உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

1982 ஆம் ஆண்டு பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட புகைப்படம் இது. 

பரிசு வழங்குபவர். வ.சுப்பிரமணியம்(ஆசிரியர்) அன்றைய பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையத்தின் செயலாளர்.

அறிவிப்பாளர். சு.சுந்தரசிவம் (தற்போது வட்டாரக்கல்வி அதிகாரி)  

சிறுவர்களை ஒழுங்குபடுத்துபவர். க.மோகனராசா (தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கின்றார். வாசிகசாலையின் மீள் கட்டுமானத்திற்கு சுவிஸில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார்.

 பரிசு பெறுபவர். பா. சிவகுமார். தற்போது யேர்மனி ஒஸ்னாபுறுக்கில் வாழ்ந்து வருகின்றார்.  பார்வையாளராக இருக்கும் சிறுவர்கள் இன்றைய குடும்பத்தினர்கள். அவர்களில் சிலர் (கண்ணன் கனடா, மகி கனடா,(பஞ்சலிங்கம் மகன்)   

இணையத்திற்கு படம் அனுப்பியவர். குணேஸ்(பிலபில்ட் யேர்மனி)
படத்தை பெரிதாகப் பார்க்க படத்தின் மேல் கிளிக் பண்ணவும்.

7 Responses to “1982ம் ஆண்டு ஒளிப்பதிவு செய்யப்பட்ட புகைப்படம்”

 • குணேஸ்(பிலபில்ட் யேர்மனி):

  தவறுக்கு மன்னிக்கவும்! அழ பகீரதன் கூறியதுபோல்
  ஆசிரியர் சுப்பிரமணியம் அவர்கள் 1982 ஆம் ஆண்டு
  அம்பாள் சனசமூகநிலையத்தின் செயலாளர் அல்ல அவர் பணிப்புலம் கிராம அபிவிருத்தி சங்கத்தில் தன் செயலாளராக இருந்தவர்,

 • அழகரத்தினம் பகீரதன்:

  இதில் அந்த வருடத்தில் (1982 ) சுந்தரசிவம் அவர்கள் அம்பாள் சனசமூக நிலையத்தில் செயலாளராக இருந்திருக்கலாம். 1981 ஆம் ஆண்டில் இளங்கண்ணனும் சுந்தரசிவமும் இணைந்து மன்ற ஆண்டுவிழாவில் பரதநாட்டியம் ஆடியதாக ஒரு ஞாபகப் பதிவு எனது மூளைப்பரப்பில் இருக்கின்றது. ஆனால் அந்த படம் தான் என்னிடம் இல்லை.

 • அழகரத்தினம் பகீரதன்:

  இந்த படத்தை பிரசுரித்தமைக்கு நன்றி. இந்த படத்தில் பரிசில் வழங்கும் ஆசிரியர் சுப்பிரமணியம் அவர்கள் அம்பாள் சனசமூகநிலையத்தின் செயலாளராக அப்போது இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவறானது. அவர் அக்காலத்தில் பணிப்புலம் கிராம அபிவிருத்தி சங்கத்தில் தான் அத்தருணம் செயலாளராகவோ தலைவராகவோ இருந்திருந்ததாக எனக்கு ஞாபகம், அந்த கிராம அபிவிருத்தி சங்கம் அப்போது ஊருக்கு பொதுவா அமைக்கப்பட்டிருந்தது.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  பரிசுபெறும் சிறுவன் இன்று ஜேர்மனிய நாட்டில் ஒரு தொழிலதிபராக திகழ்கிறார் என்றும் மற்றவர்களை குறிப்பிட்டதுபோல் குறிப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

  சாதனைகள் எமது புதிய தலைமுறையினரும் புரிகிறார்கள் என்பது எமது பழைய தலைமுறையினரால் தொன்றுதொட்டு மறக்கப்படுகிறது ஏனோ அவதானிக்ககூடியதாக இருக்கிறது.

  இவற்றை பார்க்கும்போது எமது சமூகத்தினர் இன்று எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்ற உணர்வை உருவாக்கும்.

  அருமையான படம். இப்படியானவை இன்னும் இருந்தால் இணையத்துக்கு அனுப்பிவைக்கவும் – நன்றி.

  • சீலன் டிஜிட்டல் போடோஸ் சுவிஸ்:

   நன்றி நண்பர் சுதர்ஷன்
   நமது புதிய தலைமறை செய்த சாதனையை வெளியில் சொல்ல இந்த புத்தி ஜீவிகளுக்கு என்ன தயக்கமோ தெரியவில்லை , இவர்கள் பொறாமைப்படும் படி நமது தலைமுறை சாதனை புரிய புறப்பட்டு விட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரியுமோ தெரியவில்லை. நமது சாதனை நம் ஊர் நோக்கிய பயணமாகவே இருக்கும்
   நன்றிகளுடன் சீலன் சுவிஸ்

   • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    சீலன் அண்ணை,
    எவரையும் குறையாக கூறவில்லை. புதிய தலைமுறையினரின் இன்றைய நிலையையும் ஏனையோரை குறிப்பிட்டதுபோல் சேர்த்து குறிப்பிட்டால் அவர்களுக்கும் ஊர் சமூகத்துடன் ஈர்ப்பு தொடர்ந்து அதிகரிக்கும். அத்துடன் அவர்களுக்கும் ஒரு உற்சாகத்தை உண்டுபண்ணும். முயலாதோருக்கும் ஒரு தூண்டுதலாக அமையும்.

    நன்றாக இருப்பது ‘இன்னும்’ நன்றாக இருக்கும் என்றே குறிப்பிட்டேன்.

  • kadamban:

   புலம்பெயர் நாடுகளிலும் உள் நாட்டிலும் எமது இளைய சந்ததியின் சாதனைகளைப் பாராட்டுகின்றேன். 1982 ம் ஆண்டுக்கு முற்பட்ட ஒரு தசாப்த காலத்தை நோக்கும் போது எமது கிராம்ம் ஒரு எழுச்சியை நோக்கிச் சென்றதை நினைவு கூரமுடியும்.அப்போது எமக்கு ஊரிலுள்ள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் ஆசிரியர்களாகவோ அல்லது வழிகாட்டிகளாகவோ இருந்தார்கள்.”தம்பி படி, படிப்பைக் கைவிட்டு விடாதை……” இப்படியான வார்த்தைகள் எமக்கு ஊக்கமூட்டுவதாகவும், எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமைந்தன.அருளானந்தம் அண்ணர், தறுமண்ணர்,சசசி அண்ணர், …….இப்படி அம்மன் கோயிலடி.மறுபுறம் மன்றத்திலை தேவரண்ணா,ரவி அண்ணா …..இவர்கள் இரு பிரிவாகப் பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டியில் இரண்டு இல்லங்கள் மாணவர்க்குப் பயிற்சி அளிப்பது போல எமது கிராமத்துக்குப் புத்துணர்ச்சி ஊட்டினர்.80 களில் சுழிபுரம், வடலியடைப்புக் கிராமங்களுடன் ஒப்பிடும் போது உயர்தரம் கற்பவர்களின் எண்ணிக்கை எமது கிராமத்தில் அதிகரித்துக்காணப்பட்டது.இந்த எழுச்சி மீண்டும் துளிர்விட நாம் பாடுபடவேண்டும்.புலம் பெயர்நாடுகளில் நிகழ்த்தும் சாதனைகள் விட உள்ளூர்ச்சாதனைகள் பெருமளவில் ஊருக்குத் தலை நிமிர்வை ஏற்படுத்தும் நன்றி

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து