உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

டென்மார்க்கில் உள்ள முடி திருத்தும் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கைகள் அவிதல், ஒவ்வாமை, இறுதியாக புற்றுநோய் அபாயமும் உள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் 2918 முடி திருத்தும் ஊழியர்கள் தமது தொழில் காரணமாக பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தலை முடிக்கு நிறம் போடுதல், அதை பல்வேறு இரசாயன நுரைகளால் கழுவுதல், தலை முடியின் அடியில் உள்ள நோய்களை தொடுதல் போன்ற பல்வேறு காரணங்களால் சுமார் பத்துப் பேருக்கு நால்வர் என்ற அடிப்படையில் இத்தகைய ஆபத்துக்களை சந்தித்துள்ளார்கள். மேலும் நாலு பேருக்கு ஒருவர் எக்சிமா பிடித்தும், 19 வீதமானவர்கள் அலர்ஜியாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது. தலைமுடியை வர்ணமிடும் கலவைகளில் மோசமான இரசாயன பதார்த்தங்கள் இருப்பதால் இந்த அலர்ஜி ஏற்படுகிறது. மேலும் சிகையலங்கார தொழிலில் ஈடுபடுவோரில் பலர் கைகளை பாதுகாக்கும் உறைகளை போடாமல் இருப்பது நோய்கள் விரைவாக தாக்குவதற்கு காரணமாகிறது. ஐந்து சலூன்களில் பணி புரிவோருக்கு ஏற்பட்ட பாரதூரமான சுகயீனத்தைத் தொடர்ந்து சுமார் 3000 ஊழியரிடம் நடாத்திய ஆய்வறிக்கை இன்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முடி திருத்தும் நிலையங்களில் பணி புரிவோர் சரியான சுகாதாரத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் அவர்களுக்கு 5000 குறோணர் தண்டம் விதிக்கப்படும். இத்தகைய ஆபத்துக்களை தவிர்க்க வேண்டுமானால் கை உறைகளை அணிவது கண்டிப்பாக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்து, சுமார் எட்டு வருடங்கள் வேலை செய்த பெண்மணி ஒருவர் படிப்படியாக கைகளில் எக்சிமா பரவியதை உணர்ந்துள்ளார். மேலும் தொடர்ந்து பணி புரிவோர் ஒரு கட்டத்தில் கையை தூக்க முடியாத நெருக்கடியையும் சந்திக்க நேரிடுகிறது. பத்துக்கு நாலு பேர் கைகளை தூக்க முடியாத காரணத்தால் பணியை விட்டு விலகி வருகிறார்கள்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து