உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சினிமா நடிகைகள் தங்களின் சொந்தக் கதைகளை உள்ளது உள்ளபடி படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? பல முக்கியப் புள்ளிகள் பதுங்க வேண்டிய அளவுக்கு படு ஹாட்டாகவே இருக்கும்.

அட, அதில் 10 பர்சென்ட் உண்மையிருந்தால் கூடப் போதும், படம் ஆயுசுக்கும் வெளியாக முடியாத அளவுக்கு கேஸ் போட்டுவிடுவார்கள். இந்த நிலையில், சோனா போன்ற கவர்ச்சி ப்ளஸ் கான்ட்ராவர்சி நடிகைகள் சொந்தக் கதையை படமாக்கினால் என்ன ஆகும்?

அந்த கூத்துக்களையும் பார்க்க ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது.

ஆம்… சோனா சொந்தப் படம் எடுக்கப் போகிறார், அதுவும் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை வைத்து, அதையும் அவரே இயக்கப் போகிறாராம்!

இதுகுறித்து அவர் கூறுகையில், “என் வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன. அவற்றை சினிமா படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். அந்த படத்தை நானே இயக்கப் போகிறேன். வேறு யாரையும் வைத்தால் நான் நினைப்பதை சொல்ல முடியாமல் போகும்.

இதற்காக உடல் எடையை குறைத்து, கொஞ்சம் சிக்கென்று ஆகியுள்ளேன். யுனிக் நிறுவனத்தை தொடர்ந்து பரபரப்பாக நடத்தி வருகிறேன்.

சமீபத்தில் பேஷன் டிசைனர் சிட்னி ஸ்லேடனுடன் இணைந்து ஷோ நடத்தினேன். நல்ல ரெஸ்பான்ஸ். அடுத்து ஆஸ்திரேலியாவில் கண்காட்சி மற்றும் பேஷன் ஷோ நடத்தப் போகிறேன். இதற்காக மாடல் அழகிகளுடன் விரைவில் ஆஸ்திரேலியா செல்கிறேன்,” என்றார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து