூற முடிகிறது. யாருக்குப் பல்லக்குத் தூக்குவது என்பது உங்கள் உரிமை, அதற்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்த அம்மகா மனிதர்களைப் பற்றி புறம் கூறுவதற்கு உங்களுக்கோ ஏன் எனக்கோ கூட எந்த அருகதையும் கிடையாது. இதற்கு மேல் அரசியல் பேச எனக்கு விருப்பமில்லை.

   • CHANDRAHASAN:

    தமிழ் அரசியலில் உள்ள மிகப்பெரிய குறைபாடே இதுதான். என்னை ஆதரிக்காவிட்டால் நீ எதிரி என்ற மனோபாவத்தால் எல்லோரையும் எதிரியாக்கிவிட்டோம். இன்று அரசாங்கத்துக்கு பல்லக்கு தூக்குபவர்களும் காசுக்கும் பதவிக்கும் விலை போனவர்கள் எல்லாம் நேற்று இந்த அப்பாவி இளையோரை வழிநடத்தியவர்களே. வெவ்வேறு குழுக்களாக பிரிந்து அரசாங்கத்துக்காக வேலை செய்கிறார்கள் என்று ஒரு குழு மற்ற குழுவை தாக்குவதை இணையம் எங்கும் காணலாம். நான் அறிந்தவரையில் இதில் உண்மை உண்டு.
    என்னுடைய அரசியல் வேறு. எந்த மக்களின் வரிப்பணத்தில் நான் படித்தேனோ அந்த மக்களுக்கு நான் கடமைபட்டவன். அந்த மக்கள் தங்களுக்குள் சண்டை இடாமல் ஒற்றுமையாக நாட்டை வளர்க்க வேண்டும் என விரும்புகின்றேன். இனச்சண்டையில் ஒரு பக்கம் எடுத்து ஒரு பகுதி மக்கள் சாகும்போது மகிழ்ச்சியும் ஒருபகுதி மக்கள் சாகும்போது கவலையும் கொள்ள என்னால் இயலவில்லை. பெரும்பாலான இலங்கை மக்கள் அதை செய்கிறார்கள் என்ற காரணத்தால் நானும் அவ்வாறு இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கலாம். அது நான் கற்ற பிழையான அரசியல் என்று நீங்கள் நினைக்கலாம்.
    விடுதலைப் புலிகளின் அபிவிருத்தித் திட்டத்திற்கும் வன்னி சென்று உதவியிருக்கேறேன். அதே போல டக்ளசிற்கும் யாழ் அபிவிருத்தி பற்றி ஆலோசனை வழங்கியிருக்கிறேன். இரண்டு பேருக்குமே எனது அரசியல் வேறு நான் அவர்கள் அரசியலுக்கு ஆதரவானவன் இல்லை என்று தெரியும்.
    நீ பேசாமல் இரு என்றால் பேசாமல் இருக்கவும் முடியும். நான் செய்யும் அரசியல் என்னுடைய மன திருப்திக்காகவே. ஆனாலும் என்னை அறிந்த அரசியல் எதிரிகளும் என்னை மதிப்பது அண்மையில் என்னை நெகிழ வைத்தது. நான் எனது முட்டாள்தனமான செயலால் சிக்கலில் இருந்தபோது விடுதலை புலிகளில் எமது பிரதேச அமைப்பாளராக இருந்த இருவர் எனது நண்பனுக்கு போன் பண்ணி எவ்வளவு செலவானாலும் தான் தருகிறேன் அவரை இந்த சிக்கலிலிருந்து வெளியிலேடுத்துவிடு என்று சொல்லியுள்ளார். இவர்களோடு இன்றுவரை நான் அரசியலில் எதிரிகளாகவே இருக்கிறேன். இன மத அடிப்படையில் அரசியல் கட்சிகள் இருப்பதே தவறு என்பது என் நிலைப்பாடு. இந்த கருத்தை நான் மாற்றிக்கொள்ள உங்கள் வாதங்கள் உதவுமாயின் தொடருங்கள். ஆனால்
    தயவு செய்து எதிரான கருத்துள்ளவர்களை துரோகிகளாக்கி கொண்டாடவேண்டாம்.

 • ஊரவன் எவனோ ஒருவன்:

  அப்துல் கலாம் வந்தது தமிழர்
  அமைதியை தா என்று கேட்காத நிலைமை
  செத்துப்போய் நின்றவேளை
  செவிட்டுத்தனமாய் நின்றோர் மத்தியில்
  செல்வாக்கால் இங்கு வந்து எம்மை
  செவிசாய்க்கவைப்பதில் என்ன நியாயம்?
  படித்து விஞ்ஞானி என்று
  பலர் மதிக்கும் வகையில்
  பாடுபட்டு உழைத்திருந்தாலும் தமிழர்
  பார்வையில் உன் கண் குருடுதானே
  பார்த்துக்கொண்டதும் உலகம்தானே
  பத்து பேருடன் நீ கதைத்து
  பாதுகாப்பு காத்திரம் என்று
  பாரதத்தில் போய்ச்சொல்வாயோ
  பாழடைந்த தமிழர் நிலையை கண்டால்
  பாதுகாப்பு வெறும் ஆப்பு என்றே நீ அறிவாய்
  முயற்சியினால் நீ சாதித்தது முற்றிலும் உண்மை
  வறுமையினிலும் முன்னோடியாய் திகழ்ந்ததும் உண்மை
  முடியாதே ஒரு சாண் வயிறைக்கழுவ என்று
  முயல்வோரிற்கு உன் பட்டம் ஏது பதவி ஏது?
  முறித்தெறிந்த பட்டம்தான் முச்சை கேட்பதில்லையே
  ஓட்டு வீட்டைப்பார்த்து முடிவெடுக்காதே
  ஓலைக்குடிசைகள் இல்லையென்று
  ஓரினம் பின்நோக்கிப்போனது வரலாறு
  ஒரு தலைக்காதலாய் ஓர் உள்ளம்படும் வேதனை
  ஒட்டு மொத்தத்தமிழன் அகதியாய்ச்சோதனை
  உன் வருகையால் ஓயுமா எம் வேதனை?
  தாயின் மடியில் தூங்கும்வேளை
  செல்லடியில் ஏங்கும் விழிகள்
  கண்டு கொள்ளவில்லையே உன்பாரதம்
  முட்களுக்குள் குருவிக்கூடாக
  முப்பது வருடங்களாகியும் நடக்குதே போராட்டம்
  நம் ஓட்டம் இன்னும் ஓயவில்லையே?
  பிணத்தைப்போடுவது சவக்குழியில்
  தமிழனிற்கோ அதற்கும் இல்லை பார்விழி
  மண்மிதித்து ஓடுவது வழமை
  தமிழன் பிணம் மிதித்து ஓடியது நிலமை
  எப்போது கழியுமோ கயமை
  சத்தியமாய் நான் தவறாக சொல்லவில்லை
  சரித்திரத்தில் தமிழனின் தரித்திரத்தை சொன்னேன்
  தலைகுனிந்து தமிழன் வாழ்கின்றானே
  தன்மானம் காத்திட வராத பெரியோரே
  தமிழன் நிலையை சரியாக புரிந்தாயோ?
  நீயும் வந்து போனவர்கள் வரிசையில் சராசரியானவனே
  தமிழனுக்கு உன்வருகையால் அமைதி கிடையாது
  விஞ்ஞானியாக வந்து போ வரவேற்கிறோம்
  அரசியலை இந்தியாவில்மட்டுமே அரங்கேற்று
  விஞ்ஞானத்தை மட்டும் பகுத்தறிந்தவனே
  தமிழன் பட்ட துன்பம் நீ அறியாய்
  விஞ்ஞானியாக வந்து போ வரவேற்கிறோம்.

 • kadampan:

  அப்துல்கலாமையும் அரசியலையும் இணைப்பது தவறு. அவர் ஒரு அறிவாளி. அரசியலவாதி அல்ல. இந்திய அரசு ஜனாதிபதி பதவி வழங்கி கௌரவப்படுத்தியது.அவர் ஒரு நிறைவேற்று அதிகாரமுடய பதவி வகித்தவர் அல்ல.

 • சாமானியன்:

  திரு. சந்திரகாசன் அவர்களே……யாழ்பாண பல்கலைகழகத்தில் மாணவர்கள் எல்லாம் சுதந்திரமாக இந்த ஒன்று டலில் கலந்து கொண்டார்கள். அங்கு இந்திய பாதுகாப்பு துறையின் பிரசன்னம் ஒன்றும் இருக்கவில்லை என்று நிங்கள் சொல்லும் போது நம்பும் அளவிற்கு நான் ஒன்றும் உலகம் தெரியாதவன் அல்ல.
  ஒருவர்(அப்துல் கலாம்) தான் கற்றுணர்ந்த அறிவியல் புலமையை இராணுவப் புலமையை இந்திய ஜனாதிபதியாக இருந்த அனுபவத்தை உரிய இடத்தில்(மனிதர்கள் மடிவதில் இருந்து காப்பாற்றுவது.) பாவிக்காமல் மெளனம் சம்மதம் என்று இருந்து விட்டு சாம்பல் மேட்டில் சாத்தான் வேதம் ஓத வருகின்றான் என்றால் அவர் எவ்வளவு படித்த முட்டாள். கண் இருந்தும் குருடன். அவர் மதிக்கப்படுவதற்கு உரியவர் அல்லர் என்பதே எனது வாதம். இதைவிட எனக்கு அரசியல் ஒன்றும் தெரியாது. மனித நேயம் என்றால் என்ன என்பதை எனது வாழ்நாளில் பட்டுணுர்ந்தபடியால் அதன்பால் உண்டான ஆதங்கத்தில் வெளிப்படும் கருத்துகளே இவை.
  அதோடு எனக்கு ஒன்று தெரியும் படித்த அறிவாளிகளால்தான் உலகில் பல காரியங்கள் சாதிக்கப்பட்டு இருக்கின்றன. யாழ் பல்கலைகழக மாணவர்கள் அமைதியை குறைத்து எடை போடும் இவரும் இவரை வைத்து காரியம் செய்ய முனையும் பகுதியினரும் முடிவில் ஏமாற்றம் அடைவது திண்ணம்.

  • CHANDRAHASAN:

   ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அரசியல் இருக்கிறது. என்னால் அப்துல் கலாமின் அரசியலுடன் ஒத்துக்கொள்ளவும் ஏற்றுகொள்ளவும் முடிகிறது. அதேவேளை இந்தியத் தமிழ் தேசியவாதிகளுடன் என்னால் இணங்க முடிவதில்லை. அவர்களுடைய நேர்மையிலும் அரசியல் அறிவிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு அதற்கு எதிர்மாறான கருத்து இருக்கலாம்.

   இன மத தேசிய உணர்வுகள் மக்களை பிரித்து ஆளுவதற்கு அரசியல்வாதிகள் பயன்படுத்தும் ஆயுதம் என்ற என் நம்பிக்கையை உலகிலுள்ள எந்த அரசியல்வாதிகளும் அல்லது அரசியல் நிகழ்வுகளும் தவறு என நிரூபிக்கவில்லை. இந்த உணர்வுகளால் நாங்கள் பிரிந்திருக்கும் வரைதான் ஊழல் அரசியல்வாதிகளும் அறிவு ஆற்றல் இல்லாதவர்களும் தலைவர்களாக வரமுடியும். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் இந்த உணர்வுகளிலிருந்து விடுதலை பெற்ற ஐரோப்பாவில் பச்சோந்திகளும் ஊழல் பேர்வழிகளும் சாதி மதம் இனத்தை சொல்லி தலைவராவதற்கு சாத்தியமே இல்லை. மாறாக இனம் மதம் சாதியை சொல்லாமல் மூன்றாம் உலக நாடுகளில் தலைவராவதற்கு சாத்தியமே இல்லை.

   எங்கள் எதிர்காலம் இன மத தேச உணர்வுகளை கடக்கும்போதே உன்னதமாகும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. அதே நிலைப்பாட்டில் இருப்பதனால்தான் என்னால் அப்துல் கலாமை ஏற்றுகொள்ளக்கூடியதாக இருக்கிறது. இலங்கையில் இன உணர்வுகள் மக்களுக்கு இல்லாமல் போனால் தற்போதைய ஆட்சியாளர்கள் பின் கதவால் ஒழித்து ஓடவேண்டியிருக்கும். அவர்களை இன்று கட்டிக்காப்பது புலம் பெயர்ந்த தமிழர்களின் இனவாத அரசியல்தான். அது தொடர்ந்து இருக்குமானால் அவர்கள் மீண்டும் மீண்டும் வெல்வதை ஒருவராலும் தடுக்க முடியாது.

   இன உணர்வுகள்தான் எமக்கு சுபீட்சம் தரும் என்று சொல்கின்ற நெடுமாறன் சீமானை நீங்கள் நம்பலாம். கருணாநிதியை தங்கள் தானை தலைவராக அந்தக்காலத்தில் கருதிய ஈழத்தமிழர்கள் ஏராளம். வரலாறு மீண்டும் மீண்டும் பாடங்களை கற்பித்துகொண்டிருக்கிறது. அதிலிருந்து எதை எடுப்பது எதை விடுவது என்பது அவரவர் விருப்பம்.

 • mohan.k:

  i love this

 • archana:

  எனக்கு அப்துல் கலாமை ரொம்ப பிடிக்கும். நான் அவரை போலவே வர வேண்டும் என்ற ஆசை உண்டு.நானும் கனவு காண்கிறேன்.

  • சாமானியன்:

   கோடாலி காம்பு……..தான் பிறந்து சேர்ந்து வளா்ந்த சக இன மரங்களை நன்றாக வெட்டி விழ்த்தும். அதன் பிறகு தன் இனத்தை வெட்டி விழ்த்திய மனிதருடன் சேர்ந்து இருந்து அந்த காட்சியை கண்டு களிக்கும்..

   • theepan:

    என்ன சாமானியர் ! நான் என்னென்ன நினைக்கிறனோ, நீங்கள் அப்பிடியே எழுதுகிறீங்கள். சபாஷ்! நான் உங்கள் பக்கம்.

   • CHANDRAHASAN:

    ஒரு சிறிய கேள்வி. நடிகர்கள், பேச்சாளர்கள், கலைஞர்கள் இலங்கை வர வெளிக்கிட்டபோதேல்லாம் ஆர்பாட்டம் செய்து தடுத்த இந்திய தமிழ் தேசிய வீரர்கள் அப்துல் கலாம் அரச விருந்தாளியாக இலங்கை வரும்போது ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடாது மவுனம் சாதித்தது ஏன்?

    • சாமானியன்:

     அவர்கள் (கலைஞர்கள், நடிகர்கள்) மனித நேயம் உள்ளவர்கள். அன்றும் குரல் கொடுத்தவர்கள். அவர்களுக்கு சொன்னால் விளங்கும். இந்த படித்த முட்டாளுக்கு (அப்துல் கலாம்) எங்கு விளங்கப் போகின்றது.

     • CHANDRAHASAN:

      நீங்கள் அப்துல் கலாமையே முட்டாள் என்று சொலுகின்ற அளவுக்கு புத்திசாலியாக இருக்கலாம். ஆனாலும் முட்டாள்களுக்கும் ஒரு அரசியல் கருத்து வைத்திருக்க ஜனநாயகத்தில் உரிமை உண்டு. இந்த முட்டாளை ஆயிரக்கணக்கில் வரவேற்க சென்ற பல்கலைக் கழக மாணவர்களும் முட்டள்களாக இருக்கலாம். இந்த யாழ்ப்பான படித்த முட்டாள்கள் உயிர் பயமில்லாமல் தாங்கள் விரும்பியவரை சென்று பார்க்கக் கூடியதாக இருக்கிறதே அதற்கு யாருக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை.

 • காய்த்த மரங்களில் கல்லு எறிவிழுவது சகஐம் அப்பா

  • CHANDRAHASAN:

   மிக ஆர்சர்யமகவும் அதிசயமாகவும் இருந்தது. பொதுவாக அரைகுறையாக படித்த இந்தியத் தமிழர்கள் கூட தமிழில் பேசத்தெரியாது என்று ஆங்கிலத்தில் பேசுவார்கள். அப்படித் தமிழில் பேசினாலும் தமிழ் சொற்கள் இடையிடைதான் வந்து விழும். ஆனால் உலகறிந்த இந்த விஞ்ஞானி சுத்தமான தமிழில் பேசியதற்கு நிச்சயமாக நாம் தலை வணங்க வேண்டும். தமிழில் பேசுவதை தரக்குறைவாக நினைக்காத அறிவாளி. ஈழத்தமிழர் அவரிடம் கேட்டுக்கொண்டு போராட்டம் நடத்தவில்லை. அதை ஆதரித்தோ எதிர்த்தோ அவர் கருத்து தெரிவித்ததாகவும் தெரியவில்லை. அவர் ஒரு விஞ்ஞானி. அவ்வளவுதான். அவரை ஏன் ஜனாதிபதி ஆக்கினார்கள் அதை ஏன் ஏற்றுக்கொண்டார் என்று தெரியவில்லை. மிக வறிய குடும்பத்திலிருந்து கல்வியால் மிக உயர்ந்த நிலைக்கு வந்த சுத்தமான தமிழன்.

   • சாமானியன்:

    ஒம். அண்ணை…… அவர் ஒரு நன்றாக தமிழ் பேசத் தெரிந்த விஞ்ஞானி. அவருக்கு ஊர் உலகம் தெரியாது. அவர் பிறந்த இடமான இராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு தொழிலுக்கு சென்ற காலங்களில் பல நுாறு மனிதர்கள் கடலில் சங்கமானர்கள். அப்பொழுதும் இவர் ஒன்றும் பேசவில்லைத்தான். ஒரு ஒழுங்கான நடு நிலைவாதி. இவர் தமிழ் கேட்டு தமிழன்னை நிட்சயம் ஆனந்தக்கண்ணீர் விட்டுருப்பார். இப்படிப்பட்ட கண்ணியமான வாய்பேசாத மனிதர்கள்தான் இன்று உலகிற்கு(மனிதர்களை கொன்றவர்களுக்கு) தேவை…..

    • CHANDRAHASAN:

     தமிழன்னையை ஒருவரும் குத்தகைக்கு எடுக்கமுடியாது. அப்படி எடுத்ததாக நினைத்தவர்கள் நிலை எல்லோருக்கும் தெரிந்ததே. எங்களுக்கு உள்ள அரசியல் கருத்துக்களைத்தான் அப்துல்கலாமும் வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும் இனத்தை வைத்து பிழைப்பு நடத்த வேண்டிய தேவை அவருக்கு இல்லை. சனக்கூட்டத்தில் அவரை காணமுடியாமல் போனதால் ஒரு பல்கலைகழக மாணவி பொது இடத்தில் தாங்கமுடியாமல் அழுதுள்ளார். எல்லாவற்றையும் தமிழ் தேசியம் என்ற கருப்பு கண்ணாடியை கொண்டு பார்த்தால் எல்லோரும் கருப்ப்பாயத்தான் தெரிவார்கள். கண்ணாடியை கழற்றிவிட்டு பார்த்தால் எதிரியும் நண்பனாவான். அப்துல் கலாமை நான் அரசியல் வாதியாகவே பார்க்கவில்லை. அவர் என்ன அரசியல் கருத்து வைத்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது. தெரியவேண்டிய அவசியமுமில்லை. அவர் c .v .ராமனை போல சந்திரசேகரைப் போல ஒரு தமிழ் விஞ்ஞானி.

     • சாமானியன்:

      ஐயா எனக்கு தமிழ் தேசியம் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் இலங்கையில் அண்மையில் இறந்தவர்கள் மனிதர்கள் என்று மட்டும் தெரியும்.

      நான் ஒரு அகதி…நான் மனிதன் அநியாயகமாக சாகக் டாது என்று தற்போது வாழும் நாட்டில் உள்ள மனிதாபிமானம் உள்ளவர்கள் என்னை இங்கு வாழ விட்டார்கள்.இருந்தும் ஒரு கேள்வி கேட்டார்கள். உனக்கு பக்கத்தில் உனது இனம் என்று சொல்பவர்கள் இருக்கின்றார்களே ஏன் அங்கு போகவில்லை என்று கேட்டார்கள். நான் சொன்னேன். அவர்கள் உங்கள் போல் மனிதாபிமானம் உள்ளவர்கள் இல்லை என்று. இந்தப் பதில் 20வருடங்களுக்கு முன்னர் சொன்னது. அப்பொழுது அறியாமல் சொன்னது. அது எவ்வளவு சரி என்று எனக்கு இப்பொழுது புரிகின்றது.

      (அப்துகலாம்) இவரோடு கொழும்பில் நின்று படம் எடுத்தவர்கள் பத்திரிகை மகாநாடு நடாத்தியவர்கள் உலகத்திற்கு ஒரு செய்தி சொல்ல முனைந்தார்கள். அது சிலவேளை இவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். இவர் ஒன்றும் அரசியல் கைதி அல்ல…அந்தப் படங்களில் நிற்க வேண்டிய அவசியம் இவருக்கு இல்லை… ஆனால் நின்றார்.

      இவரிடம் கேட்டால் திராவிட குரங்கு அனுமான் சொன்ன பதில்தான் இவரிடம் இருந்தும் வரும். இறந்தவர்கள் மனிதர்கள் அல்ல… அரக்கர்கள் என்று…சம்பளம் கொடுத்த எஜமான் விசுவாசம் காட்டி ஆரிய சேவகம் செய்யும் படித்த முட்டாள்கள் இன்னும் பலா் நம் மத்தியில் இருக்கின்றார்கள்.

     • CHANDRAHASAN:

      இதற்கு பதில் சொல்வது அரசியலாகிவிடும். இந்த களத்தில் அரசியலை தவிர்க்க விரும்புகின்றேன். ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல வேண்டியுள்ளது. படுகொலைகளை எல்லோரும் செய்துள்ளார்கள். ஒரு காலத்தில் தமக்கு வேண்டாத அரசியல் கருத்து உள்ளவர்களை கொலை செய்யாத அரசியல் அமைப்புகள் இல்லை. இப்போதும் முற்றாக ஓயவில்லை. தமிழர்களால் கொல்லப்பட்ட தமிழர்கள் சிங்களவர்களால் கொல்லப்பட்ட தமிழர்களை விட அதிகம். இதனை தூண்டிவிட்டு அரசியல் செய்தது இந்தியா. இது இல்லாமல் போய்விடுமோ என்று இன்றும் ஊதிப் பெருசாகி அரசியல் செய்கிறது மேற்குலகம். மற்றவர் நலன்களுக்காக செத்து மடிவதே ஈழத்தமிழன் விதியாயிற்று. எங்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் வரிசையில் நிச்சயமாக அப்துல் கலாம் இல்லை.

 • வணக்கம்
  இந்திய வல்லாரசு ஆகியது எப்படி சாமானியரே ?????????

  • theepan:

   இந்தியா வல்லரசு????????
   எங்கு பார்த்தாலும் பிச்சைக் காரர்கள்.
   மாநிலத்துக்கு மாநிலம் பிரச்சனைகள். உதாரணம் முல்லைப் பெரியாறு. அதைக் கூட தீர்க்கத் தெரியாது.
   விமான நிலையத்தில் தரை இறங்கியதிலிருந்து மறுபடி விமானம் ஏறும் வரை எங்கு பார்த்தாலும் லஞ்சம், ஊழல் அநியாயங்கள்.
   பிழைத்துப் போன வெளிநாட்டு ராஜதந்திரம்.
   சொல்லிக் கொண்டே போகலாம்?

  • சாமானியன்:

   இவர் அணுகுண்டு உருவாக்கி அதை வெடிக்க வைத்தால் சிலவேளை இந்தியா வல்லரசாக மாறி இருக்கலாம். அது ஒரு அரசாங்க ௬லித்தொழிலாளி செய்யும் வேலை. அதை விட இவரை ஒரு சராசரி மனிதன் என்று மதிக்க இவரிடம் ஒரு மனிதாபினம் ஒரு துளியும் இல்லை. ஒரு காகம் இறந்தால் எத்தனை காகம் சேர்ந்து அழும்.

   எங்கட கருணாநிதி ௬ட இலங்கையில மனிதர்கள் சாகின்றார்கள் என்று கவலைப்பட்டு 5 ஐந்து மணித்தியாலம் உண்ணவிரதம் இருத்தவர்……… இவர் உந்த நாட்டில இருந்து என்ன செய்தவர்…..உது அரசியல் உதெல்லாம் எனக்கு தெரியாது என்று இருப்பார். அப்படியே இருக்க வேண்டியது தானே…… இப்ப உவருக்கு என்ன அலுவல் யாழ்பாணத்தில…….

   • வெட்டி ஒபிசர் வேலாயுதம்:

    சாமானியரே!
    தாத்தா ஐந்து மணி நேரம் எல்லாம் இருக்கவில்லை. அவர் காலமை நல்லா மூக்கு முட்டத் திண்டுவிட்டு வந்து மூண்டு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்தவர். அதுக்குப் பிறகு மத்தியானம் குச்சி டாய்க்குதெண்டு நைண்டி அடுத்த இடிச்சலுக்கு வெளிக்கிட்டு விட்டுது.

    • சாமானியன்:

     தமிழ் நாட்டில இதுக்கு பெயர்தான் உண்ணாவிரதமுங்கோ….

 • சாமனியன்:

  இந்தக் கலாம் என்கிற மனிசன் இலங்கையில மனிதர்கள் சாகும் போது இப்படி கனவு கண்டு கொண்டுதான் இருந்தவர்.பாவம் மனிதன் வாயே திறக்கவில்லை…………. இப்ப கனவு கண்டு முடித்துப்போட்டு ஒருக்க யாழ்ப்பாணம் போக போறாராம். இவர் அணுவைப்பிளந்தது ஆரியன் கொடுத்த சம்பளத்திற்கு……இப்படி…………லிக்கு மாரடிக்கிறவர்கள் கதையேல்லாம்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து