உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

அற்ககோலினால் உடல் பாதிப்பு மட்டுமின்றி உள்ளமும் பாதிக்கப்படும். மூளை என்பது எமது முழு உடலையுமே இயக்கக்கூடிய கட்டுப்பாட்டு மையங்களினை கொண்டுள்ள முக்கியமான பகுதி. மூளையின் முக்கியமான ஒரு சில பகுதிகள் பாதிக்கப்படும்போது உடற்தொகுதி செயற்பாடுகளிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. மூளையின் அறிவாற்றல் திறனை பாதிப்பதற்கு சிறிய அளவிலான அற்ககோல் போதுமானது. மூளையிலுள்ள கலங்களினை தாக்குவதன் மூலம் அல்லது அழிப்பதன் மூலம் ஞாபகசக்தி, நித்திரை, மன ஒரு நிலைப்படுத்தல், உடலின் செயற்பாடுகளினை ஒழுங்குபடுத்தல் மற்றும் அதனை செயற்படுத்தும் பகுதிகள் என்பன பாதிக்கப்படும். மூளையிலுள்ள நரம்புகள் தாக்கப்பட்டு உடலிலிருந்து கட்டுப்பாட்டு மையமான மூளைக்கு செய்திகள் கடத்தப்படுவது தடுக்கப்படும். நீண்ட நாளாக பதிவுசெய்யப்பட தகவல்கள் அழிக்கப்படும். இதன் மூலம் நினைவாற்றல் குறைக்கப்படும்.
ஓய்விற்கு மிக முக்கியமான நித்திரை குழப்பப்படும். ஆழ்ந்த நித்திரை இல்லாமல் தூக்கத்தில் உளறுதல், மனம் நிம்மதியின்றி இருத்தல், அடிக்கடி கனவு காணுதல் போன்ற குழப்ப நிலை தோன்றும்.
இதனால், நித்திரையிலிருந்து விழிக்கும் போது உடல் அலுப்பாக உற்சாகம் இன்றி இருக்கும்.சில வேளைகளில் அதிகமாக அற்ககோல் உள்ளெடுக்கப்பட்டால் தலைசுற்று, மயக்கநிலை ஏற்படலாம்.
பலவகையான மதுபானங்களினை கலந்து குடிக்கும்போது மூளையின் கலங்கள் மட்டுமன்றி ஏனைய நரம்பு கலங்களும் பாதிக்கப்படும். இதனால் சக்தி மற்றும் போசனை கூறுகள் உடல் முழுவதும் கடத்தப்படும் வீதம் குறையும்.
அளவுக்கதிகமாக அல்கஹோல் உள்ளடுக்கும் போது ஆணாக இருந்தால் டெஸ்டோஸ்டிரோன் ஓமோன் உற்பத்தி குறையும், இனப்பெருக்க ஆற்றல் குறையும்.
பெண்ணாக இருந்தால் மாதவிடாய் சக்கரம் ஒழுங்கு குழப்பப்படும். சூல் அல்லது முட்டை உற்பத்தி குறையும். இனப்பெருக்க ஓமோன் உற்பத்தி குறைந்து இனப்பெருக்க வீதம் குறையும்.
எமது உடலை புற காரணிகளிலிருந்து காக்கும் நிணநீர்தொகுதி பாதிக்கப்படும். எதிர்ப்பு சக்தி குறைந்து, உடல் பாதுகாப்பு இழக்கப்பட்டு, தொற்றுகிருமிகளின் தாக்கத்துக்குள்ளாகும். தொடர்ந்து அல்கஹோல் உள்ளேடுக்கப்பட்டால் நிணநீர்தொகுதி கலங்கள் இறந்து புற்றுநோய் ஏற்படும்.
குருதியுடன் அற்ககோல் தொடர்ந்து கடத்தப்படும்போது ஹீமோகுளோபின் சிதைக்கப்பட்டு ஒட்சிசன் கடத்தும் அளவு குறையும். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் குருதிசோகநோய ஏற்படும். இதயத்திலுள்ள தசைகள் பாதிக்கப்பட்டு இதய அடிப்பு சந்தம் குழப்பப்படும். சுவாச வீதம், நாடித் துடிப்பு வீதம் என்பன குறையும்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து