உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மூவர் அடங்கிய ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்று நாளை (29) இலங்கைக்கு விஜயம் செய்கிறது.

இந்தக் குழுவினர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களையும் இந்த குழுவினர் நேரில் பார்வையிடத் திட்டமிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் கிரீன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜென் லெம்பார்ட், ஸ்பெய்ன் சோசலிச கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜூவான் பெர்னாண்டோ லுபாஸ், லத்வியன் கிறிஸ்தவ டெமொகரட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இனிஸ் வெய்டரே ஆகியோர் அடங்கிய குழுவே இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து